Tuesday, August 20, 2024

AT THE FOOT OF SUNRISE VOLCANO - மவுண்ட் ரெயினியரின் சன்ரைஸ் எரிமலை முனையில்..




கடிதம்:39

மவுண்ட் ரெயினியரின்

AT THE FOOT OF SUNRISE VOLCANO 
சன்ரைஸ்

எரிமலை முனையில்..

AT THE FOOT OF

SUNRISE   

VOLCANO

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் எப்படி இருக்கிறீர்கள் சௌக்கியமா உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.

சென்ற கடிதத்தில் மவுண்ட் ரெயினியர் தேசிய பூங்காவில் சன்ரைஸ் கொரிடார்தான் பார்க்க வேண்டி போய்க்கொண்டிருக்க்கிறொம், என்று எழுதி இருந்தேன். 

SUNRISE MEADOW WITH STUNTED TREES

சன் ரைஸ் கொரிடார் (SUNRISE CORRIDOR)என்பது மவுண்ட் ரெயினியர் தேசிய பூங்காவின் (MOUNT RAINIER NATIONAL PARK) மிக உயரமான பகுதி இது.

இது இருக்கும் இடத்தின் உயரம் 6400 அடி. இதனை ஆல்பைன் பகுதி (ALPINE)என்று சொல்லுகிறார்கள். ஆல்பைன்  பகுதி என்றால் மரங்கள் இல்லாத உயரமான மலைப்பகுதி (TREE-LESS HIGH ALTITUDE)என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

WILD FLOWER BEDS

மரங்களை வளர விடாத தட்பவெட்ப நிலையை உடைய மலைப்பகுதி என்று அர்த்தம். இந்த மலைப்பகுதியில் திரும்பியப் பக்கமெல்லாம் பாறைகள் (OUT CROPS).

ஒயிட்ரிவர் (WHITE RIVER)என்று சொல்லும் வெண்ணிற ஆறு. பூங்காவில் வடகிழக்கு பகுதியில் உள்ள கிளேசியர்கள் (GLAZIERS) மூலமாக பிறக்கிறது. இதன் மூலமாக எரிமலையில் இருந்து வடியும் எரிமலைக் குழம்புகள் மற்றும் லகார்(LAHAR) என்று சொல்லும் எரிமலைச் சேறும் வழிந்தோடும் ஆறு இது 

WHITE RIVER WITH BLACK STONES & SANDS OF VOLCANO











எரிமலை வெடிக்கும் போதெல்லாம் இந்த வெண்ணிற ஆறு எரிமலைக் குழம்பினால், சிவப்பு ஆறாக, உயிர் கொல்லி ஆறாக ஓடும் என்று நினைக்கும் போது உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது.

சன்ரைஸ் மலைப்பகுதியில் மரங்கள் இல்லாத நீண்ட நெடிய புல்வெளிகளைத் தான் ஆல்பைன் பகுதிகள் (ALPINE) என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்கள் வளர சாதகம் இல்லாத பகுதி என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பல நிறங்களில் பூத்துக் கிடக்கும் காட்டுப் பூக்களை பல இடங்களில் எங்களால் பார்க்க முடிந்தது 

தரைக்கு மேல்  நிற்கும் கல்பாறைகளையும் இங்கு நிறையப் பார்க்க முடிந்தது.

இந்த மவுண்ட் ரெய்னியர் தேசிய பூங்காவிற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு வாசல் உள்ளது. அந்த சாலையின் என் ஆர் 410. இந்த சாலையும் ஜூன் மாத பின் பகுதி முதல் செப்டம்பர் மாத பின் பகுதி வரை திறந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த சாலை செங்குத்தான, அதிகமான வளைவுகளை உடைய சாலைகளாக இருக்கும்.

இந்த சாலைகளில் பயணம் செய்யும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஒன்று சைக்கிள் பயணிகள், இரண்டாவது காட்டு விலங்குகள்

WILD FLOWER BEDS

குறுக்காக வர வாய்ப்புண்டு. அதனால் ஜாக்கிரதியாக கவனமாக ஓட்ட வேண்டும். 

இந்த சன்ரைஸ் கொரிடர் என்பது மலை ஏறுபவர்களின் சொர்க்கம் என்று சொல்லுகிறார்கள். ஏகப்பட்ட கொடிப்பாதைகள் இங்கு செல்லுகின்றன. 

அவற்றில் எல்லாம் அவர்கள் நடந்து சென்றால் மிக அருகாமையில் எரிமலை முகடுகளை பார்க்கலாம். இதனை ஆங்கிலத்தில் ட்ரெயில் (TRAIL) என்று சொல்லுகிறார்கள். டிரெயில் என்றால் நடந்து செல்லும் பாதை என்று அர்த்தம்.

எரிமலைச் சேறு என்பது வழிந்தோடி (LAHAR FLOW)வரும்போது வழியில் எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் அது அழித்துவிடும். சில இடங்களில் பெரிய பள்ளமான இடங்களில் அவை  நிரம்பிவிடும். அப்படியே திட்டுக்களாக மாறிவிடும். அது போல மவுண்ட் ரெயினியர் பூங்கா பகுதியில் மட்டும் 23 லஹார் திட்டுக்கள் (LAHAR SPOTS)உள்ளன. 

இது போன்ற இடங்களில் நாம் பயணம் செய்யும்போது தடதட’வென இடிஇடிப்பது போன்ற ஓசை தொடர்ந்து கேட்டால் லஹார் வருகிறது என்று அர்த்தம். உடனடியாக நாம் மேடான இடத்திற்கு சென்று விட வேண்டும். இல்லை என்றால் லஹார் எரிமலைச் சேறு  நம்மை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

சன்ரைஸ் கொரிடார் பகுதியில் இருந்து நான்கு புறமும் உள்ள காட்சிகளைப் பார்க்க முடியும் அவற்றில் எரிமலைகளின் உச்சி பகுதியில் மவுண்ட் ஆடம்ஸ் என்ற எரிமலை உச்சியை சுலபமாக பார்க்க முடியும். 

சன்ரைஸ் பகுதியில் கூடுதலாக, குளிர் இருந்தது. எல்லா குளிர் கவச ஆடைகளையும் அணிந்தபடி நாங்கள் வெளியில் சென்றோம்.

பனிக்குல்லாய் அணிந்திருந்த மவுண்ட் ரெயினியர் மலை முகடுகள். அதற்கும் மேலே கிறிஸ்மஸ் தாத்தா மாதிரி மெல்ல நடக்கும் மேகங்கள், அவற்றை வரவேற்கும் பசும்கம்பளங்களாய் புல்வெளிகள், இடையிடையே  வானவில்லாய் நிறம்காட்டும் காட்டுப்பூக்கள், ஊடாக முரட்டு முகம்நீட்டும் சிறுபாறைகள், எதிர்த்திசையில் வெள்ளை ஆற்றுக்குப்பின்னால் சூரியன் மஞ்சளாய் அஸ்தமனத்தை அசைபோட்டுக்கொண்டிருந்தது. இரவு 9 மணி.

இயன்றவரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சூரிய உதயமாகும் (SUNRISE)இடத்தில் அஸ்தமனமனத்தை தேடினோம் நாங்கள்.

NIKITHAN MY GRANDSON

அவசரமா அவசரமாக அங்கிருந்து புறப்பட்டோம் வரும்போது நிஷ்குவாலி நுழைவு வாயில் வழியாக வந்தோம். இப்போது நாங்கள் ஒயிட்ரிவர் சன் ரைஸ் தென்கிழக்கு நுழைவு வாயில் வழியாக பயணம் செய்து டக்கோமா நகரை சென்று அடைந்தோம்.

அந்த டக்கோமா நகரம் மவுண்ட் ரெய்னியர் மலைப்பகுதியில் இருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அன்பு நண்பர்களே இந்த கடிதச் செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம். நன்றி வணக்கம்

பூமி ஞான சூரியன்

 






No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...