Monday, July 8, 2024

GOODNIGHT THE LEGENDARY OF WEST AMERICA -குட்நைட் சரித்திரமான சாமானிய மனிதர் கதை

 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகிய அம்சங்கள்

குட்நைட் சரித்திரமான சாமானிய மனிதர்  கதை

GOODNIGHT THE LEGENDARY OF WEST AMERICA 

கடித எண்:12

CHARLES GOODNIGHT

அன்பின் இனிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் !

எப்படி இருக்கிங்க ? உங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் என் அன்பு விசாரிப்புகள். 

ஒரு கால் நடைப்பண்ணை வச்சி நடத்திக்கிட்டு இருந்த சாமானிய மனிதர் சார்லஸ் குட்நைட். இவரை மேற்கத்திய கலாச்சாரத்தின் “லெஜெண்ட்” என்று சொல்லுகிறது அமெரிக்க சரித்திரம். சாமானிய மனிதரான இவர் எப்படி சரித்திரமானார் ? அப்படி என்னதான்  சாதனைகளைச் செய்தார் ? இதைச் சொல்லுவதுதான் இந்தக் கடிதம்.

‘சார்லஸ் மேரி ஆன் குட்நைட் ரேன்ச்’(CHARLES MARRY ANN GOOD NIGHT RANCH) என்பது டெக்சாஸ் பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த ரேஞ்ச், கால்நடைப்  பெரும் பண்ணை. 

ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்த குட்நைட் ரேஞ்ச்’சின் சொந்தக்காரரின் பெயர்சார்லஸ் குட் நைட்’. 

சார்லஸ் அண்ட் மேரி ஆன் குட்நைட் ரேஞ்ச் ஸ்டேட் ஹிஸ்டாரிக் சைட் (CHARLES AND MARRY ANN GOOD NIGHT RANCH STATE HISTORIC SITE)என்ற சரித்திர முக்கியத்துவம் பெற்ற பகுதி என்று இன்றும் அமெரிக்க அரசு பராமரித்து வருகிறது. 

CHARLES GOODNIGHT STAMP

டெக்சாஸ் ஹிஸ்டாரிக்கல் கமிஷன் (TEXAS HISTORICAL COMMISSION)என்ற அரசு அமைப்பு இதனை நிர்வகித்து வருகிறது. 

சார்லஸ் குட் நைட் மியூசியம், பேன்ஹேண்டில் கனியான் (PANHANDLE CANYON) என்ற இடத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது. 

இப்போது சார்லஸ் குட் நைட் என்ன செய்தார்? ஏன் அவர் நினைவாக அமெரிக்க அரசு ஒரு மியூசியம் தொடங்கி நடத்துகிறது, என்று பார்க்கலாம்.

குட்நைட் இலினாய்ஸ்  மாநிலத்தை சேர்ந்தவர். 1836 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தந்தை இறந்த பின் இவர் குடும்பம் டெக்சாஸுக்கு வந்தது. 

AS A CHILD C GOODNIGHT

1853 க்கு பிறகு தனது இரண்டாவது தந்தை, ரெவரென்ட் ஆடம் ஷீக் என்பவRUடம் சேர்ந்து 400 மாடுகளை வளர்க்கும் ரேன்ச் ஒன்றை தொடங்கினார். 

இந்த முதல் ரேன்ச்’ தான் குட்நைட் அவர்களுக்கு பாலபாடமாக அமைந்தது. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பிரபலமான ரேன்ச்’சராக வளர்வதற்கு உரிய பாடங்களை எல்லாம் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடமாகவும் இருந்தது  இது.

1866 ஆம் ஆண்டு, யு எஸ் ராணுவத்திற்கு மாட்டிறைச்சி தருவதற்காக குட் நைட்போர்ட் பெல்க்நாப்’ என்ற ரேன்ச்’சைத் தொடங்கினார். இப்போது அவர் தனது கால்நடைப்பண்ணைகளை உருவாக்கும் தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார்.

குட் நைட் தனது மாடுகளை விற்பனைக்கு அனுப்ப தனியாக ஒரு வழித்தடத்தை உருவாக்கினார். அதுவும் அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்தது. அதற்கு அவர்குட்நைட் லவிங் டிரெயில்’ என்று பெயர் வைத்தார். நாம் இதற்கு முன்சீஷோம் டிரெயில்’ பற்றி பார்த்திருக்கிறோம். 

1869ல் குட்நைட்அவர்கள் கொலரேடோ’வில் அர்க்கன்சாஸ் ஆற்றங்கரையில்பியோப்லோ’ என்ற இடத்தில் ஒரு ரேன்ச்’சைத் தொடங்கினார். அதற்கு ராக் கேனான் ரான்ச் (ROCK CANNON RANCH)எனப் பெயரிட்டார்.

அதுபோலவே  டயர் பிரதர்ஸ் (DYER BROTHERS)என்ற கம்பெனியுடன் இணைந்து குட்நைட் டயர் கேட்டில் கம்பெனியை (GOODNIGHT DYER CATTLE COMPANY) நிறுவினார். 

டெக்ஸஸ் ரேன்ச்’சர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் சார்லஸ் ரேன்ச்’சர் வீரச் செயல்களை விரும்பி செய்பவர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கால்நடை பண்ணைகள் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

‘தனது கடைசி காலம் வரை டெக்சஸ், அரிசோனா, பழைய மெக்சிகோ, புதிய மெக்சிகோ, ஆகியவற்றின் பரந்து விரிந்த வனப்பகுதிகளுக்கு அறிமுகமான பிரபலமான கவ்பாய்’ என்று எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜெ எவட்ஸ் ஹேலி என்பவர். அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்புதி எக்சிட் ரேன்ச் ஆஃப்  டெக்ஸாஸ்’.

A LEGEND OF WEST

ஒரு நாள் நான், 50% கழிவு விலையில் புத்தகங்களை விற்பனை செய்யும் ஒரு கடைக்கு போனேன். அங்கு நான்குட்நைட் ரேஞ்சர்’ பற்றிய புத்தகத்தை பார்த்தேன். அந்த புத்தகத்தை ஜே எவட்ஸ் கேலி (J EVETTS HALEY)என்ற எழுத்தாளர் 540 பக்கங்களில் எழுதியுள்ள புத்தகத்தை பார்த்து அஸ்ன்ரது போனேன்.. 

ஆலிவர் லவிங் என்பவரோடு இணைந்து இவர்தான் குட்நைட் லவிங் டிரெயில் (GOODNIGHT LOVING TRAIL)என்ற ஒரு கால்நடை வழித்தடத்தை உருவாக்கினார். 

இந்த வழித்தடம் டெக்ஸாஸிலிருந்து கொலரேடோ மற்றும் நியூ மேக்சிகோ மாநிலங்களுக்கு கால்நடைகளை கொண்டு சென்று விற்பனை செய்யும் வசதியான வழித்தடமாக அமைந்தது. 

இந்த ரேஞ்ச் பண்ணைத் தொழிலில் பல புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்தார். அவற்றில் ஒன்றுதான் கால்நடைகளை ஓட்டி செல்பவர்களுக்கு உதவும் வகையில் நடமாடும் சமையல் கூடம் (MOBILE FIELD KITCHEN)ஒன்றை அறிமுகம் செய்தார் குட் நைட் அதன் பெயர் சுக் வேகன் (CHUK WAGON) என்பது.

ஒரு சமயம் நீளக்கொம்பு டெக்ஸாஸ் மாட்டினத்துடன் (LONG HORN COW)கலப்பினம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக நீளக்கொம்பு மாட்டினம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது அந்த சமயம் குட்நைட் பெரு முயற்சி எடுத்து அதனை தடுத்து நிறுத்தி அதனை பாதுகாப்பதற்கான ஏற்பாட்டினை செய்தார். 

டெக்ஸஸ் மாநிலத்தில் மிகச்சிறந்த கால்நடை பண்ணைகளை உருவாக்குபவராக உயர்ந்தார். குட்நைட் மிக அதிகமான எண்ணிக்கையில் ரேன்ச்கள் மூலம் பராமரித்து வந்தார்.

டெக்ஸஸ் மாநிலத்தில் முதல் ரேஞ்ச் பண்ணையை குட்நைட் தான் உருவாக்கினார். ஜெஏ ரேன்ச் (JA RANCH)என்ற பெயரில் பேலோ டுரோ கேனியான் (PALO DURO CANION)என்ற இடத்தில் தொடங்கினார். இந்த பகுதியின் மிக முக்கியமான ரேன்ச் பண்ணையாக அது வளர்ந்தது.

கால்நடைகளில் முதன்முதலாக இனக்கலப்பு செய்ய தொடங்கியவர் குட் நைட் என்பது ஆச்சரியமான செய்தி. அதுமட்டுமல்ல அவர் எருமைகளை மாடுகளுடன் இன கலப்பு செய்தார் அவற்றை கேட்டலோ என்றும் பீஃபலோ (CATTALO & BEEFALO)என்றும்  பெயரிட்டார்.

பின்னர் அவருடைய பெயரில் குட்நைட் என்ற கல்லூரி ஒன்றை தொடங்கினார். சாதாரண மற்றும் சாமானிய மக்களுக்கு கல்லூரி கல்வி அளிப்பதற்காக இதனை அவர் செய்தார்.

சார்லஸ் குட்நைட் அவர்கள் பெரும் தொழில் அதிபராக வளர்ந்தாலும், பணம் படைத்தவராக வளர்ந்தாலும், தனது வாழ்நாள் முழுக்க மேற்கு அமெரிக்காவில் ரேன்ச் கால் நடைப்பண்ணைகளின் மூலம் மிகப் பெரிய மாற்றத்தை வளர்ச்சியைக் கொண்டுவரக் காரணமாக இருந்தார். 

அதனால்தான் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் அமெரிக்க சரித்திர காவியப் புருஷனாக இவர் கருதப்படுகிறார்.

இதுவரை நாம் இந்த கடிதத்தில் சார்லஸ் குட் நைட் அவர்கள் எப்படி மேற்கு அமெரிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்க என்ன காரியங்களை அவர் செய்தார், என்று நாம் பார்த்தோம். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...