Wednesday, July 3, 2024

TEXAS FREEDOM FIGHT IN ALAMO டெக்சஸ் அலமோ சுதந்திரப்போர்

BATTLE DEMO AT ALAMO
 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகு அம்சங்கள்

டெக்சஸ் அலமோ சுதந்திரப்போர்

TEXAS FREEDOM FIGHT 

IN ALAMO

கடிதம் – 8

“WE MUST BE FREE NOT BECAUSE WE CLAIM FREEDOM, BUT WE PRACTICE IT”

-    William Faulkner

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !

இன்று எனது கடிதத்தில், சேன் ஆன்டோனியோ  நகரம்,அங்கு 1836 ம் ஆண்டு  நடந்த அலமோ சுதந்திர போராட்டம், ஜேசின்டோ சுதந்திர போராட்டம், டெக்சஸ் சுதந்திர நாடானது, பின்னர் 1945 ல் அமெரிக்காவில் 28 வது மாநிலமாக இணைந்தது வரை உங்களுக்கு இங்கு தந்திருக்கிறேன்.

எனது முதல் கடிதத்தில் சேன் ஆன்டோனியோ ஆறுபற்றி எழுதினேன். அந்த ஆற்றினில் ரிவர் வாக்கிங்க், ரிவர் போட்டிங்க் முடித்துவிட்டு அன்று இரவு நாங்கள் சேன் ஆன்டோனியோ வில் தங்கினோம்.


அடுத்த நாள் காலை டெக்சாஸ் சுதந்திர போரட்ட வீரர்கள் தங்கள் ரத்தத்தால் தியாக பூமியாக மாற்றிய 
அலமோ பகுதிக்குச் சென்றோம்.

சேன் ஆன்டோனியோ நகரில் 1836 ம் ஆண்டு நடந்தது இந்தப் போராட்டம். இதில் 200 டெக்ஸன் வீரர்கள்தான் போர் செய்தார்கள். ஆனால் அவர்களை எதிர்த்து போரிட்டவர்கள் 1600 மெக்சிக்கோவின் ராணுவ வீரர்கள். அவர்களை எதிர்கொண்டு 600 பேரைக் கொன்று குவித்தார்கள் டெக்சஸ் வீரர்கள்.

ALAMO FREEDOM FIGHTER

ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் 200 பேரும்  தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 200 பெரில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.

இந்த அலமோ யுத்தம் 1836 ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 23 ம் தேதி முதல் மார்ச் 6 தேடி வரை சுமார் 15 நாட்கள் நடைபெற்றது.

ஜேம்ஸ் போவி, வில்லியம் பி, டேவி கிராக்கட் ஆகியோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதோடு தங்கள் இன்னுயிரையும் தந்தார்கள்.

இந்த அலமோ போர் தோல்வியடைந்தாலும்  டெக்சாஸ் பெற்ற சுதந்திரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதுதான். இன்று அலமோ என்றால் சுதந்திரம் ! வீரமிகு போர் ! உயிர்த்தியாகம் ! டெக்சாஸ் சரித்திரம் ! டெக்சாஸ் கலாச்சாரம் ! தவிர்க்க இயலாத சுற்றுலாத்தலம் !

அலமோ போராட்டம் நடந்த இன்னொரு போரையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதுதான் ஜேசின்டோ போர் (JACINTO BATTLE). 1836 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ம் தேதி நடந்தது. இந்தப் போரும் ஜேசின்டோ என்னும் ஆற்றங்கரையில்தான் நடந்தது.

இந்தப்போரில் கிடைத்த வெற்றிதான் டெக்சாஸ்’சிற்கு சுதந்திரம் கிடைக்கக் காரணமாக இருந்தது.

இன்னொரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இந்தப்போர் வெறும் 18 நிமிடத்திற்கு மட்டுமே நடந்தது.

ALAMO THE PLACE OF FREEDOM FIGHT 

இந்த முறை டெக்சன் வீரர்கள் ஜெனரல் சாம் ஹூஸ்டன் (GENERAL SAM HOUSTAN) என்பவரின் தலைமையின் கீழ் போர் செய்து வெற்றிபெற்றார்கள். முக்கியமாக ஹூஸ்டன்’ன் மூளையினால்தான் வெற்றி பெற்றார்கள்.

இந்தப் போரில் 630 மெக்சிகோவின் வீரர்கள் கொல்லப்பட்டார்கள், 730 போர்வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள். டெக்சாஸ் வீரர்கள் ஒன்பது பேர் மட்டுமே கொல்லப்பட்டாரகள், 30 பேர் காயமடைந்தார்கள்.

உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் வெற்றிகள் தெரியும். பெரிய போர்ப்படைகள் எல்லாம் கூட மனித மூளையிடம் மண்டியிட்டு ஓடியிருக்கின்றன என்று. அதற்கு 18 நிமிடம் மட்டுமே நடந்த ஜெசின்டோ போரே அதற்கு உதாரணம்.

டெக்சாஸ் 1821 ம் ஆண்டிலிருந்து 1836 வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுக் காலம் மெக்சிகோ நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1821 ஆண்டுவரை மெக்சிகோ, ஸ்பெயின் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1821ம் ஆண்டுதான் மெக்சிகோ ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

1836 ம் ஆண்டு மர்ச் மாதம் 2 ம் தேதி டெக்சஸ் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது. தனி நாடாக அறிவித்தது. சாம் ஹூஸ்டன் டெக்சஸ் சுதந்திர நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனார்.

1836 ம் ஆண்டு தனி நாடாக ஆன டெக்சஸ் எப்படி அமெரிக்காவின் ஒரு அங்கமானது என்று பார்த்துவிட்டால் இந்தக் கடிதம் முழுமை அடையும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

டெக்சாஸ் குடியரசாக ஆனதிலிருந்தே அதற்கு அமெரிக்காவுடன் சேரவேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தது. அப்போது டெக்சாஸ் அடிமை நாடாக (SLAVE STATE) இருந்தது.

1945 ம் ஆண்டு வாக்கில் யூ.எஸ்’ன் காங்கிரஸ் சபை அமெரிக்காவுடன் டெக்சஸ் இணைய சம்மதம் தெரிவித்து தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியது.

FLAGS HOISTED IN ALAMO

அதன் பின்னர் 1945 ம் ஆண்டு டிசம்பர் 29 ம் தேதி அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் 28 வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

“FOR TO BE FREE IS NOT MERELY CAST OFF ONE’S CHAINS, BUT TO LIVE IN A WAY THAT RESPECTS AND ENHANCES THE FREEDOM OF OTHERS.

-    Nelson Mandela

 

 

 

 

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

+


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...