Monday, July 15, 2024

TERRAL HAM PEACH FARM உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா ?


LESS THAN 1/2 CUP

GLIMPSES OF AMERICA
அமெரிக்காவின் 
அழகிய அம்சங்கள்


அனுபவ பகிர்வுகள் நன்று .குதிரைகள் என்ற உடன் எனக்கு பாலகுமாரன் கதையின் வரிகள் ஞாபகம் வருகிறது. நீங்க எழுதியது எமக்கு என் சின்ன வயது குதிரை ஞாபகம் ...நம்ம வூட்டில் இருந்து அப்பிச்சி தோட்டத்துக்கு போன குதிரை தானாய் நம் வூடு திரும்பி இறந்து போனது...பாசமான அந்த செவலைக்குதிரை மரியாதை உடன் புதைக்கப்பட்டது ...இன்னும் நினைவில் இருக்கு. அடுத்த முறை கோயமுத்தூர் வரும் போது வீட்டுக்கு வாங்க...ரசியுங்கள் எழுதுங்கள் உங்கள் வழியாக பயணிக்கிறோம்.
சுப்ரமணிய பாலா, கோயம்புத்தூர்

“A Table, A Chair, A Bowl Of Fruit And A Violin, What Else Does A Man Need To Be Happy - Albert Einsteen”

DELICIOUS PECH ICECREAM


 
சமூக வலைத்தளங்களில் பார்த்து உண்மையான நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிவதில்லை. எது உண்மையான நிலவரம் ?  கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது எனக்குத் தான் உண்மையான நிலவரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை,  தெரியவில்லை, என்று நினைக்கிறேன்.
 
அந்த காலத்து அன்னபட்சி மாதிரி கலந்த  நீரை நீக்கி கலப்படமில்லா பாலை மட்டும் அருந்தும் சக்தி இருந்தது போல நமக்கும் அந்த சக்தி வேண்டும்.
 
நல்லது எது ? அல்லது எது ? என்று தெரிந்து கொள்ளும் சக்தியை நமக்கு இந்த பிரபஞ்சம் வழங்குமா ? அல்லது நாமாகத் தேடி கண்டுபிடிக்க வேண்டுமா ? தெரியவில்லை.
 
இன்று இந்த கடிதத்தில் டெக்ஸாஸில் ஃபோர்ட்வொர்த் பகுதிக்கு அருகில் உள்ள பீச் பழப் பண்ணைக்கு போய்வந்த அனுபவத்தை சொல்ல போகிறேன்.
 
இங்கு உள்ள தனியார் பழப்பண்ணைகளை அல்லது விவசாய பண்ணைகளை அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. ஆனால் இந்த பண்ணை அப்படி அல்ல.
 
எல்லோரையும்வாங்க வாங்க” என்று சொல்லும் பண்ணை.பீச் பழங்களை வாங்க வாங்க” என்று சொல்லும் பண்ணை.
 
இந்த பண்ணையின் பெயர் ஹேம் பீச் பழப்பண்ணை. இதுடெர்ரல்” என்ற இடத்தில் இருக்கிறது.
HAM PEACH ORCHARDS
HAM FARM MARKET

ஆப்பிள் பழம் மாதிரியான குளிர்ப்பிரதேசப்  பழம் பீச் என்பது. டெக்ஸாஸ் பகுதியில் முக்கியமான பழவகை இது.
 
பொதுவாக எல்லா விவசாய பண்ணைகளிலும், நிலங்களிலும்,  உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்வதில் தான் பிரச்சனை ஏற்படும்.
 
உதாரணமாக மார்க்கெட்டில் ஒரு பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்றால் அந்த விவசாயிக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் ? 30 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் சல்லி காசு கூட கிடைக்காது.
 
ஆனால் இங்கு இந்த ஹாம் பீச் பண்ணைக்கு அந்தப் பிரச்சினை எதுவும் இல்லை.  எப்படி சாமர்த்தியமாய் விற்பனை செய்கிறார்கள் ?
 
நம்மிடம் அதிகம் இல்லாத அபூர்வமான திறமை. குறிப்பாக என்னிடம் இல்லாதத் திறமை. நிறையப் பேர் என்னை மாதிரிதான்.
 
இந்தப் பீச் பண்ணை 100 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.  நம்ம ஊரில் இப்படி 100 ஏக்கர் பண்ணை என்பதெல்லாம் அவ்வளவு சுலபமான சமாச்சாரம் இல்லை.
 
நான் கூட ஒரு பழப்பண்ணை வைத்திருக்கிறேன். அதில் ஜம்பு  நாவல், மாச, சப்போட்டா, கொய்யா, சீத்தா, ஆரஞ்சு, கமலா, பலா இப்படிஏகப்பட்ட  பழ மரங்களை வைத்திருக்கிறேன். எவ்வளவு ஏக்கரில் ? சுமார் ஒண்ணரை ஏக்கரில்.
 
அதை விடுங்கள். நாம் ஹேம் பண்ணைக்கு வருவோம். பண்ணையின் பரப்பு 100 ஏக்கர் . அதில் இருக்கும் பீச் பழ வகைகள் மட்டும் 30 வகை.
அத்துடன் ப்ளூபெர்ரி (BLUE BERRY)இருக்கிறது பிளாக்பெரி (BLACK BERRY) இருக்கிறது.  இன்னும் பல விதமான பழ மரங்களும் வைத்திருக்கிறார்கள்.
 
இந்த பீச் பளப்பண்ணை டெர்ரல் (TERREL)எனும் நகரில் உள்ளது டெல்லஸ்’சிலிருந்து (DALLAS) 40 மைல் தொலைவிலும் ஃபோர்ட் ஒர்த்’திலிருந்து (FORTWORTH) 75 மைல் தொலைவிலும் உள்ளது.
 
நீங்கள் அமெரிக்கா வந்தால் மறக்காமல் இந்த ஹம் பீச் பண்ணையை வந்து பாருங்கள்.
 
டெல்ஹாம் என்பவர் இந்த பழப்பண்ணையை 1979 ஆம் ஆண்டில் தொடங்கினார். இந்த ஹேம் பண்ணையை ஒரு மார்க்கெட் ஆகவும் மாற்றிவிட்டார். அதுமட்டுமல்ல அது ஒரு சுற்றுலாத்தலமும்கூட.
 
நாங்கள் அந்த பண்ணைக்கு போகும் போது அந்த பண்ணைக்கு எதிரில் ஏகப்பட்ட கார்கள் ஈமாதிரி மொய்த்துக் கொண்டிருந்தன.
SWARMING VEHICLES AROUND THE PEACH FARM
 
சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் ஆண்களும் பெண்கள் குழந்தைகள் என்று குடும்ப சகிதமாக ஐஸ்கிரீமும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.
 

அந்த ஹேம் பண்ணையின் முகப்பில் ஒரு பழக்கடை அதில் அறுவடை செய்த புதிய பீச் பழங்கள், ஐஸ்கிரீம், ஜாம், ஜெல்லி, மற்றும் பழங்களில் செய்த தின்பண்டங்கள். நாவில் எச்சில் ஊறாமல் அதனை சுற்றிப்பார்க்க முடியாது.

PEACH BLOSSOM HONEY
COCONUT PIE

BLUEBERRY BREAD
அங்கு அதிகம் விற்பனையாவது பீச் பழத்தில் தயார் செய்த ஐஸ்கிரீம். சுவை என்றால் அப்படி ஒரு சுவை. இரண்டு மூன்று நாக்கும், நான்கைந்து மணிப்பர்ஸ்சும் வேண்டும்.


அந்த பீச் பல ஐஸ்கிரீமை, அல்லது அந்த ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களைப் பார்த்தால், நமக்கு இருக்கும் சர்க்கரை, கொலஸ்ட்ரால், டாக்டர் சொன்னது,  மகள் சொன்னது, மகன் சொன்னது, எதுவும் ஞாபகத்தில் வராது.

ஒரு பெரிய பீச் பல ஐஸ்கிரீம் டப்பாவை வாங்கி தந்து நானும் என் மனைவியும் பாதி பாதி சாப்பிட அனுமதியும் கொடுத்தான் என் மகன்.
 
அத்தோடு விடவில்லை அவன். நாங்கள் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டோக்களை, எடுத்து சென்னையில் இருக்கும் என் மகளுக்கு அனுப்பி வைத்தான்.
 
அடுத்த பத்து நிமிடத்தில் என் மகளிடமிருந்து ஒரு போன் கால் வந்தது என் மனைவிக்கு. நல்லவேளை அதற்கு முன்னதாக நாங்கள் அதனை சாப்பிட்டு முடித்திருந்தோம்.
 
இந்த பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடத்திற்கு கொஞ்சம் தொலைவில் ஒரு பெரிய திறந்த வழி கொட்டகை. சுற்றிலும் சுவர்களில் இல்லாமல் இரும்பு கம்பங்களில் நிற்கும் பெரிய கொட்டகை.
PEOPLE BEHIND BARBIQUE

அதில் சுமார் 150 முதல் 200 பேர் உட்கார்ந்து சாப்பிடும் டேபிள் மற்றும் நாற்காலிகள் இருந்தன. ஹேம் பார்பிக்யூ என்ற போர்டு வைத்திருந்தது.பார்பிக்யூ என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் அமெரிக்கா போகக்கூடாது என்கிறார்கள். அதனால் அது என்ன என்று ஆய்வு செய்து அதனை கண்டுபிடித்தேன்.
 
A BIG BBQ HALL
நீங்களும் அதனை தெரிந்து கொள்ளுங்கள். இறைச்சி வகைகளை நேரடியாக நெருப்பில் வாட்டி வதைக்கி சுட்டு, சுட சுட சாப்பிடும் முறை என்று சொல்லலாம்.

இது பற்றி எனக்கு தெரிந்த தமிழ் ஆசானிடம் கேட்டேன். அவர் சொன்னார் மனிதன் முதன்முதலாக நெருப்பை கண்டுபிடித்த போது அத்தோடு அவன் கண்டுபிடித்த முதல் சமையல் முறை என்று எனக்கு விளக்கம் சொன்னார்.
 
என் மகனிடம் கேட்டேன், அவன் சொன்னான். “நீங்க சொல்றது கிரில்லிங்.. அதுவேறு இதுவேறு” என்றான். பார்பிக்யூ அவ்வளவுதான் அதற்குமேல் விளக்கம் தேடல் ஆகாது என்று முடிவு செய்தேன்.
அதிகமான அளவு பழங்கள் தரும் பருவ காலங்களில் வாடிக்கையாளர்களே பண்ணைக்குள் சென்று அறுவடை செய்து கொள்ளலாம்.
 
அவரவர் எவ்வளவு அறுவடை செய்கிறார்களோ அதற்குரிய பணத்தை செலுத்த வேண்டும். அத்துடன் நுழைவு கட்டணமும் செலுத்த வேண்டும் மறக்காமல்.
 
நாங்கள் அங்கு போனபோது அந்த முறை இல்லை. அறுவடை செய்ய அதிகப் பழங்கள் மரத்தில் இல்லை.
 
இது மாதிரி ஹேம் பண்ணையில் திருவிழா மாதிரி ஒவ்வொரு நாளும் கூட்டம் வருவது என்பது இந்த பழங்கள் அறுவடை காலத்தில் தான்
 
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை தொடரும் இந்த ஐஸ்கிரீம் திருவிழா.
 
நான் அந்த பழப்பண்ணையின் முகவரியைத் தருகிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்கா வந்தால் ஹம் பீச் பண்ணைக்கு மறக்காமல் போய் வாருங்கள்.
 
அதைவிட முக்கியமானது அந்த பீச் பல ஐஸ்கிரீமை சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு எப்போதும் இந்த டெர்ரல் ஹேம் பீச் பண்ணையை மறக்க மாட்டீர்கள்.
 
HAM ORCHARDS, 11939, COUNTY ROAD 309, TERREL, TEXAS 75161
 
ஹேம் அவர்கள் 1979 ஆம் ஆண்டு இந்த பண்டிகை தொடங்கும் போது 50 மரங்களைத்தான்  நட்டார். அப்போது அது 23 ஏக்கர் பண்ணையாக இருந்தது.
 
அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு அதனை 450 மரங்களை அதில் நடவு செய்தார். அதன் பின்னர் அதன் நிலப்பரப்பையும் அதிகரித்தார்.

அமெரிக்காவில் அதிகமான பீச் பழங்களை உற்பத்தி செய்பவை மூன்று மாநிலங்கள் அவை கலிபோர்னியா(CALIFORNIA), சவுத் கரோலினா (SOUTH CAROLINA)மற்றும் ஜார்ஜியா(GEORGIA).
 
ஜில்லெஸ்பி கவுண்டி (GILLESBI COUNTY)மற்றும் ஸ்டோன்வால் (STONEWALL)ஆகியவை பீச் பழங்களை அதிகம் உற்பத்தி செய்யும் டெக்சாஸ் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
 
நான் கூட ஜம்புநாவல் ஐஸ்கிரீம் தயார் செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன்.
 
மீண்டும் அடுத்த கடிதத்தில் இன்னொரு சுவையான செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன், நன்றி வணக்கம்.
 
 
The roots of education are bitter, but the fruit is sweet - aristotil
 

1 comment:

V.Sambasivam said...

Dear brother
I have gone through your write up and you have aptly explained big fruit garden. Most of the big farm owners used to sell their product on road side. They used to advertise in media about their farm products. They also allow the people to go to the farm pluck fruits from the trees and bushes.. Once I visited Apple grove where they gave a bucket and cost is $7. We can go and pluck up good apple from the tree full of that bucket and also allowed to eat apple in the garden. Like wise Tomato, Grapes ect. People used to go with their kids and also teach the kids importance of fruits, trees how they raise the plantation and used to gain first hand knowledge in the field and they interact with the growers and get clarification. Your write up takes me back to 20 years . Thanks. Wish you all the best
V.Sambasivam IFS
Winston Salem, N C .

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...