Monday, July 15, 2024

RAY HUBBARD LAKE IN ROCKWALL CITY இருபதாயிரம் ஏக்கரில் செயற்கை ஏரி

 

GLIMPSES OF AMERICA

அழகான அமெரிக்காவின் அம்சங்கள்

22000 ACRE LAY HUBBARD LAKE IN OUR EYES

 

இருபதாயிரம் ஏக்கரில் செயற்கை ஏரி

RAY HUBBARD LAKE IN ROCKWALL CITY

கடிதம் 17

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

நீங்க எப்படி இருக்கிங்க ? உங்க வீட்டுல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா ? 

சமீபத்தில் நான் ராக்வால் என்னும் நகரில் 22,475 ஏக்கரில் செயற்கையாக வெட்டியிருக்கும், ஏரியைப் பார்க்க சென்றிருந்தேன். அந்த ஏரி பற்றியும் அங்கு நடந்த முக்கியமான சம்பவம் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லப்போகிறேன். 

வாருங்கள், நாம் ரே ஹப்பர்ட் ஏரிக்கு போகலாம். 

உங்களுக்கு தெரியும் நான் இருக்கும் இடம் ஆலன் ஆலன் நகரில் இருந்து போக்குவரத்து நகரை கடந்து அதன் பின்னர் ராக்வால் கவுண்டிட்டிக்கு செல்ல வேண்டும். 

ஆலன்னிலிருந்து இந்த நகரம் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து 10 அல்லது 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராக்வால் நகரம். 

ராக்வால் நகரில் இருக்கும் ஏரிக்கு காரிலேயே போகலாம், சாலை வசதி உள்ளது. ஏரிக்குப் பக்கத்திலேயே போய் இறங்கலாம். 

அங்கு நாங்கள் போனதும், ஒரு பூங்கா எங்களை வரவேற்றது. அந்தப் பூங்கா பறந்து விரிந்திருந்தது. இயற்கையான மேடு பள்ளங்களோடு அமைக்கப்பட்ட பச்சை பசேல் என்ற, புல்வெளி ஊடாக அழகிய பைன் மரங்கள் மற்றும் மேப்பிள் மரங்கள் மற்றும் ஓக் மரங்களும் இருந்தது.

நிறைய பேர் வந்து செல்லும் பூங்கா என்று சொல்ல முடியாது. ஆனால் அங்கு வருபவர்கள் தங்கள் நேரத்தை குடும்பத்துடன் அமைதியாக மகிழ்ச்சியாக செலவிட அருமையான இடம்.

பசும்புல் தரை நெடுக ஆங்காங்கே அழகான பெஞ்சுகளைப் போட்டு இருக்கிறார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் உட்கார்ந்து இருக்கலாம். 

மெத்து மெத்தன இருந்த புல்வெளியில் கால் பாதங்கள் பதிய நடந்து சென்றோம். புல்வெளியில் நடக்க கூடாது என்ற கட்டுப்பாடு இங்கே எதுவும் இல்லை. 

இந்த முறை நான் என் மனைவி என் மகன் மட்டும்தான் சென்றோம்.

MY SON RAJASOORIYAN

எவ்வளவு பெரிய ஏரி தெரியுமா ?  செயற்கையா வெட்டிய ஏரி.

டெக்ஸாஸ் பகுதியில் நிறைய  நீர்நிலைகள்  கிடையாது. இது வறட்சியான பூமி. எவ்வளவு சுத்தமா அழகா இந்த ஏரியப் பராமரிக்கிறாங்க தெரியுமா ? ஆச்சரியமா இருக்கு. 

கண்ணுக்கட்டிய தூரம் வரை அலையடிக்கும் தண்ணீர் பரப்பு.  ஒரு ஏரியில் இவ்வளவு தண்ணீரா ? இவ்வளவு பெரிய ஏரியா ? எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

இது செயற்கையாக வெட்டினை ஏறி என்பதே எனக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்தது.

பரந்த அந்த ஏரியின் நீர் பரப்பிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று அவ்வப்போது முகத்தில் சில்லென்று வீசியது.

நாங்கள் உட்கார்ந்து இருந்த ஒரு பெஞ்ச் ஏரியின் நீர்ப்பரப்பிற்கு மிக அருகாமையில் இருந்தது. அலைகள்சலசல’வென ஓசையுடன் புரண்டு கொண்டிருந்தது.

ஏரியின் நீர்ப்பரப்பிற்கும் இந்த பூங்காவிற்கும் ஊடாக ஒரு பாதை சிறிய பாதை நடந்து சென்றது அதில் நடந்து சென்றோம்.

நாங்கள் நடந்து சென்ற இடத்தில், சற்று தொலைவில் ஐந்தாறு குடும்ப உறுப்பினர்கள், இந்த ஏரியில் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

தூண்டில் போடுபவர்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்போதோ பிடிக்கும் ஒரு சிறிய கெண்டைமீன் அல்லது ஒரு கெளுத்தி மீனுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள் தெரியுமா ?   

உண்மையிலேயே தூண்டில் போடுபவர்கள் எல்லாம் பொறுமைசாலிகள். 

வாழ்க்கையில் எப்படிப்பட்ட ஏமாற்றம் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பார்கள் அது பற்றி கவலைப்படாதவர்களாகவும் இருப்பார்கள். 

சிலர் ஏதிலும் அவசர குடுக்கைகளாக இருப்பார்கள். நினைத்த நேரத்தில் அது நடந்து விட வேண்டும். மந்திரத்தில் மாங்காய் காய்க்க வைப்பது போல. அதற்கு நல்ல உதாரணம் நான். 

நாங்கள் போய் இரண்டாவதாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம் அநேகமாக அது ஓக் மரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் அடியில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தோம்.

LAKESIDE PARK

அங்கு உட்கார்ந்து படி அங்கு மிகுமாக காக்கைகள் போன்ற தோற்றத்தில் ஆனால் கொஞ்சம் ஒல்லியாக, ஒடிசலாக, கருவாட்டு வாலி குருவி மாதிரி நீளமான பிளவுபட்ட வாலுடன் அவசரம் அவசரமாக நடந்து கொண்டும் பறந்து கொண்டும் இருந்தன. 

அதனை வீடியோ எடுக்கும் முயற்சியில் நான் இருந்தேன். அப்போது என் தலைக்கு மேல் ஒரு சிறு குருவி பறப்பது தெரிந்தது.

அப்போது நான் எழுந்து நின்று என் தலைக்கு மேல் பறக்கும் பறவையை, வீடியோவில் பதிவு செய்ய முயற்சி செய்தேன். அப்போது என்ன நடந்தது தெரியுமா ?

மரத்தடியில் என்னுடன் உக்காந்திருந்த எனது மனைவியும் மகனும் எழுந்துஅந்த குருவி ..உங்களை கொத்த வருது ..வாங்க வாங்க”  என்று கத்தினார்கள்.

அடுத்த வினாடி அந்த குருவி வந்து என் கையில் இருந்து செல் போன்’ல்’ டக் என்று கொத்தி விட்டு போனது. 

அப்போது நான் அதனை வீடியோ எடுப்பதில் குறியாக இருந்தேன் அந்த குருவி எங்கள் மூவரையும் கொத்துவதற்காக பறந்து பறந்து வந்து கொத்தியது. 

“வாங்க வாங்க ..அந்த மரத்தில் அநேகமாக அதன் முட்டையோ அல்லது குஞ்சு கூட இருக்கலாம்” என்றாள் என் மனைவி. 

“நீங்க வீடியோ எடுத்தது போதும் வாங்கப்பா” என்றான் என் மகன்.

இப்போது பார்க்கிறேன் அந்த இரண்டு குருவிகளும் அந்த மரத்தின் உச்சியில் உட்கார்ந்தபடி எங்களை பார்த்தபடியே, ஜோடியாக அந்த அம்மா அப்பாக் குருவிகள் மரத்தின் உச்சியில் உட்கார்ந்து ஏதோ எங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தன. 

நாங்கள் இன்னொரு பெஞ்சுக்கு மாறி உட்கார்ந்தோம். அதன் பின்னர் ஏரிநீரின் அலைகள் வீசினால், எங்கள் கால் நனையும்படியான தொலைவில் இருந்த நடைபாதையில் நடந்தோம்.

SEA LIKE LAKE

பிறகு அந்த கருப்பு குருவியை கவனித்தேன். அது காகம் மற்றும் இரட்டைவால் குருவி இரண்டையும் இனக்கலப்பு  செய்த பறவை மாதிரி தெரிந்தது. 

அதன் பிறகு அந்த ஏரி பற்றிய பல சுவையானத் தகவல்களை என் மகனிடமும் கூகிளிடமும் சேட் ஜி பி டி யிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன். அதிலிருந்து சில முக்கியமான செய்திகளை சொல்லுகிறேன்.

நான் எனது கட்டுரைகளில் சொல்லும் புதிய செய்திகள் அரிய செய்திகள் அனைத்திற்கும் நான் நன்றி சொல்ல வேண்டியது எனக்கல்ல, என் மகன், கூகுள் மற்றும் ஜே ஜே பி டிக்குத்தான்.

இந்த ஏரி டல்லஸ் மற்றும் போர்ட்ஸ்வொர்த்  மெட்ரோபாலிட்டன் பகுதிக்குள் இருக்கிறது. ராக்வால் மற்றும் காஃப்மேன் (ROCKWALL & KAUFMAN)கவுண்ட்டி பகுதிகளில் அமைந்துள்ளது.

இந்த ஏரியின் பரப்பு எவ்வளவு இருக்கும்.நாம் யோசித்துப் பார்க்க முடியாத ஒரு பரப்பு 22745 ஏக்கர் பரப்பில் பறந்துள்ளது இந்த ஏரி. இந்த பகுதியில் இருக்கும் பெரிய ஏரிகளில் ஒன்று இது. அப்படி என்றால் இது போல பல பெரிய ஏரிகள் இருக்கு என்று அர்த்தம். 

பொதுவாக நகர்புறங்கள் விரிவடையும்போது அவர்களுக்கு சுலபமாக கண்ணில் தெரிபவை ஏரிகள் குளங்கள் மற்றும் ஆற்றங்கரைகள் தான். 

இவர்களுக்கு ஏன் அது தெரியவில்லை என்று எனக்கு புரியவில்லை.

இந்த ரே ஹப்பத் ஏரி, மூன்று முக்கியமான காரியங்களை செய்கிறது. ஒன்று குடிநீர் வினியோகம், இரண்டாவது வெள்ள கட்டுப்பாடு, மூன்றாவது பொழுதுபோக்கு.

இந்த பகுதியில் ட்ரினிட்டி ஆறு என்ற ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கிழக்கு பகுதிகளை இருந்து தண்ணீர் இந்த ஏரிக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

இந்த ட்ரினிட்டி ஆற்றின் குறுக்காக ராக்குவால் ஃபோர்னி டேம் (ROCKWALL FORNEY DAM)என்ற ஒர் அணைக்கட்டையும் 1968 ஆம் ஆண்டு கட்டி முடித்திருக்கிறார்கள்.

இந்த ஏரியன் சராசரியான ஆழம் 40 அடி. இங்கு படகு சவாரி செய்யலாம். மீன்பிடிக்கலாம். நீர் சறுக்கு விளையாடலாம். நீச்சல் பழகலாம். இவை அத்தனைக்கும் வாய்ப்பு தருகிறது இந்த ஏரி.

லார்ஜ் மௌத் பாஸ், ஒயிட் பாஸ், சேனல் கேட்ஃபிஷ், ஒயிட் கிரேப்பி ஆகியவை இந்த ஏரியில் இருக்கும் மீன் வகைகள்.

இந்த ரே ஹப்பர்ட் ஏரி  இப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தில் முழுமையாக நிறைவேற்றுவதாக உள்ளது.   

நான் கூட நமது பகுதியில் ஏகப்பட்ட ஏரிகளை வீடுகள் கட்டியும் அரசு கட்டிடங்கள் கட்டியும் தொலைத்து விட்டோம். ஆனால் இது போன்ற புதிய ஏரிகளை வெட்டுவதற்கும் கட்டுவதற்கு முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? 

WITH THE DRENCHING OF BABY WAVES 

மீண்டும் உங்களை ஒரு நல்ல செய்தியுடன் அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன் நன்றி

 பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com

 


 


2 comments:

சுப்ரமணிய பாலா said...

நேற்று வதந்த வனம் என்ற இடம் பாசக்குட்டை சத்யமங்கலம் சென்று வந்தேன்...அங்கு நம் உறவினர் தன் தோட்டத்தில் செயற்கையாக ஓரு நீர் சேமிப்பு குட்டை போன்ற அமைப்பை காட்டின் பல பகுதிகளில் செய்து இருந்தார் ..இன்று உங்க அமெரிக்காRAY HUBBARD LAKE IN ROCKWALL CITY தகவல்..அந்த பறவையின் படத்தை வைத்து ஓரு கதை எழுதுக...நன்றி

Yasmine begam thooyavan said...

HUBBARD LAKE IN ROCKWALL CITY தவல் அருமை. மரத்தடியில் அந்த குருவிகள் ஜோடியாக உங்களை பற்றி பேசிகொண்டிருத்துது என்று படிக்கவும் என்னை அறியாமல் சிரிக்க வைத்து. உங்களின் ஒவ்வொரு moments அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது. சூப்பர் sir.

ஏ. யாஸ்மின் பேகம் தூயவன்

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...