Thursday, July 18, 2024

POPULAR CATTLE TRAILS OF TEXAS வளம் சேர்த்த கால்நடை வழித்தடங்கள்

  

“IF YOU CANNOT DO GREAT THINGS, DO SMALL THINGS IN A GREATER WAY” – NAPOLEON HILL

HUBBARD LAKE IN ROCKWALL CITY தகவல் அருமை. மரத்தடியில் அந்த குருவிகள் ஜோடியாக உங்களை பற்றி பேசிகொண்டிருத்துது என்று படிக்கவும் என்னை அறியாமல் சிரிக்க வைத்தது. உங்களின் ஒவ்வொரு moments ம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது. சூப்பர் sir.

ஏ. யாஸ்மின் பேகம் தூயவன்

கடிதம் 22

வளம் சேர்த்த கால்நடை வழித்தடங்கள்

POPULAR CATTLE TRAILS OF TEXAS

CHISHOM TRAIL COWBOY STATUE
CHISHOM TRAIL


அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
 

நீங்க எப்படி இருக்கிங்க ? உங்க வீட்டுல குழந்தைங்க, பெரியவங்க எல்லாருக்கும் என் அன்பு விசாரிப்புகள். 

19 ஆம் நூற்றாண்டின் டெக்ஸாஸ் பகுதியில் இருந்து மாடுகளை விற்பனை செய்ய, கேன்சாஸ் நகரம் வரை ஆயிரம் ஆயிரம் மாடுகளாக நடத்தி ஓட்டிக்கொண்டு போவார்கள். 

இதுபோல டெக்ஸஸ் பகுதியில் இருந்து கால்நடைகளை நடத்திச் செல்லும் வழித்தடங்களை என்று டிரெயில் என்று சொல்லுகிறார்கள்.

இப்படிப்பட்ட கால்நடை வழித்தடங்களின் முக்கியமான வழித்தடங்களை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன். 

அன்றைய காலகட்டத்தில், கால்நடைப் பெரும் பண்ணைகளின் தொடக்கக் காலங்களில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்தது. அல்லது சுத்தமாய் இல்லாமல் இருந்தது. 

மாடுகளை விற்பனைக்குக் கொண்டு செல்ல 1200 கி.மீ. க்கும் மேல் கால் நடையாக ஓட்டிச்செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

அதற்கான ஒரு வழி தேவைப்பட்டது. அதில் 1000 முதல் 3000 மாடுகள் வரைகூட கவ்பாய்கள் ஓட்டிக்கொண்டு போவார்கள். அதனை ஒரு வழி என்பதைவிட பெரு வழி என்று சொல்லுவதுதான் சரி. 

பெருவழிகளில் மாடுகள் நடந்து செல்லும் கவ்பாய்கள் குதிரைகளில் செல்லுவார்கள். 

இப்படிப்பட்ட கால்நடை வழித் தடங்கள்  நிறைய இருந்ததாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவற்றில் முக்கியமானவை  நான்கு மட்டும்தான். அதிக மாடுகள் சென்ற வழித் தடங்கள் இவைதான்.

அவை சிஷோம் வழித்தடம் (CHISHOM TRAIL), குட்நைட் லவிங்க் வழித்தடம் (GOODNIGHT LOVING TRAIL), வெஸ்டெர்ன் வழித்தடம்(WESTERN TRAIL), மற்றும் ஷானி வழித்தடம்(SHAWNEE TRAIL).

GOODNIGHT LOVING TRAIL

இவை மட்டுமின்றி, டெக்ஸாஸ் வழித்தடம் (TEXAS TRAIL), செடாலியா வழித்தடம் (SEDALIA TRAIL),  ஓல்ட் ஸ்பேனீஷ் வழித்தடம் (OLD SPANISH TRAIL) பட்டர்பீல்ட் ஓவர்  லேண்ட் மெயின் ரூட் வழித்தடம் BUTTERFIELD OVERLAND MAIN ROUTE) மற்றும் போஸ்மேன் வழித்தடம் (BOSEMAN TRAIL) ஆகியவையும் இருந்தன.

சீஷோம்  டிரெயில் இதுதான் மிகவும் முக்கியமான கால்நடை வழித்தடம். ஜெஸ்ஸி சீஷோம் என்ற வியாபாரி தனது வியாபரப் பொருட்களை எல்லாம் கேன்சாஸ் (KENSAS) அனுப்புவதற்காக இந்த வழித்தடத்தை தயார் செய்தார்.

அவருடைய சொந்த செலவில் தயார் செய்த வழித்தடம் இது. அவருடைய பெயரால் தான் இந்த சீஷோம் டிரெயில் இன்று வரை வழங்கி வருகிறது. 

இந்த வழித்தடம் 1867 முதல் 1884 வரையான 17 ஆண்டுகள்  மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. இந்த வழித்தடம் மூலமாக கால்நடைகளை அனுப்பி வைக்க, அங்கிருந்து கப்பல் மூலமாக அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

 இந்த வழித்தடம்  தெற்கு டெக்சாஸில் தொடங்கி 800 மைல் செல்லுமாறு இருந்தது. அபிலேணி, கேன்சஸ் மற்றும் ஒக்கலோகமா பகுதியை தாண்டி செல்லுமாறு இன்று வழித்தடம் அமைந்திருந்தது. 

இது இப்பகுதியின் மாட்டிறைச்சி அங்காடிகளுக்கு பொருளாதார ரீதியாக பேருதவியாக இருந்தது. 

இந்த வழித்தடத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான மாடுகளைக் கொண்டு செல்வார்கள். அதிகபட்சமாக ஒரே சமயத்தில் 3000 மாடுகளை கூட இத்தடத்தின் மூலம் நடத்திக் கொண்டு செல்ல முடியும்.

கவ்பாய்களுக்கு  இதுபோல வழித்தடங்களில் தொலைதூரம் நடத்திக் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

இப்படி வழித்தடங்களில் அவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகள் என்பது மூன்று.

ஒன்று வழித்தடங்களின் குறுக்கே வரும் ஆறுகளைக் கடப்பது, இரண்டு இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வது, மூன்று திருடர்களிடமிருந்து மாடுகளைக் காப்பாற்றுதல்,  நான்கு   அமெரிக்க பழங்குடி மக்களால் ஏற்படும் பிரச்சனைகளை சவால்களை எதிர்கொள்வது.

CATTLE CROSSING A RIVER
 

இந்த வழித்தடங்களின் பயன்பாடு என்பது 1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தது. அதற்கு என்ன காரணம் என்றால் ஒன்று டெக்ஸாஸ் வரை ரயில் பாதைகள் போடப்பட்டு ரயில்கள் ஓட ஆரம்பித்தன. 

NATIVE AMERICANS

CATTLE RUSTLERS

இரண்டு கம்பி வேலிகள் வந்த பின்னால் திறந்த வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பது என்பது இயலாமல் போனது. அதனால் ரேன்ச் பண்ணைகள் தொடங்குவது குறைந்து போனது என்று சொல்லலாம்.

இந்த சீஷோம் டிரெயிலுக்கான அருங்காட்சியகம் ஒக்கலகாமா மாநிலத்தில் டங்கன் (DUNCAN)மற்றும் கிங்பிஷர்(KINGFISHER) ஆகிய இரு இடங்களில் உள்ளன.

 

அடுத்து குட் நைட் லவிங் டிரெயில், இது மத்திய டெக்ஸாஸிலிருந்து நியூ மேக்சிகோ மற்றும் கொலரேடோ வழியாக வரும், டென்வர் மற்றும் சேயன்னி (DENVER & CHEYENNE)என்ற பகுதியில் உள்ள ரயில்   நிலையங்களை இது வந்து சேருகின்றது.

இது 1860 முதல் 1880 வரை இந்த கால்நடை வழித்தடம் பயன்பாட்டில் இருந்தது.

இதன் மூலம் கொலரேடோ மற்றும் வியோமிங் பகுதிக்கு கால்நடைகள் கொண்டுவரப்பட்டன.

டாட்ஜ்சிட்டி டிரெயில்(), இந்த வழித்தடம் தெற்கு டெக்சாஸில் தொடங்கி ஒக்கலஹோமா(OKALAHOMA) வழியாக டாட்ஜ்சிட்டி யின் ரயில்நிலையம் சென்றடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது. இது 1874 முதல் 1886 வரை பயன்பாட்டில் இருந்தது.

டாட்ஜ்சிட்டி என்பது ரயில் நிலையம் மட்டுமல்ல, இது ஒரு கப்பல் துறைமுகமும் கூட. 

ஷானி டிரெயில்  (SHAWNEE TRAIL)தெற்கு டெக்சாஸ் முதல் கேன்சாஸ் வரை (TEXAS TO KENSAS)செல்லும் வழித்தடம் இது. இந்த வழித்தடம் கிழக்கு ஒக்கலஹோமா மற்றும் மிசவுரி (OKALAHOMA & MISSOURI)வழியாக செல்லுகிறது. 

SHAWNEE TRAIL

இது 1840 முதல் 1870 வரை மிசவுரி மற்றும் கேன்சாஸ் ரயில்  நிலையங்களுக்கு கால்நடைகளைக் கொண்டு சென்ற வழித்தடம் இது.

கிரேட் வெஸ்டர்ன் டிரெயில்(GREAT WESTERN TRAIL), இது டெக்ஸாஸ் முதல் நேப்ரஸ்கா மற்றும் வியோமிங் (NEBRASCA & WYOMING) ஆகிய இடங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்ல 1874 முதல் 1893 வரை செயல்பட்டது..

லோன்சம் டோவ் டிரெயில்(LONESOME DOVE TRAIL), இது 19ஆம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் இந்த வழித்தடம் பயன்பாட்டில் இருந்தது.

இந்த வழித்தடம் டெக்சாஸ்சிலிருந்து மோன்டானா (MONTONA)என்ற இடத்திற்கு கால்நடைகளை நடத்திச் செல்ல பயன்பட்டது.

செடாலியா வழித்தடம் (SEDALIA TRAIL),இது டெக்ஸாஸிலிருந்து ஒகலஹோமா வழியாக செடாலியா மற்றும் மிசவுரிக்கு கால்நடைகளை கொண்டு செல்ல உதவியாக இருந்தது.

இது 1860 முதல் 1870 வகையான காலகட்டத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இது பயன்பாட்டில் இருந்தது. செடாலியா சென்ற கால்நடைகள் கப்பல் மூலமாக இதர பகுதிகளுக்கு சென்றன.

ஓல்ட் ஸ்பானிஷ் டிரெயில்(OLD SPANISH TRAIL) இது டெக்ஸாஸில் இருந்து நியூமேக்சிகோ மற்றும் கலிபோர்னியாவுக்கு (NEW MEXICO & CALIFORNIA)கால்நடைகளை கொண்டு போக உதவியாக இருந்தது. இதர வியாபாரத்திற்கான பொருட்களை எடுத்துச் செல்லவும் இது உபயோகமாக இருந்தது.

பட்டர்ஃபீல்டு ஓவர்லாந்து மெயில் ரூட் (BUTTERFIELD OVERLAND MAIL ROUTE), இது செயின்ட் லூயிஸ் முதற்கொண்டு சேன்ஃபிரான்சிஸ்கோ வரை செல்லும் வழித்தடத்தை, ஸ்டேஜ் கோச் ரூட் என்று அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் இது கால்நடை வழித்தடமாகவும் பயன்பட்டது. இந்த வழித்தடம் 19ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதியில் உபயோகமாக இருந்தது. 

போஸ்மேன் டிரெயில், (BOSMEN TRAIL), இது டெக்சாஸ் தொடங்கி மோண்டோனா  வரை செல்லும் கால்நடை வழித்தடமாக 1860 முதல் 1870 வரையான காலகட்டத்தில் உபயோகமாக இருந்தது.

இந்த வழித்தடம் கொலரேடோ மற்றும் வியோமிங் வழியாக சென்றது. இது முக்கியமாக மோன்டோனாவின் சுரங்கங்களில் முகாம்களுக்கும், இதர குடியேற்ற பகுதிகளுக்கும் கால்நடைகளைக் கொண்டு சென்றது.

அமெரிக்காவின் மேற்கு பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த கால்நடை வழித்தடங்கள் எல்லாம் பேருதவியாக இருந்தன என்பதுதான் இந்தக் கடிதத்தின் முக்கிய செய்தி. 

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

GNANASURIA BAHAVAN D

WRITER & COACH

(COMMUNICATUION & CONSERVATION OF NATURE)

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...