Friday, July 5, 2024

JEANS CULTURE OF COWBOYS - ஜீன்ஸ் கலாச்சாரம்

 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகிய அம்சங்கள்


கடிதம் 10.

ஜீன்ஸ் கலாச்சாரம்

JEANS CULTURE OF COWBOYS 

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

இது எனது 10 வது கடிதம். எப்படி இருக்கிறீர்கள் ? சௌக்கியமா ? நான் இங்கு நலமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு உதவியாக என் மகன், மருமகள், என் பேரக் குழந்தைகள், என் மனைவி எல்லோரும் உதவியாக இருக்கிறார்கள். 

நான் இதற்கு முன் அமெரிக்க வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சென்ற முறை இங்கு வந்த போது இப்பகுதியில் இருக்கும் 44 முக்கிய மரங்களைப் பற்றி ஆய்வு செய்து அவற்றை கட்டுரைகளாகவும் தினம் தினம் வெளியிட்டேன். 

அவை அனைத்தும் எனது இரண்டாவது நூல்பூமியை யோசி மரங்களை நேசி”யில் இடம் பெறச் செய்தேன். அந்த புத்தகத்தை 2023 ஆம் ஆண்டு 610 பக்கங்களில் வெளியிட்டேன். 108 மரங்கள் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வண்ணப் படங்களுடன் வெளிவந்தது, அந்தப் புத்தகம். 

இந்த முறை நான் டெக்ஸாஸ் பகுதியின் சரித்திர செய்திகளின் ஊடாக கௌபாய் கலாச்சாரத்தின் முக்கியமான அம்சங்களைப் பதிவு செய்யும் பணியில் நான் ஈடுபட்டு உள்ளேன். 

வெளிநாடு பற்றிய இந்த கட்டுரைகளைப் படிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமா இருக்காதா, என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்ததை விட நீங்கள் கூடுதலான ஆர்வம் காட்டி வருகிறீர்கள். அது எனக்கு உற்சாகம் தருவதாக உள்ளது. 

இன்னும் கூடுதலாக என்னை எழுதத் தூண்டுகிறது அதுதான் ஒரு நாளில் அதிகபட்சமான நேரத்தை படிக்க, எழுத, பார்க்க என்று நான் ஒதுக்கி வருகிறேன். 

எனது கட்டுரைகளை படிப்பதும் அது பற்றி கருத்து சொல்வது ஆகியவற்றைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

இன்று இது எனது பத்தாவது கடிதம். இதில் உங்களுக்கு பிடித்தமான பல செய்திகள் இருக்கின்றன.

முக்கியமாக கவ்பாய்கள் அணியும் அகலக்குல்லாய், முரட்டு ஜீன்ஸ், திடமான காலணி பூட்ஸ் (BOOTS), 2024 ட்ரெண்டிங் ஆக இருக்கும் ஜீன்ஸ் பேண்ட் எது என்றெல்லாம் இதில் எழுதி இருக்கிறேன். 

உலகம் முழுக்க 85 சதவீதம் பெண்கள் ஜீன்ஸ் அணிகிறார்கள். இவர்களில் 55 சதவீதத்தில் மூன்று முறை ஜீன்ஸ் பேண்ட் அணிகிறார்கள். 22 சதவீதம் பேர் வாரத்தில் 5 நாள் அணிகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. 

சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ் பேண்ட்களின் 39 % வாங்குவது வட அமெரிக்கா, அதற்கு அடுத்தபடியாக ஜீன்ஸ் உபயோகிப்பவர்கள் மேற்கு ஐரோப்பா 20 %, ஜப்பான் மற்றும் கொரியாவில் 10%, இதர நாடுகள் 31 சதம், என்று அந்த புள்ளி விவரம் சொல்லுகிறது.

கௌபாய் என்ற வார்த்தையை தெரிவதற்கு முன்னாலேயே இந்தியர்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணிய தொடங்கினார்கள். அதற்கு நானே ஒரு உதாரணம். 

இருபத்தைந்து வயதில் ஜீன்ஸ் போட ஆரம்பித்த நாள் இன்று வரை ஜீன்ஸ் போட்டு வருகிறேன் இன்று என் வயது 75. 

தெரிந்தோ தெரியாமலோ உலகம் முழுவதும் உள்ள மக்கள் கௌபாய் கலாச்சாரத்தால் கவரப்பட்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பந்தனா (BHANDANA)என்பது ஒரு கைக்குட்டை. கர்ச்சிப்பு  என்று சொல்லலாம். வேர்வை துடைக்க, தூசுகளை துடைக்க, தொலைவில் இருப்பவர்களுக்கு சைகை செய்ய இது பயன்படும். 

கௌபாய் பூட்’டுகள் கூர்மையான நுனியை உடையவை. பூட்’டின் அடிப்பக்கம் கொஞ்சம் உயரமாக இருக்கும். பூட்’டின் மேல் பக்கம் கணுக்காலுக்கும் மேலாக உயர்ந்து இருக்கும். 

இதனால் புதர்களின் ஊடாக நடந்து செல்லும் போது கூட முட்கள் மற்றும் குச்சிகள் குத்தாமலும் பாம்புகடியிலிருந்தும் இது பாதுகாப்பு தரும்.

பேண்டிற்கு மேல் அணியும் தோலினால் தயாரிக்கப்பட்ட சேப்ஸ் (CHAPS)ஒரு அணிகலன் உண்டு. பேண்ட் அணிந்த பின்னால் அதன் மேல் இதனை போட்டுக் கொள்ள வேண்டும்குதிரைகளில் முட்புதர்களுக்கு ஊடாக சவாரி செய்யும் போது முட்கள் சில சமயம் முட்கம்பிகள் போன்றவற்றிலிருந்து இது பாதுகாப்பு தரும்.

முரட்டுத்தனமான துணிகளில் தைக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட்டுகள் பெரும்பாலும் அவை டெனிம் அல்லது கேன்வாஸ்களில் (DENIM, CANVASS) தைக்கப்பட்டிருக்கும். 

எப்படிப்பட்ட மோசமான இடங்களில் வேலை செய்தாலும் அசைந்து கொடுக்காத துணிகளாக அவை இருக்கும். ரேன்ச்’களில் குதிரை சவாரி செய்ய இந்த உடைகள் தான் ஏற்புடையதாக இருக்கும்.

ஸ்பர்ஸ் (SPURS) என்னும் சக்கரங்கள் கால்களில் அணியும் பூட்டின் பின்புறம் இணைத்து இருப்பார்கள். அதன் மூலமாக குதிரைகளை விரைவாக ஓட செய்வார்கள்.

கடுமையான வேலைகளைச் செய்யும் போது கைகளில் கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பு. அது போன்று பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கையுறைகளை (HAND GLOVES) போட்டுக் கொள்ளலாம். முரட்டுத்தனமான கால்நடைகளை பிடிக்க, பிடித்துக்கட்ட, இந்தக் கையுறைகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

சேணம் இல்லாமல் குதிரைகளில் பயணம் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. குதிரை முதுகின் மீது உட்காருவதற்கு வசதியாக போடப்படும் சாதனம் தான் சேணம் என்பது. ஆங்கிலத்தில் இதனை சேடில் (SADDLE) என்று சொல்லுவார்கள். 

ஆடு மாடுகளை கட்டுவதற்கு அல்லது அவற்றை கட்டுப்படுத்துவதற்கு கயிறுகளைப் பயன்படுத்துவது உண்டு. அதனை லேரியட் அல்லது  லேசோ (LARIOT & LASSO) என்று சொல்லுகிறார்கள். 

நமது ஊர்களின் முரட்டுத்தனமான மாடுகளைக் கட்டுப்படுத்த முக்கனாங் கயிற்றினைப் பயன்படுத்துவார்கள். சில சமயம் அடங்காத மாடுகளுக்கு பின்னங்கால் கட்டுப் போடுவார்கள். இதனை கால்கட்டு என்பார்கள்.

அடங்காமல் அலைந்து திரியும் இளைஞர்களை பற்றி சொல்லும்போது “எல்லாம் ஒரு கால்கட்டு போட்டால் சரியாக போகும்” என்பார்கள். இங்கு கால்கட்டு என்றால் திருமணம் என்று அர்த்தம். 

அதுபோல மூக்கணாங்கயிறு போட்டால் எப்படிப்பட்ட அடங்காப்பிடாரியான மாடும் அடங்கிவிடும். மூக்கந்தண்டையில் ஒரு ஓட்டைபோட்டு அதன் மூலம் கயிற்றினைச் செலுத்தி கொம்புகளைச் சுற்றி கட்டுவார்கள். இதுதான் மூக்கணாங்கயிறு. 

அண்ணாந்தோள் போடுவது என்பது இன்னொரு முறை உண்டு. முன்னங்கால் ஒன்றையும் தலை கயிற்றையும் இணைத்துக் கட்டுவதற்கு அண்ணாந்தோள் போடுவது என்று அர்த்தம். 

இந்த முறைகள் எல்லாம் இன்னும் கூட நமது கிராமங்களில் புழக்கத்தில் உள்ளன. எனக்கே இதில் எல்லாம் அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் நான்கு பால் கறக்கும் பசுமாடுகள் எப்போதும் இருக்கும்.

எங்கள் மாட்டுக் கொட்டகைகளில் எப்போதும் குறைந்தது எட்டு மாடுகள் இருக்கும். இதற்காகத் தேவைப்படும் கயிறுகளை எல்லாம் நாங்களே சிறு ரயில் கற்றாழை மடல்களில் இருந்து தயாரிப்போம்.

நான் சிறுவனாக இருந்தபோது, இந்த வேலைகளை எல்லாம் என் அப்பா எனக்கு சொல்லித் தந்தார். அவர் ஒரு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆனால் கூட இந்த வேலைகளை எல்லாம் அவரை பார்ப்பார். எங்களுக்கும் அவற்றை எல்லாம் சொல்லித் தருவார்.

கௌபாய்கள் அணியும் உடைகளில் நிறைய பாக்கெட்டுகள் உடையதாக தைப்பார்கள். இந்தப் பைகளில் அவ்வப்போது தேவைப்படும் சிறு சிறு கருவிகளை வைத்துக் கொள்ளலாம். இதுபோன்று ஆடைகளோடு கூடுதலாக அமைக்கப்படும் பாக்கெட்டுகளை வெஸ்ட்ஸ் (VESTS) என்று சொல்லுகிறார்கள்.

வ்ரேங்லர் மற்றும் லெவி (WRANGLER, LEVI) ஆகியவை ஜீன்ஸ் பேண்ட்களை உற்பத்தி செய்யும் முக்கியமான கம்பெனிகள்.

லெவி ஸ்டார்ஸ் (LEVI STRAUS) என்னும் பிராண்ட் ஜீன்ஸ் பேண்ட்கள் தான் அதிகம் சர்வதேச அளவில் விற்பனையாகின்றன.

குஜராத்தின் அரவிந்த் மில், கோயம்புத்தூரின் கேஜி டெனின், அகமதாபாத்தின் ஆசிமா டெனின் ஆகியவை தான் அதிகமான ஜூன் துணிகளை  உற்பத்தி செய்கிறார்கள்.

உலக அளவில் ட்ரெண்டிங்காக இருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமாவைட் லெக் ஜீன்ஸ், கப்புடு ஜீன்ஸ், ஒயிட் ஜீன்ஸ், பேரல் ஜீன்ஸ், லோ ஸ்லங் ஜீன்ஸ், ஸ்ட்ரெயிட் லெக் ஜீன்ஸ் ஆகியவை 2024 ல் ட்ரெண்டிங் ஆக இருக்கும் ஜீன்ஸ்கள்.

உலக அளவில் அதிக அளவில் ஜீன்ஸ் துணிகளை ஏற்றுமதி செய்யும் ஐந்து நாடுகள் சைனா பாகிஸ்தான் இந்தியா துருக்கி மற்றும் எகிப்து.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          


1 comment:

Yasmine begam thooyavan said...

Cowboy 🤠 பற்றி தெரியாத தகவல்களை தெரிந்துக் கொண்டேன். Cowboy boots, cowboy jeans தகவல்கள் சூப்பர். படிக படிக ரொம்ப interesting யாக இருக்கிறது. அடுத்த கடிதம் எப்போது? Iam waiting.

By
A. Yasmine begam thooyavan.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...