Dear brother
உலகின் பிரபலமான குதிரைகளும்
கவ்பாய் குதிரைகளும்
ICONIC COWBOY'S AND THE HISTORIC HORSESALEXANDER BUCEPHALAS |
NAPOLEON'S MARENGA HORSE |
SIVAJI'S KATHIYAVARI |
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
இன்றைக்கு கடிதத்தில் பல சுவாரஸ்யமான செய்திகளை எல்லாம் உங்களுக்காக சேகரித்து வைத்துள்ளேன்.
ரேன்ச் பண்ணைகளில் எப்படிப்பட்ட குதிரைகளை பயன்படுத்தினார்கள் ?
அந்தக் குதிரைகள் எப்படி உலகின் பிரபலமான குதிரைகளின் வரிசையில் பொருந்துகின்றன என்று பார்க்கப் போகிறோம்
குதிரைகளோடு சேர்ந்து பார்க்க முடிந்த நாங்கு பெயர்களை சொல்லுங்கள் பார்ப்போம்.
சிரமப்பட வேண்டாம் நானே சொல்லுகின்றேன்.
அவை மாவீரன் அலக்சாந்தர், நெப்போலியன், சத்திரபதி சிவாஜி, மற்றும் ராஜாதேசிங்கு அடுத்து கவ்பாய் குதிரைகள்.
அலக்சாந்தரின் குதிரையின் பெயர் பூசிப்பாலஸ்(BUCEPHALAS), நெப்போலியன் குதிரை மாரெங்கோ(MARENGO), சத்ரபதி சிவாஜி குதிரையின் பெயர் பாதல்(BADAL), ராஜாதேசிங்குவின் குதிரை நீலவேணி(NILAVENI), கவுதம புத்தரின் குதிரை கந்தகா(KANTHAGA), கவ்பாய் குதிரை குவாட்டர் ஹார்ஸ்(QUARTER HORSE)
அந்தக் குதிரைகள் எல்லாம் தனி நபர்களின் வெற்றிக்கு உதவிய குதிரைகள், ஆனால் கவ்பாய்க் குதிரைகள் அனைத்தும் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவிய குதிரைகள்
தனி மனிதர்களுக்கு உதவிய குதிரைகளைவிட பரந்துபாட் சமூகத்திற்கு உதவிய குதிரைகளே மென்மையானவை, என்ன சொல்லுகிறீர்கள்
இப்போது ஒவ்வொரு குதிரையாகப் பார்ப்போம்.
அலக்சாந்தர் சிறுவனாக இருந்தபோதிலிருந்து அவருக்கு பழக்கமான குதிரை பூசிப்பாலஸ்.
அலக்சாசாந்தர், வெற்றியின் அடையாளமாக பூசிப்பாபாலசைப் பார்த்தார்.
கிரீஸ் நாட்டிலிருந்து இந்தியாவரை 20000 மைல்கள் அலக்சாந்தர் பயணம் செய்தது இந்த குதிரையில்தான்
அலெக்சாண்டரின் பூசிபேலஸ் ஹைடஸ்பஸ் போரில் (HYDASPES BATTLE) கொல்லப்பட்டது. தனது உயிர் நண்பன் தன்னை விட்டுப் பிரிந்தது போல கவலை கொண்டார் அலெக்சாண்டர். அந்த குதிரையின் பெயரில் ஒரு நகரை நிர்மாணித்தார். அந்த நகரின் பெயர் பூசிபாலா (BUCEPHALA) என்பது.
அடுத்து நெப்போலியன் குதிரை. அவர் வாழ்விலும் தாழ்விலும் பங்கு கொண்ட குதிரையின் பெயர் மாரெங்கோ என்பது. இது ஒரு அரேபியன் குதிரை.
1800 ஆம் ஆண்டில் மாரெங்கோ போரில்(BATTLE OF MARENGO) வெற்றி பெற இந்த அரேபியன் குதிரை மிகவும் உதவியாக இருந்தது.
அதனால் நெப்போலியன் அந்த குதிரைக்கு மாரங்கோ என்ற பெயரைச் சூட்டினார்.
1815 ஆம் ஆண்டு வாட்டர்லூ போரில் (WATERLOO)நெப்போலியன் தோற்றபோது முதல் காரியமாக பிரிட்டிஷ்காரர்கள் அவர் குதிரையைப் பிடித்து அதனை லண்டனுக்கு கொண்டு போனார்கள்.
“வாங்க.. இதுதான் நெப்போலியன் சவாரி செய்த போர் குதிரை..பாருங்க” என்று அது சாகும் வரை அதனை காட்சிப் பொருளாக வைத்திருந்தார்கள்
மாரெங்கா இறந்த பிறகு அதன் எலும்புகூட்டைக் கூட லண்டன்
மாநகரத்தின் ராணுவ அருங்காட்சியகத்தில் இன்றுவரை போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளார்கள்
இன்றைக்கும் நீங்கள் லண்டன் போனால் பார்க்கலாம்.
சத்ரபதி சிவாஜியின் குதிரையின் பெயர் பாதல்(BADAL) என்பது. இப்போது நாம் கொரில்லா போர் முறை என்று என்று சொல்கிறோம். அதனை சிவாஜி, அந்த காலத்திலேயே கையாண்டவர்
அதற்கு பெரும் உதவியாக இருந்தது இந்த பாதல் குதிரை. இது கத்தியவாரி (KATHIYAVARI) என்னும் இனத்தைச் சேர்ந்தது. கத்தியவார் (KATHIYAVAR)என்பது குஜராத்தின் ஒரு பகுதி.
வேகம், சுறுசுறுப்பு, விரைந்து சோர்வடையாத தன்மை, சிறு சிறு சைகைகளை கூட புரிந்து கொண்டு செயல்படும் புத்திசாலித்தனம் அனைத்திலும் முன்னிலைப் பெற்றிருந்தது பாதல்
வரலாற்றில் இன்னொரு மறக்க முடியாத குதிரை, செஞ்சியை அரசாண்டு தேசிங்கு ராஜாவின் குதிரை. அதன் பெயர் பரிகாரி என்பது. இன்னொரு பெயர் அதற்கு நீலவேணி
டெல்லி பாதுஷா வாங்கிய ஷாஆலம் வாங்கிய குதிரை இது. ஆனால் வாங்கிய பிறகு இந்த குதிரையை அடக்க யாராலும் முடியவில்லை. அந்த அடங்காப்பிடாரி குதிரையை 18 வயது ஆன ராஜா தேசிங்கு அடக்கி சவாரி செய்தான்
டெல்லி பாதுஷா, ராஜா தேசிங்குக்கு அந்த குதிரையை பரிசாகத் தந்தார். அதன் பிறகு தேசிங்கு ராஜன் ராஜாவகி தமிழ் நாட்டில் செஞ்சி மாநகரில் சிறப்பாக ஆட்சி செய்தான்.
இறுதியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு போரில் அவன் கொல்லப்பட்டான். அவன் குதிரையும் கொல்லப்பட்டது. அவர்கள் இருவரின் சமாதியும் இன்றும் தமிழ்நாட்டில் நீலாம்பூண்டி என்ற கிராமத்தில் இருக்கிறது
அடுத்து, கந்தகா (KANTHAKA) என்பது கௌதம புத்தரின் குதிரை. புத்தர் ஞானம் பெறுM நிமித்தமாக பல இடங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்த போது அவருக்கு உதவியாக இருந்த குதிரையின் பெயர் கந்தகா என்பது.
இப்போது நாம் டெக்ஸாஸ் பகுதிகளில் ரேஞ்ச் பண்ணைகளில் பயன்படுத்தப்பட்ட 10 இனக் குதிரைகளைப் பார்க்கலாம்.
அவை, குவாட்டர் ஹார்ஸ்(QUARTER HORSE), பெயிண்ட் ஹார்ஸ் (PAINT HORSE), அப்பலூசா (APALOOSA), மஸ்டாங் (MUSTANG), அரேபியன் ஹார்ஸ்(ARABIAN HORSE), தரவுபிரட்(THROUGHBRED), மார்கன், (MORGAN)அமெரிக்கன்செட்(AMERICAN SADDLE BRED), டென்னிசி வாக்கிங் ஹார்ஸ்(TENNESI WALKING HORSE), மற்றும் கிளைடெஸ்டேல்(CLYDESDALE).
இந்த பத்து வகை குதிரைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட குதிரை அமெரிக்கன் குவாட்டர் ஹார்ஸ் என்ற இனம் தான்.
AMERICAN QUARTER HORSE |
என்னென்ன காரணங்களால் குவாட்டர்ஹார்ஸ் குதிரை இனம் அதிகம் ரேஞ்ச் பண்ணைகளில் பயன்படுத்தினார்கள் என்று பார்ப்போம்
ரேஞ்ச் பண்ணைகளில் மாடுகளின் மடக்குதல் (HERDING)கயிறு வீசி மாடுகளை பிடித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்(ROPING) மற்றும் பண்ணை சார்ந்த பல வேலைகள் செய்தல்(GENERAL RANCH WORKS) அனைத்தும் செய்ய அதிகம் உதவியாக இருந்தது இந்த குவாட்டர்ஹார்ஸ் குதிரை இனம் தான்
ஓடும் கால்நடைகளை துரத்திச் செல்லல் அவற்றை மடக்குதல் போன்ற காரியங்களுக்கு வேகமாக ஓட வேண்டும்.
சில குதிரைகள் மனிதர்கள் மாதிரி தான். வேலைகளை முரண்டு பிடிக்காமல் செய்யும் மனநிலை வேண்டும். பயிற்சி தரும்போது அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதனைக் கையாள சுலபமாக இருக்க வேண்டும்.குதிரைகளுக்கு அளவான முரட்டுத்தனம் வேண்டும்
உறுதியான உடல் அமைப்பு இருந்தால் தான் கூடுதலான நேரம் உழைக்க முடியும். சவாரி செய்ய ஏற்புடையதாக இருக்கும். பல்வேறு வேலைகளையும் விருப்பமுடன் செய்யும் மனப்பாங்கு குதிரைகளுக்கு இயல்பாக இருக்க வேண்டும்.
இந்தப் பண்புகள் எல்லாம் மற்ற குதிரை இனங்களை விட அமெரிக்கன் குவாட்டர் ஹார்ஸிடம் சிறப்பாக இருந்ததால், அதனை அந்த காலத்தில் சிறந்த குதிரையாக ரேன்ச் பண்ணைகளில் அதிகம் பயன்படுத்தினார்கள்.
இந்த குவாட்டர் ஹார்ஸ் என்று இந்த குதிரை இனம் 1600 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் உருவானது. அமெரிக்காவின் நாட்டு குதிரை இனங்களுடன் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய இனக் குதிரைகளின் இன கலப்பு மூலம் உருவான குதிரை இனம்.
இந்த குதிரைகள் 56 முதல் 64 அங்குள்ள உயரமும், 950 முதல் 1200 பவுண்டு உடல் எடையும், அகன்ற மார்பும், உறுதியான உடல் அமைப்பும், வலிமையான கால்களும், காவி நிறம், கருப்பு நிறம், சாம்பல் நிறம், ஆகிய நிறத்துடனும், இவற்றின் கலவையான நிறங்களிலும், அமைதியாகவும், புத்திசாலியாகவும், எளிதாகவும் எதையும் கற்றுக் கொள்ளும் குதிரை என்று குவாட்டர் ஹார்ஸ் இனத்தை வருணிக்கிறார்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால் வேகம், வலிமை, உறுதி, சுலபமாக பழகும் தன்மை, கொண்ட குதிரைகள் இவை என்று சொல்லலாம்.
2.பெயின்ட் ஹார்ஸ்: இந்தக் குதிரையும் குவாட்டர் ஹார்ஸ் மாதிரியே இருக்கும் ஆனால் விதியாசமான வண்ணங்களில் இருக்கும். 3.அப்பலூசா குதிரையினம் கவர்ச்சிகரமான புள்ளிகளுடனும் ஓய்வில்லாமல் உழைக்கும் தன்மையும் உட
PAINT HORSE |
4. மஸ்டாங் இனக்குதிரைகளை காடுமேடு பார்க்காமல் சளைக்காமல் சவாரி செய்யலாம், எந்த புதிய சூழலுக்கும் தன்னை தயார் செய்துகொள்ளும்
5. அரேபியன் ஹார்ஸ், ரொம்ப திமிருடன் இருக்கும் ஆண் பெண் இருபாலரையும் இதன் பெயரால் அன்புடன் அழைப்பதுண்டு
6.தரவ்பிரெட் குதிரைகள் வேகமானவை அளவெடுத்துத் தைத்த சட்டை மாதிரி ரேன்ச் பண்ணை வேலைகளுக்கு மிகவும் பொருத்தமானவை
7.மார்கன் குதிரை இனம், உறுதியானவை விதவிதமான வேலைகள் என்றாலும் சளைக்காமல் செய்யும் தன்மை உடையவை
8. அமெரிக்கன் சேடில் பிரட்: வசதியாக சவாரி செய்ய கால்நடை மந்தைகளை பின் தொடர சவுகரியமாக இருக்கும் குதிரை இனம் இது
9. டென்னிசி வாக்கிங் ஹார்ஸ்: வசதியாக பிரச்சினை யில்லாமல் வெகுதூரம் பிரயாணம் செய்ய ஏற்ற குதிரை இனம்
10.கிளைடெஸ்டேல் குதிரை இனம், எவ்வளவு எடை கொண்ட சுமையையும் இழுத்து செல்லும் திறங்கொண்டது. கடுமையான ரேன்ச் பண்ணை வேலைகளுக்கு ஏற்ற குதிரை.
எதிர்பாராத பல செய்திகள் உங்களுக்கு கிடைத்திருக்கும், உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அன்புடன்
WRITER CUM COACH ON
COMMUNICATION &
CONSERVATION OF NATURAL RESOURCES
No comments:
Post a Comment