LONGHORN 1 |
அமெரிக்காவின் அழகிய அம்சங்கள்
லாங் ஹார்ன் மாட்டினம் எப்படி அமெரிக்கா வந்தது ?
HOW LONGHORN CATTLE CAME TO TEXAS
கடிதம் 15
"Tesla கார்கள் 🚗 பற்றிய செய்திகள் மட்டுமல்லாமல் முகவரியோடு கொடுத்த தகவல்கள் அபாரம். இந்த electric car company பற்றிய கட்டுரை சூப்பர். Tesla கார்கள் எனக்கு பிடித்திருக்கிறது.
தகவல்களும் பிடித்திருக்கிறது.
தாங்களின் ஒவ்வொரு கடிதமும் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சார்."
ஏ. யாஸ்மின் பேகம் தூயவன்
(திருமதி யாஸ்மின் பேகம் அவர்கள் பிரபல சினிமா கதையாசிரியர் தூயவன் அவர்களின் புதல்வி)
"I have gone through your
letter. I have not visited any Ranch even though I visit USA every year since
1995 .After going through your letter I felt as if I visited a Ranch .You have
gathered lot of information and neatly drafted. I appreciate your art of
drafting of any visits.In memory of Texas I have a T shirt with longhorn. This
T shirt is famous .Your son may be knowing about this T shirt. Keep writing
letters of your visit and worth of complaining in to a book. Hearty
congratulations. You can title the book as “Nan Kanda America” ."
Sambasivam IFS (Retd)
Winston Salem, N C .
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.
இன்றைய கடிதத்தில் லாங்ஹார்ன் மாடுகள் அமெரிக்காவிற்கு எப்போது வந்தது எப்படி வந்தது ? அது எப்படி இங்கு இருக்கும் ரேன்ச் பண்ணைகளில் பரவியது ? எப்படி மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது ? என்றெல்லாம் பார்க்கலாம்.
LONGHORN 2 |
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக லாங்ஹார்ன் மாடுகளை ஸ்பெயின் நாட்டினர் மெக்சிகோவுக்கு கொண்டு வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
லாங்ஹார்ன் மாட்டினம் என்பது ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமானது 15 வது மற்றும் 16வது நூற்றாண்டில் வெளி உலகிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்த மாட்டினை அறிமுகம் செய்தார்கள்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தின் போது 1493 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த லாங்ஹார்ன் மாடுகளை கரிபியன் தீவுகளில் அறிமுகம் செய்தார். அங்கிருந்து தான் லாங்ஹார்ன் மாடுகள் மெக்ஸிகோவிற்கு போனது. அதன் பின்னர் மெக்சிகோவில் இருந்து டெக்ஸாஸ் வந்தது.
லாங்ஹார்ன் கால்நடைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் எப்படிப்பட்ட மோசமான கடுமையான சூழல்களையும் தாங்க கூடிய மாட்டினம் இது. வறட்சியான மற்றும் குளிர்ச்சியான சூழல்கள் இரண்டையும் தாங்கும் தன்மை உடையது.
LONGHORN 3 |
பல நூற்றாண்டுகளாக வட அமெரிக்காவின் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டுள்ளது நோய்களை தாங்கும் தன்மை உடையதாக உள்ளது.
லாங்ஹார்ன் கால்நடைகளின் கொம்புகள் மிக நீளமாக இருக்கும். இரண்டு கொம்புகளின் நீலம் ஏழு முதல் எட்டடி நீளம் வரை இருக்கும். இதன் உடலின் நிறம் சிவப்பு, வெள்ளை, கருப்பு, காவிநிறம் ஆகிய நிறங்களிலும், இந்த நிறங்களின் கலவையாகவும் இருக்கும்.
டெக்சாஸ் பகுதியில் ரேன்ச் என்னும் பெரும் பண்ணைகள் பரவும் சமயங்களில் அதிகமாக பயன்படுத்தியது முக்கியமாக இந்த லாங்ஹார்ன் மாட்டினம் தான்.
இதனை 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் இருந்து ஏறத்தாழ இறுதி கட்டம் வரை என்று சொல்ல வேண்டும்.
கால்நடைப் பெரும்பண்ணைகள் டெக்ஸாஸ் பகுதியில் பரவிய காலகட்டத்தில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் லாங்ஹார்ன் மாடுகள்தான் அடிப்படைத் தேவையாக இருந்தது.
டெக்ஸஸ் மட்டும் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக இருந்தது லாங்ஹார்ன் என்று சொல்லுகிறார்கள்.
இந்த மாடுகளின் இறைச்சி, தோல், மற்றும் இதர பொருட்களும் இப்பகுதி மக்களுக்கு வாரி வழங்கும் காமதேனுவாக இருந்தது, மற்றும் இன்று வரை இருந்தும் வருகிறது என்கிறார்கள்.
LONGHORN 4 |
19ஆம் நூற்றாண்டு வாக்கில், பல புதிய மாட்டு இனங்களை அறிமுகம் செய்தது மற்றும் ரேன்ச் பண்ணைகளில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றங்கள் ஆகியவை லாங்ஹார்ன் மாட்டு இனத்தின் தேவையை கணிசமாகக் குறைத்து விட்டது.
இருபதாம் நூற்றாண்டு வாக்கில் லாங்ஹார்ன் மாட்டினத்தின் பெருமையை, அதன் சரித்திர முக்கியத்துவம் மற்றும் பயன்பாட்டினை, அதன் சிறப்பான பண்புகளை எல்லாம் உணர்ந்து, அதனைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் தொடங்கி அது இன்று வரை தொடர்கிறது.
சமீபகாலமாக டெக்ஸஸ் பகுதியில் பல ரேன்ச் என்னும் கால்நடைப் பண்ணைகளில் லாங்ஹார்ன் மாடுகள் மீண்டும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
ஆரம்ப காலத்தில் ஸ்பெயின் நாட்டினர் உலகம் முழுவதும் சுற்றி அலைந்து, புதிய நாடுகளை கண்டுபிடித்து அந்த நாடுகளை அடிமைப்படுத்த முடியுமா? அங்கிருக்கும் செல்வ வளங்களை எல்லாம் சுரண்ட வாய்ப்பு உள்ளதா ? என்றெல்லாம் கண்டுபிடிப்பதற்காக ஒரு கோஷ்டியை வைத்திருந்தார்கள்.
அப்படிப்பட்ட கோஷ்டியில் இருந்த ஒருத்தர் தான் ஹெர்னான் கோர்ட்டர்ஸ் (HERNAN CORTERS) என்பவர். இவர்தான் லாங்ஹார்ன் மாடுகளை மெக்ஸிகோவிற்கு கொண்டு வந்தவர்.
ஸ்பெயின் நாட்டிலிருந்து மெக்சிகோ வந்து குடியேறியவர்கள் லாங்ஹாங் மாடுகளைக் கொண்டு வந்து அங்கு ரேன்ச் பண்ணைகளை அமைத்தார்கள்.
கிறிஸ்துவ மதத்தின் மிஷின்களையும் (CHRISTIAN MISSIONS) அமைத்தார்கள் மாட்டு பண்ணைகளை உருவாக்கிய நிலப்பகுதியை விவசாயம் செய்யும் நிலங்களாக மாற்றினார்கள்.
சொல்லப்போனால் விவசாய பண்ணைகளையும் மாட்டுப் பண்ணைகளையும் ஒன்றிணைத்தது இவர்கள்தான் என்று சொல்லலாம்.
அந்த காலகட்டத்தில் டெக்ஸாஸ், மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் இப்போது ரேன்ச் பண்ணைகள் மெக்சிகோவின் வடபகுதியிலிருந்து டெக்ஸாஸ் பகுதிக்கும் பரவியது.
இப்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து மெக்சிகோவிற்கு குடியேறியவர்கள் மற்றும் கிறிஸ்துவ மிஷன் பாதிரிகள், ரேன்ச் பண்ணைகளை, டெக்ஸாஸ் பகுதியில் அறிமுகம் செய்யப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் ஃப்ரீ ரேஞ்சிங் கேட்டில் (FREE RANGING CATTLE)என்ற முறையை இங்கு அறிமுகம் செய்தார்கள். ஒவ்வொரு மாட்டையும் கட்டி வைத்து வளர்க்காமல், பட்டி பட்டியாக திறந்தவெளியில் வளர்க்கும் முறையை அறிமுகம் செய்தார்கள்.
காலப்போக்கில் இதுபோல, கொட்டடி இல்லாமல் பட்டிபட்டியாக வளர்க்கும் முறைக்கு இந்த லாங்ஹார்ன் மாடுகள் பழகிப் போயின. இதனை ஆங்கிலத்தில் ப்ரீ ரேஞ்சிங் கேட்டில் என்று சொன்னார்கள்.
இப்போது 1821 ஆம் ஆண்டு மெக்ஸிகோவுக்கு ஸ்பெயின் சுதந்திரம் தந்தது. மெக்சிகோவில் இருந்த ரேஞ்ச் பண்ணையாளர்கள் தொடர்ந்து கால்நடைப் பண்ணைகளை உருவாக்கினார்கள்.
இந்த சமயம் ஆங்கில அமெரிக்கக் குடியேறிகள் (AMERICAN SETTLERS)டெக்ஸஸ் பகுதியில் குடியேறினார்கள். இது 1820 முதல் 1830 வரை யான காலகட்டம். இவர்களும் ரேஞ்ச் பண்ணைகளை அமைத்தார்கள்.
LONGHORN 5 |
இப்போது ஐரோப்பிய மாடலைப் போல திறந்த வெளியில் மாடுகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். வேலிகள் இல்லை. கொட்டகைகள் இல்லை. கொட்டடி இல்லை. அதனால் திறந்த வெளியில் லாங்ஹார்ன் மாடுகள் நன்கு பழகி பெருகி வளர்ந்தன.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு மாட்டு இறைச்சிக்கான தேவை அதிகமானது. டெக்ஸாஸ் பகுதியிலிருந்து கேன்சாஸ் பகுதி போன்ற ரயில்ஹெட்’டுகளுக்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கும் மாடுகளை அனுப்ப ஆரம்பித்தார்கள்.
அந்த சமயங்களில் டெக்ஸஸ் பகுதியிலிருந்து லாங்ஹார்ன் மாடுகளை இந்த அமெரிக்க பகுதிகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த லாங்ஹார்ன் வியாபாரம் வெகுவாக சூடு பிடித்தது.
இந்த காலகட்டத்தில் ரேஞ்ச் பண்ணைகள், லாங்ஹார்ன் மாடுகள், கௌபாய்களின் வாழ்க்கை முறை அனைத்தும் டெக்சாஸ் மற்றும் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியின் கலாச்சாரமாக உருவெடுத்தது.
இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், இன்று டெக்ஸாஸ் பகுதியில் சரித்திரம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக இருப்பது லாங்ஹார்ன் மாட்டினம் என்று கொண்டாடுகிறார்கள். அது ஸ்பெயின் தேசத்து மாடு என்பது சுத்தமாய் மறந்து போனது.
இன்றைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டெக்ஸாஸ் பகுதியில் 1000 கால்நடைப் பண்ணைகளைப் புதிதாக தொடங்குகிறார்கள்.
இப்போது ஒட்டுமொத்தமாக டெக்ஸாஸ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரம் ரேன்ச் பண்ணைகள் இருக்கின்றன.
LONGHORN 6 |
இந்த ரேஞ்ச் பண்ணைகளின் சராசரி அளவு, 1981 ஆம் ஆண்டு 581 ஏக்கராக இருந்தது. 2017 ஆம் ஆண்டு கணக்குப்படி அது 509 ஏக்கராக தற்போது குறைந்துள்ளது என்று சொல்லுகிறது ஒரு ஆய்வுச் செய்தி.
இந்தக் கடிதத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மாட்டினமாக இருந்த லாங்ஹார்ன் என்பதை எப்படி ஸ்பெயினிலிருந்து மெக்சிகோ வந்து, மெக்ஸிகோவில் இருந்து டெக்சாஸ் வந்தது என்பது பற்றி எல்லாம் பார்த்தோம்.
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment