Friday, July 19, 2024

GUN CULTURE AMONG COWBOYS கவ்பாய்களின் துப்பாக்கிக் கலாச்சாரம்

 

THE GUNS AND THE BOMBS, THE ROCKETS AND WARSHIPS, ARE ALL SYMBOLS OF HUMAN FAILURES – LYNDON B.JOHNSON 

THE ONLY MISUSE OF GUNS COMES IN ENVIRONMENTS WHERE THERE ARE DRUGS, ALCOHOL, BAD PARENTS,AND UNDISCIPLINED CHILDREN.PERIOD. – TED NUGENT

GUN CULTURE AMONG COWBOYS

கவ்பாய்களின் துப்பாக்கிக் கலாச்சாரம்

JOHN WAYNE  WITH COLT GUN

அன்பின் இனிய நண்பருக்கு வணக்கம் !

எப்பிடி இருக்கிங்க ? சவுக்கியமா ? குழந்தைகள் சவுக்கியமா ? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சவுக்கியமா ?

இன்றைய கடிதத்தில் கௌபாய் மத்தியில் துப்பாக்கிகள் பயன்படுத்தும் கலாச்சாரம் எப்படி தொடங்கியது ? எப்படி அது வளர்ந்தது ? அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறதா ? என்பதை பற்றி எல்லாம் இந்த கடிதத்தில் பார்க்கலாம்.

கௌபாய் என்றதும் எனக்கு ஞாபகத்திற்கு வருவது சாய்வாக இடுப்பில் கட்டி இருக்கும் அகலமான பெல்ட்டில், இரண்டு பக்கமும் சொருகி இருக்கும் இரண்டு ரிவால்வர்கள், கையில் பிடித்தபடி இருக்கும் நீளமான கைத்துப்பாக்கி, முரட்டு ஜீன்ஸ், மூட்டி வரை உயர்ந்த ஷூக்கள், பாயும் குதிரை, தலையில் அகலமான குல்லாய், அனைத்தும்தான் நினைவுக்கு வரும்.                                                                                                                                                                                                                                                      

TYPICAL COWBOY OUTFITS
இன்று நாம் இந்த கவ்பாய்கள், துப்பாக்கிகளை எப்படி பயன்படுத்த ஆரம்பித்தார்கள் ?  அது ஒரு கலாச்சாரம் என்று சொல்லும் அளவிற்கு அது எப்படி வளர்ந்தது ? அதன் சரித்திர பின்புலம் என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

கவ்பாய்கள் மத்தியில் பரவிய இந்த துப்பாக்கி கலாச்சாரம் 19 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கியது. 

அந்த காலகட்டத்தில் தான் மேற்கு அமெரிக்காவின் குடியேற்றம் (SETTLERS IN WEST AMERICA)பரவிய சமயம் இது. 

ஒரு பக்கம் சிவில் வார் (CIVIL WAR)நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிவில் வார்’ல் பிரபலமானவர்கள் எல்லோரும் ரேன்ச் பண்ணைகளை  நடத்துவதிலும் பிற்காலத்தில் பிரபலமான கவ்பாய்களாக  ஆனார்கள்.

இவர்கள் அனைவருக்கும் போரில் துப்பாக்கிகள் போன்ற  நவீன ஆயுதங்களை கையாளுவதில் நல்ல அனுபவம் இருந்தது.

கோல்ட் ரிவால்வர் (COLT RIVOLVER)என்னும் கைத்துப்பாக்கியை 1873 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்கள். சிங்கிள் கோல்ட் ஆக்சன் ஆர்மி ரிவால்வர் (SINGLE COLT ACTION ARMY RIVOLVER)என்று அதனை சொன்னார்கள்.

COLT GUN OF 1873


அந்த காலதிதிலேயே அதன் விலை 15 அமெரிக்க டாலர்.அதுதான்
கவ்பாய்களின் கைவிரல்கள் போல பிற்காலத்தில் ஆனது. 

வின்செஸ்டர் ரைபிள் (WINCHESTER RIFLE),இதுவும் 1873 ஆம் ஆண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் கைபாய்களின் கைகளில் அடைக்கலம் ஆனது. 

வின்செஸ்டர் ரைஃபில்’லை மேற்கு அமெரிக்காவை வெற்றிகொண்ட ஆயுதம் என்று அதனை சொல்லுகிறார்கள்.


WINCHESTER 1873
பெரிய மற்றும் முக்கியமான நகரங்களில் வெளிப்படையாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதி (OPEN CARRY) இருந்தது. காரணம் அங்கு செல்லும்போது பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அன்று இதை அனுமதித்தார்கள்.
OPEN CARRY 1

அமெரிக்க நாட்டுப்புறக் கதைகளில், சினிமாக்களில் துப்பாக்கிச் சண்டை என்பது மிகுதியாக போற்றப்பட்டது. அதனை பெரும்பாலானோர் விரும்பினார்கள். துப்பாக்கி சண்டையில் திறமையானவர்கள் காவிய புருஷர்களாக கொண்டாடப்பட்டார்கள்.

POPULAR COWBOY ACTOR

இரண்டு துப்பாக்கிகளை இரண்டு கைகளில் ஏந்தியபடி எதிரிகளை சுடும் பழக்கம் நடைமுறையில் இல்லை. எனிலும் அது கவுபாய் கலாச்சாரத்தின் சிறப்பான திறமையாகக் கொண்டாடப்பட்டது.

அந்த காலகட்டத்தில் நிலம், நீர், கால்நடைகள் இவற்றிற்கான உரிமை,இது எனக்கு சொந்தம்..இதுல கைவச்சிப் பாரு.. அப்புறம் நடக்கறதே வேற..” இப்படி சொந்தம் கொண்டாடி தான் வன்முறை வெடிக்கும். அப்புறம் என்ன ?  அவை பெரும்பாலும் துப்பாக்கி சண்டைகளில் முடியும். 

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனதுபோல, ‘துப்பாக்கி எடுத்தவன் எல்லாம் துருவநட்சத்திரம் போல ஆனான்’.

கவ்பாய்கள் தங்கள் மாடுகளை வழித்தடங்களில் கொண்டு செல்லும்போது அவர்களுக்கு மாட்டுத் திருடர்கள் மற்றும் காட்டு விலங்குகள் இடமிருந்து பாதுகாப்பு தேவைப்பட்டது அதற்கு அவர்களுக்கு துப்பாக்கி அத்தியாவசியம் தேவையாக இருந்தது. 

எருமைகளை வேட்டையாடுவது என்பதிலும் கௌபாய்கள் அவ்வப்போது ஈடுபட்டு வந்தார்கள். அந்த சமயத்திலும் அவர்களுக்கு துப்பாக்கிகள் அவசியத் தேவையாக இருந்தது. 

கௌபாய்கள் அடிக்கடி அமைக்க பழங்குடி மக்களோடு சண்டை போட வேண்டிய அவசியம் இருந்தது. அந்த சமயத்தில் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்து போராடவும் துப்பாக்கி என்பது கவ்பாய்களின் முக்கியமான ஆயுதமாக இருந்தது.

GUNS FOR PROTECTION

சட்டம் ஒழுங்கு என்பது நடைமுறையில் இல்லாத இடங்களில் அல்லது சரியாக இல்லாத போது மிகவும் விழிப்பாக இருக்கும் சிலர் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பவை துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் தான். 

துப்பாக்கி என்பது காலப்போக்கில் கௌபாய்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையான ஒரு அம்சமாக ஆனதனால் அவர்கள் துப்பாக்கிகள் போன்ற கருவிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை எடுக்கத் தொடங்கினார்கள். 

துப்பாக்கிகளை வைத்திருப்பது என்பதை கௌபாய்கள், சுதந்திரத்தின் அடையாளமாக கருதினார்கள். தன்னிறைவு பெற்றவர்களாக கருதிக் கொண்டார்கள். 

உத்தியோகம் என்பது புருஷ லட்சணம் என்பது மாதிரி துப்பாக்கி என்பது கவ்பாய்களின் கவுரவ லட்சணம் ஆனது. 

கவ்பாய்கள் என்னும் முரட்டு வாழ்க்கையின் அடிப்படை தேவை துப்பாக்கி என்று கருதத் தொடங்கினார்கள். காலப்போக்கில் துப்பாக்கி என்பது கலாச்சாரத்தின் கௌபாய்கள்’ன் அடையாளமாக ஆகிப்போனது.

இருபதாம் நூற்றாண்டில் இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல ஹாலிவுட் படங்கள் யாவும் கௌபாய்களை தூக்கிப்பிடித்தது. அவர்களை மாவீரர்களாக காட்டியது. அவருடைய வாழ்க்கையை காவியமாக சித்தரித்தார்கள்.

அந்த படங்கள் உலகெங்கும் பிரபலமாக ஓடின. ஆலிவுட்டில் தயாரித்த கவ்பாய்கள் படங்கள் எல்லாம் அமட்டன் வாராவதியில்கூட அம்பது நாள் தாண்டி ஓடின. 

தமிழ் சினிமாவில் வேட்டைக்காரன் படத்தில் எம் ஜி ஆர் கவ்பாயாக நடித்தார். ஜெய்சங்கர் 10 படம் நடித்தால் அதில் ஒன்பது படங்களில் கவ்பாயாக நடித்தார். 

Tamil Actor MGR as a
COWBOY

இருபதாம் நூற்றாண்டில் ஹாலிவுட்டில் சினிமாப்படங்கள் பெரும்பாலும் கவ்பாய்களை முன்னுறுத்தித்தான் படங்கள் வெளிவந்தன. 

கவ்பாய் காலத்திலிருந்து உபயோகப்படுத்திய துப்பாக்கிகளை சேகரித்து அவற்றை அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்துவது என்பது சரித்திர முக்கியத்துவம் பெற்றன.

நான் டெக்சாஸ் பகுதியில் சேன்ஜோ மற்றும் ஃபொர்ட்வொர்த் ஆகிய இரண்டு கௌபாய் அருங்காட்சியகங்களைப் பார்த்தேன். இரண்டு இடங்களிலும் அந்தக் காலத்து துப்பாக்கிகளை சேகரித்து வைத்திருந்தார்கள். 

Tamil Actor Jaisankar as a 
COWBOY 

அமெரிக்காவில் தும்மல் போட்டால்கூட துப்பாக்கி எடுப்பது என்பது தொடரும் கலாச்சாரமாக உள்ளது. அதன் மிச்ச சொச்சம்தான் சமீபத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களை ஒரு இருபது இளைஞன் துப்பாக்கியால் சுட முயன்றது என்கிறார்கள். 

இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்ததா ? கமெண்ட் பகுதியில் எழுதுங்கள். மீண்டும் அடுத்தக் கடிதத்தில் சந்திப்போம். நன்றி வணக்கம். 

Gnanasuria Bahavan D

Writer & Coach in Conservation of Natural Resource

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...