Tuesday, July 23, 2024

FRENCH FUR TRADE WITH NATIVE AMERICANS அமெரிக்காவின் பழங்குடிகள் செய்த வியாபாரம்.

 

கடிதம் 23 

FOR THE NATION TO LIVE, THE TRIBE MUST DIE - Samora Machel  

அமெரிக்காவின் ஆதிகுடிகள்  

செய்த வியாபாரம்.

FRENCH FUR TRADE WITH 

NATIVE AMERICANS

CHEROKEE NATIVE AMERICAN

NAVJO NATIVE AMERICAN




CHICKSAW NATIVE AMERICAN






அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

நீங்க எப்படி இருக்கிங்க ? உங்க குடும்பத்துல இருக்கும் எல்லாரும் சௌக்கியமா ? 

ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் என்ன வியாபாரம் தொடங்கினார்கள் ? யாருடன் வியாபாரம் செய்தார்கள் ? எத்தனை ஆண்டுகள் வியாபாரம் செய்தார்கள் ? 

அந்த வியாபாரம் இயற்கை வளங்களை பாதுகாத்ததா ? பரமரித்ததா ? என்பது பற்றி சரித்திர சம்பவங்களுடன்  இந்த கடிதத்தில் பார்க்கலாம்.

இதனை கவ்பாய் கலச்சாரத்திற்கு முந்தைய காலகட்டம் என்று சொல்லலாம்.

ஆரம்ப காலத்தில் ஐரோப்பியர்கள் தங்களுக்கு வேண்டிய ரோமங்களை அமெரிக்க பழங்குடிகளிடமிருந்து வாங்கினார்கள். அதற்கு பதிலாக தங்களிடம் உள்ள பொருட்களை பண்டமாற்று முறையில் விற்பனை செய்தார்கள்.

சில சமயங்களில் பழங்குடிகள் ஐரோப்பியர்கள் இடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் உலோகத்தில் செய்த சமையல் பாத்திரங்கள் மற்றும் துணிகளை வாங்கிக் கொண்டார்கள்.

1.பழங்குடிகள். 

16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் புதிய நாடுகளை கண்டுபிடிக்க என்று சுற்றி வரும் ஐரோப்பியர்கள் (EROPIAN EXPLORERS), கிழக்கு இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இருக்கும் இடங்களைத் தேடி அலைந்தார்கள். அது அவர்களுக்கு முடியாமல் போனது.

அதன் பின்னர் அவர்களுடைய பார்வை அமெரிக்க பழங்குடிகளின் மீது விழுந்தது. அப்போது அந்த பழங்குடிகள் பீவர் மற்றும் பெல்ட் (BEAVER & PELTS)என்னும் உரோம வியாபாரம் (FUR TRADE)செய்து வந்தார்கள்.

பெல்ட் என்பது  மேல்பக்கம் மெல்லிய ரோமங்களை உடைய தோல் என்று அர்த்தம். பீவர் என்பது ஒரு நீரில் வாழும் உயிரினம்,

BEAVER FUR  ANIMAL

எருமைகள் மட்டுமின்றி நரிகள், ஓட்டர், லிங்ஸ் மற்றும் மின்க் (FOXES, OTTER, LINX,MINK)போன்ற விலங்குகளையும் ரோமத்திற்காக பழங்குடிகள் வேட்டையாடினார்கள். அவற்றிலிருந்து உரோமங்களை சேகரித்து விற்பனை செய்தார்கள்.

இந்த ஐரோப்பிய நாடு பிடிக்கும் கோஷ்டிகள் (EUROPEON EXPLORERS OF NORTH AMERICA) ஆரம்பகாலத்தில் பழங்குடி மக்களைத் தாக்கி இந்த ரோமங்களை  வழிப்பறியும் (ENCOUNTER)செய்தார்கள்.

OTTER FUR ANIMAL

 பதினாறு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை உரோம வியாபாரம். (FUR TRADE) முக்கியமானதாக இருந்தது. ஐரோப்பிய குடியேறிகள் பிரஞ்சு, இங்கிலீஷ் மற்றும் டச்சுக்காரர்கள் அமெரிக்காவின் பழங்குடி மக்களிடம் (NATIVE AMERICANS) ரோமங்களை குறைவான விலைக்கு வாங்கி, அவற்றை ஐரோப்பாவில் விற்பனை செய்து பெரும் லாபம் பார்த்தார்கள்.

MINK FUR ANIMAL
CHINCHILLA FUR ANIMAL

இந்த வியாபாரம் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல வட அமெரிக்காவின் சுற்றுச்சூழலில் (ECO SYSTEM) மிகப்பெரிய சரிவையும் ஏற்படுத்தியது.

இந்த காலகட்டம் அமெரிக்காவின் குடியேற்றத்திற்கு முற்பட்ட காலம். ஐரோப்பியாவிலிருந்து குடியேறியவர்கள் இங்கு வருவதற்கு முன்னால், பழங்குடி மக்கள் வில் அம்பு போன்ற பாரம்பரிய கருவிகளையே பயன்படுத்தி வேட்டையாடினார்கள். 

சட்டைக்கு மேல் அணியும் கோட்டுகள், அங்கிகள், தலைக்குல்லாய்கள், மற்றும் இதர துணி வகைகள் (COATS, ROBES, HATS & OTHER GARMENTS) செய்ய ரோமங்களை பயன்படுத்தினார்கள்.

இவற்றையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கத் தயாராக இருந்தார்கள் செல்வந்தர்கள். இந்த உரோம வியாபாரத்தில் அதிகம் ஈடுபட்டவர்கள் ஃபிரன்ச்சுக்காரர்கள்.

இந்த உரோம வியாபாரத்தின் மூலம் அமெரிக்க பழங்குடிகள் நவீன முறையில் உற்பத்தி செய்த மது வகைகளுக்கு நிரந்தர அடிமையானார்கள் என்று சொல்லுகிறார்கள்.

பீவர்பெல்ட் தோலுடன் அதன் மேல் இருக்கும் ரோமமும் இருக்குமாறு அதனை பதப்படுத்துவார்கள். ரோம வியாபாரத்தில் பீவர்பெல்ட் என்னும் தோலுக்குத்தான் மரியாதை அதிகம் இருந்தது.

அதற்கு தான் நல்ல விலை கிடைத்தது, அதிகம் விற்பனையானது என்று சொல்லுகிறார்கள். இதன் தோலின் மீது இருக்கும் உரோமம் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

தண்ணீரினால் நனையாது. பெல்ட்ஹேட்  (FELT HAT)என்னும் ஒரு வகையான தொப்பிகளை செய்வதற்கும் இதர அணிகலன்களைச் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தினார்கள். 

17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் சுமார் 200 ஆண்டுகள் உரோம வியாபாரம் என்பது விமரிசையாக நடந்தது. இதில் கொடி கட்டி பறந்தது இந்த பீவர் என்ற பிராணியின் தோல்தான். 

இவை அதிகமான விலைக்கு விற்பனையானது. அந்த காலத்தில் பீவர் மற்றும் முயல் ஆகியவற்றின் தோலில் செய்த தொப்பிகள் மலிவான விலைக்கு விற்பனையானது. 

ஆனால் கூட மின்க் (MINK)என்ற பிராணியின் ரோமம் தான், சர்வதேச அளவில் பிரபலமானது என்கிறார்கள். இதன் முடிகள் குட்டையாக இருக்கும். கொஞ்சம் பருமனாக இருக்கும். தொட்டுப்பார்த்தால் மிருதுவாகமெத்’தென (SHORT THICK & SOFT )இருக்கும்.

இதனால் செய்யப்பட்ட பொருட்கள் நீண்ட நாள் உழைக்கும்.

ஃபெல்ட் தொப்பிகள் (FELT CAPS)என்றால் அதில் பாதி கம்பளி இருக்கும் மீதி ரோமம் இருக்கும். 

ஃபீவர், நரிகள், மின்க், மஸ்க்ராட் மற்றும் ரக்கூன்களின் ரோமங்களின் கம்பளி   தயாரிக்கிறார்கள். 

இதனை  நெய்வதற்கு முயல், பாப்காட், போல்கேட், ஸ்டோட், மார்டன், ஓட்டர், சேபிள், சிவட், சீல்ஸ், காரர்கள் ஆடுகள் மஸ்கோக்ஸ் கரிபோக்ஸ், லாமா மற்றும்  அல்பகாவின் ரோமங்களும் பயனாகின்றன. 

டாப் ஹெட்ஸ்(TOP HATS), இவை மிகவும் உயர்வான வகை தொப்பிகள். இவற்றைச் செய்ய பீவர், ஒட்டகம், மற்றும் விக்குனா என்னும் விலங்குகளின் ரோமம் பயன்படுத்தப்படுகிறது. கௌபாய் தொப்பிகளின் விலை மலிவாக இருக்கும்.

தொட்டால் மெத் மெத்தன்று இருக்கும் இந்த தொப்பிகள் பெரும்பாலும் யூரோப்பியன் ஹேர் (EUROPEON HARE)என்னும் முயல்களின் ரோமத்தில் செய்தவை.

உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ரோமங்கள் தரும் பிராணிகள் நான்கு. அவை மின்க், நரிகள், ரக்கூன்,  முயல்கள்,  சின்ச்சிலா (MINK, FOX, RACOON, RABBIT, CHINCHILLA)என்னும் பிராணிகள். 

பல்வேறு விதமான பிராணிகளின் ரோமங்கள் பற்றி பேசும்போது உலகிலேயே எந்தப் பிராணியின் ரோமம் மிகவும் மென்மையானது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். 

சொல்லுகிறேன் கேளுங்கள், நம் தலையில் முடிகள் வளரும் இடத்தை ஹேர் ஃபாலிகிள் (HAIR FOLLICLE) என்பார்கள். அதனை முடிப்பள்ளம் என்று சொல்லலாம். மனிதத் தலையில் ஒரு முடிப்பள்ளத்தில் ஒன்று அல்லது இரண்டு முடிகள்தான் வளரும். 

ஆனால் இந்த சின்சில்லாவின் முடி பள்ளத்தில் 80 முதல் 100 முடிகள் இருக்கும்.

சின்சில்லாவின் முடிகள் மென்மையாக இருப்பதால் தான் அவை மேன்மையாக இருக்கிறது என்கிறார்கள்.

சின்சில்லா முயல்கள் போல இருந்தாலும், இவை முயல்கள் அல்ல என்கிறார்கள். 

1919 ஆம் ஆண்டு வாக்கில் பிரான்ஸ் தேசத்தில், இதன் இறைச்சி மற்றும் ரோமத்திற்காக சின்கில்லாக்களை வளர்த்ததாக சொல்லுகிறார்கள். ஆனால் இதன் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

டென்மார்க் சைனா நெதர்லாந்து போலந்து ஆகிய நான்கு நாடுகள் ரோம உற்பத்தியில் முதல் நிலையில் உள்ளன. இதில் ஐந்தாவது ஆக இருப்பது அமெரிக்கா.

இத்துடன் தொடர்புடைய ஒரு செய்தி உலகிலேயே அதிக மாடுகளை எருமைகளை உடைய நாடு இந்தியா தான்.

இன்னொரு செய்தி உலகிலேயே அதிகமான அளவு எருமை இறைச்சி ஆட்டு இறைச்சி, செம்மறி ஆடுகள் இறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடும்  இந்தியா தான்.

எருமைகளின் ரோமங்களை   முரட்டுக் கம்பளிகள்  நெய்து அதிகம் போர்வைகள் செய்யவும் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்.

எருமை என்று சொல்லும் போது அவற்றின் உற்பத்தி கேந்திரமாக இருந்தது ஆசியா. அதிலும் குறிப்பாக இந்தியா.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வீடுகளில் எருமைகளை வளர்த்து வந்ததாக சரித்திரம் சொல்லுகிறது

ரோமங்களை உற்பத்தி செய்யும் தொழில் ஆரம்ப காலத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக எப்படி அமெரிக்காவில் நடந்தது என்றது பற்றிய செய்திகளை எல்லாம் இந்த கடிதத்தில் பார்த்தோம்

மீண்டும் அடுத்த ஒரு சுவாரஸ்யமான செய்திகளுடன் அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

என்னுடைய கட்டுரைகளை படிக்கும் போது, உங்கள் கருத்துக்களை ஒன்றிரண்டு வாக்கியங்களில் எழுதும்படி உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம் !


GNANASURIA BAHAVAN D
WRITER & COACH
(CONSERVATION OF NATURAL RESOURCES)

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...