Thursday, July 4, 2024

COWBOY HERO’S DAILY ROUTINES - எம் ஜி ஆர் வீரர்களின் சாகசங்கள்

 

அமெரிக்காவின் அழகான அம்சங்கள்

GLIMPSES OF AMERICA


கடிதம்: 9

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

இன்று நான் உங்களுக்கு இன்று அமெரிக்காவின் “கவ்பாய்”களுக்கும் நம்ம ஊர் ஆடுமாடு மேய்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம், நம்ம ஊர் மாட்டுப்பண்ணைக்கும், இங்கு ரேன்ச்’சுகளில் வேலைபார்க்கும் “கவ்பாய்”களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், அவர்கள் செய்யும் வேலைகள், அவர்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும், என்ன திறமைகள் வேண்டும், இதையெல்லாம் இந்தக் கடிதத்தில் பார்க்கலாம்.  

இங்கு நான் வந்து இன்றோடு 14 நாட்கள் ஆகின்றன. என்னுடைய இலக்கு நான் 63 நாட்கள் இங்கு தங்குவதாக உத்தேசம்.

இங்கு வெளியில் அடிக்கும்100 டிகிரி. வீட்டிற்குள் 24 மணி நேரமும் ஏசி. இரண்டுமே நமக்கு சோதனைதான்.

ஆனால் புதிய பூமி, புதிய வானம், புதிய காற்று, புதிய மனிதர்கள், புதிய மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், புதிய அற்வு. எல்லொருக்கும் கிடைக்காத வாய்ப்பு.

அதனால்தான் என்னால் இயன்றவரை  நான் படித்தவற்றை, பார்த்தவற்றை, உங்களொடு பகிர்ந்து கொள்ள எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். இதனை உருவாக்கித் தந்த என் மகன் மறுமகள் இருவருக்கும் உங்கள் சார்பில் எனது நன்றிகள். 

“பயனில சொல் பாராட்டுவானை மகன் எனல்

மக்கட் பதடி எனல்”

நீங்கள், என்னை வள்ளுவர் குரலில் “பதடி” என்று சொல்லுவதை விரும்பவில்லை. அதனால்தான் பயன் தரும்செய்திகளை மட்டும் உங்களுக்காகத் திரட்டி “மலைபடுகடாம்” என இல்லாமல் சுலபமான தமிழில் சுகமான தமிழில் தருகிறேன்.

இது எனது ஒன்பதாவது கடிதம். உங்களுக்குத் தெரியும் நான் தங்கி இருக்கப் போவது டெக்சாஸ். இதுதான் “கவ்பாய் கலாச்சாரம்” விதைக்கப்பட்டு மகாவிருட்சமாக வளர்ந்த இடம். உலகில் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமான பெயர் “கவ்பாய்” என்பது.

நான் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த காலத்திலிருந்தே எனக்கு கவ்பாய் படங்கள் பலமணி நேரம் சினிமா தியேட்டர் கியூவில் நின்ற அனுபவம் எனக்கு அதிகம் உண்டு.

அதனால் இந்த கவ்பாய் கலாச்சாரம் குறித்து எழுத எனக்கு எல்ல தகுதியும் உண்டு. 

அதனால்தான் இந்த முறை அமெரிக்க பயணத்தின் போது கவ்பாய் கலாச்சாரம் குறித்த ஆய்வினை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

முக்கியமான கருப்பொருளாக அதனை எடுத்துக் கொண்டுள்ளேன் அவ்வளவுதான். வேறு சுவாரஸ்யமான செய்திகள் தட்டுப்பட்டாலும் அவை பற்றியும் எழுதுவேன்.

இந்தியாவில் மாடுகள் மேப்பவரை மாட்டுக்காரர் என்று சொல்லுவது வழக்கம். தனித் தனியாக ஒவ்வொரு குடும்பத்தினரும் வளர்க்கும் மாடுகளை ஒன்றாக ஓட்டிச் சென்று மாலைவரை மேய்த்துக்கொண்டு வருவார்கள்.

புல் இருக்கும் இடங்களுக்கு மேய்வதற்காக ஓட்டிகொண்டு செல்லுதல், மதியவேளைகளில் தண்ணீர் குடிக்கவைக்க ஏரி குளம் குட்டைகளுக்கு ஓட்டிச்செல்லல், அக்கம்பக்கத்தில் இருக்கும் பயிர் பச்சைகளில் வாய்வைக்காமல் பார்த்துக்கொள்ளுவது எல்லாம் அவர்களுடைய வேலையாக இருக்கும்.

மாடுகளை வளர்த்து பால் கறந்து பால், தயிர், மோர், வெண்ணை, நெய், என்று எடுத்து விற்பனை செய்வதற்காக இந்தியாவில் ஒரு சமூகம் உள்ளது.

இப்படி ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் வாழ்வாதாரம் தேடுபவர்களுக்கு இடையர்கள், கோனார்கள், மந்திரிமார்,

இந்தியாவைப் பொருத்தவரை கிராமப் புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவ்ர்களுக்கு உழவு ஓட்ட இதர வேலைகளைச் செய்ய என்று மாடுகள் வேண்டும். இந்தியாவில் விவசாயம் என்றால் கால்நடை வளர்ப்பையும் சேர்ந்ததுதான்.

இது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான். ஆனால் கால்நடை வளர்ப்பு என்பது எப்படி ஒரு தனி கலாச்சாரமாக வளர்ந்தது என்பதைப்  புரிந்துகொள்ள இந்த அடிப்படை உங்களுக்கு உதவும்.

இப்போது டெக்சாஸ் பகுதியில் இருக்கும் ரேன்ச்’ பண்ணைகளில் இருந்த  கவ்பாய்களின் அன்றாட வேலைகள் என்னென்ன ? என்று பார்க்கலாம்.

ரேன்ச் பண்ணைகள் என்பது அளவில் மிகவும் பெரியவை.“பொலபொல’ வென விடியும்போதெ கவ்பாய்களின் வேலை தொடங்கிவிடும்.

அன்றையப் பொழுது செய்யவேண்டிய வேலைகளை திட்டமிடுதல், குதிரைகளைத் தயார் செய்தல், காலைச் சிற்றூண்டியை முடித்தல்.

ஆயிரக்கணக்கான மாடுகளை மேய்ச்சலுக்குத் தோதான இடங்களுக்கு வெகுதூரம் ஓட்டிச்செல்லல், வழி நடத்துதல், அவற்றை  மேய்த்தல், ஒன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளல், விலங்குகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாத்தல், ஆகிய அனைத்து வேலைகளுக்கும் குதிரைகளைப் பயன்படுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய பணிகள்.


கவ்பாய்களின் கூட்டாளிகள் குதிரைகள்தான். ஒரு நாளில், பெரும்பாலான நேரத்தை குதிரை மீதுதான் செலவீட வேண்டியிருக்கும். குதிரைகளைப் பழக்குவது மற்றும் அதனுடன் பழகுவதும் இவர்களின் பிரதான வேலைகளில் ஒன்று.  

ரேன்ச்’ களின் கம்பி வேலிகளைப் பரமரிப்பது, கால் நடைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் ஏற்பாடு செய்வது, ஓடும் மாடுகளை கயிறுகலளை 

மாடுகளை மேய்ப்பது குறைவான எண்ணிக்கை கொண்ட மாடுகளை மேய்ப்பது என்று அர்த்தம். பெரும் எண்ணிக்கையில் மாடுகளை மேய்ப்பதை மந்தை மடக்குதல் என்பார்கள்.

மந்தை மாடுகளை வழி நடத்த வேண்டும். வெகு தூரம் அவற்றை வழிநடத்தி செல்ல வேண்டும். அவையெல்லாம் ஒன்றாக இருக்கும் படியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல கால்னடைத் திருடர்கள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து அவற்றைப்  பாதுகாக்க வேண்டும்.

கவ்பாய்கள் ஒரு நாளின் பெரும்பாலான தங்கள் நேரத்தை குதிரை மீதுதான் செலவிட வேண்டி இருக்கும். சொல்லப்போனால் கவ்பாய்களின் கூட்டாளி என்றால் அவை குதிரைகள் தான். 

ஆகையால் இந்த குதிரைகளைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது இரண்டும் கூட கவுபாய்களின் பிரதான வேலைகள்தான்.

பெரும் பண்ணைகளின் தேவைகளைப் பராமரிப்பது கால்நடைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் ஏற்பாடு செய்வது. இதர வசதி வாய்ப்புகளை ஏற்பாடு செய்வதும் கவ்பாய்களின் வேலைதான். 

மந்தையை விட்டு தனித்து ஓடும் மாடுகளை மடக்குவது என்பதற்கு தேவைப்படுவது வீசியெரிந்து மாடுகளை மடக்கும் கயிறுகள். 

இன்னொன்று அந்த பண்ணைக்கு உரிய மாடு என்பதை அடையாளப்படுத்துவது.  இதை அவர்கள் பிராண்டிங் என்று சொல்லுகிறார்கள்.

ஒரு மாட்டினை பார்த்தவுடன் சொல்ல வேண்டும் இது எந்த பண்ணையைச் சேர்ந்த மாடு என்று. அதற்கான அடையாளம் அந்த மாடுகளில் இருக்க வேண்டும்.

துணிகளை சலவை செய்வோர் துணிகள் மாறாமல் இருப்பதற்காக குறிபோடுவது வழக்கம்அதுபோன்று மாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு அம்சம். இதுதான் “பிராண்டிங்”.

கவ்பாய்களுக்கு யாரும் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். கடை கண்ணிகளில் வாங்கிக் கொள்ளவும் முடியாது. மேச்சலுக்கு செல்லும் இடங்களிலேயே கற்களை அடுக்கி அடுப்புகளை தயார் செய்ய வேண்டும். அதில் சமையல் செய்து சாப்பிடவும்  பழகிக்கொள்ள வேண்டும். ஆக கவ்பாய் என்றால் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டும். 

காற்று மழை பார்க்க கூடாது எப்போது மழை வரும் ? எப்போது வெப்பம் நெருப்பாய் காயும் ? எப்போது குளிர் பல்லைக் கிட்டும் ? புயலும் மழையும் எப்போது சுழ்ன்றடிக்கும் ? என்பதெல்லாம் தெரிந்து கொண்டு சுதாரிப்புடன் கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும். தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுபோல ஆடு மாடுகளை மேய்ப்பவர்களுக்கு பிரத்தியேகமாக தேவைப்படுவது விசில் அடிப்பது, வித்தியாசமாகக்  குரல் கொடுத்து கால் நடைகளுக்கு உத்தரவிடுவது,  விலங்குகளின் சப்தம், அவற்றின் காலடித்தடம் ஆகியவற்றைக் கண்டறிந்து கால்நடைகளையும் தன்னையும் பாதுகாத்துக் கொள்வது,தொலைவில் தனது  இருக்கும் சகாக்களுக்கு முக்கிய த க வ ல் க ளைத் தெரிவிப்பது, ஆகிய 64 கலைகளிலும் கவ்பாய்கள்  கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அடிக்கடி வெளியிடங்களுக்கு செல்வது, அங்கு டென்ட் அடித்து தங்குதல் அங்கு குதிரைகளை பராமரிப்பது, ஆயத்தப்படுத்துவது அங்கிருந்து புறப்படும் போது செய்ய வேண்டியவை அனைத்திலும் கவ்பாய்கள் கலக்க  வேண்டும்.  எள் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணையாக இருக்க வேண்டும். 

ஒரு மந்தையுடன் செல்லும்போது அதில் 2000 முதல் 3000 மாடுகள் இருக்கும்.  பத்து முதல் 15 குதிரைகள் இருக்கும்.15 முதல் 20 கவ்பாய்கள் இருப்பார்கள்.   மாலை நேரங்களில் ஆட்டம் பாட்டம் கதை சொல்ல இப்படி பொழுதுபோக்கு   அம்சங்களிலும் தங்கள் நேரத்தில் மகிழ்ச்சிகரமாக செலவிட வேண்டும். 

கடுமையான வேலைகளுக்கு ஊடாக இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கை நரகமாக மாறிவிடும். 

ஒருமுறை தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலப்படம் வந்தது. அதன் தலைப்பு மூன்று எம் ஜி ஆர் வீரர்கள். அதன் ஆங்கில தலைப்பு தி த்ரீ மெஸ்கட்டீர்ஸ் (THE THREE MUSKETEERS). இது ஃபிரான்சு நாட்டின் எழுத்தாளர் அலக்சாண்டர் டூமாஸ் எழுதிய நாவல். சினிமாவாக வந்தது.

இந்த கவ்பாய் ஆய்வினை செய்யும்போது, எனக்கு அடிக்கடி தோன்றுவது இவர்கள்அமெரிக்காவின் எம் ஜி ஆர் வீரர்கள். 

ஆக ரேஞ்சிங் அல்லது டெக்ஸஸ் மாடல் பெரும் பண்ணைகள் என்றால் அதில் கவ்பாய்கள்தான் மற்றவர்கள் எல்லாம் அசோகன் நம்பியார்  நாகேஷ் மாதிரிதான்.

பூமி ஞானசூரியன்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

   

 

 

 

  


1 comment:

Yasmine begam thooyavan said...

Cowboy கலாச்சாரம் ranch பற்றிய அருமையான ஆய்வு கட்டுரை சூப்பர். படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது. தாங்களின் பயண கட்டுரை மேலும் மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. Waiting for next letter.

Thankyou

A.Yasmine begam thooyavan.

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...