Thursday, July 11, 2024

ELAN MUSK'S CLIMATE FRIENDLY TESLA CARS - எலான் மஸ்க்'ன் சுற்றுச்சூழலுக்கு நட்பான டெஸ்லா கார்கள்







 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகான அம்சங்கள்

"ACTION BREEDS DOUBT AND FEAR. ACTION BREEDS CONFIDENCE AND COURAGE.
IF YOU WANT TO COQUER FEAR, DO NOT SIT HOME AND TALK ABOUT IT.
GO OUT AND GET BUSY"
-    DALE CARNEGIE

ELAN MUSK'S CLIMATE FRIENDLY

TESLA CARS

எலான் மஸ்க்'ன் சுற்றுச்சூழலுக்கு நட்பான

டெஸ்லா கார்கள்

IN 
ELON MUSK CEO TESLA

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் ! 

டெஸ்லா மாடல் ஒய் ()என்ற கார் தான் இன்று அகில உலக அளவில் அதிக அளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார். 

சர்வதேச அளவில் ஜப்பானின் டொயோட்டோ கொரில்லா கரை விட விற்பனையில் முன்னணியில் உள்ளது இந்த டெஸ்லா ஒய்  மாடல் கார். 

உலகம் முழுக்க 10 லட்சம் கார்கள் விற்பனையான கார் மாடல் 3 செடான் என்ற கார். இதுவும் டெஸ்லா கார் தான்.

இந்த டெஸ்லா கார் கம்பெனியை எப்போது தொடங்கினார்கள். இந்த கம்பெனி எல்லாம் சொந்தமான கம்பெனியா ? இந்த கம்பெனிக்கும் எலான் மஸ்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பற்றி எல்லாம் இந்த கடிதத்தில் பார்க்கலாம். 

தாமஸ் ஆல்வா எடிசன் ஹென்றிபோர்ட், ஹோவர்டு ஹ்யூஜஸ்,   மற்றும் ஸ்ரீவ்ஜாப்ஸ் ஆகிய மூவரின் கலவைதான் எலான் மஸ்க் என்று சொல்லுகிறார்கள். 

எலான் மஸ்க் என்ற தென்னாப்பிரிக்க குடிமகன் உலக வியாபார நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக உச்சாணிக்கொம்பில் உயர்வான இடத்தில் அமர்ந்துள்ளார். 

நம்ப முடியாத முரட்டுத்தனமான கனவுகளுடன் எலான் மஸ்க் 1992 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அடி எடுத்து வைத்தார். எலான் மஸ்க்’கின் வாழ்க்கை ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வதற்கு சமமானது. 

ஒரு நாள் உச்சாணி கொம்பில் வெற்றி வாகை சூடியதாக இருக்கும். அடுத்த நாளில் அதள்பாதாளத்தின் அடித்தளத்தில் உருண்டபடி கிடப்பார். மாபெரும் வெற்றிகள் ஒரு பக்கம் என்றால் மரண அடிகளும் அவருக்கு மாறிமாறி கிடைத்து வந்தன.

கொஞ்சம் நஞ்சம் கைவசம் இருந்த பணத்தை எல்லாம் எலான் மஸ்க் எலக்ட்ரிக் கார் மற்றும் ராக்கெட் ஏவுகலன்களை தயாரிப்பதில் முழுமையாக கொட்டி தீர்த்தார்.

2012 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு அதிர்ஷ்டத்தின் கடைக்கண் பார்வை எலான் பக்கம் திரும்பியது. 

டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சோலார் சிட்டி ஆகியவற்றில் எல்லாம் எலான் மஸ்கின் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியது அதிர்ஸ்டம்.

எலான் மாஸ்கின் வாழ்க்கையில் அதிஷ்ட காற்று வீசவில்லை. அது அதிர்ஷ்டச் சூறாவளியாக மாறி மாறி வீசிக்கொண்டிருக்கிறது. எலான் மஸ்கின் இன்றைய சொத்து மட்டும் ஐந்து பில்லியன் டாலர் என்பதைத் தாண்டிவிட்டது.

இந்த எலான் மஸ்க்’கின் உழைப்பும் வெற்றியும், உலகத்தின் பெரும் பணம் படைத்தவராக அல்ல, செல்வந்தராக அவரை மாற்றியது. அமெரிக்காவை மிகப்பெரிய பொருளாதார ரீதியான அறிவியல் அறிவின் சிகரமாகவும் மாற்றிவிட்டது என்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு அமெரிக்கா உச்சி முகர்ந்து கொண்டாடும் மனிதராக மாறிவிட்டார் இந்த ஆப்ரிக்க நாட்டின் சாமானியமான, குடிமகன். 

வெற்றி தேவதை எந்த நாட்டின் குடிமகன் ? அவன் நிறம் கருப்ப சிவப்பா என்று பார்ப்பதில்லை. இந்த சமூகத்திற்கு உபயோகமான மனிதனா என்று மட்டும்தான் பார்க்கும். 

இப்போது நாம் டெஸ்லா கார் கம்பெனியின் சரித்திரத்தை கொஞ்சம் புரட்டி பார்க்கலாம்.

மார்ட்டின் எபர்ஹெர்ட் (MARTIN EBERHERT)மற்றும் மார்க் டார்ப்பென்னிங் (MARC TARPENNING)என்பவரும் சேர்ந்து டெஸ்லா மோட்டார் கம்பெனியை 2003ஆம் ஆண்டு தொடங்கினார்கள்.

மின்சார பொறியாளர் மற்றும் அறிவியல் அறிஞர் நிக்கோலா டெஸ்லா (NIKOLA TESLA)என்பவரின் நினைவாக அந்த மோட்டார் கம்பெனிக்கு டெஸ்லா என்ற பெயரை வைத்தார்கள்.

டெஸ்லா கம்பெனி தொடங்கிய ஓராண்டு கழித்து 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதன் அதிகபட்சமான பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க். இன்று 22 சத பங்குகளுக்கு சொந்தமானவர் அவர்.

அதன் விளைவாக 2008 ஆம் ஆண்டு டெஸ்லா கம்பெனியின் தலைமைச் செயல் அலுவலர் பதவி அவரைத் தேடிச் சென்றது. இன்றைய நிலையில் டெஸ்லா என்றால் எலான் மஸ்க். எலான் மஸ்க் என்றால் டெஸ்லா.  

எலான் மஸ்க் தொடக்க காலத்தில் இருந்தே எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார். ஆனால் அவருடைய இலக்கு என்பது பிரிமியம் ஸ்போர்ட்ஸ் கார்களை (PREMIUAM SPORTS CAR) உருவாக்க வேண்டும் என்பதும் கூடத்தான்.

ஆனால்  டெஸ்லா கம்பெனி என்பது ஒரு கார் கம்பெனி மட்டும் அல்ல அது ஒரு தொழில்நுட்பக் கூடமும்கூட என்கிறார், எஃபர்ஹார்ட். அவர்தான் இந்த கம்பெனிக்கு பிள்ளையார் சுழி போட்டவர்.

டெஸ்லா கம்பெனியைத் தொடங்கியவர்கள் என்று பார்த்தால் மார்ட்டின் எபர்ஹார்ட், மார்க் டார்பென்னிங், ஜே பி ஸ்ட்ராபெல், பார்ன் ரைட் மற்றும் மஸ்க் ஆகியோர். 2007 ஆம் ஆண்டு வரை எவர் ஹார்ட் கம்பெனியின் சி இ ஓ’ வாக   இருந்தார்.

டெஸ்லா கார்கள் விலை உயர்ந்த இருப்பதற்கு காரணம் ஒன்று அதன் கார்களுக்கு இருக்கும் அதிகபட்சமான டிமாண்ட் , வரவேற்பு அல்லது தேவை. இன்னொன்று அந்த கார்களில் இருக்கும் விலை உயர்ந்த பேட்டரிகள்.

செர்பியன் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் நிக்கோலா டெஸ்லா என்பவரின் நினைவாக தான் இந்த கம்பெனிக்கு டெஸ்லா என்ற பெயர் வைத்தார்கள்.

 டெஸ்லா ஒய் (TESLA Y)என்ற மாடல் கார்தான் அதிகமான அளவில் டெஸ்லா கம்பெனியிலிருந்து விற்பனை ஆகிறது. 

கார்பன் ஃபுட் பிரிண்ட் (CARBON FOOT PRINT)பற்றி கவலைப்படுபவர்கள் சுற்றுச்சூழல் பருவ கால மாற்றம் (ENVIRONMENT, CLIMATE CHANGE)பற்றி பேசுபவர்கள், கவலைப்படுபவர்கள், இவர்கள் எல்லாம் டெஸ்லா,வைப் பற்றி மட்டுமே கனவு காண தொடங்கி விட்டார்கள்.

எலான் மஸ்க் அதிகமாக டெஸ்லா மாடல் எஸ் பெர்பார்மன்ஸ் (TESLA MODEL S PERFORMANCE)என்ற காரைத்தான் அதிகம் பயன்படுத்துவார் மாடல் 3 பெர்பார்மன்ஸ் (MODEL 3 PERFORMANCE) மற்றும் மாடல் எக்ஸ் (MODEL X CAR)காரையும் அதிக அளவில் பயன்படுத்துவார். 

டெஸ்லா கார்களின் மிகவும் மலிவான எலக்ட்ரிக் கார் என்பது டெஸ்லா மாடல் 3 (TESLA MODEL 3)என்ற கார் தான் இந்த மாடலின் ஆரம்ப விலை 40 ஆயிரத்து 740 அமெரிக்க டாலர். இதன் அதிகபட்ச மாடலின் விலை 53 ஆயிரத்து 240 அமெரிக்க டாலர் மட்டும்தான் என்று டெஸ்லாக் கூவி விற்பனை செய்கிறது. 

அமெரிக்கா போனால் டெஸ்லாவுக்கு போய் பார்த்துவிட்டு வாருங்கள். இதுதான் டெஸ்லாவின் முகவரி டெஸ்லா ஐஎன்சி ஒன்று டெஸ்லா ரோடு ஆஸ்டின் டெக்ஸாஸ் டிஎக்ஸ் 78 725 யுனைடெட் ஸ்டேட்ஸ்.

இந்த ரோட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கார், மாடல் எஸ் செடான்,  மாடல் எக்ஸ் எஸ்யூவி, மாடல் 3 செடான், மாடல் ஒய்,  டெஸ்லா செமி டிரக், சைபர் ட்ரக் பிக்கப் ட்ரக், ஆகிய கார்கள் எல்லாம் இதுவரை டெஸ்லா கம்பெனியால் ரிலீஸ் செய்யப்பட்டவை.

டெஸ்லாவின் இந்த கார்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா ? எலான் மஸ்க்கின் சாதனைகள் பிடித்திருக்கிறதா ? உங்களுக்கு கார்கள் பிடித்திருந்தால் நீங்கள் ஒரு நுகர்வோர், எ.ம. வைப் பிடித்திருந்தால் நீங்கள் சாதனையாளராக வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.

 சொல்லுங்கள் டெஸ்லாவா ? எலான் மஸ்க்கா ?

ANYTHING IS POSSIBLE WHEN YOU HAVE THE RIGHT PEOPLE -    A RIGHT MAN

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 

 

 


1 comment:

Yasmine begam thooyavan said...

Tesla கார்கள் 🚗 பற்றிய செய்திகள் மட்டுமல்லாமல் முகவரியோடு கொடுத்த தகவல்கள் அபாரம். இந்த electric car company பற்றிய கட்டுரை சூப்பர். Tesla கார்கள் எனக்கு பிடித்திருக்கிறது.
தகவல்களும் பிடித்திருக்கிறது.
தாங்களின் ஒவ்வொரு கடிதமும் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சார்.

ஏ. யாஸ்மின் பேகம் தூயவன்.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...