Friday, July 19, 2024

BUFFALO WAR IN USA - காட்டெருமைப் போர்

  

கடித எண் 21

"PLAN TO PROTECT  AIR AND WATER WILDERNESS AND WILD LIFE ARE IN FACT PLANS TO PROTECT MAN"-STEWART UDALL

காட்டெருமைப் போர்

BUFFALO WAR IN USA

BUFFALO FUR COAT IS COSTLY
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! எப்படி இருக்கிங்க ? சவுக்கியம்மா ? உங்க குழ்ந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் என் விசாரிப்புகள்.

வட அமெரிக்காவில் ஒரு காலத்தில் 40 மில்லியனுக்கு மேலான காட்டெருமைகள் இருந்தன. அவை எப்படி ஏன் முற்றிலுமாக அழிக்கப்பட்டது ? அதிலிருந்து என்ன கிடைத்தது ? இதை எல்லாம் இந்தக் கடிதத்தில் பார்க்கலாம்,

கவ்பாய்களுக்கும் முன்னதாக இந்த வேட்டைத் தொடங்கினாலும் பின்னாளில் அவர்களும் இதில் பங்கு கொண்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டெக்சாஸில் காட்டெருமை வேட்டையின் வரலாறு, கவ்பாய்களின் தைரியம், திறமை, மற்றும் கடின உழைப்பை சிறப்பிக்கும் ஒரு பகுதி என்கிறார்கள். 

ஆனால் கவ்பாய்களின் முக்கிய பணி என்பது ரேன்ச் பணிகள்தான்.இதனை நாம் மறந்துவிடக்கூடாது. 

கவ்பாய்கள் காலத்திலும் அமெரிக்க காட்டெருமைகள், மேய்ச்சல் நிலங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன.

BISON HUNTING

காட்டெருமை வேட்டைக்கு பல காரணங்கள் இருந்தன. முதன்மையானது, இதன் தோலின் விலை அதிகம், . இதன் தோலை போர்வைகளாக, கோட்டுகள், காலணிகள் மற்றும் பிற பொருட்கள் தயாரிக்க உதவியது.

இதன் கொழுப்பில் மெழுகு, சோப்பு, மற்றும் மெழுகு விளக்குகள் செய்தார்கள். இதனால், இந்த காட்டெருமை வேட்டை வணிக ரீதியாக முக்கியமானதாக இருந்தது.

FUR COATS ARE BEAUTIFUL

மேலும், இதன் மாமிசம், கௌபாய்களுக்கு உணவாகவும் இருந்தது. இதன் மாமிசம், சுவையானதோடு, அவர்களின் கடின உழைப்புக்கான சக்தியை வழங்கியது.

இதன்  இறைச்சி, நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டு, துரித உணவாகவும் பயன்படுத்தப்பட்டது. 

கௌபாய்கள் காட்டெருமை வேட்டைக்கு பயன்படுத்திய முக்கியமான ஆயுதம் வின்செஸ்டர் ரைபிள் ஆகும். வின்செஸ்டர் மாடல் 1873 ரைபிள், துல்லியமான  இந்த  வேட்டைக்கு மிகச் சிறந்தது. 

காட்டெருமை வேட்டையை காட்டெருமைப்போர் என்று சொல்லுகிறார்கள் சரித்திர ஆசிரியர்கள்..

கவ்பாய் கலாச்சாரம் என்பது தான் இந்த தொடர். ஆனாலும் அத்துடன் இதுவும் தொடர்புடையது. மேலும்  அந்த காலகட்டத்தில்  நடந்த சரித்திர சம்பவங்களையும் நாம் விட்டு விட முடியாது என்று தோன்றுகிறது.

BISON GIVES FUR

அதனால் 16ஆம் நூற்றாண்டி லிருந்து கவ்பாய் கலாச்சாரத்திற்கு முற்பட்ட அதற்கு பிற்பட்ட காலங்களில் சரித்திரங்களும் இதில் இடம்பெறும் என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களை எல்லாம் ஒரு பூ மாலை தொடுப்பது போல் உங்களுக்கு நான் தொடுத்துத்தர முயற்சி செய்கிறேன். 

FUR COATS AWESOME

1800 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் சமவெளிப் பகுதிகளில் காட்டு எருமைகளை வேட்டையாடத் தொடங்கினார்கள். அந்த காலகட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் காட்டெருமைகள் தான் கண்ணில் தென்படும்.

காட்டெருமைகளை வேட்டையாடினால் என்னென்ன கிடைக்கும் முக்கியமாக இதுதான் ரோமம் கிடைக்கும். இதன் இறைச்சி கிடைக்கும். கொம்புகள் கிடைக்கும். தோல் கிடைக்கும். எலும்புகள் கிடைக்கும். இப்படி பல பொருட்கள் இதன் மூலம் கிடைக்கிறது. இது  மட்டுமல்ல பணமும் கிடைத்தது. 

1873 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு மற்றும் மந்தமான நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் காட்டெருமை வேட்டை என்பது கனத்த காசு பணம் தரும் வழியாக இருந்தது. 

BUFFALO  HUNTING PROFITABLE

இதனால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான காட்டெருமைகளை கொன்று குவித்தார்கள்.கொன்றால் பாவம் தின்றால் போச்சி என்பது நம்ம ஊர் பழமொழி. 

ஆனால் அவர்கள்கொன்றால் பாவம் பணம் வந்தால் போச்சி” என்று காட்டெருமைகளைக் கொன்று குவித்தார்கள்.

அமெரிக்கப் பழங்குடிகள் காட்டெருமைகள் வேட்டையாடுவதற்காகவே குதிரைச் சவாரியை பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.

NATIVE AMERICANS HUNTING

பழகிய குதிரைகள் காட்டெருமை வேட்டையைச் சுலபமாக்கின.பணம் காசுக்காக பழங்குடிகள் காட்டெருமை வேட்டையை செய்யவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரமாக இருந்தது என்பதுதான் உண்மை.

ஆனால் காட்டெருமை வேட்டையில் ஈடுபட்ட வெள்ளைக்காரர்கள், மேற்கு அமெரிக்கப் பகுதிகளில் துப்பாக்கிகளை அறிமுகம் செய்தார்கள். அதன் தோலுக்காக மட்டுமே ஒரு கூட்டம் இந்த காட்டு எருமைகளை வேட்டையாடினர். 

இவர்கள்  வேட்டையாடிய காட்டெருமைகளின் தோலை மட்டுமே எடுத்துக் கொண்டு இறைச்சியைத் தூக்கி எறிந்தார்கள். 

19 ஆம் நூற்றாண்டு வாக்கில் ரயில் பயணம் செய்யும்போது ரயிலில் இருந்தபடியே காட்டெருமைகளை சுட்டுக் கொல்வது என்பது அவர்களுக்கு விளையாட்டாக இருந்தது. 

தனவான்களும் தனவான்களும் இந்த வேட்டையை விளையாட்டு எனக் கருதினார்கள்.

இந்த காலகட்டத்தில்  நடந்த காட்டெருமை வேட்டையை காட்டெருமைப் போர் என்று வருணித்தார்கள். காரணம் அவ்வளவு எருமைகளை வேட்டையாடிக் கொன்றார்கள். இவர்கள் கொன்ற காட்டெருமைகள் மட்டும் 40 மில்லியனுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.

காட்டெருமை என்பது நாம் பைசன் என்று சொல்கிறோம் ஒரு காட்டெருமை 2400 பவுண்டு வரை இருக்கும். ஆறடி உயரம் வரை இருக்கும். ஒரு மணிக்கு 35 மைல் வேகத்தில் ஓடும். 

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வசித்த பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையோடு நெருக்கமான தொடர்புடையவை இந்த காட்டெருமைகள்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் புல்வெளிகள் அமைந்த பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் தான் பழங்குடி மக்கள் இங்கு குடியேறினார்கள்.

இந்தப் பழங்குடி மக்களுக்கு உணவு உடை உறையுள் ஆகிய அனைத்திற்கும் காட்டெருமைகள் களமாக இருந்தன.

இவர்கள் அதன் இறைச்சி, கொம்புகள், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் பயன்படுத்தினார்கள். 

காட்டெருமைகள் தங்கள் இஷ்ட தெய்வமாக அவர்கள் வழங்கினார்கள்.

அமெரிக்காவில் குடியேறிய வெள்ளைக்காரர்களுக்கு நிலங்களை அளிக்க பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதனால் பல வெள்ளைக்கார அரசு அதிகாரிகள் பழங்குடி மக்களை வெறுத்து ஒதுக்கினர். அவர்களை ஒடுக்கவும் நினைத்தார்கள். 

அதனால் பழங்குடி மக்களின் ஆதாரமாக இருந்த காட்டெருமைகளை அழித்து ஒழிக்கும் வேலையை செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக அமெரிக்காவில் அந்த காலகட்டத்தில் இருந்த ராணுவ கமாண்டர்கள் அதனை செய்தார்கள்.

அதிகாரத்தை கைவசம் வைத்திருப்பவர்கள் எல்லா காலகட்டத்திலும் அதிகமாக அராஜகங்களையே செய்ததாக சரித்திரம் பதிவு செய்துள்ளது. 

1905 ஆம் ஆண்டு ஒரு வனவிலங்கு நிபுணர் வில்லியம் ஹார்னடே என்பவர் காட்டு எருமைகளை பாதுகாப்பதற்கான முதல் முயற்சியை எடுத்தார். அமெரிக்கன் பைசன் சொசைட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். 

அதன் பின்னர் ரூஸ்வெல்ட் அவர்கள் அமெரிக்க அதிபராக வந்த பின்னர் தேசிய பூங்காக்கள் மூலமாக காட்டெருமைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்தார். 

அதற்குப் பின்னர் முற்றிலுமாக அழிந்து போன காட்டெருமைகளின் எண்ணிக்கை பெருகி, தற்போது வட அமெரிக்காவின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டு உள்ளது என்கிறது அதிகாரப்பூர்வமான ஒரு புள்ளி விவரம்.

1872, 1873 ஆகிய காலகட்டத்தில் மட்டும் ஒன்றரை மில்லியனுக்கு மேல் அதிகமான காட்டெருமைகளை வேட்டையாடினார்கள்.அவற்றை  ரயில் மூலமாக கிழக்கு அமெரிக்க பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்தார்கள். 

டிரேடர்ஸ் (TRADERS)என்றால் வியாபாரிகள் என்று நமக்கு தெரியும். ஆனால் டிராப்பர்ஸ் (TRAPPERS)என்றால் பொறிகளை வைத்து விலங்குகளை வேட்டையாடுபவர்கள் என்று அர்த்தம். நாம் வேண்டுமானால் அவர்களை வேட்டைக்காரர்கள் என்று சொல்லலாம். 

வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய காலகட்டத்தில் இந்த டிராபர்கள் என்று சொல்லும் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் ரோமம் மற்றும் தோலை பழங்குடி பழங்குடி மக்களிடம் வியாபாரம் செய்தார்கள்.

டக்கோட்டா மற்றும் ஓஜிப்வி (DAKOTA & OJIPWI) ஆகிய இன மக்கள் தான் வேட்டைக்காரர்களாக இருந்து பழங்குடி மக்களிடம் விலங்குப் பொருட்களை வியாபாரம் செய்தார்கள். 

இந்த இரு இனத்தவரும் மினிசோட்டா பகுதியில் வசித்த அமெரிக்க பழங்குடி மக்கள். 

காடுகள் மற்றும் நீர் பரப்பில் உடல் மீது உரோமம் உள்ள பல உயிரினங்களையும் வேட்டையாடினார்கள். 

 ரோம வியாபாரம் எப்படி இங்கு வந்தது என்பது ஒரு தனி கதை.

16ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவில் குடியேறினார்கள். 

அந்த ஐரோப்பிய குடியேறிகள் உலோகங்களில் செய்த பொறிகளை (TRAPS) கொண்டு வந்தார்கள். பொறிகள் என்றால் விலங்குகளை எளிதாக பிடிக்க உதவும் கருவிகள் என்று அர்த்தம். 

ரோம வியாபாரம் என்பதை ஐரோப்பிய குடியேறிகள் தான் உருவாக்கினார்கள் அவர்கள் தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ரோம வியாபாரம் என்பதுதான் முதல் கட்ட வியாபாரமாக உருவானது. 

தங்களிடம் உள்ள பொறிகளை விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைத்து அவ்வப்போது அதில் விலங்குகள் சிக்கி இருக்கிறதா என்று பார்த்து சிக்கி இருக்கும் விலங்குகளை சேகரித்து செல்லுவார்கள் 

இந்த ரோம வியாபாரம் (FUR TRADE)என்பது தனியான ஒரு தலைப்பில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அதிலும் மிகவும் சுவாரசியமான செய்திகளெல்லாம் நமக்கு நிச்சயமாக கிடைக்கும்.

இந்த பதிவில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று அன்பு கூர்ந்து எழுதுங்கள்.

எழுதினால்தான் உங்கள் கருத்துக்களை நான் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி எனது கடிதங்களை வடிவமைக்க முடியும். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

 GNANASURIA BAHAVAN D

WRITER & COACH


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...