Monday, July 1, 2024

STONEWALL SALOON - செயின்ட்ஜோ மியூசியம்


அமெரிக்காவின் அழகிய அம்சங்கள்



STONEWALL SALOON MUSEUM IN SAINT JO

GLIMPSES OF AMERICA

செயின்ட்ஜோ மியூசியம்

STONEWALL SALOON

கடிதம் : 6

வணக்கம் !

எப்பிடி இருக்கிங்க ? சவுக்கியமா ? உங்களோடு பகிர்ந்துகொள்ள நிறைய செய்திகள் சேகரித்துள்ளேன். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அன்று ரெட்ரிவர் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். நான் நினைத்தமாதிரி, அதில் இறங்கி, ஏறி,  நடந்து ரெட் ரிவரை பார்க்க முடியவில்லை என்று என் மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனை என் மகன் ராஜுவிடம் சொல்லவில்லை.

காரணம் கிட்டத்தட்ட அவன் காலை 10.30 யிலிருந்து இப்போது மாலை இரண்டு மணிவரை  கார் ஒட்டிக் கொண்டிருக்கிறான். சலிக்காமல் ஓட்டிக் கொண்டிருந்தான்.

நான் அவ்வப்போது இடையில் கொஞ்ச நேரம் தூங்கி விடுவேன். கொஞ்ச நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வருவேன்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மானாவாரி நிலங்கள்தான். எங்கோ ஓரிடத்தில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராக இருக்கும். அடுத்த ஏழெட்டு நாட்களில் அறுவடை செய்ய வேண்டி இருக்கும்.

இப்போது வேறு ஊர் வழியாக ரெட்ரிவர் பொய் கொஞ்ச தூரம் ஆற்றோரம் நடக்க முடியுமா என்று என் மகன் இரண்டு இடங்களில் முயற்சி செய்தான். எதுவும் பலன் தரவில்லை.

காரிலேயே கடந்து போய் பார்த்துக்கோண்டெ திரும்பி வந்தது போதும் என்று நான என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.   

நான் அதிகம் வேடிக்கைப் பார்ப்பது இங்கிருக்கும் வீடுகள்தான். இங்கு எல்லா வீடுகளின் கூரைகளும் கூம்பு வடிவம்தான். எல்ல வீடுகளும் ஒரே மாதிரியாய் இருக்கின்றன. முக்கியமாக நிறமும் ஒரேமாதிரி.

எல்லா வீடுகளும் பூசப்படாமல் செங்கல் தெரியும்படியாக அமைக்கப்பட்ட வீடுகள். அதற்காக நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷன் மாதிரி இல்லை. சிவப்பு பச்சை மஞ்சள் இப்படி அடிக்குபடியான வண்ணங்களில் மருந்துக்குக்கூட ஒரு கட்டிடம் பார்க்கமுடியாது.

இப்போது எதிபாராத விதமாக ராஜு என்னை செயிண்ட் ஜோ என்ற ஊருக்கு அழைத்துக்கொண்டு போனான். சாலை ஒறத்திலேயே இருதது அந்த ஊர்.

எதிரே ஸ்டோன்வால் சலூன் என்று போர்டு வைத்திருந்தது. அதன் பக்கத்தில் 1853 ல் தொடங்கியது என்ற வாசகம் பார்த்தேன். அந்த போர்டில் சிறிய எழுத்துக்களில் ஹிஸ்டாரிகல் (HISTORICAL) என்று போட்டிருந்தது. இன்னொரு பக்கம் மியூசியம் (MUSEUM)என்று போட்டிருந்தது.

உள்ளே சென்றோம். உண்மையில் அது ஒரு மியூசியம்தான். உள்ளே மூன்று மூதாட்டிகள் இருந்தார்கள். அதில் இருவர் எண்பதைத் தாண்டியவர்கள். ஒருத்தர் எழுபதைத் தொட்டவர்.

Billie Grigsby & Janis Sneed

அதில் ஒருத்தருக்கு 85க்கும் மேல் இருக்கும், அவர் பெயர் பில்லி கிரிக்ஸ்பை, அவர் ஒரு ஆராய்ச்சியாளர். இன்னொருத்தர் பெயர் ஜானிஸ் ஸ்னீட் என்பது. மூன்றாமவர் இவர்களின் உதவியாளர். அவர்தான் மூவரில் இளைய முதியவர்.

நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். அவ்வளவுதான் பில்லி அம்மையார், மியுசியம் பற்றி எங்களுக்கு அமெரிக்கன் இங்கிலீஷில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். எனக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

1873 ம் ஆண்டு, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கவ்பாய் வாழ்க்கை முறை கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில், செயின்ட் ஜோ நகரின் மது அருந்தும் பொது இடமாக தொடங்கிய இடம் இது.

சலூன் என்றால் ஒரு ஊர் அல்லது நகரில் பீர், பிராந்தி இதர மது வகைகள் அருந்துவதற்கான இடம்.

சாயங்காலம் ஆனால் எல்லோரும் ஒன்றுகூடுவதற்கான இடமாகவும் இருந்தது. நம்ம ஊர் டீக்கடைகள் மாதிரி.

இந்த மியூசியத்திற்குள்  போனால் என்னென்ன பார்க்கலாம்  நாங்கள் என்னென்ன பார்த்தோம் என்று சொல்லுகிறேன்.

1.   இந்த பார் தொடங்கிய காலத்தில் 1873 ல் போட்டிருந்த அதே மேஜைகள், நாற்காலிகள், அதே பாட்டில்கள், டம்ப்ளர்கள், அத்தனையும் அப்படியே இருக்கின்றன. அந்த பார் அமைப்பும் அப்படியே இருக்கிறது.

2.   1870 களின் காட்சிகளை படம் பிடித்திருக்கும் சுவர் ஓவியங்கள், சிஷோல்ம் வழித்தடத்தில் இருந்த நகரம் என்பதால் அவை தொடர்பான புகைப்படங்கள், பொருட்கள், எல்லாம் இங்கு நிறைந்துள்ளன. அவற்றை எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

3.   உதாரணம், கவ்பாய்கள் அணிந்திருந்த, அகலமான குல்லாய்கள், முரட்டு ஜீன்ஸ் பேண்ட்டுகள், காலில்  போட்டிருந்த பூட்டுகள், குதிரைச் சேணங்கள், ரேன்ச் பண்ணைகளில் பயன்படுத்திய பல்வேறு கருவிகள் எல்லாவற்றையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

4.   அந்த காலத்துப் பொருட்களை மட்டுமல்ல டெஃஸ்சஸ் பகுதியின் ரேன்ச் பண்ணை, கவ்பாய்கள், சிஷோம் வழித்தடம் குறித்த சரித்திர சம்பவங்களையும் இங்கு ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

GUNS OF CHISHOLM  DAYS

இன்று வரை நான் அமெரிக்கா வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய கவ்பாய் கலாச்சரத்துடன் தொடர்புடைய முக்கியமான கடிதம் இதுதான், என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.


அன்புடன் உங்கள்

பூமி ஞானசூரியன்



 


1 comment:

சுப்ரமணிய பாலா said...

அன்பு அண்ணா நன்று ...தொடர்ந்து எழுதுக...ஓரு நல்ல Cow boy படம் ஓன்றை பார்க்க தூண்டுகிறது.

நன்றி...பாலா கோயமுத்தூர்

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...