Tuesday, June 25, 2024

RED RIVER THE RIVER OF TEXAS - டெக்ஸஸ் மாநிலத்தின் சிவப்பு நதி கடித எண்;2

 

COWBOYS AND MEN ARE TWO TOTALLY DIFFERENT BREEDS – COWBOY PROVERB

டெக்ஸஸ் மாநிலத்தின் 

சிவப்பு நதி 

கடித எண்:2

RED RIVER IN CHISHOLM TRAIL

(இது ஒரு "கவ்பாய்" 

கலாச்சாரத் தொடர்)  

அன்புத் தம்பிக்கு வணக்கம் !

ஏற்கனவே திட்டமிட்டபடி 

நாங்கள் இன்று ரெட்ரிவர் 

பார்க்கப் போகவேண்டும். 

இன்று ஞாயிற்றுக் கிழமை, என் மகன் ராஜுவுக்கு விடுமுறை, காலையில் சுமார் ஒன்பது மணி இருக்கும். நான் ராஜு என் சிறிய பேரன் நிகிதன் மூவரும், டொயாட்டோ சியன்னா காரில் கிளம்பினோம். என் மகன் கார் ஒட்டுவதில் எஃஸ்பெர்ட்!

என் மனைவி கல்யாணி “வரவில்லை” என்று சொல்லிவிட்டாள். இதில் எல்லாம் அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. நானும் வற்புறுத்த மாட்டேன். 

முதலில் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு ஆறு, அதன் தண்ணீர் சிவப்பு நிறத்தில் ஒடும்  என்றுதான் தெரியும். அதன் பின்னர்தான் அது கவ்பாய் கலாச்சாரத்துடன் முக்கியத் தொடர்புடைய ஆறு என்பதைத் தெரிந்து கொண்டேன். 

“சிஷோம் பாதை”யுடன் தொடர்புடைய ஆறு இது. சிஷோம் பாதையில் செல்லும் மாட்டு மந்தைகள்  இந்த ஆற்றைக்கடந்துதான் செல்ல வேண்டும். 

அந்தக் காலத்தில் மாடுகளை விற்பனை செய்வதற்காக 1000 கிலோமீட்டருக்கும் மேல் ஓட்டியபடி  நடத்திச் செல்லும் பாதை என்று இப்போதைக்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது நான் இந்த “ரெட்ரிவர்” ஆறுபற்றிய செய்திகளை இப்போது பார்க்கலாம்.

அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில் 14 நதிகள் ஓடுகின்றன. 

அந்த 14 நதிகளில் சிவப்பு நிறமாக தண்ணீரை உடையது இதுதான். அதனால்தான்  இதனை ரெட்ரிவர் என்று குறிப்பிடுகிறார்கள். இது 20190 கிலோமீட்டர் ஓடும் ஆறு. இதன் நீர்வடிப் பகுதியின் பரப்பு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 890 சதுர கிலோமீட்டர் 

இந்த நதியின் ஆற்றுப்படுகைகள்  செம்மண்ணால் நிரம்பி இருப்பதால் அதன் மூலமாக வடியும் இந்தத் தண்ணீரும் சிவப்பு நிறமாக உள்ளது.

ஒரு காலத்தில் மிசிசிப்பி நதியின் துணை ஆறாக இருந்தது. ஆனால் இன்று அட்சப்பலாயா  என்ற ஆற்றின் துணை நதி. 

இந்த சிவப்பு ஆற்றின் ஒருபக்கம் டெக்சாஸ் மாநிலம். இன்னொரு பக்கம் இருப்பது ஒக்கலகோமோ மாநிலம். அத்துடன்  இது அர்க்கன் சாஸ் மற்றும் லூசியானா மாநிலங்களிலும் ஓடுகின்றது. 

இந்த சிவப்பு ஆறு ஒக்கலகோமோ  மாநிலத்தில் பிரெய்ரி டாக் டவுன் ஃபோர்க் என்ற இடத்தில் பிறக்கிறது.

சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கடல் இருந்தது. அந்த கடல் வற்றிப் போய்விட்டது. ஆனால் அந்த கடலின் உப்பு மட்டும் இந்த மண்ணில் இன்னும் இருக்கிறது. இதன் வழியாகத்தான்  இதன் துணை நதிகள் எல்லாம் பாய்கின்றன.

அந்தத் துணை நதிகள் எல்லாம் அந்த உப்பையும் கரைத்தபடி ஓடுகின்றன. அதனால் தான் இந்த சிவப்பு ஆறு உப்பு ஆறாகவும் ஓடுகிறது.

இந்த ஆற்றில் ஓடும் நீரில் ஒரு நாளில் 3450 டன் உப்பு கரைந்து ஓடுகிறது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

ஆச்சரியமாக  இருக்கிறது. இதையெல்லாம் கூட கணக்கிட்டிருக்கிறார்கள். கார் போகும் வழியில் எல்லாம், டெக்சாஸ்’சின் கவ்பாய் கலாச்சாரத்தின் சுவடுகளை என்னால் பார்க்க முடிந்தது. 

பல இடங்களில் மாடுகளுக்கு கடவுட் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. 

அறுவடை செய்த நிலங்களில் அதன் தட்டைகளை உருளைகளாக சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த முறை தற்போது இந்தியாவில் தமிழ் நாட்டில்கூட பார்க்க முடிகிறது. 

கவ்பாய் கலாச்சாரம் என்பது மேற்கு அமெரிக்காவின் விவசாயிகளின் கலாச்சாரம்தான். இங்கு தூக்கலாக இருப்பது கால்நடை வளர்ப்புதான். இவற்றை “ரான்ச்” (RANCH)என்கிறார்கள்.

ஒரு ரான்ச்சில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் மாடுகள் இருக்கும். இவற்றை கால்நடைப் பெரும்பண்ணைகள் என்று சொல்லலாம். இந்த ரான்ச் பண்ணைகள் பற்றி இன்னொரு கடித்தில் விளக்கமாகப் பார்க்கலாம்.

இந்த ஆற்றின் படுகை பகுதியில் கிடைக்கும் மழை மிகவும் குறைவு அதனால் டெக்ஸஸ் மாநிலத்தை அடுத்து ஓடும் பகுதிகளில் இது பருவக்கால ஆறாக (INTERMITTENT RIVER) ஓடுகிறது.

போவி (BOVIE) என்ற  நகருக்கு அடுத்து வந்தது, ரெட்ரிவர்”. நம்ம ஊர் ஆறுபோலத்தான் இருந்தது. இது கோடை என்பதால் சிக்கனமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மீதி இடங்களில் எல்லாம் அழகான மணல் ஓடிகொண்டிருந்தது.

லைப்பன் அப்பாச்சி, கொமான்ச்சி, விச்சிட்டா, தொங்காவா, பிரெய்ரி ஆகிய அமெரிக்க பழங்குடி மக்கள் பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் அதற்கு முன்னாலும் இங்கு வசித்து வந்தார்கள். 

1806 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜாபர் ஜாபர்சன், மிசிசிபி ஆற்றுக்கு அடுத்த பெரிய மிக முக்கியமான ஆறு ரெட்ரிவர் என்று எழுதியுள்ளார். 

ரெட்ரிவர்’ரிலிருந்து திரும்பும் வழியில் கவ்பாய் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஒரு செயின்ட் ஜோ என்ற இடத்திற்கு  நாங்கள் சென்றோம். அதுபற்றி அடுத்த கடிதத்தில் சொல்லுகிறேன்.

“A COWBOY IS A MAN WITH GUTS AND A HORSE” – WILLIAM JAMES 

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு என்றும் உங்கள் 

பூமி ஞானசூரியன்


 

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...