Friday, June 28, 2024

HOW RANCH FARMS WERE DEVELOPED IN WEST AMERICA ? கால்நடைப் பெரும்பண்ணைகள் வளர்ந்தது எப்படி ?

அமெரிக்காவின் அழகிய சரித்திரம்

GLIMPSES OF AMERICA

"ரேன்ச்" கால்நடைப் பெரும் பண்ணைகள்

மேற்கு அமெரிக்காவில் கால்நடைப் பெரும்பண்ணைகள் வளர்ந்தது எப்படி ?

HOW RANCH FARMS WERE DEVELOPED IN WEST AMERICA ?

கடிதம் 4

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! நீங்கல்லாம் எப்படி இருக்கிங்க ? வீட்டில் இருக்கும் எல்லோரும் சவுக்கியமா ?

நான் ஆலன் என்ற இடத்தில் இருக்கிறேன். யாரைக்கேட்டாலும் சொல்லுவாங்க. 

“ஆலன் சின்ன ஊரு. டல்லஸ் மாவட்டம்… டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்தது..டெக்சஸ் மானிலம்.. “ 

ஆலன்ல ஓக் புரூக் சாலையில் எண்1742ல் என் மகன் வீட்டில் தங்கி இருக்கேன்.இங்கிருந்து ஃபோர்ட்வொர்த் விமான நிலையம் ரொம்ப தூரம் இல்ல. 45 கிலோமீட்டர்தான். 

ஒரு வீட்டின் முன்னாலும் ஒரு கிரேப்மிர்டில் மரமும் (CRAPE MYRTLE)வீட்டுப் பின்புறத் தோட்டத்தில், ஒரு ஓக் மரமும் (OAK TREE), சிவப்பு மேப்பிள் மரமும் (RED MAPLE)  இருந்தால், கண்ணை மூடிகொண்டு சொல்லலாம் அது ஆலன் என்று.

இன்றையக் கடிதத்தில் “கவ்பாய்” கலாச்சாரம் எப்படி அமெரிக்காவிற்கு அறிமுகம் ஆனது, என்று உங்களுக்கு சொல்லப்போகிறேன். 

ஆங்கிலத்தில் “கவ்பாய்”(COWBOY), தமிழில் “மாட்டுக்காரப்பையன்”. ஸ்பானிஷ் மொழியில் வேன்கெரா (VANQUERA). 

இதனைப் பொதுவாகச் சொன்னால் மேய்ப்பர்கள் (HERDERS). மேய்ப்பர்கள்  மேய்ப்பவர்கள் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதனை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். 

எனது கடிதங்களை தொடர்ந்து படிக்கும்போது உங்களுக்கும் அது புரியும். இன்னொரு செய்தியை இங்கு சொல்லுவது பொருத்தமாக இருக்கும். 

இந்தியாவில் கிராமங்களில் இருக்கும்  நமது பண்ணைகள் மிகவும் சிறியவை. அதில் பயிர் சாகுபடியும் நடக்கும். ஆடு மாடுகளும்  நடக்கும்.

என் அப்பா ஒரு ஆசிரியர். ஆனாலும் எங்க வீட்டில் எட்டு மாடுகள் இருந்தன. அதில் எப்போதும் இரண்டு பசுக்கள் மாறிமாறி கறக்கும். ஒன்று நாட்டுப்பசு. இன்னொன்று ஜெர்சி. தினம் தினம் எட்டு லிட்டர் பால். நான்கு லிட்டர் விற்றது போக மீதி வீட்டு உபயோகம். வீட்டின் முன்னால் ஒரு குடம் மோர், வருவோர் போவோர் குடிக்க. எங்கம்மாவின் பெயர் அந்த ஊரில் பால் ஆயா.

அமெரிக்காவில் “ரேன்ச்” (RANCH) பண்ணைகள், அளவில் பெரியவை. ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கரில்.முழுக்க முழுக்க மாடுகள் மற்றும் ஆடுகள், அவற்றை மேய்க்க குதிரைகள்,  ஒரு பண்ணை வீட்டில், கவ்பாய்கள் எல்லாம் இறைச்சிக்காக மாமிசத்திற்காக..பொழுது விடிந்தால் மாடுகள் மேய்ச்சலுக்குக் கிளம்பும்.

டெக்சாஸ் மாநிலத்தில்  ஒரு ரேன்ச் என்றால், அதன் பரப்பு ஆயிரம் ஏக்கர் இரண்டாயிரம் ஏக்கர் இருக்கும். இவற்றை நாம் தமிழில் ‘கால்நடைப் பெரும் பண்ணை’ என்று சொல்லலாம்.

இந்த ரேன்ச் பண்ணைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான கால்நடைகளை பரமரிப்பவர்கள்தான் இந்த கவ்பாய்கள். இது எப்படி கவ்பாய் கலாச்சாரமாக மாறியது ? இது எப்படி அமெரிக்காவில் அறிமுகம் ஆனது என்று பார்க்கலாம். 

கவ்பாய் என்றால் நமக்குத்தெரிந்தது, கவ்பாய் சினிமாக்கள், இடுப்பின் இரு பக்கமும் உறைக்குள் தயாராய் இருக்கும் துப்பாக்கிகள், கையில் ஒரு நாட்டு துப்பாக்கியுடன், முகம் தெரியாது மறைக்கும் அகலமான தொப்பி அணிந்து குத துவைக்கப்படாத, அரைகிலோ உடைச்ச கடலை போடுவதற்கான பெரியபெரிய பைகள் வைத்து தைத்த  நீலநிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் முரட்டு சட்டைகள், தோலில் தயாரித்த மேல் கோட்டு,  காலில் போடும் பூட்டுகள்(BOOTS), வாரப்படாதத் தலை, சவரம் செய்யாத முகம், அம்புட்டுதான்.   (COWBOY FILMS, ANCIENT GUNS, UNCOMBED HAIR, UNSHAVED FACE, JEANS PANTS & BOOTS). 

இந்த கவ்பாய் கலாச்சாரம் என்பதற்கான விதை முதன் முதலாக,  மெக்ஸிகோவில்தான் விதைக்கப்பட்டது. இதனை விதைத்தது  ஸ்பேனியர்கள்தான். இவர்கள் ஸ்பேனிஷ் நாட்டச் சேர்ந்தவர்கள்.

இது  நடந்தது, 1500 முதல் 1600 வகையான காலகட்டத்தில். அந்த சமயம்

மெக்சிகோ, ஸ்பானிஷ் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தது. 

அப்போது மெக்சிகோவில்  ஸ்பேனியர்கள் என்னும் ஸ்பேனிஷ் நாட்டுக்காரர்கள், இந்த ரேன்ச்  பண்ணைகளை  அறிமுகம் செய்தார்கள்.

ஸ்பேனியர்கள் உருவாக்கிய ரேன்ச் பெரும் பண்ணைகளின் கவ்பாய்களை  வென்கெரோ (VANQUERA) என்றார்கள்.

வேன்கரோ  என்றால் ஸ்பானிஷ் மொழியில் கௌபாய்கள் என்று அர்த்தம்.

அமெரிக்காவில் 1600 ஆம் ஆண்டுகளில் ஸ்பேனியர்கள் குடியேறினார்கள். டெக்சாஸ்,  நியூ மேக்சிகோ மற்றும் கலிபோர்னியாவில் ரேன்ச் பண்ணைகளைத் தொடங்கினார்கள்.

1820 - 73ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள், குறிப்பாக டெக்ஸாஸ் மாநிலத்தில் அதிகமான அளவில் இந்த ரேன்ச்,களை அமைப்பதில் கவனம் செலுத்தினார்கள். 

இதுவரை மெக்சிகோவின் ஆட்சியின் கீழ் இருந்த டெக்சாஸ் 1836 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இதன் பிறகு அமெரிக்கக் குடியேற்றம் அதிகரித்தது. 

அவர்கள் எல்லோரும் ரேன்ச்’களை அமைப்பதில் கவனம் செலுத்தினார்கள். 

1845 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓர் அங்கமானது டெக்சாஸ்.பழம் நழுவி பாலில் விழுந்தது போல” ஆனது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் டெக்சாஸ் நோக்கி படையெடுத்தார்கள்.

கலிபோர்னியாவின் தங்கவேட்டை (GOLD RUSH) 1748 முதல் 1755 வரையான காலகட்டத்தில் தொடங்கியது. தங்கம் தேடி அலைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏகப்பட்ட சுரங்கங்கள் ! ஏகப்பட்ட சுரங்கங்களில் வேலை செய்யும் ஆட்கள் !

அவர்கள் எல்லோருக்கும் இறைச்சி தேவைப்பட்டது. அதனை ஈடுகட்டடெக்சாஸ்” முனைப்புடன் இறங்கியது. அதன் விளைவாக அதிகமான ரேன்ச்’கள் உருவாகின.

1861 முதல் 1865 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் உள்நாட்டுப் போர் (CIVIL WAR)அமெரிக்காவை உலுக்கியது. இந்த சமயத்திலும் இறைச்சித் தேவை என்பது இறக்கைகட்டிப் பறந்தது. அடுத்து என்ன ? டெக்சாஸ் மீண்டும் தனது ரேன்ச்’களை விரிவு படுத்தியது. 

இந்த காலகட்டத்தில் கேன்சஸ் பெருநகர் ரயில்கள் மூலம் டெக்சாஸின் கால்நடைகள் கிழக்கு அமெரிக்காவிற்கு போயின. அதற்காக மாடுகளை கேன்சஸ் வரை கால்நடையாக ஓட்டிச் சென்றார்கள்.

அந்த வழித்தடம்சீஷோம் வழித்தடம்” (CHISHOLM TRAIL) என்று இன்றுவரை வழங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் தான் கவ்பாய்கள் அதிக எண்ணிக்கையில் பெருகினார்கள்.

1870 ஆம் ஆண்டு கம்பிவேலிகள் (WIRE FENCING) அறிமுகமானது. திறந்த வெளியில் இருந்த ரேன்ச்’சுகள் கம்பி வேலிகளுக்குள் அடக்கம் ஆயின. அத்தோடு சிமெண்ட் கம்பங்களும், கட்டுமானங்களும் அறிமுகம் ஆகின.

கேன்சஸ் (KANSAS)வரைமட்டும் இருந்த ரயில்கள் டெக்சஸ்’சுக்குள் வந்தது. 1880 ம் ஆண்டுக்குப் பிறகு, ரேன்ச்’  பண்ணைகள் குறைய ஆரம்பித்தன.

ரயில்கள் வந்ததனால் மாடுகளை  கால்நடையாக ஓட்டிச்சென்று விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இப்போது ரேன்ச்’சிங் பண்ணை வாசல்களே வியாபாரத் தலங்கள் ஆனது.

ஆக இந்த கடிதத்தில் 1500 ம் ஆண்டுகளில், மெக்சிகோவில் தொடங்கி டெக்சாஸ் வந்து, அமெரிக்காவில் பரவிய ரேன்ச் எனும் கால்நடைப்   பெரும் பண்ணைகள் மற்றும் இந்த கௌபாய் கலாச்சாரத்தின் 524 ஆண்டுகால சரித்திரத்தை சுருக்கமாக படிபடியாக இங்கு சொல்லி இருக்கிறேன்.

இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்தி இதுதான், “ரேன்ச் எனும் கால்நடைப் பெரும்பண்ணைகள்தான் “கவ்பாய் கலாச்சாரத்தின் தொட்டில்கள்.

 பூமி ஞானசூரியன்

 

1 comment:

V.Sambasivam said...

Even though I lived in Houston for the past several years not known the history of cowboys. Very nicely explained how the cowboys came in to practice.. worth reading his letter. Even though he came to usa for vacation utilizing his time in useful way by writing about his visits in usa. Thanks.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...