இன்று காலை வழக்கம் போல் நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். வழக்கம்போல் வாட்ஸ் அப்பில் நீர் அறுவடை பற்றிய ஒரு காணொளியை பதிவிட்டேன். அது ஒரு முக்கியமான காணொளி.
திருப்பத்தூர் மாவட்டத்தில், அந்த மாவட்ட நிர்வாகம் 1556 பண்ணைக்குட்டைகளை வெட்டி அதற்காக உலக சாதனையாளர் விருது பெற்றுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இது போன்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக இந்த வேலையை செய்து முடித்திருந்தது.
இதற்கு மூளையாக இருந்தது செயலூக்கம் தந்து அவர்களை செய்து முடிக்க வைத்தது திருப்பத்தூர் மாவட்டத்தின் இன்றைய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.
இது போன்ற பணிகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனது நண்பரும் சமூக ஆர்வலருமான அம்பலூர் அசோகன் அவர்கள் நினைவில் வந்தது இது பற்றி அவரிடம் ஒரு காணொளி எடுத்து எடுத்து அதனை எனது யூட்யூபில் வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.
ஒரு கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் அதில் நீரை அறுவடை செய்யும் பணியை செய்வது என்பது ஒரு புனிதமான பணி. அந்த பணியை முழுமூச்சாக செய்வது என்பது போற்றுதற்குரியது.
அதிலும் ஒரு மாவட்ட ஆட்சி தலைவராக இருப்பவர் நீர் அறுவடை போன்றவற்றில் முன்னுதாரணமாக முனைப்பாக முயற்சிகளை மேற்கொள்வது என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக ஆராய்ச்சி பணிகளை செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இணையானது என்பது எனது கருத்து.
காரணம் உழவுத் தொழிலுக்கும் அந்த உழும் தொழிலை செய்யும் உழவர்களுக்கும் நாம் காட்டும் நன்றி கடன் எதுவும் இல்லை என்று தான் அடிக்கடி நான் நினைப்பேன். உழவுக்கு செய்யும் உதவி இந்த உலகுக்கு செய்யும் உதவி.
அந்த வகையில் உழவர்களுக்கும் உழவு தொழிலுக்கும் உதவும் வகையில் ஆக்கபூர்வமான பணிகளை இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திருமிகு பாஸ்கரன் பாண்டியன் அவர்களை பாராட்டும் வகையில் இந்த காணொளி அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன்.
இந்த காணொளியை பதிவு செய்து அதனை முழுமையாக உருவாக்குவதில் நிறைய சிரமங்கள் இருந்தது. அவற்றையெல்லாம் தாண்டி இன்று வெற்றிகரமாக காலை சுமார் 5 மணி அளவில் அதனை யூட்யூபில் பதிவேற்றினேன்.
வழக்கமாக தினம் காலை நான்கு மணிக்கு எனது வாட்ஸ் அப் குழு நண்பர்களுக்கு தோராயமாக ஆயிரம் பேருக்கு எனது செய்திகளை அனுப்புவது வழக்கமாக வைத்திருந்தேன்..
அதன் பிறகு உலக நடப்பு என்ன என்று அன்றாட செய்திகளை தேடுவேன். அதற்கு நான் முக்கியமாக தேடுவது மதன் கௌரியின் யூட்யூப் செய்தி அடுத்து பொக்கிஷம் விக்கியின் செய்தி, ஷ பூ திரி, பிறகு வி கே ஏ இதையெல்லாம் பார்த்துவிட்டு மறுபடியும் கொஞ்ச நேரம் தூங்குவேன்.
நான் மதன் கவுரிக்கும் தமிழ்பொக்கிஷம் விக்கிக்கும், ஷ பூ திரி, பிறகு வி கே ஏ நால்வருக்கும் நான் விசிறி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்த காணொளிகளை பார்த்து விடுவேன்.
கொஞ்ச நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பேன். இப்போது நடக்கும் போரை பார்க்கும்போது எனக்கு சிலுவைப் போர் ஞாபகப்படுத்துகிறது. அது நூறு ஆண்டுகளுக்கு மேல் நடந்த போர் என்பது நினைவில் இருக்கிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் பொக்கிஷத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார் விக்கி. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அதில் சிலுவைப் போர் (CRUSADE WAR) பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைக்கு அவசியமான தேவை என்பது இந்த போரை எப்படி தவிர்க்கலாம் என்பதுதான். இந்த போரில் இறக்கும் மனித உயிர்கள் அது இஸ்ரேலில் இருந்தாலும் காசா பகுதியில் (GAZA)இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான். அதனை மதரீதியாக பார்க்கக் கூடாது.மனிதகுலம், மனித உயிர் என்று தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் நம் பெரியவர்கள்.
எந்த மதமும் மனித உயிர்களை கொன்று குவிப்பது நன்று என்று சொல்லவில்லை. எல்லா மதங்களும் மனிதநேயத்தை போற்றுகிறது
எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது என்று தான் சொல்கிறது அப்படி இருக்கும்போது அந்த மதத்தின் பெயரால் நாம் ஏன் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்து கொள்ள வேண்டும் ?
இஸ்ரேல் நாட்டின் இன்று இருபதாயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் இந்த போரால் அவர்கள் நிலை என்ன ஆகும் ?
காசா பகுதியில் வசிக்கும் 2 மில்லியன் மக்களின் நிலை என்ன ஆகும் என்று உலக நாடுகள் கவலை கொள்ளுகின்றன.
ஹமாஸ் போர் வீரர்கள் பொறுப்பில் பிணையக் கைதிகளாக இருக்கும் பல நாட்டு மக்களின் நிலை குறித்தும் நாடுகள் கலங்குகின்றன.
இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இன்று லெபானான் மற்றும் சிரியா நாடுகளும் போரில் குதித்துள்ளன. இன்னும் எத்தனை நாடுகள் வரும் என்று தெரியவில்லை.
அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்பி உள்ளது. ஆயுதங்களையும் அனுப்பி உள்ளது. இன்னும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்ற உத்தரவாதத்தையும் இஸ்ரேலுக்கு அளித்துள்ளது.
ஹமாஸ் என்பது சன்னி முஸ்லீம் இனத்தைச் கேர்ந்த போராளி இயக்கம், பாலஸ்தீனத்தில் அதிகப்படியான இடங்களை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் அரசியல் கட்சியும் கூட.
மூன்றாம் உலகப்போர் என்றும் சிலுவைப்போர் என்றும் பயந்து நடுங்கும் மூண்டிருக்கும் இந்தப் போர் பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். போரே போ போவா ? வா வா வாவா ?
No comments:
Post a Comment