PROFITABLE FODDER ALFALFA |
தென்அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதனை லூசர்ன் என்று சொல்லுகிறார்கள்.
இந்த குதிரை மசால் நீளமான வேர் அமைப்பை கொண்டது. குளிர்ச்சியான இடங்களில் வளரக்கூடியது இது ஒரு பல்லாண்டு வளரக்கூடிய தீவனப்பயிர். பல நூறு ஆண்டுகளாக இதனை தீவனப்பயிராக பயன்படுத்துகிறார்கள்.
பல நாடுகளில் பரவி இருப்பது, பல தட்பவெப்ப நிலைகளிலும் பரவி இருப்பது, கூடுதலான மகசூல் தருவது, அதனைத் தரமாகத் தருவது ஆகியவற்றால் இதனை தீவனப் பயிர்களின் ராணி என்று கொண்டாடுகிறார்கள்.
ஏற்ற மண் கண்டம், வடிகால் வசதி இருந்தால் போதும். பல வகையான மண்ணிலும் பயிர் செய்யலாம். சிறிதளவு அமிலத்தன்மை இருந்தாலும் அதில் வளர்க்கலாம்
கொஞ்சம் உப்பு தன்மை கொண்ட நிலமாக இருந்தாலும் அதிலும் வளர்க்கலாம். இந்த விதமான மண்ணில் தான் வளரும் என்று அடம்பிடிக்காத சிறந்தத் தீவனப்பயிர்.
இதனை விதைத்த 55 60 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம் அதன் பிறகு 25 முதல் 30 நாட்களில் மறு அறுவடை செய்யலாம்
அதன் பிறகு மீண்டும் இரண்டடி உயரம் வளர்ந்த பின்னால் மறுபடியும் அறுவடை செய்யலாம் அதாவது மாதம் ஒரு அறுவடை செய்யலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஆண்டில் 8 முதல் 10 அறுவடை செய்யலாம் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் 18 முதல் 20 டன் தீவனம் அறுவடை செய்யலாம். முதல் இரண்டு அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும்
அதன் பிறகு சிறிதளவு குறைவான மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 5 முதல் 8 ஆண்டுகள் வரை இதனை அறுவடை செய்யலாம்.
முக்கியமாக குதிரை மசால் சாகுபடி செய்யும் நிலங்களில் நல்ல வடியால் வசதி இருக்க வேண்டும் நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் அங்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும்.
குதிரை மசால் சாகுபடி செய்யும் இடங்களில் அதிக வெப்பநிலை தேவையாக உள்ளது 35 முதல் 40 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் குதிரை மசால் நன்கு வளரும்.
குதிரை மசால் சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு 25 முதல் 30 கிலோ விதை தேவை. ஒரு சதுர மீட்டரில் குறைந்த பட்சம் 300 செடிகள் ஆவது இருக்க வேண்டும் இந்த பயிர் எண்ணிக்கையை பராமரிக்க கொஞ்சம் கூடுதலான விதை அளவை பயன்படுத்தலாம்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை வைட்டமின்களை புரதம் மற்றும் நார்ச்சத்து ஒப்பிடும்போது இதனை ஒரு மூலிகை பயிராகவும் சொல்லுகிறார்கள். இந்த காரணங்களால் குதிரை மசால் மதிப்புமிக்க ஒரு பயிராகவும் லாபகரமானப் பயிராகவும் கருதப்படுகிறது.
பெரும்பாலும் குதிரை மசால் குதிரைகளுக்கும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கப் பயன்படுகிறது.
No comments:
Post a Comment