Monday, October 2, 2023

POPULAR BATTLESHIPS OF THE WORLD 6. வாங்க போர்க்கப்பல் பார்க்கலாம்

வாங்க போர்க்கப்பல் பார்க்கலாம்


இன்று காலை சுமார் பத்தரை மணிக்கு ஒயிட்லியில்
  இருந்து ஸ்போர்ட்ஸ் மவுத்துக்கு புறப்பட்டோம்.

வழக்கம்போல நானும் என் மகனும் அவனுடைய பி எம் எஸ் காரில்  பயணம் செய்து அனேகமாய் 15 நிமிடத்தில் போர்ட்ஸ் மவுத் எல்லையை தொட்டோம்.

நகரத்தின் வலப்புற கடற்புற கரையோரத்தில் ஒரு இரட்டை பாய் மரம் ஜெயின்ட் சைஸில் நின்று கொண்டிருக்கிறது சுருட்டி வைத்த பாய் மரம் போல இன்னொரு டவர் அதன் பின்னால், இவை இரண்டும் தான் அடையாளங்கள்.

ஸ்பின்னாக்கர் டவர்

தற்கு ஸ்பின்னாக்கர் டவர் என்று பெயர் வானத்தின் கூரையை தொட்டபடி நிற்கும் 35 மில்லியன் பவுண்ட் எடையில் அமைத்திருக்கிறார்கள்.

அவ்வளவு உயரமான லிஃப்ட் இருக்கிறது.உச்சி வரைக்கும் போய் 360 டிகிரியில் போர்ட் மோட் துறைமுக நகரத்தை முழுமையாக பார்க்கலாம். அதை இன்னொரு நாளைக்கு நாங்கள் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். அது பற்றி விவரமாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் மைனஸ் டிகிரி 

என் மகன் ராஜா இதையெல்லாம் ஏற்கனவே பார்த்து அது பற்றிய விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தான். அதனால் என்னால் சுலபமாக அவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது.

இது ஜூன் மாதம் இங்கிலாந்தின் கோடை காலம். குளிர்காலத்தில் மைனஸ் டிகிரியை தாக்குப் பிடிக்க மாட்டோம் என்று தான் என் மகன் ங்களை ஜூன் ஜூலையில் வரவழைத்திருந்தான்.

நாங்கள் இங்கு வந்து இது ஒன்பதாவது நாள். பெரும்பாலான நாட்களில் வெயில் பளிச்சென்று தான் காய்ந்து கொண்டிருந்தது ஆனால் இன்று மப்பும் மந்தாரமாக விடிந்தது,

ஹிஸ்டாரிக் டாக் யார்ட்

இன்று நாங்கள் பார்க்கப் போவது பொர்ட்ஸ்மவுத்ன் ஹிஸ்டாரிக் டாக் யார்ட் (HISTORIC DOCK YARD) . அதாவது கப்பல் கட்டும் தளம் என்பது அதன் அர்த்தம். புதிய கப்பல் கட்டுவது, பழைய கப்பல்களை பழுது பார்ப்பது, உதிரி பாகங்களை தயாரிப்பது, இவையெல்லாம் தான் இந்த டாக் யார்டின் வேலைகள்.

சூரியன்  அஸ்தமனம்  ஆகாத நாடு

சூரியன்  அஸ்தமனம்  ஆகாத நாடு இங்கிலாந்து என்பது பிரபலமான வாக்கிய பிரயோகம். ஆனால் நியூசிலாந்தின் சதன் போர்ஷன் முதல் ஆர்டி கண்டத்தின் முனையில் உள்ள ஹட்சன் பே  வரையான கடற்கரை பிரதேசத்தில் வியாபார சாம்ராஜ்யத்தை அரசாட்சி செய்தது கிரேட் பிரிட்டன். 

போர்க்கப்பல்கள்

அதற்கு பக்க பலமாக இருந்தது ஸ்போர்ட்ஸ் மவுத்தின் கப்பல்கள். என்றால் சாதாரண கப்பல்கள் அல்ல போர்க்கப்பல்கள் உலக நாடுகளின் நாடி நரம்புகளை நடுங்க வைத்த  போர்க்கப்பல்கள்.

உலகின் மிகப் பிரபலமான போர் கப்பல்கள் என்பவை எல்லாம் ஸ்போர்ட்ஸ் மவுத்தின் தயாரிப்புகள் தான் அப்படிப்பட்ட கப்பல்கள் இரண்டினை எங்களால் இங்கு பார்க்க முடிந்தது நாங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று நான் நினைத்துக் கொண்டேன். 

போர் கப்பல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

அந்த இரண்டு பிரபலமான கப்பல்களில் ஒன்று எச் எம் எஸ் வாரியர் (HMS WARRIOR)என்பது இன்னொன்று எச் எம் எஸ் விக்டரி (HMS VICTORY).

தரைத்தளத்தில் கப்பல் கட்டும் உலகின் முதல் துறைமுகமாக 1495 ஆம் ஆண்டு தொடங்கி 1497 இல் தனது முதல் கப்பலை கடலில் வெள்ளோட்டம் விட்டது  போர்ட்ஸ் மவுத்ந் டாக்யார்ட்.

அது மட்டுமல்ல 18 ஆம் நூற்றாண்டில் போர் கப்பல்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக போர்ட்ஸ்மவுத் புதிய அவதாரம் எடுத்தது.

இங்கிலாந்தின் மீது யார் படையெடுத்தாலும் போஸ்ட்மவுத் எங்கே என்று விசாரித்து கூடுதலாக இரண்டு குண்டுகளை வீசிவிட்டு போவார்கள். ஸ்போர்ட்ஸ் மவுத்துக்கு அப்படி ஒரு போர் ராசி (பேர் ராசி அல்ல்)உண்டு.

இரண்டாவது உலகப்போரின் போது ஹிட்லரின் படைகள் கூட அதிகமான குண்டுகளை வீசியது யுகே வில் போர்ட்ஸ் மவுத் நகரில் தான்.

முதல்  சண்டை கப்பல் தளம்

போர் கப்பல்கள் வேண்டுமா ? பழைய கப்பலை நவீனம் ஆக்க வேண்டுமா ? நியூக்ளியர் டைப் வேணுமா ? ஏவுகணைகள் ரெடி பண்ண வேண்டுமா ? நாங்க இருக்கோம் ! என்று முதல்  சண்டை கப்பல் தளமாக மாறியது போர்ட்ஸ்மவுத்.

விமானம் தாங்கி கப்பல்கள்

1982 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் யுனைடெட் கிங்டம் இடையே நடந்தது  ஃபால்க்லேண்ட் போர். அந்தப்  போருக்குப் பின்னால் ராத்திரி பகலாய் உழைத்து, எஸ் எம் எஸ் ஹெர்மஸ் (HMS HERMES) மற்றும் எஸ் எம் எஸ் இன்வின்சிபிள் (HMS INVINSIBLE)என்ற இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கியது  போர்ட்ஸ்மவுத்.

 வின்ஸ்டன் சர்ச்சில் 

எச் எம் எஎஸ் விக்டரி, எச் எம் எஸ் வாரியர், ஆகிய சர்வதேச புகழ்மிக்க போர்க் கப்பல்களின் சரணாலயம் போஸ்ட் மவுத்தான்.

வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் முதல் லார்ட் ஆஃப்  அட்மிராலிட்டி உத்தரவின் பேரில் 1715 இல் உருவாக்கப்பட்ட போர்க்கப்பல்  ஹெச் எம் எஸ் எம் 33.

மூன்று சரித்திரங்கள்

முதல் உலகப்போரில் பங்கு பெற்ற 3 போர்க்கப்பல்கள் ஸ்போர்ட்ஸ் மவுத்தின் டாக்கியாட்டில் மூன்று சரித்திரங்களாக நிற்கின்றன அவற்றில் ஒன்றுதான் ஹச் எம் எஸ் எம் 33.

கல்லிப்போலி போர்,  மெடிட்டரேனியன் போர்  ஆகியவற்றின் வெற்றி வாகை சூடியது இந்த எஸ் எம் எஸ் 33 தான்.

போர்ட்ஸ் மவுத்தில் 1915 ஆம் ஆண்டு உருவான இந்த சண்டை கப்பல் 2015 ல்  தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்

2015ம் ஆண்டுதான் இந்த கப்பல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கிறார்கள். இதற்கு தற்போது எச் எம் எஸ் மினர்வா என்ற புதிய பெயரை சூட்டி இருக்கிறார்கள்.

போர்ட்ஸ் மவுத்தில் எங்கள் காரை பார்க் செய்துவிட்டு நடந்து சென்றோம் ஹிஸ்டாரிக் டாக் யார்டுக்கு. ஹிஸ்டாரிக் டாக் யார்டில் நாங்கள் என்ன பார்த்தோம் ? அது எப்படி இருந்தது ? அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன ? இது பற்றி எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

டாக்யார்டுக்கு எப்படி போகலாம் ? ரயிலில் போகலாம் இறங்க வேண்டியது போர்ட்ஸ்மவுத் ஹார்பர் டிரெய்ன் ஸ்டேஷன்,. வெறும் 200 மீட்டர் தான்.அங்கிருந்து நடந்து செல்லலாம்.

பஸ் மற்றும் கோச்சில் வந்தால்டாக்யார்டின்”  கேட் எதிரில் இறங்கலாம். படகு சவாரியின் மூலம் வருவது என்றால்காஸ்போர்ட்துறைமுகத்திலிருந்து வரவேண்டும்.

கட்டுமரம் மூலமாகவும் வரலாம் அதன் மூலமாக வருவது என்றால் வைட் தீவிலிருந்து வர வேண்டும்.

எந்த ரோடு ? எம்.27 என்ற சாலையிலிருந்து 12 வது திருப்பத்தில், எம்.275 சாலையில் உள்ளது போர்ட்ஸ்மவுத்ன் ஹிஸ்டாரிக் டாக்யார்ட்.

போர்ட்ஸ்மவுத்ன் ஹிஸ்டாரிக் டாக்யார்ட்லிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில், நிறைய கார் நிறுத்தும் இடங்கள் உள்ளன. காரை அங்கு நிறுத்தி விட்டு நடந்து செல்லலாம்.

 தினசரி எத்தனை மணி வரை நுழைவு சீட்டு தருவார்கள் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 10 மணி முதல் மாலை நாலு முப்பது மணி வரை.

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

வேலை நாட்கள் ஓராண்டில் 362 நாட்கள்டிசம்பர் 24 25 26 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள்..

இந்த பதிவில் சொல்லப்பட்ட செய்திகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் எனது வலைத்தளத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம். 

பூமி ஞாஅசூரியன்

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...