Saturday, October 14, 2023

PENSIONERS SPECIAL AATTUKKAL SOUP - முதியோர் ஸ்பெஷல் ஆட்டுக்கால் கிழங்கு சூப்பு

 


கொல்லிமலை கிழங்கு

இரண்டு நாட்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் என்னிடம் கேட்டார்உங்களுக்கு ஆட்டுக்கால் கிழங்கு  வேண்டுமா ? “ “ஆட்டுக்கால் கிழங்காஎன்று நான் கொஞ்சம் தடுமாறினேன்.

ஆட்டுக்கால் கிழங்கு ஆர்டர்

எனது பதிலை எதிர்பார்க்காமல் அவர்உங்களுக்கும் சேர்த்து சொல்லி இருக்கிறேன். இரண்டொரு நாட்களில் எனக்கு இரண்டு கிலோ ஆட்டுக்கால் கிழங்கு வரும்.. அது வந்ததும் உங்களுக்கு ஒரு கிலோ கொடுத்து அனுப்புகிறேன்என்று சொன்னார்.

 எனது மனைவிக்கு மூட்டு வலி என்றும் அதற்காக ஒரு மாத காலம் பிசியோதரப்பி. எடுத்துக் கொள்கிறோம் என்றும் நான் அவரிடம் சொல்லி இருந்தேன்அதனால் தான் எனக்கும் சேர்த்து ஆட்டுக்கால் கிழங்கு ஆர்டர் செய்திருப்பதாக சொன்னார்.

கொல்லிமலை கிழங்கு 

இங்கு கொல்லிமலைப் பகுதியில் இந்த ஆட்டுக்கால் கிழங்கு கிடைக்கிறது. அதனால் சேலம் பகுதியில் மற்றும் அதன் சுற்றுலா சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கிழங்கு கிடைக்கிறதாம்முக்கியமாக மலை அடிவார கிராமங்களில் இந்த கிழங்கு கிடைக்கிறது என்றும் சொன்னார்.

சமீபகாலமாக இந்த ஆட்டுக்கால் கிழங்கு மிகவும் பிரபலமாகி வருகிறதாம்காரணம் மூட்டு வலியை அற்புதமாக குணப்படுத்துகிறது என்று சொல்லுகிறார்கள்

மலைக்காமல் ஏறலாம் மாடிப்படிக்கட்டு

மாடி படிக்கட்டை பார்த்து மலைக்கு போய் ஏறாமல் இருந்தவர்கள் எல்லாம் இந்த கிழங்கு சூப்பை பத்து  நாட்கள் குடித்தால் போதுமாம். படிக்கட்டுகள் ஏறலாம் என்கிறார்கள்.  

வெரிகோஸ் வெயின் 

வெரிகோஸ் வெயின் என்ற நோயை வேற லெவலில் இது கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள்கருப்பு பச்சை என்று எந்த  நிறத்தில் இருந்தாலும் பத்து நாள் இந்த சூப்பை குடித்தால் அந்த நரம்புகள் எல்லாம் காணாமல் போகிறது என்கிறார்கள்.

அது மட்டுமல்ல அதன் கிழங்குகளை பார்த்தால் கிட்டத்தட்ட ஆட்டு கால்களை பார்ப்பது மாதிரியே இருக்கு. கால்களில் எப்படி ரோமம் மூடி  இருக்கிறதோ அதேபோல் இதன் மேலும் ரோமம் மூடி  இருக்கிறது.

வெள்ளை வெளேர்

கிழங்கின் மேல் இருக்கும் முடிகளை நீக்கி மேல் தோலையும் சீவினால் உள்ளே கிழங்குகள் வெள்ளை வெளேர் என்று இருக்கிறது. அந்த கிழங்குகளை துண்டுகளாக்கி சூப்பு செய்ய என்னென்ன தேவையோ அதை எல்லாம் சேர்த்து அற்புதமாக சூப்பு தயாரிக்கிறார்கள்.

 அறிவியல் செய்தி

 ஆட்டுக்கால் கிழங்கு பற்றிய  சில முக்கிய செய்திகளை திரட்டி உங்களுக்கு கொடுக்கலாம் என்று நான் முடிவு செய்தேன் எனக்கு கிடைத்த செய்திகளை இங்கு நான் தந்திருக்கிறேன். இவையெல்லாம் அறிவியல் ரீதியான செய்திகள்.

பெரணி செடி

 தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் வளரும் ஒரு வகையான பெரணி வகை தாவரத்தின் கிழங்கு என்று அறியப்படுகிறது ஒரு பெரணி செடியிலிருந்து இப்படிப்பட்ட ஒரு கிழங்கு வருகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 மயிலிறகு செடிகள்

காரணம் பெரணி என்பது ஒரு மென்மையான தாவரப் பிராணி. அதனை தமிழில் மயிலிறகு செடிகள் என்று சொல்லுவார்கள் பார்க்க அதன் நிலைகள் அவ்வளவு அழகாக இருக்கும் அதன் இலைகளை பார்த்தால் மயில் இறகுகள் மாதிரியே தோற்றம் தரும்.

ஏற்காடு மற்றும் சேர்வராயன்

இந்த கிழங்கினை முடவன் ஆட்டுக்கால் ஆட்டுக்கால் கிழங்கு ஆட்டுக்கால் இப்படி பல பெயர்களில் ஏற்காடு மற்றும் சேர்வராயன் பகுதிகளில் மலைவாழ் மக்கள் அழைக்கிறார்கள். இதன் கிழங்கை பார்க்க உடைந்து போன ஆட்டுக்கால் மாதிரியே இருக்கிறது.

ஓக் லீஃப் ஃபெர்ன்

 இதன் பொதுப் பெயர்களாக  ஆங்கிலத்தில் ஓக் லீஃப் ஃபெர்ன் (OAK LEAF FERN), என்றும்  ஒக் லீஃப் பேஸ்கட் ஃபேர்ன் (OAK LEAF BASKET FERN) என்றும் சொல்லுகிறார்கள். இதன் இலைகள் பார்க்க பூ மரத்தின் இலைகள் போலவே இருக்கின்றன.

அகலோ மார்ஃபா கொர்சிபோலியா

 இதன் தாவரவியல் பெயர் அகலோ மார்ஃபா கொர்சிபோலியா (AGALOMORPHA QUERCIFOLIA),   பாலிபோடியேசி  (POLYPODIACEAE)என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த ஆட்டுக்கால் கிழங்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

டாக் ஆப் கொல்லிமலை

இந்த ஆட்டுக்கால் கிழங்கில் சூப் செய்வது ரொம்பவும் பிரபலம்இதன் சூப்பு சாப்பிட ஆட்டுக்கால் சூப்பு மாதிரியே இருக்குமாம். கொல்லிமலையில் இப்போது டாக் ஆப் கொல்லிமலை  இதுதானாம். நீங்கள் யாராவது கொல்லிமலை போக வேண்டி இருந்தால் மறக்காம ஆட்டுக்கால் சூப்பு சாப்பிட்டுவிட்டு  வாருங்கள்.

முக்கியமாக மூட்டு வலி

இந்த ஆட்டுக்கால் கிழங்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்களை உள்ளடக்கியது இதனை சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகிறது

மூட்டு வீக்கம் குணமாகிறது. காய்ச்சல் குணமாகிறது. செரிமான உபாதைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது..

இப்படி பல வகையான மருத்துவ குணங்களை உடையது இந்த கொல்லிமலை ஸ்பெஷல் ஆட்டுக்கால் கிழங்கு !

4452  நோய்களை கட்டுப்படுத்தும்

ஒரு அம்மா யூட்யூபில் சொல்லு கிறார்இந்த கிழங்கு 4,4502 வியாதிகளை  கட்டுப்படுத்தும்.. அது மட்டுமல்ல இது போகர் என்ற சித்தரால் அறிமுகம் செய்யப்பட்ட மூலிகை..”  ஆச்சரியமாக இருக்கிறது.

 அசல் ஆட்டுக்கால்

இந்த செடிகள் அதிகபட்சமாக ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். சாதாரணமாக பெரணி செடிகள் வளரக்கூடிய ஈரமான சுற்றுச்சூழலில் அடர்த்தியான காட்டு பகுதிகளில் இந்த பேரணி செடிகள் வளர்கின்றன. இதன் கிழங்குகள் ஆட்டுக்கால் போலவே சிறுமுடிகளால்  மூடி  இருக்கிறது சட்டென்று பார்த்தால் ஆட்டுக்கால் மாதிரியே தோன்றுகிறது.

 அழகுக்கு வளர்க்கலாம்

அழகான இந்த பேரணி செடிகளை வீட்டு தோட்டங்களிலும் பூங்காக்களிலும் சாலை ஓரங்களிலும் பொது இடங்களில் அமையும் மர தோட்டங்களிலும் இதனை வளர்க்கலாம். என்ன ஒன்று இதை வளர்க்க கூடுதலான நீரும், ஈரமும்  நிழலும் வேண்டும்.

 பூங்காக்களில் வளர்க்கலாம்

நகரங்களில் பூங்காக்களை தோட்டங்களை அமைக்கும் நண்பர்கள் இந்த  குட்டி செடிகளை தொட்டிச் செடிகளாக வளர்க்கலாம். முக்கியமாக இதனை முதியோர் ஸ்பெஷல் என்றும் மூட்டு வலி ஸ்பெஷல் என்றும் சொல்லுகிறார்கள்.

 குடித்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன்

எனக்கு அந்த கிழங்கு வந்து சேரட்டும் சூப் வைத்து குடித்து பார்த்துவிட்டு உங்களுக்கு மறுபடியும் ஒரு பதிவினை எழுதுகிறேன். அது எங்கு கிடைக்கிறது என்று விசாரித்து சொல்கிறேன்

 உங்களுக்கு வேண்டுமா ?

உங்கள் யாருக்காவது இந்த மூட்டு வலி ஸ்பெஷல் ஆட்டுக்கால் கிழங்கு தேவை என்றால் எனக்கு சொல்லுங்கள். இதை ஏற்கனவே யாராவது பயன்படுத்தி இருந்தால் உங்கள் அனுபவம் என்ன என்றும் சொல்லுங்கள். மூட்டு வலி ஸ்பெஷல் என்றும் முதியோர் ஸ்பெஷல் என்றும் சொல்லுகிறார்கள்.

பூமி ஞானசூரியன்





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...