Tuesday, October 24, 2023

HOW TO TAKE ALFALFA BEFORE JOGGING 3. குதிரைக்கு மட்டுமல்ல நாமும் சாப்பிடலாம்

TAKE  ALFALFA BEFORE JOGGING 


குதிரைமசால் என்பது குதிரைகளுக்கு போடும் தீவனம் என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது, காலையில் முளைகட்டிய கொண்டைகடலை போல முளைகட்டிய குதிரை மசால் விதைகளை சாப்பிட்டுவிட்டு   மெல்லோட்டம் ஓடினால் அது  துள்ளோட்டமாக மாறிவிடும் என்கிறார்கள். அதற்கான வெள்ளோட்டம்தான் இந்த பதிவு. எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன குதிரை மசாலில் என்று பாருங்கள்.
 

இதனை ஆஸ்திரேலியா நாட்டில் கலப்பு பயிராக பயிர் செய்கிறார்கள். அந்த நாட்டில் இது ஒரு முக்கியமான தீவனப் பயிராக பயன்படுத்துகிறார்கள். இதனை உலர வைத்து வெகு நாட்கள் பாதுகாத்து கறவை மாடுகளுக்கு தினசரி தீவனமாகக் கொடுக்கிறார்கள்

இதனை புல்வெளிகளில் வளர்க்கிறார்கள். கறவை மாடு வளர்ப்பவர்கள் முக்கியமான தீவனப் பயிராக சாகுபடி செய்கிறார்கள். இதற்குப் பாசனம் தேவை.

உணவு வகைகளின் தந்தை என்று இதனை சொல்லுகிறார்கள்,  

முளைப்பு வந்த குதிரை மசால் விதைகள்முளை வந்த  உளுந்து விதைகளை போல் இருக்கும்இவற்றை நாம் சாப்பிடலாம்

பல நாடுகளில் முளை  வந்த குதிரை மசால் விதைகளை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனை வீடுகளில் கூட தயாரிக்கலாம். இப்படி முளை  வந்த குதிரை மசால் விதைகளை ராஜ்கோ (RAJKO)என்று ஹிந்தி மொழியில் சொல்லுகிறார்கள்.

முளை வந்த ஒரு கோப்பை விதைகளில் 7.6 கலோரி சத்தும், 1.3 கிராம் புரதமும், 0.2 கிராம்  கொழுப்புச்சத்தும்,  07 கிராம் கார்போஹைட்ரேட்டும் 0.6 கிராம் நார்ச்சத்தும், 0.1  கிராம் சர்க்கரை சத்தும் அடங்கியுள்ளன. 

குதிரை மசாலில் இருக்கும் புரதம் அதிகமான அளவு என்று குறிப்பிடுகிறார்கள் ஒரு கிலோ குதிரை மசால் விதையில் 12 கிராம் புரதச்சத்து அடங்கியுள்ளது

இதில் உள்ள கச்சா புரதத்துடன் (CRUDE PROTEIN)கணிசமான அளவு லைசின் மற்றும் மீத்தையோனின் (LYSINE & METHIONINE)என்னும் முக்கியமான அமினோ அமிலங்களும் சேர்ந்திருக்கின்றன.

குதிரை மசால் செடியின் இலைகளில் கணிசமான அளவு பீட்டா கரோட்டின் அடங்கியுள்ளது. அத்துடன் வைட்டமின் , பி,   மற்றும் கே அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் கணிசமான அளவு உள்ளது.

அவற்றுடன் பொட்டாசியம், கால்சியம், அயன், பாஸ்பரஸ், சல்பர்,  கோபால்ட், மேங்கனீஸ் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

இதில் உள்ள தாவர ரசாயனங்கள், நச்சுப் பொருட்களை நீக்குவதற்கான பண்பினைக் கொண்டது. இதில் கூடுதலான குளோரோஃபில் என்னும் பச்சையம் இருப்பதால், இது புற்று நோயை கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டது.

குறிப்பாக உணவு குழாயில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதனை ஆங்கிலத்தில் டி டாக்ஸி ஃபையிங் அண்டு ஆன்ட்டி கேன்சரோ ஜெனிக் (ANTICANCEROGENIC) என்று குறிப்பிடுகிறார்கள்

இதில் 18 முதல் 22 சதம் கச்சாப் புரதம் அடங்கியுள்ளதுஅத்துடன் 25 முதல் 35 சதவீதம்  நார்ச்சத்தும்  அடங்கி உள்ளது. இவை தவிர கணிசமான அளவு சேப்பனின் என்னும் தாவர ரசாயனமும் அடங்கியுள்ளது.

எதனால் இதனை கறவை மாடுகளுக்கு கொடுக்கிறார்கள் ? முக்கியமாக இது ஐந்து முதல் பத்து மடங்கு கூடுதலாக சிறந்த முறையில் அதன் இரைப்பைகளில் செரிமானம் ஆகின்றது.

இரண்டாவதாக மாடுகள் இதனை அதிக அளவில் விரும்பி சாப்பிடும்.நாம் கூட சில உணவுப் பொருட்களை சாப்பிடும் போது சாப்பிட்ட உணர்வே இருக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தோன்றும் அது போல தான் கறவை மாடுகளுக்கு குதிரை மசாலா.

முளைகாட்டிய பட்டாணி, முளைகட்டிய கொண்டைகடலை மாதிரிதான் குதிரை மசாலாவும்.

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...