Saturday, October 14, 2023

HOW TO CONTROL FLOODS IN CHENNAI சென்னையில் வெள்ளத்தை தடுக்கலாம்

இதனை சென்னையில் 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு என்று சொல்லுகிறார்கள். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். சுமார் 18 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்இதற்கு காரணமாக இருந்தது எல் நினொ  விளைவு என்றும் சொல்லுகிறார்கள்.

வடகிழக்கு பருவ மழை

2015 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கடுமையாக  பெய்த மழையினால் ஏற்பட்டது இந்த வெள்ளம்.

ஒரு தனியார் மருத்துவமனை ஓன்றில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்தார்கள், மின்சார இணைப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறது

ஐம்பதாயிரம் வீடுகள்

மிகக்குறைவாக வருவாய் ஈட்டும் சராசரி மக்கள் குடியிருந்த 50,000 மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் பெரும் சேதம் அடைந்தது சென்னை மாநகராட்சி தெரிவித்த கணக்கு இது

ஆனைவிலை குதிரைவிலை

வெள்ளத்தை அடுத்து அடிப்படை தேவைகளான பால் தண்ணீர் காய்கறிகள் ஆகியவை கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆனைவிலை குதிரைவிலை ஆனது. அரை லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். தண்ணீர் பாட்டில்கள்  தண்ணீர் கேன்கள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டன. எரிபொருட்கள் கிடைப்பதில் ஏகப்பட்ட சிரமம்.  

மறக்க முடியாத நவம்பர் ஏழு

2015 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி ஒரு மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அந்த வெள்ளத்தை நம்மால் மறக்க முடியாது. அதுதான் உண்மையிலேயே நம்முடைய மனதில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளம்

இதனை தென்னிந்திய வெள்ளம் என்று குறிப்பிடுகிறார்கள் ஆங்கிலத்தில் 2015 சவுத் இந்தியா ஃபிளட்ஸ் (SOUTH INDIA FLOODS) என்று சொல்லுகிறார்கள்.

24 மணி நேரம் தொடர் மழை

இந்த வெள்ளத்தின் போது சென்னை நகரில் பதிவு செய்த மழையின் அளவு 200 மில்லி மீட்டர்.அதன் பின்னர் ஏறத்தாழ 23 நாட்கள் கழித்து சென்னையில் பெய்த மழையில் 490 மில்லி மீட்டர் 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து விட்டது பல இடங்களில் முதல் மாடி வரை கூட தண்ணீர் உயர்ந்து இருந்தது

பஸ்கள் ஓடிய சாலைகளில்  படகுகள் 

நம்ப முடியாத அளவிற்கு சிட்டி பஸ்கள் ஓடிய சாலைகளில் எல்லாம் படகுகள் சென்றனபெரும்பாலான வெள்ள மீட்பு பணிகள் படகுகள் மூலமாகவே செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் மூலமாக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து இருந்தது தான் காரணம். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு முழுமையாக பருவ மழை தான் காரணம் என்று சொல்ல முடியாது. இதற்கு காரணம் அந்த சமயத்தில் செம்பரம்பாக்கம் ஏரி . 

அது அப்போது முழுமையாக நிரம்பி இருந்தது அதிலிருந்து தண்ணீரை விடுவிக்கவில்லை என்றால் அந்த நீர் தேக்கம் உடைந்து போகும் நிலையில் இருந்தது. நீரை திறந்து விட வேண்டிய அவசியம் ஏற்பட்டது..  

அதனால் அடையாறு ஆற்றில் அதன் கரைகள் உடைந்து  வெள்ளமாக மாறியது. மாறி அது பாதிப்பை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார்கள்.

சென்னையில் வெள்ள நீரை தடுப்பது எப்படி ?

1.தற்போது செயல்பாட்டில் உள்ள வடிகால் அமைப்பு இப்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டதல்ல.

2. பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்யும் போது கூடுதலான நீரை வெளியேற்றும் வசதி ஒரு காலத்தில் அமைக்கப்பட்ட வடிவ அமைப்பு போதுமானதாக இருக்காது, பொருத்தமானதாக இருக்க முடியாது.

3. தற்போது பொருத்தப்பட்டிருக்கும் வடிகால்  குழாய்கள் இல்லாமல் வெள்ள நீரை வெளியேற்றுவத்ற்கு உரிய பிரத்தியேகமான வடிகால் குழாய்களை அமைக்க வேண்டும்.

4. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் தாழ்வான இடங்களில் வசிக்கிறார்கள் என்பதை நினைவிருக்கும் படி அங்கு பெயர்ப் பலகைகளை பொருத்தி வைக்க வேண்டும்

5. ஆறுகள் ஏரிகள் குளங்கள் அணைக்கட்டுகள் நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் அருகமைந்த குடியிருப்புகளுக்கு கூடுதலான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளைக்  கொண்டு அதிக செலவில்லாமல் இந்த தடுப்பை சுவர்களை அமைக்க முடியும்

6. பருவ காலங்களில் அதிக மழை பெறும் சமயங்களில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

 7. பருவமழைக்  காலங்களில், வெள்ளம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என்ற பட்டியல் அரசிடம் இருக்க வேண்டும். அந்த இடங்களில் முன்னதாகவே வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

8. இது போன்ற சமயங்களில் தோராயமாக எத்தனை குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் எத்தனை குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ? எவ்வளவு பேருக்கு தங்குவதற்கான தற்காலிக வசிப்பிடங்களை உருவாக்க வேண்டும்

9. எத்தனை பேருக்கு வெள்ளகாலத்தில் உணவு பொருட்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் ? இந்த புள்ளீவிவரங்கள் அரசின் விரல் நுனியில் இருக்க வேண்டும்.

 10. சாலைகளின் ஓரங்களில் உள்ள வடிகால் அமைப்புகளை சரி செய்து வைத்திருக்க வேண்டும். அந்த வடிகால் அமைப்புகளின் மீது, ஓட்டைகளை உடைய  மூடுபலகைகளைப் பொருத்தி இருக்க வேண்டும். அதன் மூலம் சாலையில் தேங்கும் நீர் முழுமையாக வடிகால்களில் வடிக்கப்பட வேண்டும்.

11. இந்த பணிகளை எல்லாம் பருவ கால மழைக்கு முன்னால் செய்ய வேண்டும். உதாரணமாக  பருவமழை இல்லாத 5 மாதங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும்.ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஆகிய ஐந்து மாதங்கள் இதற்கு ஏற்றவை.

 12. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களோடு அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்காக சமூக ஊடக இணைப்புகள் முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு அவசர கால செய்திகளை தெரிவிக்க முடியும்

13. வெள்ள காலங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க சோலார் பேனல்களை பயன்படுத்தலாம் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் எல்லாம் குறைந்த பட்சம் 1 கேவி சோலார் பவர் பேனல்களை பயன்படுத்தலாம் இதற்கு அரசு ஏற்பாடு செய்யலாம்.

14. வெள்ளம் ஏற்படும் சமயங்களில் மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் போது நிறைய விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு ஆகையினால் அரசு குறைந்த பட்சம் 50 சதவிகித வசிப்பிடங்களுக்காகவது பொது ஊர்திகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

 15. இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்கள் பொது மக்களுக்கு தொண்டு செய்யும் படியான அமைப்புகளை ஏற்கனவே கண்டறிந்து அவர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். 

16. அவர்களின் செயல்படும் இடங்களுக்கு ஏற்ப அவர்கள் பணி செய்வதற்குரிய இடங்களை ஒதுக்கி தர வேண்டும். நிவாரண பணிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் ஏற்பாடு செய்வதற்கான அரசு எந்திரத்தை முன்னதாகவே தீர்மானிக்க வேண்டும்.

 17. நகரங்களில் ஓடும் ஆறுகள், கால்வாய்கள், வடிகால்கள், ஆகியவற்றின் கரைகளில் குவிந்துள்ள குப்பைக் கூளங்களை, முன்னதாகவே அகற்றி அந்த பகுதியைத்  தூய்மைப்  படுத்த வேண்டும்

18. இல்லையென்றால் இந்த குப்பை கூளங்கள் அத்தனையும் நீர் ஆதாரங்களை அடைத்து விடும். வடிகால்களை அடைத்துவிடும். வெள்ளை நீரை வடிப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் ஏற்படும்.

19. முக்கியமாக திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும், கடுமையான சட்டங்கள் மூலம் இதனை கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற இடங்களில் நிறைய கழிவறைகளை கட்ட வேண்டும்.

20. குப்பைகளும் சாக்கடையும் வெள்ள நீரில் சேருவதால், அது சுற்றுச்சூழலில் கடுமையான மாசுவினை ஏற்படுத்தும். இதனால் பலவிதமான  தொற்று  நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

 21. கடுமையாக மாசுபடும் நகர்ப்புற சுற்றுச்சூழலை சரிசெய்ய எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும். நீர் பின்னோட்டம் உள்ள இடங்களில் எல்லாம் அலையத்தி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.

பூமி ஞானசூரியன்











 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...