டபிள் டெக்கர் உயிர் வேர்ப்பாலம் |
உலகின் மி குந்த ஈரமான பகுதி, உலகில் உள்ள நூற்று தொண்ணூத்தி ஐந்து நாடுகளில் மிக அதிகமான அளவில் மழை பெய்யும் இடம், சராசரி மழையாக ஒரு ஆண்டில் 11440 மில்லி மீட்டர் மழை பெறும் இடம், உலகில் 24 மணி நேரத்தில் 22957 மி.மீ. மழையை 1861 ம் ஆண்டு பதிவு செய்த இடம்,
இந்திய துணை கண்டத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இடம், மேகாலயாவின் மாநிலத்தின் ஒரு இடம்
காசி மலை குன்றுகளின் உச்சியில் அமைந்துள்ள இடம், ஆறுகளின் குறுக்காக ஒரு மரத்தின் வேர்களிலேயே உயிர்ப்பாலங்களை கட்டப் பயன்படுத்தும் அதிசய இடம், இன்று உலகில் அதிக மழை பெறும் மாசின்ராம் நகரத்திற்கு அடுத்த கிராமம் அல்லது சிறு நகரம் இந்த சிரபுஞ்சி.
சுற்றுலா போக சரியான இடம்
சுற்றுலா போறதுக்கு ஒரு சரியான இடம். நீண்ட தூரம் பயணம் செஞ்ச மாதிரி இருக்கும். புதுசா ஒரு இடத்தை பார்த்த மாதிரியும் இருக்கும்.
இங்க இருந்து 1845 கிலோ மீட்டர் தூரம் விமானம் மூலமா போகலாம். நம்ம போக வேண்டிய இடம் உம்ராய் (UMROI AIRPORT)விமான நிலையம்
இது ஷில்லாங்கில் இருந்து ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. உம்ராய் ஏர்போர்ட்டில் இருந்து கார் மூலமாக ஷில்லாங் போகலாம்.
அங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு இந்த சிரபுஞ்சி. சிரபுஞ்சியிலிடருந்து 16 கிலோமீட்டர் தொலைவில இருக்கு மான்சிராம்.
பார்க்கக்கூடிய இடங்கள்
இந்த சிரபுஞ்சி மான்சிராம் பகுதியில் அதிகமா மழை பெய்யறதுக்கு என்ன காரணம் அப்படின்னும் இந்த பதிவுல நாம பாக்க போறோம்.
முக்கியமா இந்த ரெண்டு பகுதிகளும் இருப்பது உயரமான மலைப்பகுதி இந்த காசி மலைச்சரிவுகள்.
அந்த மலைப்பகுதியில் இந்த கிராமங்கள் அல்லது நகரங்கள் அமைந்திருக்க கூடிய முக்கியமான இடம்.
அதற்கு அடுத்தபடியாக ரொம்ப முக்கியமானது இங்கு இருக்கக்கூடிய நான்கு விதமான காடுகள்.
அந்த காடுகளை பத்தியும் நம்ம இந்த பதிவுல பார்க்க போறோம் அதுக்கு முன்னாடி இந்த சிரபுஞ்சி மான்சிராம் பகுதிக்கு நம்ம சுற்றுலா போனா எந்தெந்த இடங்களைப் பார்க்கலாம் என்று சுருக்கமா உங்களுக்கு சொல்றேன்.
சிரபுஞ்சி மான்சிராம்’ல் பார்க்க வேண்டிய இடங்கள்
என்னைப் பொறுத்த வரையில் இங்கே முக்கியமா பார்க்க வேண்டிய இரண்டு இடங்கள், ஒன்று சிரபுஞ்சி இன்னொன்று மான்சிராம்.
இன்றைய நிலையில் உலகத்திலேயே அதிக ஆண்டு சராசரி மழை பெறும் இடம் மான்சிராம், அங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 11877 மி.மீ.
அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் இருப்பது சிரபுஞ்சி. நம் எல்லோருக்கும் தெரியும்.
மான்சிராமிற்கு முன்னால் அதிகமான மழை பெறும் இடமாக இருந்தது சிரபுஞ்சி, தற்போது அது இரண்டாம் நிலையில் உள்ளது.
இந்த இரண்டு இடங்கள் போக இன்னும் ஒரு எட்டு இடங்களை உங்களுக்கு சொல்லலாம் என்று தான் நினைக்கிறேன். இதில் முக்கியமானது ஒரு வேர்ப்பாலம், இரண்டு நீர் வீழ்ச்சிகள், ஒரு குகை, ஒரு ஆறு, இரண்டு பூங்கா, ஒரு பள்ளத்தாக்கு,
1. டபுள் டெக்கர் உயிர் வேர்ப்பாலம் (DOUBLE DECKER LIVE
ROOT BRIDGE) 2.நோக்காலிக்காய் நீர்வீழ்ச்சிகள் (NOHKALIKAI
FALLS)
3. செவன் சிஸ்டர்ஸ் ஃபால்ஸ் (SEVEN SISTERS FALLS) 4. மாஸ்மாய் குகை (MAWSMOI CAVE) 5. ஈகோ பார்க் (ECO PARK) 6. டாவ்க்கி (DAWKI) 7. மாவ்க்டாக் டிம்பெப் வேலி (MAWDOK DYMPEP VALLEY ) 8. தா ங் க் க ரா ங் பார்க் (THANGKHARANG PARK)
சிரபுஞ்சியில் என்ன வாங்கலாம் ?
சிரபுஞ்சி தேன் ரொம்பவும் விசேஷமானது. ஆரஞ்சு பூ தேன் இது. இங்கு உள்ள தேனீக்கள் ஆரஞ்சு பூக்களில் இருந்து இந்தத் தேனை தயாரிக்கின்றன. வேறு எங்கும் எப்படி ஆரஞ்சு பூக்களில் தயாரிக்கும் அல்லது சேகரிக்கும் தேன் கிடைக்கிறதா என்று தெரியவில்லை குறைந்தபட்சம் ஒரு கிலோ தேனாவது வாங்கி வரலாம்.
இன்னொன்று மிகவும் அழகான அதே சமயம் மலிவான பரிசு பொருட்களை இங்கு வாங்கலாம். வித்தியாசமான பரிசுப் பொருட்களை பெரம்பு மற்றும் மூங்கிலில் செய்து வைத்திருக்கிறார்கள். போகும் இடங்களில் எல்லாம் இந்த பரிசு பொருட்களை வாங்கலாம்.
No comments:
Post a Comment