Monday, October 23, 2023

ALFALFA A PREMIER FODDER 1. குதிரை மசால் முதல்தர தீவனம்

ALFALFA  A PREMIER FODDER


குதிரை மசால் ஒரு தீவனப்பயிர். இதன் சிறப்புதரமான தீவனம் தருவது. நிலத்தின் அடியில் அதிகப்படியான நீர் தேங்குவதால்  உருவாகும் உப்புத்தன்மையை அல்லது களர்த் தன்மையை குறைப்பது, கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தட்டுப்பாடில்லாமல்  தீவனம் கிடைக்க செய்வது, மண்ணின் வளத்தினை  பராமரிப்பது மற்றும் மேம்படுத்துவது, நிலத்தில் முளைக்கும் அதிகமான களைகளைக் கட்டுப்படுத்துவது, கால்நடை வளர்ப்பின் மூலமாக கூடுதலான வருமானம் மற்றும் லாபம் கிடைக்க செய்வது..

குதிரை மசால் பற்றிய ஆச்சரியமான ஒரு செய்தியை நான் உங்களுக்கு சொல்லவா ? ஒரு மீட்டர்  உயரத்திற்கு சராசரியாக வளரும் குதிரை மசால் செடிகளின் வேர் 15 மீட்டர்  கூட வளருமாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

நிலத்துக்கு அடியில் நீர் தேடி அலையும் செடிகளின் வேர்களில் முன்னணியில் இருப்பது இந்த குதிரை மசால் வேர்கள் என்று சொல்லலாம்.

குதிரை மசால் செடிகள் மிகவும் தாமதமாக வளரும் அதற்கு காரணம் முதலில் அது தன்னுடைய வேர்களை வளர்த்துக் கொள்ளும்  அதன் பிறகுதான் இலைகளும் தண்டுகளும் மெதுவாக வளரும்

விதைகளை விதைத்தோ தண்டுகளின் துண்டுகளை நடவு செய்தோ குதிரை மசால் பயிரை சாகுபடி செய்யலாம்.

பொதுவாக மழை காலங்களில் இதனைத் தொடங்க வேண்டும் முக்கியமாக இதில் செய்ய வேண்டிய செய்முறை என்பது களைகளைக் கட்டுப்படுத்துவது, அதற்கு தேவையான உரங்களை இடுவது, மற்றும் தேவையான நீர்ப்பாசனம் அளிப்பது.

குதிரை மசால் சாகுபடி செய்ய நிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். நீளமான வேர் அமைப்பை உடைய குதிரை மசால் சாகுபடி செய்ய மண் கண்டம் ஆழமானதாக இருக்க வேண்டும்

இன்னொன்று அதில் வடிகால் வசதி இருக்க வேண்டும் களிமண் கூடுதலாக இல்லாமல் இருப்பது நல்லது 

ஏற்கனவே குதிரை மசால் சாகுபடி செய்த நிலமாக இருக்கக் கூடாதுகுறைந்தது நான்கு ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். இல்லை என்றால் புதிதாக விதைக்கும் விதைகள் அந்த நிலத்தில் முளைக்காது 

இதனை ஆட்டோ டாக்ஸிசிட்டி என்று (AUTO TOXICITY) சொல்லுகிறார்கள். குறைந்தபட்சம் 4 ஆண்டுகள், அந்த நிலத்தில் ஒரு விதமான நச்சுத்தன்மை இருக்கும். அது புதிய விதைகளை முளைக்க விடாது என்று சொல்லுகிறார்கள். 

தமிழ்நாட்டில் குதிரை மசால் என்று அழைக்கப்படும் இந்த தீவனப்பயிரின் ஆங்கிலப் பெயர் லூசர்ன்(LUCERNE)  என்பதாகும். இதன் தாவரவியல் பெயர் மெடிக்காகோ சட்டைவா (MEDICACO SATIVA). 

ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில்,  இதனை ஆல்ஃபால்ஃபா (ALFALFA) என்கிறார்கள்.

குதிரை மசால் விதைகளை விதைக்கும் முன்னால் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் இல்லை என்றால் அது சரிவர முளைக்காது

விதை நேர்த்தி செய்வதற்கான பாக்டீரியல் திரவம், விவசாய மருந்து கடைகளில் கிடைக்கும் அதை எப்படி விதை நேர்த்தி செய்வது என்று கேட்டு தெரிந்து கொண்டு விதைநேர்த்தி  செய்த விதைகளை விதைக்க வேண்டும்

இல்லை என்றால் குதிரை மசால் விதைகள் சரிவர முளைக்காது நமக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் குதிரை மசால் செடிகளும்  கிடைக்காது.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...