Tuesday, October 24, 2023

HOW TO TAKE ALFALFA BEFORE JOGGING 3. குதிரைக்கு மட்டுமல்ல நாமும் சாப்பிடலாம்

TAKE  ALFALFA BEFORE JOGGING 


குதிரைமசால் என்பது குதிரைகளுக்கு போடும் தீவனம் என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது, காலையில் முளைகட்டிய கொண்டைகடலை போல முளைகட்டிய குதிரை மசால் விதைகளை சாப்பிட்டுவிட்டு   மெல்லோட்டம் ஓடினால் அது  துள்ளோட்டமாக மாறிவிடும் என்கிறார்கள். அதற்கான வெள்ளோட்டம்தான் இந்த பதிவு. எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன குதிரை மசாலில் என்று பாருங்கள்.
 

இதனை ஆஸ்திரேலியா நாட்டில் கலப்பு பயிராக பயிர் செய்கிறார்கள். அந்த நாட்டில் இது ஒரு முக்கியமான தீவனப் பயிராக பயன்படுத்துகிறார்கள். இதனை உலர வைத்து வெகு நாட்கள் பாதுகாத்து கறவை மாடுகளுக்கு தினசரி தீவனமாகக் கொடுக்கிறார்கள்

இதனை புல்வெளிகளில் வளர்க்கிறார்கள். கறவை மாடு வளர்ப்பவர்கள் முக்கியமான தீவனப் பயிராக சாகுபடி செய்கிறார்கள். இதற்குப் பாசனம் தேவை.

உணவு வகைகளின் தந்தை என்று இதனை சொல்லுகிறார்கள்,  

முளைப்பு வந்த குதிரை மசால் விதைகள்முளை வந்த  உளுந்து விதைகளை போல் இருக்கும்இவற்றை நாம் சாப்பிடலாம்

பல நாடுகளில் முளை  வந்த குதிரை மசால் விதைகளை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனை வீடுகளில் கூட தயாரிக்கலாம். இப்படி முளை  வந்த குதிரை மசால் விதைகளை ராஜ்கோ (RAJKO)என்று ஹிந்தி மொழியில் சொல்லுகிறார்கள்.

முளை வந்த ஒரு கோப்பை விதைகளில் 7.6 கலோரி சத்தும், 1.3 கிராம் புரதமும், 0.2 கிராம்  கொழுப்புச்சத்தும்,  07 கிராம் கார்போஹைட்ரேட்டும் 0.6 கிராம் நார்ச்சத்தும், 0.1  கிராம் சர்க்கரை சத்தும் அடங்கியுள்ளன. 

குதிரை மசாலில் இருக்கும் புரதம் அதிகமான அளவு என்று குறிப்பிடுகிறார்கள் ஒரு கிலோ குதிரை மசால் விதையில் 12 கிராம் புரதச்சத்து அடங்கியுள்ளது

இதில் உள்ள கச்சா புரதத்துடன் (CRUDE PROTEIN)கணிசமான அளவு லைசின் மற்றும் மீத்தையோனின் (LYSINE & METHIONINE)என்னும் முக்கியமான அமினோ அமிலங்களும் சேர்ந்திருக்கின்றன.

குதிரை மசால் செடியின் இலைகளில் கணிசமான அளவு பீட்டா கரோட்டின் அடங்கியுள்ளது. அத்துடன் வைட்டமின் , பி,   மற்றும் கே அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் கணிசமான அளவு உள்ளது.

அவற்றுடன் பொட்டாசியம், கால்சியம், அயன், பாஸ்பரஸ், சல்பர்,  கோபால்ட், மேங்கனீஸ் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

இதில் உள்ள தாவர ரசாயனங்கள், நச்சுப் பொருட்களை நீக்குவதற்கான பண்பினைக் கொண்டது. இதில் கூடுதலான குளோரோஃபில் என்னும் பச்சையம் இருப்பதால், இது புற்று நோயை கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டது.

குறிப்பாக உணவு குழாயில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதனை ஆங்கிலத்தில் டி டாக்ஸி ஃபையிங் அண்டு ஆன்ட்டி கேன்சரோ ஜெனிக் (ANTICANCEROGENIC) என்று குறிப்பிடுகிறார்கள்

இதில் 18 முதல் 22 சதம் கச்சாப் புரதம் அடங்கியுள்ளதுஅத்துடன் 25 முதல் 35 சதவீதம்  நார்ச்சத்தும்  அடங்கி உள்ளது. இவை தவிர கணிசமான அளவு சேப்பனின் என்னும் தாவர ரசாயனமும் அடங்கியுள்ளது.

எதனால் இதனை கறவை மாடுகளுக்கு கொடுக்கிறார்கள் ? முக்கியமாக இது ஐந்து முதல் பத்து மடங்கு கூடுதலாக சிறந்த முறையில் அதன் இரைப்பைகளில் செரிமானம் ஆகின்றது.

இரண்டாவதாக மாடுகள் இதனை அதிக அளவில் விரும்பி சாப்பிடும்.நாம் கூட சில உணவுப் பொருட்களை சாப்பிடும் போது சாப்பிட்ட உணர்வே இருக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தோன்றும் அது போல தான் கறவை மாடுகளுக்கு குதிரை மசாலா.

முளைகாட்டிய பட்டாணி, முளைகட்டிய கொண்டைகடலை மாதிரிதான் குதிரை மசாலாவும்.

Monday, October 23, 2023

PROFITABLE FODDER ALFALFA 2. குதிரை மசால் லாபகரமான தீவனம்

PROFITABLE FODDER  ALFALFA

தென்அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதனை லூசர்ன் என்று சொல்லுகிறார்கள்.
இந்த குதிரை மசால் நீளமான வேர் அமைப்பை கொண்டது. குளிர்ச்சியான இடங்களில் வளரக்கூடியது இது ஒரு பல்லாண்டு  வளரக்கூடிய தீவனப்பயிர். பல நூறு ஆண்டுகளாக இதனை தீவனப்பயிராக பயன்படுத்துகிறார்கள்

பல நாடுகளில் பரவி இருப்பது, பல  தட்பவெப்ப நிலைகளிலும்  பரவி இருப்பதுகூடுதலான மகசூல் தருவது, அதனைத்  தரமாகத்  தருவது ஆகியவற்றால் இதனை தீவனப் பயிர்களின் ராணி என்று கொண்டாடுகிறார்கள்.

ஏற்ற மண் கண்டம், வடிகால்  வசதி இருந்தால் போதும். பல வகையான மண்ணிலும் பயிர் செய்யலாம். சிறிதளவு அமிலத்தன்மை இருந்தாலும் அதில் வளர்க்கலாம்

கொஞ்சம் உப்பு தன்மை கொண்ட நிலமாக இருந்தாலும் அதிலும் வளர்க்கலாம். இந்த விதமான மண்ணில் தான் வளரும் என்று அடம்பிடிக்காத சிறந்தத் தீவனப்பயிர்.

இதனை விதைத்த 55 60 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம் அதன் பிறகு 25 முதல் 30 நாட்களில் மறு அறுவடை செய்யலாம்

அதன் பிறகு மீண்டும் இரண்டடி உயரம் வளர்ந்த பின்னால் மறுபடியும் அறுவடை செய்யலாம் அதாவது மாதம் ஒரு அறுவடை செய்யலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆண்டில் 8 முதல் 10 அறுவடை செய்யலாம் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் 18 முதல் 20 டன் தீவனம் அறுவடை செய்யலாம். முதல் இரண்டு அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும்

அதன் பிறகு சிறிதளவு குறைவான மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 5 முதல் 8 ஆண்டுகள் வரை இதனை அறுவடை செய்யலாம்.

முக்கியமாக குதிரை மசால் சாகுபடி செய்யும் நிலங்களில்  நல்ல வடியால் வசதி இருக்க வேண்டும் நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் அங்கு  ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும்.

குதிரை மசால் சாகுபடி செய்யும் இடங்களில் அதிக வெப்பநிலை தேவையாக உள்ளது 35 முதல் 40 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் குதிரை மசால் நன்கு வளரும்.

குதிரை மசால் சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு 25 முதல் 30 கிலோ விதை தேவைஒரு சதுர மீட்டரில் குறைந்த பட்சம் 300 செடிகள் ஆவது இருக்க வேண்டும் இந்த பயிர் எண்ணிக்கையை பராமரிக்க கொஞ்சம் கூடுதலான விதை அளவை பயன்படுத்தலாம்.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை வைட்டமின்களை புரதம் மற்றும் நார்ச்சத்து ஒப்பிடும்போது இதனை ஒரு மூலிகை பயிராகவும் சொல்லுகிறார்கள். இந்த காரணங்களால் குதிரை மசால் மதிப்புமிக்க ஒரு பயிராகவும் லாபகரமானப் பயிராகவும் கருதப்படுகிறது.

பெரும்பாலும் குதிரை மசால் குதிரைகளுக்கும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கப் பயன்படுகிறது.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...