Sunday, September 3, 2023

WILD GUAVA MULTI PURPOSE TREE 326.புட்டத் தண்ணி மரம் பலபயன் தரும்

 

புட்டத் தண்ணி மரம் 
WILD GUAVA

01. புட்ட தண்ணி மரம் என்றும் காட்டு கொய்யா என்றும் சொல்லும் இந்த மரம்நடுத்தரமான அளவுள்ள இலையுதிர்க்கும் உயரமான இந்திய துணை கண்டத்திற்கு சொந்தமான மரம். தற்போது இதனை சாயம் எடுக்க, நார், பிசின், டானின், மரக்கட்டை, மற்றும் மருந்து தயாரிக்க என பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதனால் இதனை பல பயன் தரும் மரம் என்றும் சொல்லலாம்.

02. தாவரவியல் பெயர்: கேரியா ஆர்போரியா (CAREA ARBOREA)

03. பொதுப்பெயர்கள்:

புட்டதண்ணி மரம் (PUTTATHANNI MARAM)

ஒயில்டு கோவா (WILD GUAVA)

சிலோன் ஓக் (CEYLON OLIVE)

கும்பி (KUMBI)

அய்மா (AYMA)

04.தாவரக்குடும்பம்: லெசித்திடேசி (LECITHIDACEAE)

தாயகம்: இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான்

5. புட்டதண்ணி மரத்தின் அடி முதல் நுனி வரை பயன்படுத்துகிறது பாரம்பரிய மருத்துவம், பலவிதமான நோய்களை குணப்படுத்துகின்றது.

6. இந்த மரத்தின் பட்டைகள் மற்றும் பூக்களின் புற இதழ்களும்கூட இந்திய இயற்கை மருத்துவத்தில் முக்கிய இடம்பெறுகின்றன.

7.தன் பட்டைகள் மற்றும் புற இதழ்கள் இரண்டும் துவர்ப்பாகவும் கொழகொழப்பாகவும் இருக்கும். அதனால் இவற்றை இருமல் ஜலதோஷம் மற்றும் களிம்பு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

8.இதன் இலைகள் குளிர்பருவத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். இதன் பழங்கள் பார்க்க சிறிய சைஸ் கொய்யா மாதிரி இருக்கும்.

 9. இந்த மரத்தின் பட்டைகள் காட்டு பன்றிகளுக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டம், அதனால் வேட்டைக்காரர்கள் இந்த பட்டைகளைப் பயன்படுத்தி இந்த பன்றிகளை வேட்டையாடுவதுண்டு. 

10. இந்த மரத்தினை ஆங்கிலத்தில் வாட்டர் பாக்டரி (WATER FACTORY)என்று சொல்லுவார்கள் காரணம் வறண்ட பட்டத்தில் இந்த மரத்தின் பட்டைகளில் இருந்து ஒரு விதமான தண்ணீர் வடியும். 

11. இந்த மரத்தின் மேல் பகுதி பட்டைகள் மெல்லிய, நீளமான, தகடுகள் போல உரியும்.

12. பழங்கள் பெரியதாக இருக்கும், விதைகள் நிறைய இருக்கும், பூக்களின் புற இதழ்கள் பழங்களின் மேல் பகுதியில் அப்படியே இருக்கும், பார்க்க அசப்பில் கொய்யாப்பழங்கள் போலவே இருக்கும். 

13. அதனால் தான் இதற்கு காட்டுக் கொய்யா என்ற பொதுப் பெயரும் இதற்கு உண்டு.

14.இந்த மரம் இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் சொந்தமானது.

15.இந்த மரங்களின் பூக்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக அழகான பூக்களாக பூக்கின்றன, பெரிய காய்களை உற்பத்தி செய்கின்றன, இந்த மரம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாக காடுகள் மற்றும் புல்வெளிகளில் பரவலாக வளர்ந்துள்ளன.

16.இதன் இலைகள் பெரியவை, கிட்டத்தட்ட 30 சென்டிமீட்டர் நீளம் இருக்கும், அது மட்டுமல்ல இலைகள் கிளை நுனிகளில் கொத்து கொத்தாக நிறைய எண்ணிக்கையில் இருக்கும். 

17.இதனை வீட்டுத் தோட்டத்தில் கூட வளர்க்க சிபாரிசு செய்கிறார்கள். இதன் விதைகளை விதைத்து புதிய கன்றுகளை உருவாக்க முடியும், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம்.

18.இதன் விதைகளை விதைப்பதற்கு முன் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், அதன் பின்னர் நிலத்தில் நேரடியாக விதைக்கலாம், விதைகள் முளைக்க சில வாரங்கள் பிடிக்கும். 

19.ஒரு சமயம் இந்த மரங்களை நிழலுக்காக மட்டுமே வளர்த்த காலம் உண்டு. ஆனால் தற்போது இதனை சாயம் எடுக்க, நார், பிசின், டானின், மரக்கட்டை, மற்றும் மருந்து தயாரிக்க என பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். 

20. அதனால் இதனை பல பயன் தரும் மரம் என்றும் சொல்லலாம்.

21.பரவி இருக்கும் இடங்கள்: கிழக்கு ஆசியாவில் ஆப்கானிஸ்தானம்,பாகிஸ்தானம், இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், மற்றும் மலேசியாவில் இந்த மரம் பரவியுள்ளது.

 22. இந்த மரங்களுக்கு வடிகால் வசதி கொண்ட மண் தேவை. மணற்பாங்கான  மற்றும் பாறைகள் நிறைந்த மண் கண்டத்திலும் கூட வளரும். ஆனால் நல்ல சூரிய ஒளியும் வெப்பமும் அவசியம் வேண்டும்.

 23. இந்த மரங்களுக்கு ஒரு சிறப்பான பண்பு உண்டு, அதாவது இந்த மரங்கள் காட்டுத் தீயினால் பாதிக்கப்படாதது, இதனை ஒரு முக்கியமான பண்பாக குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 

24.இதன் பழங்களை சாப்பிடலாம், அதிகபட்சம் 6 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கும், நல்ல தசைப்பற்றுடன் இருக்கும், ஆனாலும்  அதன் விதைகளில் லேசான அல்லது குறைவான அளவு நச்சுத்தன்மை உள்ளது என்கிறார்கள். 

25. இதன் பட்டையிலிருந்து நார் எடுக்கிறார்கள், இதன் பட்டை கூழிலிருந்து காவி நிறமான அட்டை செய்யலாம், பட்டைகள் டேனின் தருகின்றது, கட்டிடங்களின் கட்டுமான பணிகளில், கம்பங்கள், சட்டங்கள், மேஜை நாற்காலி போன்ற மர சாமான்கள், பெட்டிகள் வேளாண்மை உபகரணங்கள், போன்றவற்றை செய்வதற்காக இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இந்த மரங்களை பயன்படுத்துகிறார்கள்.

26. வெள்ளைக்காரர்கள் காலத்தில் இந்த மரத்தை தீக்குச்சிகள் செய்ய பயன்படுத்தினார்கள். அதற்கு முன்னாள் பீச் மரப்பட்டைகளை இதற்காக பயன்படுத்தினார்கள்.

27. பர்மாவில் சுருட்டுகள் பிரபலமானவை, அங்கே இந்த இலைகளை சுருட்டுகள் சுருட்ட பயன்படுத்தினார்கள், இதன் பூக்கள் மற்றும் இளம் தளிர்களை காய்கறிகளாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.

இந்த பட்ட தண்ணீர் மரம்  மரம் என்னும் காட்டுக் கொய்யாவுடன் உங்களுக்கு அனுபவம் ஏதாவது இருந்தால் எனக்கு சொல்லுங்கள்,

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...