Friday, September 15, 2023

WHY IS LAUGHING BUDDHA LUCKY ? உங்க வீட்டில் இந்த சிலை இருக்கா ?





உங்க வீட்டில் இந்த  சிலை
இருக்கா ?

உங்க வீட்டில், உங்க கடையில், உங்க நிறுவனத்தில் சிரிக்கும் புத்தர்கள் சிலைகளை வைத்தால் நீங்களும் கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக சிரிக்கலாம், என்கிறார்கள்,  உங்கள் அனுபவம் எப்படி ?

வாய்விட்டு சிரிக்கும் முகம் ஒரு முடி கூட இல்லாத தலை மேலாடை இல்லாத பெரிய தொப்பை பக்கவாட்டில் தோலுக்கு மேல் உயர்த்திய கைகள் இப்படி வித்தியாசமான தோற்றத்தில் மூன்று ஜென் துறவிகளின் சிலைகள் உலகம் முழுவதிலும் உள்ள 193 நாடுகளிலும் பார்க்கலாம் 

இந்த மூன்று சிரிக்கும் புத்தர்களின் சிலைகளை வீடுகள் வியாபார நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் கடைத்தெருக்கள் எல்லா இடங்களிலும்  இன்னும் வைத்திருக்கிறார்கள். சிலைகளை வைத்திருந்தால் வீடுகளிலும் வியாபார நிறுவனங்களிலும் செல்வமும் சீரான ஆரோக்கியமும் குறைந்த மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்று உலகம் முழுக்க நம்புகிறார்கள்

  சீனாவைச் சேர்ந்த இந்த மூன்று துறவிகள் 907 ஆம் ஆண்டு முதல் கிபி 923 ஆம் ஆண்டு வரை வரையான  இந்த காலகட்டத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

சீன தேசத்தில் லியாங் டயனாஸ்டி (LIANG DINASTY IN CHINA)என்ற ஆட்சி காலத்தில் இந்த மூன்று துறவிகளும் வாழ்ந்து வந்தார்கள். வாழும் காலம் முதல் சிரித்துக் கொண்டே இருந்தார்கள் வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் கடந்து மகிழ்ச்சியாக வாழும் வழி என்பது  மனம் ஒன்றி சிரிப்பது தான்  என்று அவர்கள் நம்பினார்கள்.

இவர்கள் வாழும் காலத்தில் ஒரு கிராமத்திற்கு போகிறார்கள் என்றால் அங்கு போனவுடன் அங்கு பொதுவான இடம் எது என்று கிராமத்தில் விசாரிப்பார்கள். மூவரும் அந்த இடத்திற்கு போய் வரிசையாக நின்று கொள்ளுவார்கள். அந்த சமயம் அந்த இடத்தில் வேறு யாரும் இல்லாமல் கூட இருப்பார்கள். அப்படி இருந்தாலும் கூட அங்கு போய் நின்றதும் மூவரும் சிரிக்க ஆரம்பிப்பார்கள் தொடர்ந்து சிரிப்பார்கள் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தது பிற்பாடு கிராமத்தினர் இவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு அங்கு கூடுவார்கள்.

 அப்படி கூடும் கிராமத்துக்காரர்கள் முதலில் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் அதன் பின்னர் ஒருவர் இருவர் என்று சிரிக்க ஆரம்பிப்பார்கள் அதன் பிறகு அங்கு கூடியிருக்கும் அத்தனை பேரும் அவர்களோடு சேர்ந்து தொடர்ந்துை வேறு எதுவும் அந்த துறவிகள் பேசுவது கிடையாது என்ன கேட்டாலும் சிரிப்பார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமத்திற்கு போவார்கள் அங்கும் இதேபோன்று சிரித்தார்கள் அந்த கிராமத்தினரை சிரிக்க வைப்பார்கள் வருஷம் 365 நாளில் சிரிக்கும் புத்தர்கள் இந்த காரியத்தை தான் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

 இந்த சிரிக்கும் புத்தர்களின் சிலைகளை வைத்திருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் சிலர் இந்த சிலைகளை குபேரன் சிலைகள் என்று சொல்லுவதை நானே கேட்டிருக்கிறேன்.

 எங்கு சென்றாலும் இந்த மூன்று சிரிக்கும் புத்தர்களும் சேர்ந்துதான் செல்வார்கள் ஒரு நாள் அப்படி இந்த மூவரும் ஒரு கிராமத்திற்கு போனார்கள் அங்கு ஒரு பொதுவான இடத்தில் போய் நின்றார்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள் அந்த கிராமத்தினரும் ஒருவர் இருவர் என நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர் அவர்களும் இவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் அந்த சமயத்தில் 3 சிரிக்கும் புத்தர்களில் ஒரு புத்தர் திடீரென சரிந்து விழுந்தார். அடுத்த வினாடியே அவருடைய மூச்சு நின்று போனது அவர் இறந்து விட்டார் என்பது தெளிவாக தெரிந்தது. இப்படி ஒரு சம்பவம் திடீரென ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.

  மூன்று சிரிக்கும் புத்தர்களில்  ஒரு புத்தர்  இறந்து போனார் என்ற செய்தி காட்டு தீ மாதிரி பரவியது அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கு ஆயிரக்கணக்கில் பிறந்தார்கள் அவர்களுக்கு ஒரு பக்கம் சோகம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இப்படி ஒரு துறவி இறந்து போன பின்னால் மற்ற இரு துறவிகளும் தொடர்ந்து சிரிப்பார்களா என்ன செய்வார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஏற்பட்டது அதனை தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தார்கள்.

 ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிரிக்கும் புத்தர்கள் இருவரும் அழவில்லை வழக்கம் போல சிரித்துக் கொண்டே இருந்தார்கள் எல்லோருக்கும் இது மிகுந்த ஆச்சரியம் தந்தது.

 இறந்து போன இந்த சிரிக்கும் புத்தரை அந்த ஜென் துறவியை கொண்டு போய் அடக்கம் செய்தார்கள் அவரை அடக்கம் செய்த இடத்தில் மற்ற இரு துறவிகளும் போய் நின்றார்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். 

சுற்றிலும் நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான அந்த மக்களுக்கு இந்த நிலையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை இப்படி புரியாத சூழலில் அவர்கள் எல்லோரும் இருந்த சமயம் அவரை புதைத்த இடத்தில் எதிர்பாராத விதமாக ஏராளமான பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தது அந்த பட்டாசுகள் பல வண்ணத்தில் வெடித்து சிதறின.

 அதற்காக காத்திருந்தது போல அந்த இரண்டு ஜென் துறவிகளும் தங்கள் தொப்பைகள் குலுங்க புதிய உத்வேகத்துடன் சிரிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு சுற்றிலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்களும் சிரிக்கத் தொடங்கினார்கள்.

 ஒரு சவ அடக்கம் இப்படி மகிழ்ச்சியான முறையில் உலகில் எந்த பகுதியிலும் செய்யப்பட்டதில்லை என்று சொல்லுகிறார்கள்.

 என்று சீனாவின் பல கோயில்களில் அதன் முகப்பிலேயே நுழைவு வாயிலிலேயே இந்த சிரிக்கும் புத்தர்களின் சிலைகளை வைத்துள்ளார்கள்.

 சீனாவில் ஹேங்க் சௌ  என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலில் 24.6 மீட்டர் உயரமுள்ள ஒரு சிரிக்கும் புத்தர் சிலையை வைத்திருக்கிறார்கள் இதில் என்ன சிறப்பு என்றால் இந்த சிலையை அவர்கள் செய்திருப்பது கற்பூர மரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது அந்த கற்பூர மரத்தின் மேற்புறத்தில் தங்க தகட்டினை பொருத்தி இருக்கிறார்கள் இதற்காக அவர்கள் செலவு செய்துள்ள தங்கத்தின் அளவு 60 டேல் என்று சொல்லுகிறார்கள்.

சிரிக்கும் புத்தரின் உண்மையான பெயர் புட்டாய் கிச்சி (BUDOI QIECI)என்பதுஇவர் சீனாவில் பென்குவா (FENGUVA) என்ற ஊரைச் சேர்ந்தவர் அடிப்படையில் இவர் ஒரு ஜென் துறவி என்பது நமக்கு தெரியும்.

தம்பி நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா ? இந்த செட்டியார் பொம்மை என் கடைல வச்ச பிற்பாடு தான் என் கடை வளர ஆரம்பிச்சதுஎன்று ஒரு மளிகை கடைக்காரர் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.  நான் கூட நிறைய நாள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 

ஆமா உங்க வீட்டுலல எப்பபோ இந்த சிரிக்கும் புத்தர் சிலைகளை வாங்கி வைக்கப்போறீங்க ? எனக்கு சொல்லுங்கள், நன்றி வணக்கம்.  

பூமி ஞானசூரியன்

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...