Saturday, September 16, 2023

TEACHINGS TO LORD BUDDHA புத்தருக்கே போதனையா ?

புத்தருக்கே போதனையா ?


பாண்டவ அரசன் அர்ச்சனனுக்கு போர்முனையில் ஞானம் தந்தது அவனுடைய  தேரோட்டி  மாயக்கண்ணன். அப்படி புத்தர்  ஞானம் பெறக்  காரணமாக இருந்தவனும் ஒரு தேரோட்டி தான், எப்படி என்கிறீர்களா இதனைப் படியுங்கள் ! 

1. நிறைய பேர் புத்தர் என்றால்  அது கௌதமரை குறிக்கும் பெயர் என்கிறார்கள். ஆனால் புத்தர் என்பது அவர் பெயர் அல்ல. புத்தரின் இயற்பெயர் கௌதமன் சித்தார்த்தன் (SIDDHARTHA GAUTAMA) என்பது.ஆக புத்தர் என்பது ஒரு பதவியின் பெயர். புத்தம் சரணம் கச்சாமி சொன்னால் நாமும் கூட ஒரு புத்தர் தான்.

2. புத்தருடைய காலத்தில் அவருடன்  இருந்த துறவிகள் மொத்தம் 40 ஆயிரம் பேர். அவருடன்  இருந்த துறவிகளைபிக்கு”  என அழைத்தார்கள். அதற்கு  பிச்சைக்காரன் என்று பொருள்.

3.  அரச குடும்பத்தில் பிறந்து ராஜகுமாரனாக இருந்துதிருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தந்தை ஆன பின்னால் எப்படி அவர் சந்நியாசி ஆனார் ? அதனைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்அதனால் அது பற்றிய கதையை உங்களுக்கு நான் இப்போது சொல்லுகிறேன்.

4. கௌதமன் ஒரு அரசனுக்கு மகனாக பிறந்தபோதுஅவருடைய தந்தையிடம் ஒரு ஜோதிடர் சொன்னார்இந்த கவுதமன் எதிர்  காலத்தில்  ஒரு பேரரசனாக வருவான். . அது தப்பினால் அவன்  ஒரு பெரும் சந்நியாசியாக  மாறி விடுவான். இதை யாராலும் மாற்ற முடியாதுஎன்று சொன்னார்.

5. இந்த ஜோதிடரின் கருத்துப்படி பேரரசனாக வந்தால் கவலை இல்லை ஆனால் சந்நியாசியாக மாறி பிச்சைக்காரனாக தெருத்தெருவாக அலைந்தால் என்ன செய்வது என்று கவலைப்பட்டார், கலக்கப்பட்டார், கவுதமனின் அப்பா.

6. இதனால் குழப்பம் அடைந்த அரசன் தன்னுடைய அமைச்சர்கள் மற்றும் ராஜ பிரதானிகளிடம் ஆலோசனை கேட்டான். அப்போது அவர்கள் உங்கள் மகனை ஊர் உலகம்  தெரியாமல் இந்த சமூகத்தில் இருந்து பிரித்து வளருங்கள்அதுதான் ஒரே வழிஎன்று  சொன்னார்கள்.

7. கௌதமனின் அப்பா அவர்கள் சொன்னது போலவே, இளவரசன் கவுதமனுக்கு, வம்பு தும்பு தெரியாமல் கஷ்ட நஷ்டம் தெரியாமல் சுக துக்கம் தெரியாமல் வளர்த்து வந்தார். 

8.  வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்தான் கௌதமன்அப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் சித்தார்த்தன் நகர்வலம் போக வேண்டும் என அடம் பிடித்தான். ஆனால் அவன் இதனைத்  தனது தந்தையிடம் சொல்லவில்லை. 

9. தான் ஆசைப்பட்டதை தனது தேரோட்டியிடம் சொன்னான். தேரோட்டியும் இது பற்றி அரசனிடம் சொல்லவில்லை. கௌதமனை  பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துக் கொண்டு போனான்.

10. ஒரு நாள் நகர்வலம் போகும்போது ஒரு கிராமத்தில் மிகவும் வயது முதிர்ந்த  ஒரு பெரியவரைப் பார்த்தான் கௌதமன். அந்த பெரியவர் எலும்பும் தோலுமாக நடக்க பிடிக்க முடியாமல் இருப்பதையும் அவர் நடப்பதற்கு கூட ஒரு கம்பினை கையில் வைத்திருப்பதையும் அவருக்கு துணையாக ஒருவர் உடன் செல்வதையும் பார்த்தான்.ஏன் இவர் இப்படி இருக்கிறார் என்று தேரோட்டியிடம் கேட்டான்.

11. “முதுமைன்னா  அப்படித்தான் இருக்கும்.. அது எல்லோருக்கும் இது பொதுதான்..இப்போது  இளைஞர்களாக   இருப்பவர்கள் அத்தனை பேரும் நாளை  முதியவர்களாக மாறும்போது இப்படித்தான் இருப்பார்கள்என்று சொன்னான் தேரோட்டி.

12. அப்படி என்றால் அந்த முதுமை  உனக்கும் வருமா என்று கேட்டான் கௌதமன், எனக்கு மட்டுமல்ல இளவரசே அது உங்களுக்கும் வரும் அதுதான் இயற்கையின்  விதி இதனை யாரும் மாற்ற முடியாது என்று விளக்கமாக சொன்னான் தேரோட்டி. ஆச்சரியமாக கேட்டுக்கொண்டான் கவுதமன்.

13. இன்னொரு நாள்  நகர்வலம் செல்லும்போது   நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதனை  ஒரு மருத்துவமனை வாசலில் பார்த்தான் கௌதமன்.இந்த ஆள் மிக மோசமாக இருக்கிறான்.. இவனுக்கு என்ன ஆச்சு ..? எதனால் இவனை இரண்டு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.. ? தேரை நிறுத்து..என்று சொல்லி இறங்கி  இருவரும் அந்த நோயாளியை அருகில் சென்று பார்த்தார்கள். கவுதமன்.  நோயாளி எலும்பும் தோலுமாக இருந்தான்எலும்புகளை வெளியில் இருந்து எண்ணிவிடலாம் போல இருந்தது, சிரமப்பட்டு சுவாசித்தான். கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தான். பாவமாக இருந்தது. 

14. இப்போது நிறைய கேள்விகளை கேட்டார் கவுதமன்.. அவர் கேட்டதில் முக்கியமான கேள்விஇந்த நோய் எனக்கும் வருமாஎன்பதுதான். தேரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னான்.இது மாதிரியான நோய்கள் எனக்கும் வரும் உங்களுக்கும் வரும்.. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை”  என்று அமைதியாக சொன்னான்  தேரோட்டி.

15. இப்படியாக கௌதமன் நகர்வலம் செல்வது தொடர்ந்தது.  அடுத்த  நாள் நகர்வலம் செல்லும் போது அங்கு இறந்தவரின் இறுதி ஊர்வலம் ஒன்று இவர்களுக்கு எதிர்ப் புறமாக வந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார் கௌதமன்.

16. இப்போது தேரோட்டி கௌதமன் கேள்வி கேட்பதற்காக காத்திருக்கவில்லை அவனே சொல்ல ஆரம்பித்தான் குழந்தையாக பிறந்த மனிதன் வயதான பின்னால் ஒரு நாள் மரணம் அடைவான் அதுதான் இயற்கை இதனை யாராலும் மாற்ற முடியாது. பிறந்த மனிதன் இறப்பது இயற்கை என்று சொல்லி முடித்தான் தேரோட்டி.

17. அன்று முதல் சித்தார்த்தன் இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாமல் முதுமை நோய் மரணம் இது பற்றிய சிந்தனையாகவே இருந்தது. உலகை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் சிறைச்சாலை மாதிரியாக இருக்கும் இந்த அரண்மனையில் இருந்து வெளியே வர வேண்டும் எனும் முடிவுக்கு வந்தார் கௌதமன் எனும் சித்தார்த்தன்.

18.  இதற்கு இடைப்பட்ட காலத்தில் சித்தார்த்தனுக்கு திருமணம் ஆகி இருந்தது, அவனுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. ஆனால் இந்த குழந்தை மனைவி அம்மா அப்பா இந்த அரண்மனை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெளியே சென்று இந்த வாழ்க்கையை இந்த உலகத்தில் இந்த உலகில் வாழும் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு நொடியும் தொடர்ந்தது.

19.  ஒரு நாள் நள்ளிரவில் சித்தார்த்தன் யாரும் அறியாத வண்ணம் அரண்மனையை விட்டு வெளியேறினார் அவர் எங்கு செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் யாரை பார்க்க வேண்டும் இப்படிப்பட்ட எந்த ஒரு திட்டமும் அவரிடம் இல்லை.

20. உலகம் அறியாத அப்பாவியாக அரண்மனையில் வாழ்ந்த சித்தார்த்தன்  அதை விட்டு வெளியேறிய பின்னால் எப்படி புத்தராக ஞானம் பெற்றார் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம். 

இதுவரை புத்தர்தான் எல்லோருக்கும் போதனை சொன்னது நமக்கு தெரியும். ஆனால் இந்த கதையில் புத்தருக்கும் போதனை சொன்னவர் ஒரு தேரோட்டி என்று தெரிந்து கொண்டோம்நான் சொல்வது சரியா தப்பா  ? சொல்லுங்கள்.

 உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் மறக்காமல் எனது வலைத்தளத்தில் உங்கள் கருத்துக்களை ஓரிரு வாக்கியங்களில் சொல்லுங்கள். இதற்காக நீங்கள் செலவு செய்யப் போவது ஒரு சிலர் மணித்துளிகள் தான்காசு பணம் ஏதும் செலவில்லை, நன்றி வணக்கம். 

பூமி ஞான சூரியன்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 


 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...