ஆதித்யா-எல்ஒன் செயற்கைக்கோள் இப்போ வானத்துல பறந்துட்டு
இருக்கு. நாலு மாதம் பறக்கப் போகுது. அதுல 15 லட்சம் கி.மீ. பயணம் செய்யப் போகுது.
சூரியனை ஆராய்ச்சி செய்யப் போகுது. முக்கியமா சூரியனோட
வெளிப்பகுதியின் போட்டோஸ்பியர், குரோமொஸ்பியர், மற்றும் கொரோனா ஆகிய மூன்று அடுக்குகளை ஆய்வு செய்யப் போகுது, அத்தோட சூரியப்
புயலப்பத்தியும் ஆராய்ச்சி செய்யப் போகுது,
இந்த
சமயம், சூரியன்
ஒரு சூரியப்புயலை பூமிக்கு அனுப்பியிருக்கு என்ற செய்தியைப் பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
சூரியக்காற்று என்கிறார்கள். சூரியப்புயல் என்கிறார்கள்.
அது எங்கிருந்து வீசுகிறது, அதன் வேகம் என்ன
? அதனால் என்ன பிரச்சினைகள் வரும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.
1,சூரியனில் சேகரம் ஆகும் பார்ட்டிகிள்ஸ் என்னும் துகள், அல்லது தூள் மற்றும் பிளாஸ்மா (PLASMA)என்னும்
அந்த துகள்களின் தொகுப்பு என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை கலெக்க்ஷன் ஆப்
சார்ஜுடு பார்ட்டிகல்ஸ்(COLLECTION
OF CHARGED PARTICLES) என்றும்
சொல்லுகிறார்கள். பிளாஸ்மா நிரப்பிய ஒரு நெருப்புப்
பெட்டிதான் சூரியன்.
2, இந்த பார்ட்டிகல்ஸ் மற்றும் பிளாஸ்மா என்பது பற்றிதான் அதிகமாக
பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். இந்த பிளாஸ்மா அல்லது பார்ட்டிகல்ஸ் இந்த இரண்டும்
சூரியனின் வெளிப்புறத்தில் இருக்கும் கொரோனா என்ற பகுதியிலிருந்து வெளிப்படுகிறது. அதாவது சூரியனில்
நிரம்பியிருக்கும் இந்த பிளாஸ்மா அதிலிருந்து கொரோனா வழியாக வழிகிறது, அல்லது வீசுகிறது எனலாம்.
3, இந்த பிளாஸ்மா என்னும் துகள்களின் தொகுப்பு அதிக அளவில்
வெப்பமடையும்போது சூரியனால் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு இருக்க முடிவதில்லை.
சூரியனின் ஈர்ப்பு விசையும் அதற்கு
உதவியாக இருப்பதில்லை.
உடனே
சூரியன் அவற்றை வீசிஎறிகிறது. இப்படி வீசிஎறிந்த
பிளாஸ்மா சூரியனின் காந்த
சக்தி உள்ள இடங்களில்
அவை வீசத்தொடங்குகின்றன.
இதைத்தான் ஆராய்ச்சியாளர்கள் சூரிய காற்று என்றும் சூரிய புயல்(SOLAR WIND, SOLAR STORM) என்றும் சொல்லுகிறார்கள்.
4, இந்த சூரிய காற்று அல்லது சூரிய புயல் சூரியனிலிருந்து பூமிக்கு
வீசினால் அதனால் எவ்விதமான விளைவுகள் ஏற்படும் ? முக்கியமாக இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த சூரிய புயல்
அல்லது சூரிய காற்று வீசினால் முக்கியமாக தகவல் தொடர்பு சாதனங்களை பாதிக்கும்.
தொலை தொடர்பு சாதனங்கள், நேவிகேஷன் சிஸ்டம்ஸ் ஆகியவற்றைப் பாதிக்கும். விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களும் சரிவர வேலை பார்க்காது. முக்கியமாக செல்போன் வேலை செய்யாது என்கிறார்கள்.
5. இந்த சூரிய புயலில் மூன்று வகைகள்
இருக்கின்றன. ஒன்று மெல்ல வீசும் சூரிய புயல்(SLOW SOLAR WIND). இன்னொன்று வேகமாக வீசும் சூரிய புயல்(FAST SOLAR WIND).
மூன்றாவதாக கரோனாவின் ஒரு சிறுபகுதி பிய்ந்துபோய் விழுதல்
அல்லது சரிந்து விழுதல் அல்லது பிரிந்து போதல் (CORONAL MASS EJECTION)என்று
சொல்லுகிறார்கள்.
6, சூரியன் காற்று என்பது எப்படி இருக்கும் அது என்ன வாயுவா என்று
கேட்டால் அதனை ஆங்கிலத்தில் அயனைஸ்டு கேஸ்(IONISED
GAS) என்று
சொல்லுகிறார்கள் அதாவது அயான்கள் நிறைந்திருக்கும் வாயு என்று சொல்லலாம்.
7. சூரியப்புயல்
என்பது வேகமாக வீசும்
மெதுவாக வீசும் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் அது மணிக்கு எவ்வளவு வேகத்தில் வீசும் என்று சொல்ல முடியுமா
என்று உங்களுக்கு கேட்க தோன்றும். ஒரு மணி நேரத்தில் 10
லட்சம் மைல்கள்கூட
வேகமாக வீசும். அப்படி
என்றால் அது 10 லட்சம்
மைல்கள் கூட பயணம் செய்யும் ஒருமணி நேரத்தில்.
8.பூமியில் இருக்கும் காந்த சக்தி இந்த சூரியப்புயலை
ஓரளவு தடை செய்யும் . ஆனால் இது நமது தகவல் தொடர்பு சாதனங்களை சீரழித்து விடும். மனித சாவுகளும்
ஏற்படலாம். ஆனால் இது பற்றிய ஆய்வுகள் அதிகம் இல்லை எனத்
தெரிகிறது.
நாம் விண்ணில்
தற்போது ஏவியிருக்கும் ஆதித்யா எல் ஒன் மூலமாக இது பற்றிய கூடுதலான தகவல்கள்
நமக்கு கிடைக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். அதுவரை காத்திருப்போம்.
9. சூரியனின் பிற பகுதிக்கு மூன்று பெயர்களை சொல்லுகிறார்கள் ஒன்று
போட்டோஸ்பியர்(PHOTOSPHERE), குரோமோஸ்பியர்(CHROMOSPHERE) மற்றும் கொரோனா(CORONA). இவை
மூன்றும் சூரியனின் இருக்கும் வெளிப்புற அடுக்குகள்.
இதில்
கொரோனா பகுதியில் இருக்கக்கூடிய வெப்பம் பல மில்லியன் டிகிரி வரை இருக்கும் அதனால்
அது தொடர்ந்து பார்ட்டிகல்ஸ் என்று சொல்லக்கூடியவற்றின்
தொகுப்பாகிய பிளாஸ்மாவை
துப்பி கொண்டே இருக்கும். இந்த பிளாஸ்மா கொரோனாவிலிருந்து வெளியேறும் வேகம் ஒளியின் வேகத்தை
விட அதிகமாக இருக்கும். இதுதான் சூரியப்புயல்.
10, இதனை சோலார் விண்ட் என்று சொல்லும்போது அதன் முகம் ஒரு
சாதுவான பிராணி மாதிரி தெரிகிறது,
ஆனால் இது ஒரு முரட்டுத்தனமான காற்று. அதனால்தான் இது
சோலார் ஸ்டார்ம், சூரியப் புயல்.
11, இன்னும் கூடுதலாக இது பற்றி தெரிந்து கொள்ளலாம் இது வேகமாக
வீசும், வெப்பமாக வீசும், சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து வீசும். அது
காந்த சக்தியுடன் கூடிய வாயுவாக
வீசும்.
12, இந்த சூரியப்புயலில்
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
ஆகியவை இருக்கின்றன.
13, இது,
பூமியில் வீசினால் சொடக்கு போடும் நேரத்தில் 300 கிலோ மீட்டர் பயணம் செய்யும், அதாவது ஒரு வினாடிக்கு 300 கிலோ மீட்டர்.
14, சூரியனின் மேற்புறத்தில் உள்ள கொரோனாவில் துளைகள்(CORONA
HOLES)இருக்கின்றன, இந்த
துளைகளின் வழியாகவும் இந்த பார்ட்டிகிள்ஸ் மற்றும் பிளாஸ்மா (PARTICLES
AND PLASMA )வெளியேறி இந்த சூரியப் புயலை
உருவாக்கும்.
அப்போது
அதன் வேகம்
அதிகமாக இருக்கும். வெளிவரும் சூரியப்புயல் 500 முதல் 800 கிலோமீட்டர் வரை வேகமாக வீசும். மெல்ல வீசும் புயல்கள் வினாடிக்கு 400 மீட்டர் வேகத்தில் வீசும்.
15. சூரியனின் வெளிப்புறத்தில் மூன்று அடுக்குகள் இருக்கின்றன என்று
பார்த்தோம், அதேபோல
உட்புறத்திலும் மூன்று அடுக்குகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மையப் பகுதி . இதனை
ஆங்கிலத்தில் கோர் (CORE) என்கிறார்கள்
இரண்டாம் பகுதி
மின்காந்த அலைப் பகுதி அதாவது ரேடியோ ஆக்டிவ் சோன் (RADIO ACTIVE ZONE), மூன்றாவது
பகுதி கன்வெக்டிவ் சோன் (CONVECTIVE
ZONE).
16.சூரியனின் உட்பகுதியை போலவே வெளிப்பகுதியிலும் மூன்று அடுக்குகள்
உள்ளன அவை போட்டோஸ் பெயர் ப்ரோமோ ஸ்பியர் மற்றும் கொரோனா என முன்னரே பார்த்தோம்.
இந்த
மூன்று அடுக்குகள் பற்றிய ஆராய்ச்சியினை செய்வதற்காகத்தான் தற்போது நமது இஸ்ரோ
விஞ்ஞானிகள் ஆதித்யா எல் ஒன் செயற்கைக் அனுப்பி
உள்ளார்கள். இன்னும்
சில மாதங்களில் அது நமக்கு கூடுதல்
தகவல் தரும் என்று நம்பலாம்.
17. இப்போது நாம் இந்த பிளாஸ்மா என்பது பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக
பார்க்கலாம். பிளாஸ்மா என்றால் அதிக வெப்பமுடன் கூடிய மின்விசை ஏற்றப்பட்ட வாயு
என்று அர்த்தம். சூரியன் முழுக்க இதுதான் நிரம்பி உள்ளது.(The
sun is made of super hot electrically charged gas called plasma). இந்த பிளாஸ்தான் சூரியனில் பல வேகங்களில்
சுழன்றபடி இருக்கின்றன(
The plasma rotates in different states
on different parts of the Sun).
18. நிலவின்
தென்பகுதியில் கூட பிளாஸ்மா இருக்கிறது என இஸ்ரோவுக்கு செய்தி அனுப்பியுள்ளது சந்திராயன்
மூன்று.
இஸ்ரோ விக்ஞ்ஞானிகளுக்கு நமது வாழ்த்துக்களையும்
வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ளுவோம்.
ஆதித்யா எல் ஒன் சூரியப்புயல் பற்றியும்
ஆய்வுசெய்யப் போகிறது, இந்த சமயத்தில் அதுபற்றி சில தகவல்களை உங்களுக்கு பகிர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி
! உங்களுக்கு ?
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
1 comment:
Very Informative - Kalyani
Post a Comment