Sunday, September 17, 2023

SANATHANA TEACHINGS IN GURUSHETHRA WAR-FRONT குருட்சேத்திரத்தில் சனாதனம் உபதேசம் -2

 

குருட்சேத்திரத்தில்   
சனாதனம் 
இந்தியா முழுக்க சனாதனம்தான் பேச்சாக இருக்கிறது, இதுபற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே ! இது அரசியல் இல்லாத சனாதனம் !

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை சூரிய தேவனுக்கு உபதேசம் செய்தார். சூரிய தேவன் அதனை மனுவுக்கு உபதேசம் செய்தார். மனு இஸ்வாகுக்கு உபதேசம் செய்தார். அதன் பின்னர்  வழிவழியாக தங்கள் சீடர்களுக்கு இதனை உபதேசம் செய்து வந்தார்கள்.

அதன் பின்னர்  குருட்சேத்திரம் போர்க்களத்தில் பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணன் தனது நண்பரும் சீடனும், உறவினராகவும், பக்தனாகவும்  விளங்கிய அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்தார்.

ஒரு பக்தர் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஐந்து விதங்களில் உறவு உடையவனாக இருக்கலாம். ஒன்று மிதநிலை பக்தன்இரண்டு தொண்டு செய்யும் பக்தன், மூன்று  நண்பன்,  நான்கு பெற்றோர்,  ஐந்து  காதலன்.

பகவத் கீதை என்றால், அது ஒரு யோக முறை. பௌதீக நிலையில் அறியாமையில் இருக்கும் மனிதகுலத்தை அதிலிருந்து விடுவிப்பது தான் பகவத் கீதையின் நோக்கம்.

நான் ஏன் துன்பப்படுகிறேன் நான் எங்கிருந்து வந்தேன் ? மரணத்திற்குப் பிறகு நான் எங்கு செல்வேன் ? இப்படிப்பட்ட வினாக்களை உடையவர்கள் எல்லாம் பகவத் கீதையின் மாணவர்களாக ஆகலாம்.. 

பகவத் கீதையின் கருத்துப்படி ஈஸ்வரன் என்பவர் உயர் ஆட்சியாளர் ஜீவன்கள் எனப்படுபவை ஆளப்படும் உயிர்கள்.

கடவுள் யார் உயிர்கள் யாவை பிரகதி என்பவர் யார் ?   பிரபஞ்ச தோற்றம் என்பது என்ன தனை எவ்வாறு காலம் கட்டுப்படுத்துகின்றது ? உயிர்களின் செயல்கள் என்னென்ன ? வற்றையெல்லாம் நாம் இந்த யோக முறையான பகவத் கீதையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

பௌதிக இயற்கை மீது நாம் ஆட்சி செய்ய விரும்பினாலும் ஆட்சி செய்தாலும் நாம் அவற்றின் ஆளுநர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.

பிரக்ருதி என்பது ஒரு பெண்பால், அவள் இறைவனால் கட்டுப்படுத்தப்படுபவர்இறைவனே ஆள்பவராக ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார். 

பிரக்ருதி என்பது மூவகை குணங்களால் ஆனது ஒன்று சத்வகுணம் இரண்டு ரஜோகுணம்  மூன்றாவது தமோ குணம். சத் குணம் என்றால் நல்ல குணம். ரஜோ குணம் என்றால் தீவிரமான குணம்.  தமோ  குணம் என்றால் அறியாமை குணம்.

பகவத் கீதையின் படி பரம புருஷன், ஜீவன்இயற்கைநித்தியமான காலம், கருமம், இந்த ஐந்தில் கருமம் நீங்கலாக மற்ற நான்கும்  நித்தியமானவை. கருமம் நித்தியமானதல்ல.

எதற்காக பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது உடல் சம்பந்தமான அல்லது பௌதீகமான  கருத்துக்களில் இருந்து ஒருவனை விடுதலை பெறச் செய்வதற்காக மட்டுமே பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது.

உண்மையில் பரம புருஷனே ஆக்குபவனும் ஆள்பவரும் ஆவார். ஜீவன் என்பது அவருடைய ஒர் அங்கம். ஜீவன் ஆக்குபவனும் அல்ல ஆள்பவனும் அல்ல.  ஜீவன் என்பது இணைந்து செயல்படும் ஓர் அங்கம் அவ்வளவுதான்.

ஆக மனிதன் என்பவன் ஆக்கப்பட்டவனும் ஆளப்பட்டவனும் ஆவான் அவன் எதையும் ஆக்குவதும் இல்லை ஆள்வதும் இல்லை. அதனால் ஆக்குபவனும் ஆள்பவனும் பகவான் ஒருவனே என்பதை உறுதிப்படுத்துகிறது பகவத் கீதை.

பகவத் கீதையின் கருப்பொருளை உய்த்து உணர வேண்டும் என்றால் சில வார்த்தைகளின் பொருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாகசத்என்று சொன்னால் அது இருப்பு என்று அர்த்தம். அது போலசித்என்று சொன்னால் அது நித்திய அறிவு என்பதைக் குறிக்கும்.

பசுஞ்சாணம் என்பது ஒரு பிராணியின் அல்லது மிருகத்தின் மலம். வேத நியதிகளின் படி ஒரு மிருகத்தின் மலத்தை தொட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள அவர் குளிக்க வேண்டும். ஆனால் வேத நூல்களின் படி சாணம் என்பது சுத்தப்படுத்தும் பொருள். இது அறிவியல் ரீதியாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  அர்ஜுனனிடம் சொன்ன அல்லது உபதேசித்த அத்தனையும் அவன் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்கிறான். 

முதலில் குருட்சேத்திரப் போரில், போரிடக்கூடாது என்று அர்ஜுனன் முடிவு செய்கிறான். இது அவனாக எடுத்த முடிவு இந்த முடிவை மாற்றவே ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்தார்.

இறுதியில் அர்ஜுனன்கரிஷ்யே வசனம் தவ”   நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்கிறேன். உங்கள் வாக்குப்படி நான் செய்கிறேன் என்று அவன் ஒரு முடிவுக்கு வருகிறான். ஆகையினால் அர்ச்சுனன் கிருஷ்ணருடைய  உபதேசப்படி  குருச்சேத்திரத்தில் போர் செய்ய மு டி வு செ ய் கி றா ன்.

இன்னும் வரும், இந்தப் பதிவுபற்றி உங்கள் கருத்தை அன்புகூர்ந்து பதிவு செய்யுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...