1,“சனாதன
தர்மம், மலேரியா டெங்கு மாதிரி, அதை எதிர்க்க்க் கூடாது அழிக்கணும்” இப்படி ஒரு நிகழ்ச்சியில் காரசாரமாக
பேசினார் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை
அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
2,அன்று முதல் இன்றுவரை அவருடைய பேச்சுக்கு வட மாநிலங்களில் மிகப்பெரிய
ஒரு எதிர்ப்பு அலை
வீசத் தொடங்கிவிட்டது. அயோத்யா பரமன்ஸ் ஆச்சார்யா சாமியார், அவருடைய தலையை சீவிக் கொண்டு வந்தால் பத்து கோடி என்று இனாம் அறிவித்துள்ளார். அதற்கு அவர் 10 கோடி எதற்கு
? 10 ரூபாய் போதும், சொன்னால் நானே சீப்பு வாங்கி சீவிக்கொள்ளுவேன், என்று அதற்கு பதில்
அளித்தார் உதயநிதி ஸ்டாலின் .
3.
இன்றைக்கு உலகம் பூரா சனாதன தர்மம் பரவிவிட்டது, லண்டன் “பிபிசி உட்பட உள்ளூர் வாட்ஸ் வரை எதைத் திறந்தாலும் சனாதன தர்மம்தான், உதயநிதி ஸ்டாலின்தான். உண்மையில் சனாதனம்
தருமத்தில் நம்பிக்கை
உள்ளவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நண்ரி சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சனாதன தர்மம்
இன்று பிரபலம்.
4, அவருடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று கூறி வருகிறார்கள் சில தலைவர்களும் சில அரசியல் கட்சிகளும். அவர்களைப்பார்த்து நான்
கேட்கிறேன், சனாதன தருமத்தை அத்தனை ரகசியமாக வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் ?
5.
உதயநிதி ஸ்டாலின், “ நான் பேசியது சரிதான் அதற்கு மன்னிப்பு கேட்க
முடியாது” உறுதியாக சொல்லிவிட்டார்.
6, பாரத பிரதமர் மோடி அவர்கள் கூட “அவருக்கு (உதய நிதி ஸ்டாலினுக்கு) பாடம் புகட்ட வேண்டும்” என்று சொன்னதாக பத்திரிகைகளில் செய்திகள்
வந்துள்ளன.
7,அதனால் இப்போது
எல்லோருக்கும் சனாதன தர்மம் என்றால் என்று தெரிந்து கொள்ள எல்லோரும்
ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கும் அது பற்றிய ஒரு ஆர்வம்
இருந்தது. ஆமாம்
அது என்ன சனாதன தர்மம் ?
8.
அதைத் தேடித்தேடி,
படித்து,
தெரிந்து கொண்டு, முக்கியமான செய்திகளை மட்டும் உங்களுக்காகத் தந்துள்ளேன். இதைத்
தயார் செய்வதற்குள்
மணடை காய்ந்து போனது. யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறட்டும் உங்களுக்கும் தந்துள்ளேன்,
படியுங்கள்.
9,சனாதன தர்மம் என்பது நிலையானது, நீடித்த ஒன்று, அழிக்க முடியாது நமது வாழ்விற்கு சரியான வழிகளை காட்டும் நெறிமுறை என்று
சொல்லுகிறார்கள். உலகம் முழுக்க எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான வழிமுறைகளைச் சொல்லுகிறது, இதுதான் சனாதன தர்மம் என்றும் சொல்லுகிறார்கள்.
10, சனாதனம் என்ன சொல்லுது ? எவ்வளவு சோதனை வந்தாலும் உண்மையாய் இருக்கணும். ஈ எறும்புக்கும் தீங்கு செய்யக்கூடாது. உடலையும் மனசையும் அழுக்குப் படாம பாத்துக்கணும், மனசில ஒரு ஒரமாவது ஈரம் இருக்கணும், தப்பு செஞ்சா அதுக்கு
தலைய விலையா கேக்கக் கூடாது, மன்னிக்கணும். சுய கட்டுப்பாடு வேணும், பாத்ததுக்கெல்லாம் பறக்கக்கூடாது., எதுவும் வேணுமா
வேண்டாமா’ ன்னு மனசை கேக்கக்கூடாது. மூளையக்
கேக்கணும். உடுக்கை இழந்தவங்களுக்கு இருக்கையும் இருகையும் கொடுத்து உதவணும்..
11.சனாதனம் என்றால் காலங்களால் மாற்ற முடியாதது.
மக்களின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
அரிய வழிகளை சொல்லும் நெறிமுறை.
12,எல்லா மதங்களும் நல்லதுதான் சொல்லுது,
ஆனா அதை யாரு கேக்கறாங்க ! எந்த மதம் பொய்
சொல்லுன்னு சொல்லுதுங்க ? எந்த மதம் திருடச் சொல்லுது ? எந்த மதம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறக்காமல் ரெண்டு
கன்னத்திலயும் அடின்னு சொல்லுது ? எந்த மதம் கையூட்டு வாங்குன்னு காதை கடிக்குது ?
13இதெல்லாம் காலங்களால் மற்ற முடியாதுதான்.
“கி.மூ. வுல பொய் சொல்லக்கூடாது. அப்படின்னா கி.பி.
யில பொய் சொல்லலாம்” அப்பிடியெல்லாம் மாற்ற முடியாது ராஜா !
14,
இது எல்லா மதங்களுக்கும், பொருந்தும், எல்லா
நாடுகளுக்கும் பொருந்தும், எல்லா ஜாதிகளுக்கும் பொருந்தும், நகரம்
கிராமம் எல்லாத்துக்கும் பொருந்தும், ஏழை பணக்காரன் எல்லாருக்கும் பொருந்தும் ராஜா.
15. சனாதன தர்மம் என்பதில் தர்மம் என்பதற்கு கடமை
என்கிறார்கள், இன்னும் எளிமையாக சொல்வதென்றால் வேலை என்று
சொல்லலாம்.
16,சூரியனுடைய வேலை பகலில் வெளிச்சம் தருவது.
சந்திரனின் வேலை அதனை பிரதிபலித்து இரவில் வெளிச்சம் தருவது.
17,மரங்களின் வேலை நிழல் தருவது, பழங்கள்
தருவது. பூவின் வேலை தேனீக்களுக்கு தேன் தருவது, தேனீக்களின் வேலை மகரந்தச்சேர்க்கை
தருவது, மகரந்தச்சேர்க்கையின் வேலை
காய் தருவது, பழம் தருவது, பழங்களின் வேலை மனிதனுக்கு உணவு தருவது, மனிதனின் வேலை மரங்களுக்கு தண்ணீர் தருவது. இங்க சனாதன தர்மம் வட்ட வடிவமாக இருக்கு.
18, பத்து வகையான சனாதன தர்மங்கள், வர்ண தர்மம், ஆஷ்ரமதர்மம், வர்னாஷ்ரம தர்மம், குணதர்மம், அபத்தர்மம், ஸ்ரவ்த தர்மம், ஸ்திரி தர்மம், வியாஸ்தி தர்மம், ராஷ்ட்டிர தர்மம் என பத்து வகைப்படும்.
19, இது தனி மனிதன் முதல் ஒரு நாடு வரை எப்படி இருக்க வேண்டும் என்பது
வரை ஒவ்வொன்றுக்கும் வழி காட்டுவது என்கிறார்கள்.
20,. சனாதனம் என்பது பொதுவாக இந்து
மதத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்பட்டாலும், ஜெயின் மற்றும் புத்த மதத்தினரும் பயன்படுத்தும் ஒரு சொல்லாகவும் உள்ளது.
21, பெரும்பாலான மக்களுக்கு சனாதன தர்மம்
என்றால் அதற்கு சரியான பொருள் தெரியாது. இது இந்து மதத்துடன் தொடர்புடைய சொல்
என்று கருதுவது சரியல்ல என்கிறார்கள்.
22. சனாதன தர்மம் என்றால், அவரவர் குலம் என்ன கடமையைச் செய்யவேண்டும் என்று விதித்தார்களோ
அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும்.
23, இதற்கு நாம் இப்போது ஜாதிகள், மதங்கள், என்ற குலப்பிரிவுகளைக் கொண்டு
குழப்பக்கூடாது. வேறு எப்படி இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
24, .சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம்
என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய
வேண்டும் என்று பொருள்.
25,இந்த இடத்தில் நாம் எப்படி பொருள் கொள்ள வேண்டும் ?
பொறியாளர்கள் அவர்களின் வேலைகளை சரிவரச் செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் அவர்களின் வேலைகளை சரிவரச் செய்ய வேண்டும்.
அசாங்க ஆபீஸ்களில் வேலை பார்ப்பவர்கள் அவர்களின் வேலைகளை சரிவரச் செய்ய வேண்டும்.
தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் அவர்கள் செய்யும் தொழிலை, வியாபரத்தை சரியாகச் செய்ய வேண்டும்.
அரசியல் பொறுப்பில் உள்ள சட்டமன்ற
உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர்கள்,
ஜனாதிபதிகள் அவர்களின் வேலைகளை சரிவரச் செய்ய வேண்டும்.
இதுதான் சனாதன
தர்மம், இதற்கு எதிராக என்ன செய்தாலும் அவர்கள் சனாதன எதிர்ப்பாளர்கள் என்று அர்த்தமாம்.
சனாதன தர்ம்ம் பற்றிய ஒரு 25 செய்திகளை உங்களுக்கு திரட்டி தந்துள்ளேன். சனாதன தர்ம்ம்
பற்றி யார் கேட்டாலும் எடுத்து விடலாம்.
சனாதனம் குறித்த
உதய நிதியின் பேச்சு, அயோத்தியா சாமியாரின் தலை சீவும் பேச்சு பாரதப் பிரதமர் மோடி அவர்களின்
பேச்சு ஆகியவை பற்றிய உங்கள் கருத்தினைப் பதிவு செய்யுங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS IF YOU FEEL THIS ARTICLE IS
USEFUL TO OTHERS
, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH
YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU
CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED
INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment