Wednesday, September 13, 2023

REAL ESTATE BUSINESS IN MOON ? நிலாவில் ரீயல் எஸ்டேட் தொடங்கும் வாய்ப்பு ?

சந்திராயன் 2 விக்ரம்லேண்டர்

 
 நிலாவில் நீர் !

நேற்று மனிதன்  வானில் தனது

தேரை ஓட்டினான்,

இன்று மனிதன் வெண்ணிலாவில்

இடத்தைத் தேடினான்..

வரும் நாளை மனிதன்

ஏழு உலகை ஆளப்போகிறான்

கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர் தந்துள்ள  நமது இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவோம்.

நிலாவில் இருக்கும் தண்ணீர் (LUNAR WATER)நமக்கு எப்படி பயன்படும் ? நிறைய பேர் கேட்கிறார்கள், அங்கு  இருக்கும் தண்ணீரை இங்கு கொண்டு வர முடியுமா ? இங்கு இருக்கும் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க அந்த தண்ணீர் உதவுமா ? என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள் சிலர், எனக்கும் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் தெரிந்து கொண்ட செய்திகளை  உங்களிடம் இங்கு பதிவிட்டுள்ளேன்.

எதிர்பார்க்கும் அளவைவிட நிலவில் மிக அதிகமான  நீர் நிலவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

 நிலாவில் நிழலாக தென்படும் இடங்களில் எல்லாம் தண்ணீர் இருக்கும். அப்படி நிலவில் நிழலாக இருக்கும் பரப்பு சுமார் 40,000 சதுர கிலோ மீட்டர் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

 இப்படி நிழலாக உள்ள நிலவின், 60% பரப்பளவு சந்திராயன் சென்று இறங்கி இருக்கும் சந்திரனின் தென்பகுதியில் தான் உள்ளது.

 நிழலாக உள்ள நிலப்பரப்பு மட்டுமின்றி சந்திரனில் சூரிய ஒளி படுகின்ற பகுதிகளிலும் இந்த லூனார்  நீர் (LUNAR WATER) இருக்கலாம்நிலாவில் இருக்கும் நீரை லூனார் நீர் என்று தான் சொல்லுகிறார்கள்.

 ஒரு கிலோ மண்ணில் நூறு மில்லி கிராம் முதல்  400 மில்லி கிராம் வரை  தண்ணீர் இருக்கலாம்என்று அனுமானிக்கிறார்கள்இது ஏறத்தாழ மழையில்  ஒரு துளி நீருக்கு சமமாக இருக்கலாம் என்கிறார்கள்.

 ஆனால் நிலவின் மேற்பரப்பு மண் 50 சென்டிகிரேட் வெப்பமுடையதாக இருக்கிறது, அதில் இவ்வளவு தண்ணீர் இருக்குமா என்று யோசிக்க வேண்டிய உள்ளது.

ஆனால் நிலாவின் தரைப்பகுதியில்,  10  சென்டிமீட்டர் துளை போட்டு பார்த்ததில், அங்கு வெப்பநிலை மைனஸ் 10 சென்டிகிரேட் வரை குறைவாக உள்ளது என்கிறது சந்திராயன் ரோவர்.

 லூனார்  நீரை எப்படி பயன்படுத்தலாம் சோலார் பேனல்கள்  மூலம் எலக்ட்ராலிசிஸ் செய்து இந்த நீரிலிருந்து  ராக்கெட் எரிபொருள் தயார் செய்யலாமாம்.

இன்னொன்று பூமியை விட குறைவான புவியீர்ப்பு விசை சந்திரனில் இருப்பதால், மிகவும் குறைவான எரிபொருளே சந்திரனில் செலவாகும். இது ஆராய்ச்சிக்கான செலவினை கணிசமாகக் குறைக்கும்.

லூனார் வாட்டர் என்னும் சந்திரனிலிருந்து எடுக்கும் தண்ணீரை சுத்தம் செய்து குடிக்கவும் செய்யலாம். 

எதையெல்லாம் ராக்கெட்டின் எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள், என்று பாருங்கள்,  ஹைட்ரஜன், மீத்தேன் கெரசின், பேராஃபின் மற்றும்  அலுமினியத்தூள் ஆகியவற்றை ராக்கெட்டில்  எரிபொருட்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால் எதிர்காலத்தில் மீத்தேன் தான் முக்கியமான  எரிபொருளாக பயன்படுத்தும் வாய்ப்பு  உள்ளது என்கிறார்கள், ஏறத்தாழ 20 ஆண்டுகளாகவும் மீத்தேன்தான் அதிகமா பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் குறிப்பாக சந்திரனுக்கு அனுப்பும் ராக்கெட்டுகளில் அதிகமாக  திரவ ஆக்சிஜன் திரவ ஹைட்ரஜன் மற்றும் கெரசின்  ஆகியவற்றை எரிபொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.

 ராக்கெட்டுகளில் பல விதமான எரிபொருட்களை பயன்படுத்தினாலும் இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக திரவ ஹைட்ரஜனை தான் எரிபொருளாக  பயன்படுத்துகிறார்கள்.

 நிலாவில் எடுக்கும் தண்ணீரை ரசாயன முறைகள் மூலமாக அதனை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களாக தனித்தனியாக பிரித்து ராக்கெட்டுகளில் எரிபொருட்களாக பயன்படுத்த முடியும். அப்படி பிரிக்கும் போது சுவாசிப்பதற்கு ஏற்ற அளவுக்கு சுத்தமான காற்றும் கிடைக்கும்.

இந்த  காரணங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது நிலாவின் நீரை குடிப்பதற்காக பயன்படுத்துவது என்பது இரண்டாம் பட்சம்தான்.

இன்றைய சூழலில் பல நாடுகளும் எதிர்பார்ப்பது எப்போது நிலாவை சுற்றுலா தளமாக மாற்றலாம் என்பதுதான்சுற்றுலா பயணிகள் உலகம் முழுக்க நிலாவில் பயணம் செய்ய தயாராக இருப்பார்கள், அது மட்டுமல்ல அங்கு மக்களை குடி அமர்த்த முடியுமா கட்டிடங்கள் கட்ட முடியுமா அங்கும் ரியல் எஸ்டேட் தொடங்க முடியுமா ? என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அன்பின் இனிய நண்பர்களே ! எதிர்காலத்தில் சந்திரனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் ? உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள். நன்றி ! வணக்கம் !

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...