Monday, September 11, 2023

RANGOON CREEPER TO BEATIFY ENTRY GATES ரங்கூன் கிரீப்பர் நுழைவு வாயில் அலங்கார தேவதை


 

ரங்கூன் கிரீப்பர் கொடிகள், அழகு கொடிகள், மூன்றுவண்ண பூக்களை ஆண்டு முழுவதும் தரும், வீடுகளை, தோட்டங்களை, பூங்காக்களை,  அழகுபடுத்தும், இயற்கையின் கொடை

வெப்ப மண்டல தட்பவெப்ப நிலையில் ஆண்டு முழுவதும் பூக்களைத் தரும் கொடி ரங்கூன் கிரீப்பர்.

ரங்கூன் கிரீப்பர் கொடிகள் 3 வண்ணங்களில் வாசனையுடன் பூக்கும். சிவப்பு வெள்ளை மற்றும் மெஜந்தா ஆகிய மூன்று வண்ணங்களில் பூக்களை தரும்.

ரங்கூன் கிரீப்பர் செடிகளை விண்பதியன் மூலமாக உருவாக்கலாம், விதைகளையும் கொடி தண்டுகளையும் கூட நடலாம்.

இந்தச் செடிகள் பெரியதாக வளர்ந்து இருந்தால் கிளை செடிகளை வேருடன் பிரித்து எடுத்து அதனை தனியாக நடவு செய்யலாம். அது விரைவாக பெரிய கொடிகளாக வளரும்.

கொடிகளை பிரித்து எடுப்பதற்கு முன் நடவு செய்யும் இடத்தில் அது படரும் இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அது பட இருப்பது வளைவுகளா வேலிகளா தட்டிகளா என்று முடிவு செய்து அதனை தயார் செய்து கொள்ள வேண்டும்..அதன் பிறகு தான் கொடிகளை எடுக்க வேண்டும்..

முக்கியமாக ரங்கூன் கிரீப்பர் நடவு செய்ய தெரிந்தெடுக்கும் இடத்தில் சூரிய ஒளி நேரடியாக கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும்.

 ரங்கூன் கிரிப்பரின் தாவரவியல் பெயர் குஷ்குவாலிஸ் இண்டிகா  என்பது அல்லது கம்பரீடம் இன்டிகம் (COMBRETUM INDICUM) என்பது.

இதன் பொதுப்பெயர். சைனீஸ் ஹனிசக்கர் மற்றும் ட்ரங்க் அண்ட் டைலர் என்பது.

வளைவுகளை ஏற்பாடு செய்யும்போது அவை உறுதியாக இருக்க வேண்டும். வேகமாக தழையும், தாம்புமாக வளரும் அந்த கொடிகளை தாங்கும் படியாக இருக்க வேண்டும்.

பெரும் காற்று, புயல் மழை, போன்ற சமயங்களில் அவற்றை தாக்குப்பிடிக்கும் வகையில் ஆர்ச்சில் பயன்படுத்தும் தூண்கள் மற்றும் கம்பிகள் உறுதியாக இருக்க வேண்டும்.

முகப்பு வளைவுகளில் ஆங்கில்பார் கம்பிகள் மூன்று அங்குலமும் அரையங்குல பருமனும் உடையதாக இருக்க வேண்டும்.

ரங்கூன் கிரீப்பர் கொடிகள் அதிகபட்சம் 12 மீட்டர் உயரம் வரை வளரும். அதன் இன்னொரு சிறப்பு வருஷம் 365 நாளும் வாசமுள்ள பூக்களைப் பூக்கும்.

ரங்கூன் கிரிப்பர் செடிகள் கொடிகள், எல்லா வகையான மண் வகைகளிலும் வளரும். இந்தியாவின் அனைத்து தட்பவெட்ப நிலைகளிலும் வளரும். மிக வேகமாக வளரும்.

இதன் பூக்கள் வாசம் உள்ள பூக்கள் மொட்டுக்களாக இருக்கும் போது சிவப்பு நிறமாக இருக்கும். இதழ்கள் விரிந்தால் அது வெண்மை நிறமாக இருக்கும். பின்னர் அந்த பூக்கள் ஊதா நிறமாக மாறிவிடும். மூன்றாம் நாள் அதே பூக்கள் சிவப்பாக மாறிவிடும்.

இதன் கொடிகள் பற்றி ஏறுவதற்கு பற்றுக்கொம்புகள் தந்தால் இவை வேகமாக வளரும்.

அதன் பின்னர், படுக்கை வசமாக இருந்த பூக்கள் பூமியை பார்த்தபடி நிலத்தை தவிர்க்க தொடங்கும். ஆச்சரியமான ஒரு இயற்கையின் ஏற்பாடு.

இதன் பழங்கள் 30 முதல் 35 மில்லிமிட்ட நீளமாக அடர்த்தியான காவி நிறத்தில் முட்டை வடித்துடன் (ELLUPSOIDAL) 5 இறக்கைகள் இணைந்திருக்கும்.

அதன் பழங்கள் முதிர்ந்த பின்னால் அது சாப்பிட பாதாம் (ALMOND)அல்லது தேங்காய் சாப்பிடுவது போல இருக்கும்.

இதன் விதைகளில் இருக்கும் ஒரு விமான நச்சு நம் வயிற்றில் இருக்கும் ரவுண்டுவேர்ம் மற்றும் பின்வேர்ம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இது சீன வைத்திய முறை என்று சொல்லுகிறார்கள்.

இதன் பொதுப்பெயர்கள், ரங்கூன் கிரீப்பர் மற்றும் பர்மாகிரீப்பர் (RANGOON CREEPER)இது காம்பிரட்டேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

ரங்கூன்கிரீப்பர்  பூக்க குறைந்த பட்சம் அவை மூன்று ஆண்டுகள் வளர வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்து அவை பூக்க தொடங்கும். ரங்கூன்கிரீப்பர் ஒரு பல்லாண்டு கொடி தாவரம் இதன் வாசம்  நாசிக்கு இனிமையாக இருக்கும், அது ஒரு பழ வாசனை போல இருக்கும், ஹனிசக்கில் (HONEY SUCKLE)மாதிரி இருக்கும்.

மதுமாலதி, ராதாமனோகரம், ரங்கூன்மல்லிகை என்ற பெயர்கள் எல்லாம் இந்தியாவில் இதற்கு வழக்கில் உள்ள பெயர்கள்.

ரங்கூன்கிரீப்பர் கொடிகளுக்கு கோடையில் தினசரி தண்ணீர் தர வேண்டும். இதர நாட்களில் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மையைப் பொறுத்து தர வேண்டும் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் நேரடி சூரிய வெளிச்சம் இதற்கு தேவைப்படும். ரங்கூன்கிரீப்பர்  ஓரளவு நிழலைக் கூட தாங்கி வளரக்கூடியது.

இதன் தாவரவியல் பெயர், காம்பரீட்டம் இண்டிகம்(COMBRETAM INDICUM) , பொதுப்பெயர்கள் ரங்கூன் கிரீப்பர், டிரங்க்கன் செய்லர், ரெட்ஜேஸ்மின் (RANGOON CREEPER, DRUNKEN SAILOR, RED JASMIN) , தாவரக்குடும்பம்: காம்பிரிடேசி (COMBRETACEAE).ரங்கூன்கிரீப்பர் கொடிகள் எவ்வளவு அழகானவை, அவற்றை எப்படி பயன்படுத்தலாம் ? எப்படி பராமரிக்கலாம் ? எப்படி அந்த செடிகளை உற்பத்தி செய்யலாம் என்பதுபற்றியெல்லாம் பார்த்தோம்.பொகைன்வில்லாவுடன் ஒப்பிடும்போது எது சிறந்த்து என்று உங்களால் சொல்ல முடியுமா ?

ஒரு ஆய்வுக் கட்டுரை எழுத குறைந்தது 10 மணி நேரமாவது ஆகிறது. எனக்கு மேலும் மேலும் எழுத உற்சாகம் தரும்படி ஓரிறு வரிகளில் ஒரு கமென்ட் எழுதுங்களேன், அன்புடன். - பூமி.ஞானசூரியன்

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...