THE HARBOUR OF PORTSMOUTH |
“இதுதாம்ப்பா போர்ட்ஸ் மவுத்’தின் கடற்கரை .. இதுதான் இங்கிலீஷ் கால்வாய்.
இதில் ஒரு தீவுதான் போர்ட்ஸ்மவுத்..” என்றான்
என் மகன் ராஜா.
இங்கிலீஷ் கால்வாய் என்றால் அதுவும் ஒரு கடல் என்று எனக்கு
தெரியாது.பார்க்க பார்க்க பிரமிப்பாய் இருந்தது.
அந்த காலத்தில் இங்கிலாந்து மீது எந்த நாடு சண்டைக்கு
வந்தாலும், முதல் குண்டு போடணும்.. போர்ட்ஸ்
மவுத் எங்க இருக்குன்னுதான் கேப்பாங்களாம்..சண்டை போடறதுக்கு
ராசியான ஊர் இது தானாம்.
“போர்ட்ஸ்மவுத்’ல் இருந்து ஃபிரான்ஸ் எவ்ளோ தூரம் இருக்கும் ? அது ரொம்ப பக்கமா இருக்கும்னு எனக்கு தோணிச்சி.”
“நீங்க நினைக்கறது சரிதான்..ஃபெர்ரியில போனா சுமார் ஆறு மணி நேரம் ஆகும்.”
“அதைவிட வேகமா போக முடியாதா ?”
“கொஞ்சம் வேகமா போகும்
ஃபெர்ரியும் இருக்கு ..அதில் போனால்.. 35 நிமிஷத்தில் போய்ச்சேரலாம்..”
“அது எவ்ளோ தூரம்னு சொல்ல முடியுமா ?”
“27 நாட்டிகல் மைல்ஸ்.. அப்படின்னா
50 கி,மீ. ன்னு
அர்த்தம்..”
“35 நிமிஷத்துல போகறதுன்னா .. போர்ட்ஸ்மவுத்ல இருந்தா ? ?
“ஃபோல்க்ஸ்டோன் (FOLKESTONE)
என்ற இடத்தில் இருந்து ஃபிரான்ஸில் கெலைஸ் (CALAIS)என்ற
இடத்துக்கு போகும் நேரம்தான் இது..”
“ கெலைஸ் என்ற இடம் ஃபிரான்ஸை சேர்ந்ததா ?”
“ இங்கிலாந்துலருந்து ரொம்ப பக்கமா இருக்கும்
துறைமுக நகரம் இந்த கெலைஸ் தான் .. போர்ட்ஸ்மவுத் உட்பட
மூன்று துறைமுகங்கள்ளருந்து ஃபிரான்சுக்கு படகு சர்வீஸ் இருக்கு.. ஒரு நாள்ல சரசரியா 25 தடவை படகுங்க போயிட்டு வருது..”
ராஜா
இதைச் சொன்னதும் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது,
“ ஆமா லண்டன்லருந்து ரயில் சர்வீஸ் இருக்கா ?”
“ லண்டன்ல ஏறி உட்கார்ந்தா இரண்டேகால் மணி
நேரத்தில் அய்ஃப்ஃபல் டவரை பாத்துகிட்டே பாரீஸ்ல போயி இறங்கலாம் ..”
எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அங்கு 60 நாள் அங்கு போர்ட்ஸ்மவுத்தின் அடிவாசலில் இருந்தபடி ஃபிரான்ஸ் போகாமல் வந்து விட்டது எனக்கு ஆதங்கமாக இருந்தது. அதுமட்டுமல்ல, போர்ட்ஸ்மவுத் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே வந்தது. பின்னர் போர்ட்ஸ்மவுத் பற்றிய செய்திகளை தேடித்தேடி துருவித்துருவிப் படித்தேன்.
1338 ஆண்டு ஃபிரான்ஸிலிருந்து நிகோலஸ் பெஹுசெட் (NICHOLAS
BEHUCHET) என்பவன் வந்தான்.
அவனோடு வந்த வீர்ர்கள், அல்ல அல்ல காட்டுமிராண்டிகள் !
கண்ணில் கண்டதை எல்லாம் அடித்தார்கள்,
உடைத்தார்கள், இடித்தார்கள், எரித்தார்கள். போர்ட்ஸ்மவுத்தை தீக்கிரையானது. பெண்களை
மானபங்கப்படுத்தினார்கள், பாலியல் ரீதியாகக்
கொடுமைப்படுத்தினார்கள்.
அதில் மிஞ்சியது ஒரு
மருத்துவமனையும் ஒரு மாதாகோயிலும்,. இன்றும்
இருக்கிறது அந்த மாதாகோயிலும் மருத்துவமனையும், அதன் இன்றைய பெயர் ராயல் ஹாரிசன் சர்ச்.
ஹென்றி 3 மற்றும் எட்வர்ட் 1 ஆகிய
இரு மன்னர்களும் பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான கடற்படை தாக்குதல்களை
நடத்த வேண்டும் என்றால் உடன் அவர்கள் வந்திறங்குவது போர்ட்ஸ்மவுத் துறைமுகம்தான்.
1265 ஆம் ஆண்டில் நடந்த ஒரு போரில் போர்ட்ஸ்மவுத் நகரம் எதிரிகளால் முழுவதுமாக
எரித்து சாம்பலாக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் போர்ட்ஸ்மவுத்
துறைமுக பட்டினத்தில் வசித்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.
போர்கள் ஓய்ந்து 14 ஆம் நூற்றாண்டில் ரோமம், தானியங்கள், கோதுமை, அரக்கு, இரும்பு என
இறக்குமதி தொடங்க வியாபாரம் சூடு பிடித்தது ஆயினும் ஒயின் வியாபாரம் தான் இங்கு கொடி கட்டி
பறந்தது.
மன்னர் ஜேம்ஸ் இன் தரைக்கோட்டை
வாயில்கள் பிராக்ஹர்ஸ்ட் (FORT BROCKHURST) கோட்டை,
போர்ட் செஸ்டர் கோட்டை (PORTCHESTER CASTLE), ஆகியவையும் ஸ்போர்ட்ஸ் மவுத்தின் இன்றைய முக்கியமான சுற்றுலா தலங்கள்.
இங்கிலாந்தின் சரித்திரம் பேசும்
போர்ட்ஸ்மவுத்தின் கோட்டைகள், ராயல் ஹாரிசன் சர்ச்சில் இருந்து 20 மைல் தொலைவில் போர்ட்செஸ்டர் கோட்டையும், ஜேம்ஸ் இன் தரைக்கோட்டை வாயில்களும் உள்ளன.
போர்ட்ஸ்மவுத்தின் சரித்திரத்தை
புரட்டுவது என்பது இங்கிலாந்து சரித்திரத்தை புரட்டி பார்ப்பது மாதிரி.
அதன் பிறகு மீண்டும் ஒரு சோதனை போர்ட்ஸ் மவுத்திற்கு வந்தது அதனை திக்கு முக்காடச் செய்தது பாண்டிய நாட்டிற்கு வந்த சோதனை மாதிரி. இங்கிலாந்தை தலை குப்புற புரட்டிப்போட்டது பிளாக் டெத் என்னும் தொற்றுநோய்.
பிளாக்டெத் (BLACK DEATH)என்னும் தொற்று நோய்
என்பது எலிகள் மூலம் பரவும் பிளேக் (PLAGUE) என்னும் நோயைத்தான் குறிக்கும். இது ஐரோப்பாவில் நூற்றுக்கு 60 பேர் என்ற கணக்கில் கொன்று குவித்தது.
உலகத்தின் மக்கள் தொகையை 450 மில்லியன் இருந்து 350 முதல் 375
மில்லியனாக குறைத்தது. அப்படி என்றால் அது எவ்வளவு மோசமான தொற்று
நோய் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த ப்ளேக் என்னும் மரண பிசாசு கருப்பு
எலிகளின் மீது ஏறி கப்பல் பிரயாணம் செய்து ஐரோப்பாவின் காலடி வைத்து மனித உயிர்களை
மக்கன் பேடாவாக சுவைத்தது.
1563 ல் போர்ட்ஸ்மவுத்’ல் மட்டும் பிளேக் நோய் 300 பேரைக்கொன்று
குவித்த்து.
1369 1377 மற்றும் 1380 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு படைகள் போர்ட்ஸ்மவுத் நகரை கிழித்துப் போட்டது.
பொர்ட்ஸ்மவுத் அண்ட் காஸ்போர்ட் என்னும்
லோக்கல் பத்திரிகை ஒன்று 1845 ஆம் ஆண்டு வெளிவர தொடங்கியது.
1805 ம் ஆண்டு நடந்தது உலகப்பிரசித்தி பெற்ற டிராஃபல்கர் போர். இந்த போரில் இங்கிலாந்தை எதிர்த்தது, 15 ஸ்பானிஷ் கப்பல்க்கள், 18 ஃபிரான்சு கப்பல்கள். 2600 பீரங்கிகளுடன்
கூடிய 30000 போர்வீர்ர்கள். அத்தனையும்
ஓடஓட விரட்டியது இங்கிலாந்தின் கடற்படை
அந்த வெற்றி மகுடம் சூட கருவியாக இருந்தது எச் எம்
எஸ் விக்டரி ஆனால் அதற்கு இங்கிலாந்து கொடுத்த விலை நெல்சனின் உயிர்.
அந்த வெற்றி மகுடக்கப்பல்
எச் எம் எஸ் விக்டரி இன்று பொர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில்தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
1916 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது
விமானம் வீசிய குண்டு மழை போர்ட்ஸ்மவுத்தை சல்லடை ஆக்கியது.
இரண்டாம் உலக போரின் போது 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் நாள் ஹிட்லரின் விமானங்கள் 1320 குண்டுகளையும் 38 ஆயிரம் வேப்பம் போன்ற ஏறி குண்டுகளையும் இங்குதான் வீசியது.
30 சர்ச்சுகள் எட்டு
பள்ளிகள் ஒரு மருத்துவமனை உட்பட 80 ஆயிரம் வீடுகளும்
எரிந்து சாம்பலாகின. 930 பேர் உயிரிழக்க 1216 பேர் படுகாயம் அடைந்தனர். விளைவு போர்ட்ஸ் மவுத் சுடுகாடாக
மாறியது.
போர்ட்ஸ்மவுத்பற்றி ஒரே
வரியில் சொல்வதென்றால் உலக சரித்திரத்தை உள்ளங்கையில் ஏந்திப்பிடித்திருக்கும்
நகரம் என்று சொல்ல்லாம்.
இந்தப் பதிவு உங்களுக்கு
பிடித்திருக்கிறதா பிடித்திருந்தால் கமெண்ட் பகுதியில் ஒரு வார்த்தை பதிவிடுங்கள்.
நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment