Wednesday, September 27, 2023

PENSIONERS PARADISE HAMPSHIRE WHITELEY CITY - 03. ஹாம்ப்ஷயர் ஒயிட்லி நகரம் ஓய்வூதியர் சொர்கம்

 

WHITELEY CITY OF UK

WILLIAM WHITELEY 1907

நீங்க என்ன பென்ஷன் வாங்கிறவரா ? பணங்இல்லாதவரா பெட்டி படுக்கை மட்டுந்தா இருக்கா உடனே  என்னத் தொடர்பு கொள்ளுங்க. உங்களுக்கு இலவசமா வீடு கட்டி தரப்போறென்..இப்படி 1907 ம் வருஷம் ஒரு அறக்கட்டளையை தொடங்கினார் ஒரு புணியவான். அவர் பெயர் வில்லியம் ஒயிட்லி. அவருடைய பெயரைத்தான் இந்த நகருக்கு வச்சிருக்காங்க. ஒயிட்லி நகரம்.

நான் லண்டன் நகரிலிருந்து சுமார் 138 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒயிட்லி எனும் சிறு நகரத்தில், என் மகன் வாடகைக்கு தங்கியிருந்த  ஓக் கோப்பைஸ் சாலையில் 36 எண்ணுடைய  வீட்டில்தான்  60 நாட்கள் நானும் என் மனைவியும் தங்கியிருந்தோம். 1920 ம் ஆண்டு வாக்கில் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றோருக்காக  பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ரிட்டயர்மெண்ட்  நகரம் இது, இதனை “ஓய்வூதியர் சொர்கம்” என்ற அர்த்த்த்தில் பென்ஷனர்ஸ்’ பேரடைஸ் என்கிறார்கள். 

ஒயிட்லி  6 ஆயிரம் குடும்பங்களை கொண்ட சிறுநகரம் இன்று, லண்டனில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர கார் சவாரியில் உள்ள இடம். போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்டன் (PORTSMOUTH & SOUTHAMPTON)ஆகிய பிரபலமான நகரங்களுக்கு இடையே உள்ள ஒரு வசிப்பிடம். எம் 27 என்ற பெருஞ்சாலையும்ஸ்வான்விக்  ரயில் நிலையமும் ஒயிட்லிக்கு  போக்குவரத்து வசதியை செய்து தருகின்றன.

இன்றைய ஒயிட்லி  கிராமம் ஒரு காலத்தில் விவசாய நிலங்கள் ஆகவும் பசுமையான மரத்தோப்புகளாகவும் இருந்தது.

 சுவான்விக் மலைக்  குன்றின் தென் திசையில் உள்ள பார்க்கேட்லிட்டில் பார்க்  ஆகியவை இதன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்று சொல்லுகிறார்கள். 

ரூக்கரி என்ற  விவசாய பண்ணைகள், ஈவ் ட்ரீ, சுவீட் ஹில்ஸ், மற்றும் மக்கள் வசிப்பிடங்கள் ஆகியவை  அனைத்தும் சேர்ந்தது தான் ஒயிட்லி. 

ராணுவத்தின் ரெஸ்ட் ஹவுஸ்

இரண்டாம் உலகப் போரின்போது  இங்கிலாந்தின் ராணுவம் பிரான்ஸிற்கு செல்லும்போது ஒயிட்லியின் காடுகள் தான் வீரர்கள் இளைப்பாறிச் செல்லும் ஓய்வு இல்லமாக  இருந்தது.

இன்றும் இந்த கிராமத்தின் வட திசையில் உள்ள பியர் பாரஸ்ட் என்ற இடத்தில் உள்ள வார் டிபார்ட்மெண்டின் வாட்டர் டேங்க் (WATER TANK OF WAR DEPARTMENT)இதற்கு சாட்சியாக உள்ளது.

6000 குடும்பங்கள், சோலண்ட் பிசினஸ் பார்க் (SOLENT BUSINESS PARK), மீடியம் சைஸ் டெஸ்கோ செயின் சூப்பர் மார்க்கெட்(TESCO CHAIN SUPER MARKET), மெட்டர்னிட்டி சென்டர்ஆகியவை ஒயிட்லியின் முக்கியமான பகுதிகள்.

ஒக் கோப்பைஸ் ரோடு (OAK COPPICE ROAD)

ஒன்பது திரை  கொண்ட ஒரு தியேட்டர், ரெஸ்டாரண்டுகள்கடைகள் லிஷர் காம்ப்ளக்ஸ், சூரிச் ஃபைனான்சியல் சர்வீசஸ், நேஷனல் ஏர் டிராஃபிக் சர்வீசஸ், ஸ்பெக்ஸ் சேவர்ன் சாஃப்ட்வேர் கிளை(SPEC SAVIOUR SOFTWARE BRANCH), மருத்துவமனை ஆகியவற்றை உள்ளடக்கிய சோலெண்ட் பிசினஸ் பார்க்கும் ஒயிட்லியின் ஒரு பகுதிதான்.

சோலெண்ட்ன் ஸ்பெக்ஸ் சேவர்சாஃப்ட்வேர் கிளையில்தான் என் மகன் மென்பொருள் பொறியாளராக அந்த சமயம் பணியற்றிக்கொண்டிருந்தான்.

ஒரு மெடிகல் சென்டர், பார்மசி, டென்டிஸ்ட் மற்றும் பிசியோதெரப்பி கிளினிக்குகள், இதர கடைகண்ணிகள், உணவு விற்பனைக்கூடங்கள், சலூன், நர்சரி பள்ளிகள், கம்யுனிட்டி சென்டர்கள், விளையாட்டு மைதானங்கள், ஆங்காங்கே மரத்தோப்புகள் அத்தனையும் சேர்ந்தது தான் ஒயிட்லி.

ஃபார்ரிட்ஜ், சுவான்விக் மற்ற்ம் பார்க் கேட் ஆகியவை ஒயிட்லியை சுற்றி இருக்கும் கிராமங்கள்.

இங்கு வசிப்பவர்களில் 96.5 சதம் வெள்ளைக்காரர்கள் , இதில் தொழில் சார்ந்த திறன் படைத்தவகள் 80 சதவிகிதம் பேர்.  

மொத்த மக்கள் தொகையில் 87.23 சதம் பேர் சொந்த வீட்டில் வசிப்பவர்கள், இங்கு என் மகன்  தங்கி இருந்த 36 ம் நம்பர் வீடு  ஓக் கோப்பைஸ் சாலையில் இருந்தது.

இந்த சிறு நகரம் 1920 ம் ஆண்டு வாக்கில் பல்வேறு பணிகளிலிருந்து ஓயவு பெற்றொருக்காக  பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நகரம் இந்த ஒயிட்லி.

இந்தியாவில் இப்படி ஏதாச்சும் "ஓய்வூதியர் சொர்கம்" எங்காவது இருக்கிறது என்று சொல்லுங்கள், இதில் சொல்லப்பட்ட செய்திகள் பிடித்திருந்தாால் கமெண்ட் பகுதியில் எழுதுங்கள்.


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...