Monday, September 18, 2023

MULLA'S HUNT FOR A BRIDE ELEPHANT . 2. அரசாங்க யானைக்கு முல்லா பெண் பார்த்த கதை

அரசாங்க  யானைக்கு
முல்லா  பெண் பார்த்த கதை

முல்லா அவர்கள் அவருக்கு பெண் பார்த்த கதையை ஒரு முறை நான் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். ஆனால் இது யானைக்குப் பெண் பார்த்த கதை. 

முல்லா அவர்கள் ஒரு யானைக்கு எப்படி பெண் பார்த்தார் ? அது யாருடைய யானை ? அதற்குப் பெண் பார்க்க சொன்னது யார் ? இது பற்றி எல்லாம் இந்த கதையில் பார்க்கப் போகிறோம்.

ஒரு நாட்டின் ராஜாவின் யானை ஒன்று திடீரென காணாமல் போய்விட்டது. அரண்மனையிலிருந்து காணாமல் போன அந்த யானை அக்கம்பக்கத்து கிராமங்களில் எல்லாம் சுற்றி வந்தது. 

சுற்றி வந்தது என்றால் சும்மா சுற்றிவரவில்லை.காட்டைவிட்டு வெளியேறி மக்கள் வாழும் கிராமங்களுக்கு வந்தால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியும்.

அதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துரத்தியது. தும்பிக்கையால் தூக்கி எறிந்தது, காலால் மிதித்து நசுக்கியது.  தந்தத்தால் குத்திக் கிழித்தது. முரட்டு தலையினால் முட்டி தள்ளியது. பத்துப் பதினைநது பேர் செத்துப் போனார்கள்.

வீட்டுக் கூரைகளை  பிய்த்துப் போட்டது. சுவர்களை இடித்துத் தள்ளியது, கரும்பு வாழை தோட்டங்களை  நாசம் செய்தது. பயிர்பச்சைகளை மிச்சம்மீதி இல்லாமல் அழித்தது.

சுற்று வட்டாரத்து  மக்கள் நமது கிராமத்திற்கும் வருமா என்று பயந்து  நடுங்கினார்கள்.

அரசாங்க யானையால்  பாதிக்கப்பட்டவர்கள் பலர் என்றாலும் சிலர் அரசாங்க யானை என முறையிட அச்சப்பட்டார்கள். சிலர் மட்டுமே அரசிடம் முறையிட்டார்கள்.  ஆனாலும் அரசாங்க யானைமேல் யாரும்  நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்த செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. அதிகாரிகளை அழைத்து விசாரித்தான் மன்னன். அரசாங்க யானை  நிரபராதி  என்று சொன்னார்கள். அரசனும்  அமைதியாகி விட்டான்.

அரசாங்க யானையின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று  முல்லாவிடம் முறையிட்டார்கள் அந்த மக்கள். முல்லா யோசித்தார்.

அவர்களுக்கு முல்லா  ஒரு யோசனை சொன்னார்நீங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த யானையை பிடித்து கட்டி  வையுங்கள். கட்டி வைத்துவிட்டு கட்டி வைத்த தகவலை எனக்கு சொல்லுங்கள். யார் கேட்டாலும் எனது பெயரை சொல்லுங்கள் என்றார் முல்லா.

அடுத்த நாளே அந்த  யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தின் தூரில் கட்டி போட்டார்கள். கட்டிப்போட்ட தகவலை முல்லாவுக்கு தெரிவித்தார்கள் அதே சமயம் கிராமத்துக்காரர்கள் அரண்மனை யானையை தட்டிப்போட்ட தகவல் அரசனுக்கும் போய் சேர்ந்தது.

உடனே ராஜா முல்லாவை அழைத்து வரச் சொன்னார் முல்லா வந்ததும் அவரிடம் கோபமாக கேட்டார் அரண்மனை யானையை பிடித்து கட்டிப்போடும் அளவுக்கு உங்களுக்கு யார் அந்த துணிச்சலை தந்தது என்றார்.

மன்னர் பெருமானே  தங்கள் யானை எங்கள் ஊருக்கு வந்தது திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் யானை வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது.

மன்னருடைய யானையின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி வைப்பது தான் குடிமக்களின் கடமை என்று  நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். அதனால்  மரியாதைக்குரிய நமது அரண்மனை யானையைப் பிடித்து கட்டி வைத்து விட்டோம்.

இப்போது அரசாங்க யானைக்கு ஏற்ற லட்ச்ணமான  ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம், என்றார் முல்லா. 

இதை கேட்டதும் ராஜாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்ததுயாரிடம் கதை விடுகிறாய் ? உண்மையாக என்ன நடந்தது என்ன ? சொல்லுங்கள் என்றார் ராஜா முல்லாவிடம்..

ராஜா கேட்டதும் முல்லா  தயக்கமில்லாமல் சொன்னார், “நான் சொல்லுவதை  நம்பவில்லை என்றால் நேரடியாக வந்து யானையிடம் கேளுங்கள்.. நான் சொல்வது பொய் என்றால் எனக்கு அங்கேயே தூக்கு தண்டனை கூட கொடுங்கள்”  என்றார் முல்லா உணர்ச்சிவசப்பட்டவராய்.

சரி வருகிறேன் என்றார் ராஜா. உடன்  தனது பரிவாரங்களுடன் அங்கு புறப்பட்டார். அவர் செல்லும் வழி எல்லாம்  அரண்மனை  யானையின் அழிச்சாட்டியங்கள்   அனைத்தையும் ஒன்று விடாமல் அரசர் பார்க்குமாறு ஏற்பாடு செய்திருந்தார் முல்லா. 

யானை நாள் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தையும் ராஜா பார்த்தார். அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து பேசினார். உண்மையான நிலவரத்தை புரிந்து கொண்டார். அங்கேயே நிவாரணம் வழங்க  ஏற்பாடுகள் செய்தார்.

இதையெல்லாம் நீங்க பாக்கணும்னு நினைச்சேன் எனக்கு வேற வழி தெரியல என்று பணிவாக சொன்னார் முல்லா. அரசர் சிரித்துக் கொண்டே கேட்டார் வா என் யானை என்ன உங்களைப் பெண் பார்க்க  சொன்னதா ? என்று கேட்டுவிட்டு மறுபடியும் சிரித்தார்.

மன்னர் என்ன மன்னிக்கணும் உங்ககிட்ட நான் பொய் சொல்லிட்டேன் என்னதான் காரணமாக இருந்தாலும் நான் பொய் சொல்லி இருக்க கூடாது பணிவாக மன்னரிடம் சொன்னார் முல்லா.

 “ஒரு நல்ல காரியத்துக்காக பொய் சொல்றதுல தப்பு கிடையாது ஆனாலும் இப்படி ஒரு வித்தியாசமான பொய்யை  முல்லா மட்டும்தான் சொல்ல முடியும்என்று சொல்லிவிட்டு இடி இடி என சிரித்தார் அந்த ராஜா. 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...