Sunday, September 17, 2023

MULLA STORY HOW TO SNIFF ONE’S MIND 1. மனசுல நினைப்பதை மோப்பம் பிடிப்பது எப்படி ?(முல்லா கதை)

 

மனசுல நினைப்பதை
மோப்பம் பிடிப்பது எப்படி ?

எத்தனையோ பிரச்சனைகளுக்கு எத்தனையோ மனிதர்களுக்கு தீர்வு சொல்லும் முல்லா அவர்களுக்கு பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்   மிகப்பெரிய சவாலாக இருந்தாள்.அவளை சமாளிப்பது அவருக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. அவளுக்கு தெரியாமல் சமைப்பது என்பது முடியாத காரியமாக இருந்தது.

 அந்த  பக்கத்து வீட்டுப் பெண்மணி முல்லாவின் வீட்டில் என்ன சமையல் செய்தாலும் தனது மோப்பம் பிடிக்கும் திறமையால் கண்டுபிடித்து விடுவாற். உடனே தனது சிறிய பெண்ணிடம் ஒரு பாத்திரத்தை கொடுத்து அனுப்பி விடுவார்.  முல்லாவின் வீட்டில் என்ன சமையல் செய்திருந்தாலும் அதில் கொஞ்சம் அந்த சிறிய பாத்திரத்தில் போட்டு கொடுத்து அனுப்ப வேண்டும் ஆரம்ப காலங்களில் இது ஒரு பிரச்சனையாக இல்லை.

தனது சமையலை பாராட்டி, அதனை சாப்பிடுகிறார்களே என்பதால் முல்லாவின் மனைவி தான் சமைத்ததை அவர்களுக்கு ஓசியாக கொடுப்பதை கணக்கு பார்க்க மாட்டார். ஆனால் அதுவே மாதக்கணக்கில் வருட கணக்கில் என்று தொடரும்போது அவருக்கே அது எரிச்சலாக இருந்தது முல்லா அவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

முல்லாவின் வீட்டில் எதையும் சுதந்திரமாக சமைக்க முடியவில்லை எவ்வளவு வாசம் குறைவாக இருந்தாலும், அந்த பக்கத்து வீட்டு பெண்மணி என்ன சமைக்கிறார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடுவார். முல்லா வீட்டில் சூப்பு செய் கிறார்களா ? புலவு செய்கிறார்களா என்று சொல்லிவிடுவார்..

முல்லா அவர்களுக்கு கொஞ்சம் நாக்கு நீளம் எதை சமைத்தாலும் அது காரசாரமாக இருக்க வேண்டும். அவருக்கு சமையலில் எப்போதும் ஆடு கோழி மீன் முட்டை கருவாடு இறால் இவற்றில் ஏதாவது ஒன்று மேய  வேண்டும்.

அந்த அடுத்த வீட்டு பெண் சமயம் கிடைக்கும் போதெல்லாம்முல்லாவின் மனைவியின் சமையலை  வாய்க்கு வாய் பாராட்டுவார்.மாமி உங்க சமையலை சாப்பிட  இரண்டு நாக்கு வேணும்.. மூணு வயிறு வேணும்.  நீங்க ஆட்டுக்கால் சூப்பு வச்சா அடுத்தத் தெருவில மணக்குது”,என்பார். எப்படியும் ஒரு கிண்ணம் குழம்பு மற்றும் இதர பதார்த்தங்கள் வாங்காமல் போக மாட்டார்.

முல்லா அவர்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருந்தது இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை நேராக முகத்துக்கு எதிராக இதை சொல்லுவது எப்படி என்றும் முல்லாவுக்கு புரியவில்லை.

இப்படி ஓசை குருமா ஓசை சூப்பு ஓசி புலவு என்று தினம் தினம் வாங்கிச் செல்லும் அடுத்த வீட்டு பெண்மணியை சமாளிப்பது எப்படி என்று முல்லாவுக்கு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. 

ஒரு நாள் முல்லாவுக்கு சூப்பு சாப்பிட ஆசையாக இருந்தது உடனே தனது மனைவியை அழைத்து சுப்பு தயார் செய்யுமாறு சொன்னார் அவரும் சரி என்று சொல்லிவிட்டு அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தார் அந்த சமயம் அவருக்கு  பக்கத்து வீட்டில் மோப்பம் பிடிக்கும் அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது உடனே மறுபடியும் தன் மனைவியை அழைத்து சோப்பு தயாரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் அவரும் சரி என்று சொல்லி சூப்பு தயாரிக்காமல் விட்டுவிட்டார் 

முல்லா வீட்டில் ஆட்டுக்கால் சூப் தயார் செய்யச் சொன்னதும் தெரியாது அதன் பின்னர் முல்லா வேண்டாம் என்று சொன்னதும் அவருக்குத் தெரியாது.

ஆனால் சிறிது நேரத்தில் அடுத்த வீட்டின் சிறிய மகள் வழக்கம் போல ஒரு பெரிய கிண்ணத்துடன் முல்லாவின் வீட்டிற்குள் வந்தாள். அந்தப் பெண்ணை பார்த்ததும் முல்லாவுக்கு சிரிப்பு வந்தது என்னம்மா என்றார் அம்மா சூப்பு வாங்கிட்டு வர சொன்னாங்க என்று சொன்னாள் அந்தப் பெண்.

இதை கேட்டதும் உள்ள இடி இடி என சிரித்தார் இவர் சிரிப்பு சத்தம் கேட்டதும் வீட்டிற்குள் இருந்த அல்லாஹ்வின் மனைவி என்னங்க என்னங்க ஏன் இப்படி சிரிக்கிறீங்க என்று  கேட்டுக் கொண்டே வந்தார்.

 “இவுங்க அம்மா எப்பவும்  நம்ம சமையல் கட்டை மோப்பம் பிடித்து தான் எதையும் வாங்க இந்த சிறுமியை  அனுப்புவாங்க.... ஆனால் இந்த முறை சூப்பு போடலாம் என்று நான் நினைத்ததை எப்படி மோப்பம் பிடித்தார் என்று தெரியவில்லை. அதை நினைத்தேன் என்னால் என் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதைத் தெரிந்து கொள்ளலாம் என்று நான் நினைத்தேன்..உனக்கு தெரியுமா ?” என்று அந்த சிறுமியிடம் கேட்டார் முல்லா. 

 “அது எனக்கு தெரியலை.. மாமா நான் வேணும்னா அம்மாகிட்ட கேட்டுகிட்டு வந்து சொல்றேன்..இல்லன்னா அவுங்களையே வந்து உங்ககிட்ட சொல்லச் சொல்றேன்..மனசுல நினைக்கறதை எப்பிடி மோப்பம் பிடிக்கறதுன்னு நான் கேட்கிறேன்..என்று சொல்லிவிட்டு கிண்ணத்துடன் பறந்து போனாள் அந்தப் பெண். ” 

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணும் வரவில்லை அந்த பெண்ணின் தாயாரும் வரவில்லை. ஆனால். முல்லா மட்டும்மனதால் நினைப்பதை  மோப்பம் பிடித்து  கண்டுபிடிப்பது பற்றி அந்த பெண்ணிடம் தெரிந்து கொள்ளவில்லையே என்று வெகு நாட்கள் வரை வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்...

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. A RETOLD STORY WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

 

2 comments:

இறையரசன் said...

முல்லா கதைகள் மிகவும் பிடிக்கும். நீங்கள் எழுதும் போது இன்னும் சுவைக்கும். படித்தேன்.... படி தேன்!

Gnanasuriabahavan Devaraj said...

தங்களைப் போன்ற அறிஞர்களுக்கு பிடிக்கிறது, தினம் ஒரு முல்்லாவின் கதை எழுதத் தூண்டுகிறது என்னை, நன்றி.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...