Tuesday, September 5, 2023

MENTAL HEALTH TREE HERB SAINT IGNATIUS TREE 328. மன ஆரோக்கிய மூலிகை மரம் கைப்பங்கொட்டை

மன ஆரோக்கிய மூலிகை 
கைப்பங்கொட்டை

ஒரு வித்தியாசமான மரத்தப்பற்றி  இப்போ நாம் பார்க்கப் போறோம். கைப்பங்கொட்டை மரம் , அதுதான் அதன் பெயர். ஆச்சரியமான மரம், எட்டி மரத்துக்கு உறவுக்கார மரம். எட்டி மரம் ஒரு விஷமரம். அது எல்லாருக்கும் தெரியும், அதே தாவரக் குடும்பத்தை சேர்ந்த்துதான் இந்த மரமும். பாம்புகளோட விஷத்தைக் கூட மருந்துகள் செய்ய பன்படுத்தறாங்க, அது மாதிரிதான் இதுவும். முக்கியமா மன நோய்களை குணப்படுத்த இதுல மருந்து செய்யறாங்க, எப்பிடின்னு மேல படிங்க புரியும். 

01.தாவரவியல் பெயர்:  ஸ்டிக்நாஸ் இக்னாட்டியை (STYCHNOS IGNATII)

02.தாவர குடும்பம்:  லோகனேசி (LOGANACEAE)

03.தாயகம்: பிலிப்பைன்ஸ் மற்றும் சைனா

04. இதன் பழங்கள் பேரிக்காய் மாதிரி இருக்கும் கொட்டைகள் பாதாம் கொட்டைகள்  மாதிரி  இருக்கும். 

05.இதன் பழங்கள் பார்க்க எட்டிப் பழங்கள் மாதிரியே இருக்கின்றன, இதன் விதைகளும் எட்டி விதைகள் மாதிரியே இருக்கும்.

07. இதன் பழங்களில் ஸ்ட்ரிக்னைன் (STRYCHNINE) புருசைன் (BRUCINE)ஆகிய அல்கலாய்டுகள் (ALKALOIDS)கணிசமான அளவில் உள்ளன.

08. உடல் சோர்வு, மயக்கம் தரும்படியான   மற்றும் பலவீனமான உணர்வுகளிலிருந்து  புத்துணர்ச்சி  பெறவும்,மனதிற்கு  உற்சாகமும் தருவதற்கான டானிக் ஆகவும் கைப்பங்கொட்டையைப் பயன்படுத்தலாம்.

09.  இதில் உள்ள ஸ்டெர்லைட் மற்றும்  ஆகியவை என்று பார்த்தோம் இவை இரண்டுமே கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை.இவை நரம்புகள் மற்றும் தசைகளில் செயல்பாடுகளை எதுவாக பாதிக்கின்றன.

10. கைப்பன்கொட்டையின் இலைகள் இலைகள் பூக்கள் மொட்டுகள் பட்டைகளில் மரங்கள் வேர்கள் ஆகிய அனைத்து பகுதிகளிலும் இந்த ஆல்கலாயுடுகள் கணிசமான அளவில் உள்ளன. ஆகையினால் இவை அனைத்துமே நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

11. ஸ்டிக்னாஸ் தாவரப் பெரும் பிரிவினை சேர்ந்த அனைத்து தாவரங்களும் நச்சுத்தன்மை உடையன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

12. இந்த ஸ்டிக்மஸ் பிரிவை சேர்ந்த சில மரங்களில் இருக்கும் பழம் சாப்பிடலாம்,இவற்றில் எவ்விதமான நச்சுத்தன்மைகளும் இல்லை அமையும் இந்த மரங்கள் தென் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.  இவற்றை குரங்கு ஆரஞ்சு பழங்கள் (MONKEY ORANGE FRUITS)என்று சொல்லுகிறார்கள். 

13. அவை ஸ்டிக்னாஸ் கோக்குலாய்டஸ்ஸ்டிக்னாஸ் ஸ்பினோசா, ஸ்டிக்னாஸ் பஞ்ஜின்ஸ் (STYCHNOS COCCULOIDES, STYCHNOS SPINOSA, STYCHNOS PUNGENS)ஆகியவைமூன்றும் குரங்கு ஆரஞ்சு பழ மரங்கள்.

14.  பலமொழி பெயர்கள்

 தமிழ்; கைப்பங்கொட்டை (KAYPPANKOTTAI)

 சைனா: லூ சாங் குவோ (LU SANG GUO)

ஃபிரென்ச்:: ஃபெவிஸ் டி செயின்ட் இக்னேஸ் (FEVIS D SAINT IGNES)

இந்தோனேசியா: பொக்கு (POKKU)

மலேசியா: அக்கர் இப்போவ் (AKKAR IPPOV)

ஸ்பேனிஷ்: பெப்பிதா டி சான் இக்னாசியோ (PEPPITHA DI KAN IGNACIO)

தாய்லாந்து: பாயா மு லெக் (PHAYA MU LEK)

15. பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டு முக்கியமான காரியங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் இதனை ஆண்மை பெருக்கியாகவும் உற்சாகமூலியாகவும் பயன்படுத்துகிறார்கள். 

16. கடுமையான நச்சுப் பொருளாகவும் பல பொருட்களை செய்வதற்காக இதனை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக பூச்சிக்கொல்லி மருந்துகளாக இதை உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்துவதாக தெரிகிறது. 

17. லோகநேசி தாவர குடும்பத்தில் 20 பெரும் தாவர பிரிவுகளும்  200 தாவர வகைகளும் அடங்கியுள்ளன, இவற்றின் பெரும்பாலானவை  வெப்பமண்டல மரங்கள் குத்துச்செடிகள்  மற்றும் கொடிவகைகள்.

18.வளர் இடங்கள், சதுப்பு நிலங்கள், முக்கியமான வனப்பகுதிகள், தாழ்வான மற்றும் நடுத்தரமான உயரமான  நிலப்பரப்புகள் ஆகியவற்றில் இந்த மரங்கள் வளரும்.

18.பரவி இருக்கும் இடங்கள்இந்தியா, சைனா மற்றும் போர்னியோ ஆகிய இடங்களில் இந்த மரங்கள் பரவலாக காணப்படுகின்றன.

19. ஐயப்பன் கொட்டையின் மர பட்டைகள் விதைகள் ஆகியவற்றை பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க பல நாடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

20.சித்த மருத்துவத்தில் ஆண்மை பெருக்கியாக, நரம்பு தளர்ச்சியை குணப்படுத்துவதற்காகஆண் மலட்டுத்தன்மையை  குணப்படுத்துவதற்காகவும், வலிப்பு நோய், மன இறுக்கம் மற்றும் இதர மன நோய்கள், நரம்பு தளர்ச்சி ஆகியவற்றை குணப்படுத்த கைப்பந்தொட்டையை பயன்படுத்துகிறார்கள்.

21. ஹோமியோபதி மருத்துவத்திலும் முக்கியமாக நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் மன நோய்கள் தொடர்பான நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த இந்த கைப்பங்கொட்டையை பயன்படுத்துகிறார்கள்.

22. இந்தியாவில் பெரும்பாலும் தமிழ்நாடு  மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக அதிகமான அளவில் இந்த கைப்பங்கொட்டையை இயற்கை மருத்துவத்தில்   பலவிதமான மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

23. சீனா கம்போடியா நாடுகளிலும் பல விதமான நோய்களை கட்டுப்படுத்த  கோட்டையை காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். 

அன்பின் இனிய நண்பர்களே உங்கள் யாருக்காவது கைப்பந்தொட்டையை இயற்கை வைத்தியத்தில் நோய்களை கட்டுப்படுத்த பயன்படுத்தி இருந்தால் உங்கள் அனுபவத்தை எனக்கு சொல்லுங்கள், நன்றி வணக்கம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 





2 comments:

Dr. S. Sivagnanam said...

This article is good informative Sir.

Gnanasuriabahavan Devaraj said...

Thank you so much for your valuable comments, whenever you read, if you like it, do write your comments, Thanks & regards.Gnanasuria Bahavan.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...