Friday, September 1, 2023

MASSAGE OIL TREE CEYLON OAK 324.குசும் மசாஜ் எண்ணெய் மரம்

குசும் மசாஜ் எண்ணெய் மரம்
MASSAGE OIL TREE
CEYLON OAK


குசும் மரத்திற்கு தமிழ் மொழியில் பல பெயர்கள் உண்டு, இந்த மர விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணையைபாரம்பரிய மருத்துவத்தில் பல விதமான மருந்துகளைச் செய்து பயன்படுத்துகிறார்கள், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்துகிறார்கள், இதன் எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் வழுக்கையை சரி செய்யலாம்,

2. தாவரவியல் பெயர்: ஸ்ரீ சிலீசெரா ஓலியோசா (SCHLECHERA OLIOSA)

3.பொதுப் பெயர்கள்/ ஆங்கில பெயர்கள் சிலோன் ஒக்(CEYLON OAK) குசும் (KUSUM) 

லேக் ட்ரீ (LAKE TREE)

மகசார் எண்ணெய் மரம் (MACASAR OIL TREE)

ஹனி ட்ரீ (HONEY TREE) 

4.பல மொழிப் பெயர்கள்

குஜராத்தி:  குசும் (KUSUM)

இந்தி:  குசும் (KUSUM)

இருளா: புளி பூசா மரம் (PULI PUSA MARAM)

கன்னடா:  சாக்கோட்டா (CHAKOTA)

கொங்கணி: கொசிம்ப் (KOSIMB) 

மலையாளம்: டூத்தாலம் (DHOOTHALAM)

மராத்தி: குசும்பு (KUSUMBU)

சமஸ்கிருதம்: குசும்பா (KUSUMBA)

தெலுங்கு: கோசங்கி (KOSANGI)

5.தமிழ் மொழியில் இந்த மரத்திற்கு பல பெயர்கள் உண்டு, அவை காரனாச்சி, பூவம்புளிச்சிபூ மரத்தா, பூவன், பூவத்தி, கும்பாதிரி, கொஞ்சி, மற்றும் குசும்.

6. குசும் மரங்கள் 20 மீட்டர் உயரமாக வளரும், அதன் பட்டைகள் 10 முதல் 12 சென்டிமீட்டர் பருமனாக இருக்கும், சாம்பல் நிறமாக இருக்கும். 

7. குசும் எண்ணெய் என்பது, இந்த மர விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணை, உடலின் ஏற்படும் அரிப்பு நோய், எரிப்புண், மற்றும் சரும நோய்கள், மூட்டு வலி, முடி உதிர்வு ஆகியவற்றை குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் பல விதமான மருந்துகளைச் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். 

8.மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்தவும், குசும் எண்ணெய் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

9. இதன் இலைகளில் குறைவாக டேனின் சத்து இருப்பதால் இதனை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியும். 

 10. குசும்  மரத்தில் கணிசமான அளவு தாவர ரசாயனங்கள் இருப்பதால் இதன் மூலம் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். 

11. உதாரணமாக குசும் மரத்தில் டெர்ப்பினாய்ட்ஸ்பெட்டுலின்பெட்டுலினிக் ஆசிட்ஆகிய தாவர ரசாயனங்கள் அடங்கியுள்ளன. 

12. அத்துடன் குசும் மரத்திலிருந்து பயோடீசல் தயாரிக்கலாம்.

13. பாறைகள் நிறைய, கற்கள் நிறைய, இருக்கும் இருமண்பாடான நிலங்கள், அமிலத்தன்மை உடைய மண் வகைகளிலும் நன்கு வளரும் இந்த குசும் மரங்கள்.

14. குசம் பூக்களில் கணிசமான அளவு தேன் நிறைந்திருப்பதால் பூச்சிகளை கவரும் மரமாக உள்ளது இது.

15.மலேரியா, உடல் வலி, உடல் உறுப்புகள் வீக்கம், குடற் புண், பாக்டீரியல் நோய்த் தொற்று, வைரஸ் நோய் தொற்று, பூசண நோய் தொற்று, புற்றுநோய், ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பண்புகள் குசும் மரத்தில் நிறைந்துள்ளன. 

16.குசும்  மரத்தின் இலைகள், பட்டைகள், கட்டைகள், மற்றும் வேர்களைப் பயன்படுத்திபலவிதமான நோய்களை குணப்படுத்துகிறது, பாரம்பரிய மருத்துவம்.

17. இதன் பட்டைகளை அரைத்து கூழாக்கி அதனை பயன்படுத்துவதன் மூலம், மலேரியா, சீதக் கழிச்சல் ஆகியவற்றை குணப்படுத்துகிறார்கள்.

 18. இமயமலை மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் குசும்  மரத்தினை பல விதமான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.

19. இளம் தளிர்களை சமைக்கலாம், சூப் தயாரித்து குடிக்கலாம், வேறு விதங்களிலும் சமைத்து சாப்பிடலாம். 

20. நன்கு உதிர்ந்த கனிந்த இதன்  பழங்கள் புளிப்பு சுவையுடன் இருக்கும், முற்றாத காய்களில், ஊறுகாய் தயாரிக்கலாம்.

21. குசும் பழங்களிலிருந்து எடுக்கும் விதைகளை  அரைத்து பிழிந்து எண்ணெய் எடுக்கலாம். 

22.  இந்த எண்ணெய்க்கு மகசார் எண்ணை (MACASAR OIL) என்று சொல்லுகிறார்கள்.

23. குசும்  எண்ணெயில் 50 முதல் 60 % கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் இது பல னோய்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளன.

17.குசும் எண்ணெயை கை கால் மூட்டுகளில் மசாஜ் செய்வதன் மூலம் மூட்டு பிடிப்புமூட்டு வீக்கம்மூட்டு வலி ,ஆகியவற்றை குணப்படுத்தலாம்.

18. குசும் எனும் மகாசர் (MACASSAR OIL)எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் வழுக்கையை சரி செய்யலாம்முடி உதிர்வைத் தடுக்கலாம்தலையில் ஏற்படும் அரிப்புதலைமுடிகள் மெலிந்து நலிந்து போவதையும்தடுக்கலாம். 

19. அதனால் குசும் எண்ணெயை ஹேர் டானிக் என்று சொல்லுகிறார்கள்.

25. இந்த குசும் எண்ணெயில் இருக்கும் ஒரு விதமான நச்சுப் பொருட்களை அதிலிருந்து நீக்கிவிட்டால் இதனை சமைத்து பயன்படுத்தலாம். 

26. இளம் வயதில் முடிகள் உதிர்வதால் ஏற்படும் சொட்டைப்  பகுதியில் குசும்  எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் அந்த இடத்தில் புதிய முடிகள் முளைக்கத் தொடங்கும்.

27. நீங்கள் யாராவது குசும் எண்ணெயைப் பயன்படுத்தி இருக்கிறீர்களா ?அது மூட்டு வலியை குணப்படுத்துகிறதா ? முடி உதிர்வை தடுக்கிறதா ? உங்கள் அனுபவம் என்ன ? சொல்லுங்கள். 

குசும் மசாஜ் எண்ணெய் மரம் மகாசார் எண்ணெய் மரம் என அறியப்படும் 

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...