56 லட்சம் பேரைக் கொன்ற மதராஸ் பெரும் பஞ்சம் |
எல்லாருக்கும்
வணக்கம் ! எப்படி இருக்கிங்க ? இன்றைய
தினம் மகிழ்ச்சியா அமைய என்னோட வாழ்த்துக்கள்.
1, நீரின்றி அமையாது உலகு
பாடத்திட்டத்தில்
நான்கவது பாடத்தை
நான் நடத்தப் போறென். இந்தப் பாடத்தின் தலைப்பு மதறாஸ் பட்டின பெரும் பஞ்சம். ஒரு
சமயம் நம்ம தமிழ் நாட்டுக்கு மதராஸ் பட்டினம் அப்படியும் இருந்தது. சென்னை மானிலம்
என்ற பெயரும் இருந்தது.இப்போ தமிழ் நாடு.
2. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர்1969 ஆம் ஆண்டு தமிழ் நாடு என்று மாற்றப்பட்டது. மெட்ராஸ் என்ற நகரின்
பெயர் 1996 ம் ஆண்டு
சென்னை என்று மாற்றப்பட்டது.
“கெடுப்பதும் கெட்டார்க்கு சார்வாய் மற்றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை” திருக்குறள்.
திருவள்ளுவர் எழுதினது. உலகப் பொது மறை’ன்னு இதை சொல்லுவாங்க. உலகத்தின் பொதுவான வேதம் இது. மொத்தம் 1330 திருக்குறள் இருக்கு. 133 அதிகாரம். அதுல முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அடுத்து வான் சிறப்பு. திருவள்ளுவர் கடவுளுக்க அடுத்த இடத்தை திருவள்ளுவர் தண்ணீருக்கு கொடுத்து இருக்கார்.
3.மழை நல்லதும் செய்யும் கெட்டது செய்யும். அதுதான் இந்த
திருக்குறளுக்கு அர்த்தம். மழை பேஞ்சதுன்னா நல்லது செய்யும். மழை பேயலன்னா கெட்டது
செய்யும். 1877 ம்
வருஷமும் 1878ம்
வருஷமும் இந்த மழை என்ன கெட்டது செஞ்சது? அதைத்தான் இப்போ
நாம் பாக்கப்போறோம்.
4. இந்த சென்னை மாநில பெரும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு
எவ்ளோ தெரியுங்களா ? ஒரு சதுர
கிலோமீட்டர் இல்ல இரு சதுர கிலோமீட்டர் இல்ல. ஆறு லட்சத்து 70 ஆயிரம்
சதுர கிலோமீட்டர். மைல்ல சொல்லணும்னா ரெண்டு லட்சத்து 57 ஆயிரம் சதுர மைல்.
5. இந்த சென்னை மாநில பெரும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்ளோ தெரியுங்களா? ஒருத்தர் ரெண்டுபேர் இல்ல. ஐம்பத்தாறு லட்சம் மக்கள். இதில் பாதிக்கப்பட்ட
பகுதிகள் தமிழ் நாடு மட்டுமில்ல. இந்தியாவின் மத்தியப்பகுதிகள், வட மேற்குப் பகுதிகள், இதெல்லாம்தான் இதில் பாதிக்கப்பட்டது.
6. இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். மத்தியப்பகுதிகள், வட மேற்குப் பகுதிகள்,ன்னா எந்தெந்த மாநிலங்கள் ? சென்ட்ரல் ப்ரோவின்ஸ் அல்லது மத்திய மாநிலங்கள், அவை மூன்று மாநிலங்கள், மத்திய பிரதேசம் சத்தீஷ்கர் மற்றும் மகாராஷ்டிராவை குறிக்கும்.
7. வடமேற்கு பகுதிகள் என்றால் அவை ஆறு மாநிலஙகள்,உத்தப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், மற்றும் உத்ரகாண்ட் ஆகியவை.
8. இந்த பஞ்சத்துல இறந்து போனவர்களுடைய எண்ணிக்கை என்று பார்த்தால் 5.6 முதல் 9.6 மில்லியன் மக்கள் என்று சொல்லுகிறார்கள். இதே லட்சத்துல சொன்னா 56 லட்சத்திலிருந்து 96 லட்சம் மக்கள் இந்த பஞ்சத்தில் இறந்து
போனார்கள்..
9. மெட்ராஸ், பம்பாய், மைசூர் மற்றும் ஹைதராபாத், இந்த நான்கு மாநிலங்களில் அடக்கமாக
இருந்தது தான் இந்த சென்ட்ரல் ப்ரோவின்ஸ் மற்றும் நார்த் வெஸ்டர்ன் புரோவின்ஸ்
என்று சொல்லப்பட்ட இடங்கள்.
10.இந்த பஞ்சத்திற்கு அதிகாரப்பூர்வமாக வைத்துள்ள பெயர் சதன் இந்தியா
ஃபெமைன் ஆஃப் 1877 - 1878 மற்றும்
மெட்ராஸ் ஃபெமைன் ஆஃப் 1877 (
Southern India famine of 1877 - 1878, Madras famine of 1877).
11. பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை அரசாண்ட போது ஏற்பட்டது இந்த ஒரே ஒரு பஞ்சம் அல்ல பல பஞ்சங்கள் ஏற்பட்டது
அதற்கு முக்கியமான காரணம் வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை கொள்ளை அடிப்பதில் தான்
குறியாக இருந்தார்கள்.
12.வெள்ளைக்காரர்கள் உலகின் பல பகுதிகளில் பல நாடுகளில் அரசாண்டு
வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் பல நாடுகளில் சண்டையிட்டும் வந்தார்கள் அவர்களுடைய
போர் வீரர்களுக்கு தேவைப்படுகின்ற உணவு மற்றும் இதர பொருட்களை இந்தியாவில் இருந்து
சுரண்டிச் சென்றார்கள்.
13. பஞ்சகாலத்தில் கூட அதற்கான நிவாரண பணிகளைச் செய்வதில் அவர்கள் கவனம்
கொள்ளவில்லை என்று எழுதுகிறார்கள் சரித்திர ஆசிரியர்கள். எழுத்தாளர்
ஜெயமோகன் கூட இது பற்றிய பல செய்திகளை தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார் எனத்
தெரிகிறது.
14. பஞ்சகாலத்தில் கூட கண்ணெதிரே அத்தனை மனிதர்கள் சாகும் தருவாயில் கூட
பணம் படைத்தவர்கள் அவர்களுக்கு உதவியாக இல்லை. தங்களை தற்காத்துக் கொள்வதில் தான்
கவனம் கொண்டிருந்தார்கள் பெரும் வியாபாரிகள் தங்கள் பொருட்களை அதிக விலைக்கு
விற்பதில் குறியாக இருந்தார்கள் என்று ஜெயமோகன் அவர்கள் தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
14.இந்தப் பஞ்சம் இந்தியாவில் மட்டும் ஏற்படவில்லை ஒரே சமயத்தில் இந்தியா, சைனா, சென்னை, அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் அப்படி இந்த பஞ்சம் பெரும் நிலப்பரப்பை
ஆட்டி படைத்தது என்கிறார்கள். அந்த பஞ்சத்தினால் ஏற்பட்ட சாவு எண்ணிக்கை 19 முதல் 50 மில்லியன் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
15. இந்த பஞ்சம் எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், மழை சரியாக பெய்யவில்லை. அதனால் விவசாயம்
செய்ய முடியவில்லை. செய்த விவசாயமும் சரியான மகசூல் தரவில்லை. என்பதுதான்
அடிப்படையான காரணம். ஆனால்
ஆராய்ச்சியாளர்கள் எல் நினோ என்றும் இந்தியன் ஓஷன் னைப் போல் (EL NINO
& INDIAN OCEAN DIPOLE) சொல்லுகிறார்கள். இந்த எல் நினோ மற்றும் இந்தியன் ஓஷன் டைபோல் என்பது
பற்றி தனியாக ஒரு பதிவில் நாம் பார்க்கலாம்.
14.பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அரசாண்ட போது அவர்கள் எப்படி இந்த
பஞ்சங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்று பார்க்கலாம். முக்கியமானதாக
சொல்லப்படுவது இந்தியாவில் மிகவும் வலிமையாக இருந்த தொழில் நெசவுத்தொழில் அதனை
படுகொலை செய்து எல்லோரையும் விவசாயத்தில் கள்ம் இறக்கியதுதான் முக்கிய
காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
15. இப்படி முழுமையாக விவசாயத்தை நம்பி இருக்கும் போது அவருடைய வாழ்க்கையை
மழைதான் தீர்மானித்தது. அதனால் மழை இல்லாத போது அவர்களுடைய வாழ்க்கை
கேள்விக்குறியாகி விட்டது. அதனால் தான் வெள்ளைக்காரர்கள் இந்தியாவை அரசாண்ட போது
மிக அதிகமாகத் தோன்றிய பஞ்சங்கள் மக்களை அழித்தது.
16. இந்தியாவில் பஞ்சங்கள் ஏற்பட்ட போது பிரிட்டிஷ்காரர்கள் மனித
உயிர்கள் பற்றி கவலைப்படாமல்,
பஞ்சத்திற்கு நிவாரணம் என்பது நிவாரணம் அளிக்காமல் இருப்பது தான்
என்று புதிய விளக்கம் தந்தார்கள் அன்று அரசு பொறுப்பில் இருந்த வெள்ளைக்காரர்கள்.
இதனை ஆங்கிலத்தில் NO RELIEF WAS
THE BEST RELIEF என்று சொன்னார்கள்.
17. மால்தூசியன் விதிகளின்படி அதிகப்படியாக மனிதர்கள் செத்துப் போவது
என்பது அதிகப்படியான மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக இயற்கை கையாளும் ஒரு
உத்தி என்பதையும் வெள்ளைக்காரர்கள் எடுத்துக்
காட்டினார்கள். ( Any excess
death, according to Malthusian Principles, were nature’s way of responding to
overpopulation.)
18. வெள்ளைக்காரர்கள்
காலத்தில் மட்டும்தான் பஞ்சம் வரும் என்பதல்ல பஞ்சம் எப்போது வேண்டுமானாலும்
வரலாம். கால நிலை மாற்றம் அல்லது பருவநிலை மாற்றத்தால் மழை எப்போது வேண்டுமானாலும்
ஒன்று இரண்டு ஆண்டுகள் வராமல் போகலாம். வறட்சி வரலாம் பஞ்சமும் வரலாம்.
19. அதனால்
குறிப்பாக கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயிகள் குறைந்த பட்சம் இரண்டு
ஆண்டுகளுக்காவது வேண்டிய தானியங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். விளைந்த நெல் அத்தனையும் வியாபாரியிடம் விற்றுவிட்டு
அடுத்த நாள் ரேஷன் கடை
வரிசையில் இலவச அரிசிக்காக நிற்கும் நம்
பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
100% விவசாயி என்ற நிலை இல்லாமல் ஏதாவது ஒன்று இரண்டு சிறிய
தொழில்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். அதிலிருந்து
வருமானமும் வரவேண்டும். எல்லாவற்றிற்கும் அரசை நம்பி இருக்கும் நிலையை நாம்
மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு நம்மை
நம்பி இருக்க வேண்டும். நமது சொந்த
காலில் நாம் நிற்க பழக வேண்டும்.என்பதைச் சொல்லி இன்றையப் பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.
பருவக்கால
மாற்றம் கண்டும் பஞ்சம் கண்டும் அஞ்சி நடுங்கோம்
பூமி
ஞானசூரியன்.
No comments:
Post a Comment