லிபியா வெள்ளம் இருபதாயிரம் பேர் பலி |
“என் கண் முன்னாலேயெ என் பையனை தண்ணீர் இழுத்து சென்றது, என்னால் எதுவும் செய்ய முடியல..”
“என்
மனைவியை எங்கயும் பாக்க முடியல..எல்லா பிணக்குவியல்லயும் தேடிப்பாத்துட்டேன்..”
“நான்
மட்டும்தான் உயிரோட இருக்கேன்.. என் குடும்பத்தில் மட்டும் அம்பது பேர் போய் சேந்துட்டாங்க..”
“டெர்னா
ஆற்றின் எச்சரிக்கை மணி“ என்ற ஒரு கவிதை வரிகளைச் சொன்னதும் அந்த லிபிய கவிஞரை டெர்னா
ஆற்றுநீரை அது இழுத்து சென்றதாம்.
இப்படி பல கண்ணீர் கதைகளை சுமந்தபடி செந்நீர் வடிக்கிறது,
ஆப்ரிக்காவின் சொர்கம் என்று வர்ணிக்கப்படும் லிபியா.
திரும்பிய பக்கமெல்லாம் பிணம். ஒன்றல்ல இரண்டல்ல. 20000
பேர் செத்துப் போனார்கள். பெரிய பெரிய
பள்ளங்களைத் தோண்டி ஆயிரம் ஆயிரம் பிணங்களாகப் போட்டு புதைக்கிறார்கள்.
இதற்குக் காரணம் லிபியா நாட்டில் டேனியல் புயலினால் ஏற்பட்ட வெள்ளம்.
அதனால் உடைந்துபோன அணைக்கட்டுகள். அழிந்துபோன இரண்டு நகரங்கள். அங்கிருந்து 14
அடி உயரத்திற்கு எழும்பி ஓடிய பெருவெள்ளம் எல்லாம்தான்.
இதுவரை இறந்து போனவர்கள் 20,000 பேர், வீடிழந்தவர்கள் 30000 பேர் வெள்ளம் பாதிக்கப்பட்ட
பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மூன்று லட்சம் பேர். இப்போது, இந்தப் புயல் எப்படி வந்தது என்று பார்க்கலாம்.
இந்த டேனியல்புயல், புறப்பட்ட இடம் கிரீஸ். அங்கிருந்து அது ஸ்பெயின், துருக்கி, பல்கேரியா என பயணம் செய்து லிபியாவை கடுமையாகத் தாக்கியது.
செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை இந்த டேனியல் புயல் வடகிழக்கு லிபியா நாட்டிற்குள் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசத்
தொடங்கியது, என்கிறது லிபியா நாட்டின் மீட்ரியலாஜிகல் சென்டர்.
டேனியல் புயல் வடகிழக்கு லிபியாவில் நுழைய 24 மணி நேரம் தொடர்ச்சியாக பேய் மழை பெய்தது. இந்த 24 மணி நேரத்தில் பெய்த மொத்த மழை 120 முதல் 240 மில்லி மீட்டர். ஆனால் அல் பாய் டா (AL-BAYDA)
என்ற நகரில் பதிவு செய்யப்பட்ட மொத்த மழையின்
அளவு 444.1 மில்லி மீட்டர்.
ஆனால்
லிபியாவில் 93 சத நிலப்பரப்பில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழையின் அளவு 100 மில்லி மட்டுமே.
செப்டெம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 6.9 மாதங்களில் மழை கிடைக்கும்.
லிபியாவின்
மொத்த பூகோளப்பரப்பில் 90 சதவிகிதம் பாலைவனம், இதன் வலது பக்கம் இருப்பது மத்தியதரைக்கடல்
இடது பக்கம் இருப்பது சகாரா பாலைவனம். இந்த இரண்டும்தான் இதன் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிக்கிறது.
“அன்று
அந்த காற்று மழையோட ஒரு பெரிய சப்தம் கேட்டது. அதற்குப் பிறகு பார்த்தீங்கன்னா நாங்க வசிக்கக்கூடிய இடத்துல.. பதினாலடி உயரத்துக்கு மேல அலை எழும்பி வந்த்து... என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியல..எப்படி நான் உயிர் பொழைச்சேன்னு தெரியல..
“அடுத்த நாள் லிபிய அரசாங்கம் 2000
பேர் வெள்ளத்தில் செத்துட்டாங்க அப்படின்னு
சொல்லுது, ஆனா இரண்டு நாள் கழிச்சி அந்த சாவு
எண்ணிக்கை 20 ஆயிரம் இருக்கும் அதற்கு மேலேயும்
இருக்கும்னு சொல்லுது..”
“அந்த சமயத்துல டெர்னா என்ற நகரத்துல இருந்த
அந்த இரண்டு அணைகளும் இந்த வெள்ளத்தை தாங்க முடியாமல் உடைஞ்சு போச்சு. அது உடையும்போது “டமார்”ன்னு சப்தம் கேட்டிச்சு..அந்த இரண்டு அணைகளில் இருந்த தண்ணீர் தான் எங்களை அழிச்சது.”
”வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த ஒருவர் சொன்னது.
டெர்னா
நகரில் வசித்தவர்கள் 90 ஆயிரம் பேர். இந்த நகரை இரண்டாகப் பிளந்தமாதிரி ஓடுகிறது “வாடிடெர்னா”
(WADI DERNA) என்ற ஆறு. மழைக்கலத்தில் மட்டும் ஓடும் ஆறு. டெர்னா நகரின் மேல்புறத்தில்
தொலைவில் முதல் அணையும், பக்கமாக மேற்புறம் ஒரு அணையும் இருந்தது.
டெர்னா
நகர், பாய்டா, ஷாஹட், மர்ஜ். சூசா ஆகிய நகரங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த
அணைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. இந்த அணைகள்
உடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற அறிக்கையை ஒரு பல்கலைக்கழகம் அரசாங்கத்துக்கும், ஐநா சபைக்கும் அனுப்பி இருக்கு. இதனை அரசும் கவனிக்கவில்லை. ஐ நா சபையும்
கவனிக்கவில்லை.
உடைந்துபோன
ஒரு அணையின் கொள்ள்ளவு 1.5 மில்லியன் கியூபிக் மீட்டர், இன்னொன்றின் அளவு 22.6 மில்லியன்
கியூபிக் மீட்டர். ஒரு கியூபிக் மீட்டர் என்றால் 1000 லிட்டர் தண்ணீர், என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
லிபியாதான் ஆப்பிரிக்க நாடுகளில் மக்களுக்கு இலவச கல்வியையும் இலவச மருத்துவ வசதியும் தந்த
நாடு. ஒரு காலத்தில் லிபியாவை ஆப்பிரிக்காவின் சொர்க்கம் என்று வருணித்தார்கள்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல லிபியா நாட்டு வழியாகத்தான் போக முடியும். அதனால் லிபியாவை இவர்கள் ஐரோப்பாவின் நுழைவு வாயில்,
(GATE WAY) என்று அழைப்பது வழக்கம்.
தற்போது லிபியா நாட்டில் நடக்கும் ஆட்சி முழுக்க முழுக்க ஐநா சபையின்
கீழ் தான் நடைபெற்று வருகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்த அணைக்கட்டுகளை
பராமரிக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
“புயல் பற்றிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை (ADAVANCED
WARNING SYSTEMS) கடைப்பிடித்திருக்கலாம். அப்படி
கடப்பிடித்திருந்தால் சேதங்கள் குறைந்திருக்கும் என்கிறார்” ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்.
அவசரக்கால எச்சரிக்கை சேவையை பயன்படுத்தி இருந்தால் இழப்புக்களை
குறைத்திருக்கலாம் என்கிறார், உலக மீட்ரியலாஜிகல் நிறுவனத்தின் தலைவர் பெட்டேரி டாலாஸ் (PETTERY TAALAS).
டெர்னா
நகரம் பலமுறை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, 1941, 1959 ல் 1968 ல்,
1986 என்று பலமுறை பாதிக்கப்பட்ட்து, ஆனால் அப்போதெல்லாம் டெர்னாவை பாதுகாத்தது இந்த
இரு அணைகள்தான்.
ஒரு நாட்டில் வெள்ளம் ஏற்படுவது என்றால் அது இயற்கையாக ஏற்படுவது
தான். எப்போதெல்லாம் அதிக மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் வெள்ளம் வருவது சகஜம் தான்.
ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு அரசுக்கும் வேண்டும். பொதுமக்களுக்கும் வேண்டும். இல்லையெண்றால் எந்த நாடும் அதற்கான விலையை கொடுத்துத்தான் ஆக
வேண்டும், என்ன சொல்றீங்க ?
இங்கு
ஆட்சியாளர்கள் அணைக்கட்டுகளை விட பணப்பெட்டிகளைத்தான் நேசிக்கிறார்கள் என்று வருந்துகிறார்கள்,
லிபியா மக்கள்.
இதற்காகத்தான் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன், இந்தப்பதிவு பிடித்திருந்தால் “கமென்ட்ஸ்” பகுதியில் உங்கள் கருத்துக்களை
எழுதுங்கள் நன்றி வணக்கம் - பூமி ஞான சூரியன்
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment