கானமயிலை தென்னிந்தியாவின் பழமரம் |
கானமயிலை மரங்கள் 150
முதல் 1000 மீட்டர் வரை உயரம் உள்ள மலைப்பகுதிகளில் பரவியுள்ளன, இதன்
பழங்களை உணவாகப் பயன்படுபடுத்துகிறார்கள், தென்னிந்தியாவின் மேற்கு
தொடர்ச்சி மலைப் பகுதிக்கு சொந்தமான மரம், இந்த மலையின்
தென்பகுதியில் இவைஅழிந்து
வரும் மரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த
மரங்களின் பழங்கள்
அனைத்தும் உணவாக
பயன்படுபடுகின்றன.
01.தாவரவியல்
பெயர்: நெஃபிலியம் ஸ்டிப்புலாசியம் (NEPHELIUM STIPULASEUM)
02.தாவரக்
குடும்பம் சேப்பிண்டேசி (SAPINDACEAE)
03. தாயகம்:
தென்னிந்தியா
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதி
பல
மொழிப் பெயர்கள்:
மலையாளம்:
கல்பூவதி, பாவிரிமூலி.
தமிழ்:கானமயிலை
05. பரவி இருக்கும்
இடங்கள், கர்நாடகாவில் ஹாசன்
மாவட்டம், குடகு மாவட்டம், மற்றும்
குடகு மாவட்டம்.
06. கேரள
மாநிலத்தில் பரவி இருக்கும் இடங்கள்,
கண்ணூர், வேநாடு, மலப்புறம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்கள்.
07.தமிழ்நாட்டில்
பரவி இருக்கும் இடங்கள், கோயம்புத்தூர், நீலகிரி, மற்றும்
திருநெல்வேலி மாவட்டங்கள்.
08.கானமயிலை மரங்கள், பசுமை மாறா மற்றும் நடுத்தர பசுமை மாறா காடுகளில் காணப்படும் மரங்கள், 150 முதல் 1000 மீட்டர் வரை உயரம் உள்ள மலைப்பகுதிகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன.
09.கானமயிலை
நடுத்தரமான அளவுள்ள மரங்களாக,
28 மீட்டர் உயரம் வரை அதிகபட்சமாக வளரும்.
09. இதன் இலைகள்
கூட்டிலைகள், 40 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும், பூக்கள் கணுக்கள் மற்றும் கிளை நுனிகளில் பூங்கொத்துகளாக பூக்கும். பழங்களில் மூன்று அல்லது இரண்டு விதைகள் இருக்கும், அவை காவி நிறமாக இருக்கும்.
10. பட்டைகள்
5 முதல் 6 மில்லி மீட்டர் பருமனாக இருக்கும், காவி
நிறமாக இருக்கும், சொரசொரப்புத்
தன்மை இல்லாமல் இருக்கும், பட்டைகள் ஒழுங்கின்றி வெடிப்புகளுடன் தானாக
உரியும்.
11. பிப்ரவரி
முதல் ஜூலை வரையான காலகட்டங்களில் இந்த கானமயிலை மரங்கள் பூக்களை பூத்து காய்க்க
தொடங்கும்.
12. மேற்கு
தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் இந்த மரங்கள் அழிந்து வரும் மரங்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
13. செப்பிண்டேசி
குடும்பத்தைச் சேர்ந்த மரம் இது, பெரிய தாவரக் குடும்பம்
என்று சொல்லுகிறார்கள்.
14. இந்த
தாவரக் குடும்பத்தில் 138 பெரும் பிரிவுகளும் 1858 சிறு தாவர இனங்களும் உள்ளன.
15. கேரம்போலா
மற்றும் லிச்சி ஆகிய பழ மரங்களும் இந்த தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை தான்.
16. கானமயிலை
மரங்களின் பயன்கள் குறித்து, அடிப்படையான ஆய்வுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை, என்கிறார்கள்.
17. ஆனால்
இந்த தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் மற்றும் அதன் பழங்கள் பயன் தரக்கூடியவை,
பெரும்பாலும் இவற்றின் பழங்கள் உணவாக பயன்படுபடுத்துகிறார்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment