Wednesday, September 6, 2023

INDIAS NAME CHANGE - என்ன பெயர் இந்தியாவுக்கு – வைக்கலாம் ?

என்ன பெயர் இந்தியாவுக்கு –  வைக்கலாம் ?


இந்தியா என்றால் எதிர்கட்சிகளின் கூட்டணி பெயராக உள்ளது. பாரத் என்றால் பாரதீய ஜனதாவை ஞாபகப்படுத்துகிறது. என்ன செய்யலாம் ?. பேசாமல் ஜம்பூத்வீபம் என்னும் இந்தியாவின் பழையபெயரை  வைத்துவிடலாம். இந்த கட்டுரையைப் படித்தால் நீங்களும் இதற்கு சரி என்பீர்கள் !

 1, இந்தியாவிற்கு பாரத் என்ற பெயரை சூட்டப் போகிறார்கள் இந்த செய்தி நாடு முழுவதும் தீயைப் போல பரவி வருகிறது. பத்திரிக்கைகளில், சமூக வலைத்தளங்களில் எல்லாம் இதுதான் பெரும் பேசு பொருளாக எழுது பொருளாக இருக்கிறது. என்று பார்க்கலாம்.

2. ஜி 20 நாடுகளுக்கான உறுப்பினர்களுக்காக ஒரு விருந்து ஒன்றினை இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த உறுப்பினர்களுக்கு எல்லாம் ஒரு வரவேற்பு அழைப்பினை அனுப்பி உள்ளது அந்த அழைப்பில் இந்திய அரசு என்று போடுவதற்கு பதிலாக பாரத் அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

3. இந்திய நாட்டின் பெயரை பாரதிய ஜனதா அரசு பாரத் என்று மாற்றுவதாக முடிவு செய்துவிட்டது இதற்கான ஒப்புதலை பெற வேண்டியது மட்டும் தான் பாக்கி.  இதில் எதுவும் சிக்கல் இல்லை. இது சுலபமாக முடிந்து விடும் என்று சொல்லுகிறார்கள்.

4. 1949 ஆம் ஆண்டு இந்திய அரசின் சட்ட அமைப்பின்படி, இந்தியா என்ற பெயரும் பாரத் என்ற பெயரும் நமது நாட்டிற்கு உரிய பெயர்களாக தெரிவு செய்து அனுமதிக்கவும் அங்கீகரிக்கவும் செய்யப்பட்டுவிட்ட்து. 

அந்த சமயத்திலேயே அந்த காலகட்டத்திலேயே பாரத் என்ற பெயரும் இந்தியா என்ற பெயரும் ஹிந்துஸ்தான் என்ற பெயரும் அதிகாரப்பூர்வமாக அதிகமான அளவில் வழக்கில் இருந்து வந்துள்ளது.

அரசியல் சட்டமாவதற்கு முன், 1949 ஆம் ஆண்டில்  சிலர் பாரத் என்ற பெயரையும் சிலர் இந்தியா என்ற பெயரையும் சிபாரிசு செய்தார்கள் ஆனால் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க இரண்டு பெயர்களையும் அனுமதித்தார்கள் அங்கீகரித்தார்கள். ஆனாலும் கூட இந்தியா என்ற பெயரையே இதுவரை நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். உணர்ச்சிகள் கொப்பளிக்கும்போது மட்டுமே பாரத் மாதா கி ஜே” என்று சிக்கனமாக பயன்படுத்தினோம். 

5. “பாரத் என்ற பெயர் நமது இந்திய நாட்டிற்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பெயராக இருந்தாலும் தற்போது அதனை இந்தியா என்ற இடத்தில் பாரத் என்று மாற்றம் செய்ய இந்திய அரசியல் சட்டத்தில் ஆர்டிகிள் எண் ஒன்றின்படி, மாற்றங்களை செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தை மன்றத்தில் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுதான் தற்போது பாக்கி.

இந்த சமயத்தில் நாம் இந்தியாவிற்கு ஏற்கனவே இருந்த பெயர்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். 

பாரத் என்ற பெயர் பற்றியும் அந்த நாட்டின் பூகோள பரப்பு பற்றியும் விஷ்ணு புராணத்தில் தரப்பட்டுள்ளது. அதில் கூட பாரத் அல்லது பாரதம் என்ற நாடு ஜம்பு தீபம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பொருள் ஜம்பு மரங்கள் நிறைந்த ஒரு தீவு என்று பெயர். ஜம்பு மரங்கள் என்றால்  சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா நாவல் மரங்களைத் தான் குறிக்கும்.

ஒரு காலத்தில் இந்த பகுதியில் நாவல் மரங்கள் அதிகம் இருந்ததால் இதனை ஜம்புத் தீவு என்று குறிப்பிட்டார்கள். தற்போது உள்ள நிலையில் இந்தியாவின் மிகவும் பழமையான பெயர் என்பது இதுதான். இந்தியாவிற்கு பழைய பெயரை பாரம்பரியமான பெயரை வைக்க வேண்டும் என்றால் ஜம்பு தீபம் என்றுதான் வைக்க வேண்டும். 

6. நம்மிடையே உள்ள 18 புராணங்களில் மூன்றாவது புராணம் இந்த விஷ்ணு புராணம். இது இந்த பிரபஞ்சத்தின் தோற்றம், வராக அவதாரம், தேவ மனித படைப்புகள்,  வர்ணாசிரமம் (உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி), ஆகியவற்றை விளக்கமாக சொல்லும் நூல் து. இதில் 23 ஆயிரம் பாடல்கள் உள்ளன. மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி கூறிய பதில்களாக  தொகுக்கப்பட்டுள்ள புராணம். இதில் தான் ஜம்பூத்தீப்” பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

7, இந்தியாவிற்கு ஏற்கனவே வழங்கி வந்த பழைய பெயர்கள், பாரம்பரிய பெயர்கள் ஐந்து என்று விரல் விடுகிறார்கள், அவை பாரத், ஆரியவர்தான், ஹிந்துஸ்தான், டெஞ்சிக்யூ மற்றும் ஜம்புத்வீப்.

8,”ஜம்பூத்வீப் இந்த பெயர் அசோகர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லுகிறார்கள், அசோகர் வாழ்ந்த காலகட்டம் மூன்றாம் நூற்றாண்டு.அப்போது எல்லோரும் ஜம்பூத்வீப்என்றுதான் சொல்லுவார்கள்  

 

9, ”ஜம்பூத்வீப்”,  இதனை ஆங்கிலத்தில் கிரேட்டர் இந்தியா என்று குறிப்பிட்டார்கள். இதை நாம் இந்நாளில் இந்திய துணை கண்டம் என்று சொல்லுகிறோம். இப்போது நாம் தெற்கு ஆசியா தென்கிழக்கு ஆசியா என்று சொல்லப்படும் பகுதிகளில் எல்லாம் இந்திய கலாச்சாரம் பரவி இருந்தது இப்போது கூட அங்கு போய் மகாபாரதம் ராமாயணம் பற்றி என்ன கேட்டலும் சொல்லுவார்கள்.

10. ”ஜம்பூத்வீப் என்று சொல்லக்கூடிய பரந்துபட்ட இந்த நிலப்பரப்பின் பகுதியாக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகியவை இருந்தன. இதைத்தான் நாம் பரந்துபட்ட இந்தியா என்றும் இந்திய துணை கண்டம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தோம்.

11, தென்கிழக்கு ஆசியாவில் கிழக்கு தைமூர் மற்றும் இந்தோனேசியாவின் தெற்கு பகுதியும் இதில் அடங்கும். 

12.இந்தியாவின் பரந்துபட்ட  நிலப்பரப்பை கணக்கில் கொண்டு இதற்கு ஹை இந்தியா, கிரேட்டர் இந்தியா, இந்தியா மேஜர், எக்ஸ்டிரியர் இந்தியா, இந்தியா அக்குவோசா,  (HIGH INDIA GREATER INDIA,INDIA MAJAOR, EXTERIOR INDIA, INDIA AQUOSA, LESSER INDIA)என்றும் பெயரிட்டு அழைத்து வந்தார்கள்.

13,  சோமாலியா உட்பட செங்கடலை சுற்றியுள்ள பகுதிகளும் தெற்கு அரேபியா மற்றும் எத்தியோப்பியா ஆகியவை கூட நமது ஜம்பூத்வீப்ன் ஒரு பகுதியாக இருந்தன. அந்த காலகட்டத்தில் நைல் நதி இந்தியாவில் பிறக்கிறது (Nile rises in India) என்ற ஒரு வாக்கியம் பிரபலமாக இருந்தது. அபிசீனியா எனும் நாடு லேஸ்சர்இந்தியா (LESSER INDIA)என்பதன் ஒரு பகுதியாக இருந்தது என்று சொல்லுகிறார்கள். 

14, இப்போது எந்த பகுதிகள் அல்லது எந்த நாடுகள் எல்லாம் கிரேட்டர் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்று பார்க்கலாம். இமயமலை பகுதி பஞ்சாப், ஹிந்துஸ்தான், பர்மா,  இந்தூர், சைனா, சுந்தாஐலண்ட்ஸ், போர்னியோ, செலிபஸ், பிலிப்பைன்ஸ், இவை எல்லாம் கிரேட்டர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தன.

15, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இந்த பகுதிகளில் இருந்த நாடுகளில் எல்லாம் இந்திய கலாச்சாரம், மற்றும் புத்த மத கலாச்சாரம் வெகுவாக பரவி இருந்தது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயர் சொர்ணபூமி ஏர்போர்ட் (SWARNABHUMI). தென்கிழக்கு ஆசியாவின் சமஸ்கிருத பெயர் ஸ்வர்ணபூமிஸ்வர்ண தீப்  ஐலண்ட்ஸ்(SWARNADEEP ISLANDS).

 

16.மகாபாரதம் மற்றும் ராமாயணம் தொடர்பான கலாச்சார ரீதியிலான தாக்கங்கள் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்பட்டன. இந்திய கலாச்சாரத்தோடு ஓரளவு இணையாக புத்த மத கலாச்சாரமும் இந்த நாடுகளில் பரவி இருந்தது. இது 13 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. 

17, இதுவரை நாம் பார்த்த இந்தியாவின் பல விதமான பெயர்களில்ஜம்பூத்வீப் என்பது தான் மிகவும் பழமையான பெயர். ஜம்பு என்பது ஒரு பழ மரத்தின் பெயர். அதைத்தான் நாம் தமிழில் நாவல் என்று சொல்லுகிறோம்.  இதனை ஆங்கிலத்தில் பிளாக் பெரி (BLACK BERRY) என்று சொல்லுகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் சைசியம் குமினி  (SYZYGIUM CUMINI)என்பது.

 இதில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா ? இந்தியாவிற்கு பெயரை மாற்றுவது என்றால்பாரத்என்று மாற்றலாமா அல்லதுஜம்பூத்வீப்என்று மாற்றலாமா அல்லது இந்தியா என்று இருக்கும் பெயரை அப்படியே வைத்துக் கொள்ளலாமா ? உங்கள் கருத்தினை சொல்லுங்கள்.

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

2 comments:

V.Sambasivam said...

I have gone through entire article. It is very informative. I really appreciate the author of the article for bringing out all information about India. Reasons attributed for Barath is good.The entire issue should not be viewed as political and reality to be considered. I feel India is known to the world and Bharath may be known to only Indians.Even though Madras was replaced by Chennai the High court Chennai not changed as Chennai High court. it retains Madras High Court for the reasons it is known to the entire world.So I prefer INDIA. V.Sambasivam.

siddick said...

Yes. I do agree. Name change is not a critical issue for us, Indians. It's the timevfor leaders to put forth India's traditional culture, goodness of scientific Indian, religious tolerance of Indian citizen, unity in diversity to the world through G20... Don't pull down the good name earned to India by the past leaders. If the present leaders haven't got any history of freedom fight,fight for humanities let keep atleast the good name hardly earned.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...