செருப்புகள் ஜாக்கிரதை |
ஒரு திருமணத்திற்கு போகிறீர்கள் ! ஒரு நிச்சயதார்த்தத்திற்கு
போகிறீர்கள் ! ஒரு பிறந்தநாள் விழாவிற்கு போகிறீர்கள் ! ஒரு மஞ்சள் நீர் சுப
சடங்கிற்கு போகிறீர்கள் ! புதுமனை புகு விழாவிற்கு போகிறீர்கள் ! என்று
வைத்துக்கொள்ளுங்கள்.
எங்கு போனாலும் நீங்கள் போட்டுக் கொண்டு போகும் செருப்பு விலை
உயர்ந்த சிறப்பாக இருந்தால், விசேஷம் முடிந்து வரும்போது அதே செருப்போடு திரும்பி வருவது கஷ்டம் !
வேறு ஏதாச்சும் நைந்து போன அல்லது பிய்ந்து போன செருப்பைத் தான் போட்டுக் கொண்டு வர
வேண்டி இருக்கும். சில சமயங்களில் அதுவும் கூட கிடைக்காது ! வெறுங்காலோடு
வர வேண்டி இருக்கும்.
இது மாதிரி விழாக்களுக்கு செல்லும்போது நமது விலை உயர்ந்த
செருப்புகளை பாதுகாப்பாக கொண்டு வருவது எப்படி என்று சொல்லும் முல்லாவின் கதை இது.
அதற்கு முன் இது மாதிரி எனக்கு ஏற்பட்ட
ஒரு அனுபவத்தை சொல்கிறேன் கேளுங்கள். தருமபுரியிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்து
இறங்கி நடந்தேன்.
நடக்கும்போது ஏதோ வித்தியாசமாய் இருந்தது என்ன என்று எனது கால்களை
பார்த்தேன் ஒரு செருப்பு புதியதாய் இருந்தது அதை வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை
இன்னொரு செருப்பை பார்த்தேன் அதிர்ச்சியாக இருந்தது அது அரதப் பழசாக இருந்தது.
என்ன நடந்திருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்தேன். பிறகுதான்
எனக்கு புரிந்தது பஸ்ஸில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒருவரின் செருப்பு
ஒன்றையும் என்னுடைய செருப்பு ஒன்றையும் மாற்றி மாட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.
அவரும் அப்படியே செய்திருப்பார் என்பது எனக்கு புரிந்தது.
உடனடியாக அதனை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் ஒரு 399 ரூபாய் கொடுத்து புது “பேட்டா” செருப்பு வாங்க மனசு இல்லை அந்த அளவு கையில் காசும் இல்லை. அதனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்
ஒரு காலில் புதுசும் இன்னொரு காலில் பழசுமாக போட்டுக் கொண்டு அலைந்தேன். இது உண்மை கதை.
இப்போது, முல்லாவின் கதைக்கு
வருவோம். முல்லா அவர்கள் ஊரில் முக்கிய பிரமுகர் என்பதால் அடிக்கடி கல்யாணம்
காட்சி என்று போய்க்கொண்டிருப்பார். முல்லா எப்போதும் விலை உயர்ந்த செருப்புகளையே
அணிந்திருப்பார்.
அது மட்டுமல்ல 100 ஜோடி செருப்பு இருக்கும் இடத்தில் முல்லாவின் ஒரு ஜோடி செருப்பை நடுவில் வைத்தால் ஒரே நொடியில் இதுதான் முல்லாவின் செருப்பு என்று
கண்டுபிடித்து விடலாம். அப்படி ஒரு வகை சூப்பர் செருப்பை முல்லா எப்போதும் அணிந்திருப்பார்.
ஒரு சமயம் தொடர்ச்சியாக அவர் சென்ற மூன்று திருமண விழாக்களிலும்
மண்டபத்திற்கு வெளியே விட்டுச் சென்ற செருப்புகள்
மாயமாய் மறைந்து விட்டன. அதற்கு பதிலாக தேய்ந்து ஓய்ந்து போன பழசான ஒரு ஜோடி செருப்பு கூட
முல்லாவுக்கு கிடைக்கவில்லை வெறும் காலுடன் நடந்து வர வேண்டி இருந்தது.
கல்யாண விழாக்களுக்கும் போக வேண்டும் நல்ல செருப்பும் போட்டுக்
கொண்டு போக வேண்டும் அவற்றை யாரும் திருடிக் கொண்டும் போகக்கூடாது அதற்கு என்ன
செய்வது என்று நாள் கணக்கில் யோசித்தார் முல்லா. செருப்பை போட்டுக் கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்ல அனுமதி
மறுக்கிறார்கள். முல்லாவுக்கு அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.
இப்போது முக்கியமான கல்யாணத்திற்கு அவர் போகவேண்டி
இருந்தது.
முல்லா என்ன செய்தார் தெரியுமா மண்டபம் வரை செருப்பை போட்டுக் கொண்டே
போனார். அங்கு போனதும் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தார்.
ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த அழகான அகலமான காகிதத்தில் இரண்டு
செருப்பையும் வைத்து பரிசு பொருட்களை ‘பேக்கிங்’ செய்வது போல மடித்தார். திருமணங்களில்
பரிசு தரும் கிஃப்ட்பேக் மாதிரி பார்க்க அழகாக இருந்தது.
இவரை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தார். நல்லவேளை யாரும் இவரைப் பார்க்கவில்லை அப்படியே
அதனை கக்கத்தில் வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டார்.. இப்போது திருப்தியாக
இருந்தது.
திருமண விழாவில் சகஜமாக கலந்து கொண்டார் முல்லா. தெரிந்தவர்களிடம்
எல்லாம் சகஜமாக பேசினார். விருந்தில் கலந்து
கொண்டார். பதட்டமில்லாமல் இருந்தார். அந்த “கிஃப்ட்பேக்” மாதிரி இருந்த . பரிசுப்பொருள் மாதிரி பேக் செய்த செருப்பு பத்திரமாக அவர் கக்கத்தில்
இருந்தது.
அப்போது ஒருத்தர் முல்லாவிடம் வந்தார்,.
“ கிஃப்ட்பேக் கொண்டு வந்திருக்கிங்க இன்னும் மணமக்களை பாக்கலியா ? என்றார்
“ ஆமாம் .. கிஃப்ட்பேக் .. இன்னும்
மணமக்களை பாக்கலை .. பாக்கணும் ..” என்றார் எரிச்சலுடன்
முல்லா.
“வாங்க நான் உங்களை மணமக்கள் கிட்ட
கூட்டிகிட்டு போறேன். வரிசல்ல நின்று போக முடியாது.. கூட்டம் அதிகம் ..நான் வேற வழியா கூட்டிகிட்டு போறேன்” என்றார்.“
“இல்ல இல்ல நானே போயிக்கறேன்..” என்றார் முல்லா தனது கோபத்தை
வெளிக்காட்டாமல்.
“சரி சரி நீங்களே போங்க..ஆனா உங்க
கிஃப்ட் பேக் ரொம்ப அழகா இருக்கு.அதுல என்னா வச்சிருக்கிங்க... “வாங்கி பார்ப்பது போல முல்லாவின் அருகில் வந்தார்.
“அதுல ஒரு புஸ்தகம் வச்சிருக்கேன்..” அமைதியாகச் சொன்னார்.
“ஓ புஸ்தகம்மா..ஆமா மணமக்களுக்கு
புஸ்தகம் குடுக்கறது பெரிய விஷயம்.. ஆமா என்ன புஸ்தகம் .. ?” அவன் அவ்வளவு சுலபமாக முல்லாவை விடுவதாகத்
தெரியவில்லை.
”டேய் என்ன புஸ்தகமா இருந்தா என்னடா, மூடிட்டு போடா .. “ என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. “அது வேற ஒண்ணூம்
இல்ல..அது ஒரு தத்துவப் புஸ்தகம்..” கொஞ்சம் தடுமாறியபடி
சொன்னார் முல்லா.
“ஓகோ தத்துவமா எனக்கு தத்துவம்னா ரொம்ப
புடிக்கும்..என்ன தத்துவம் ?
கோபமாகச் சொன்னார், “உபத்திரத் தத்துவம் “
”நல்ல தத்துவமா இருக்கும்போல இருக்கு..
ஆமா எந்த கடையில வாங்கினீங்க ?
“செறுப்புக் கடையில வாங்கினேன்”
” செறுப்புக் கடையிலயா ?”
”ஆமாம் செறுப்புக்
கடையிலதான்..வேணுமின்னா பிரிச்சு காட்டட்டுமா ?” என்றார் கோபமாக முல்லா.
“வேண்டாம் வேண்டாம் .. நான் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் அந்த
ஆள்.
இனியும் இந்த “கிஃப்ட்பேக்குடன்” இந்த மண்டபத்தில்
அலைவது ஆபத்து என்பது புரிந்தது.
ஒரு முடிவுடன் கல்யாண மண்டபத்தை
விட்டு வெளியே வந்தார், “கிப்ட் பேக்கை” பிரித்தார். செருப்புகளை வெளியே எடுத்து காலில் மாட்டிக் கொண்டு நடந்தார்.
மணமக்களை சந்தித்து வாழ்த்து சொல்லாமல்
விருந்தில் மட்டும் கலந்து கொண்டு வந்தது என்னவோ போல் இருந்தது. ஆனால் செருப்பை
பத்திரமாக கொண்டு வந்ததில் முல்லாவுக்கு மகிழ்ச்சி தான்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment