Thursday, September 28, 2023

HOW MANY COUNTRIES CAPTURED BY BRITISH ? 4. அவணி அம்பத்தாறு தேசங்களை பிடிச்சது இங்கிலாந்து

 

BRITISH CAPTURED
56 COUNTRIES


 இந்தியா என்றால் அன்றும் இன்றும்  ஒரு விவசாய நாடு, ஆனால் யூ கே  நாடு பிடிப்பதை தொழிலாகக் கொண்ட நாடு என்று சொல்லலாம், இல்லையென்றால் 56  நாடுகளை பிடிப்பது என்பது சாதாரண விஷயமா ? இந்த கட்டுரையைப் படியுங்கள், நான் சொல்லுவது சரியா தப்பா என்று புரியும். 

இப்போது நானும் என் மகன் ராஜாவும் இருவரும் ஒயிட்லி  வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம் அப்போது என் மகன் என்னிடம் கேட்டான், “ காமன்வெல்த் நாடுகள்   என்கிறார்களே அது பற்றி உங்களுக்கு தெரியுமா ?”

 “அடிக்கடி கேட்டு இருக்கிறேன் பேப்பரில் படித்திருக்கிறேன் அப்படின்னா என்னன்னு எனக்கு தெரியாது “ 

சில நாட்டு கொடிகள்ல யூகே நாட்டு எம்பலம் இருக்கும் பார்த்து இருக்கீங்களா  ?”

ஆமாம்.. 

யுகே நாட்டு எம்பலம் எந்த நாட்டு கொடிகள்ல இருக்கோ அதெல்லாம் காமன்வெல்த் நாடுகள் அதாவது ஒரு காலத்தில் யுகேவின் அரசாட்சியின் கீழ் இருந்த நாடுகள் என்று அர்த்தம்..இதில் 56 நாடுகள் இருக்கு

உலகத்துல எத்தனை நாடுகளைப் பிடிச்சு இருக்காங்கன்னு பாருங்க..ஒரு காலத்துல இதே தொழிலா இருந்திருக்காங்க.

 இப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்ததுகாலனியா இருந்த எல்லா நாடுகளும் காமன்வெலத்தில் உறுப்பினரா இருக்கணுமா ? “

 அப்படி இல்ல விருப்பம் இல்லன்னா இந்த கூட்ட அமைப்பிலிருந்து விலகிக்கலாம் அயர்லாந்தும்  ஜிம்பாப்வே நாடும் அந்த மாதிரி விலகிய நாடுகள் தான்.

 இது நாள் வரை காமன்வெல்த் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று நினைக்கத் தோன்றியது. அதன் பிறகு யுகே பற்றிய சில முக்கியமான தகவல்களை எல்லாம் திரட்டினேன்.

அதன்படி காமன் வெல்த்தின் முக்கிய நாடுகள், யுனிட்டெட் கிங்டம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆஃப்ரிக்கா, ஐரிஷ் ஃப்ரீ ஸ்டேட், மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட்.

இன்றும் முருங்கைக்காய் உட்பட இதர மளிகை சாமான்களை எல்லாம் வாங்கி எடுத்துக் கொண்டு  டெஸ்கோ என்னும் பெருங்கடையில் இருந்து  காரில் புறப்பட்டோம்.

என் மகன் கொஞ்சம் கார் பைத்தியம் அப்போது அவன் ஒரு டொயோட்டா கார் வைத்திருந்தான். அவன் நன்றாக கார் ஓட்டுவான் கார் ஓட்டுவதற்கு அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும் ஒரு நாளில் 500 முதல் 600 கிலோ மீட்டர் கூட அசராமல் ஓட்டுவான்.

அதேபோல புதிய இடங்களுக்கு போவது என்றால் என்னைப் போலவே அவனுக்கும் மிகவும் பிடிக்கும். இப்போது அவன் இங்கு லண்டனில் வேலை பார்க்கிறான் இதற்கு முன்னால் அமெரிக்காவில் வேலை பார்த்தான்.  

 எனக்கு என்ன பிடிக்கும் என்று அவனுக்கு தெரியும். அதனால் அதற்கு தகுந்த மாதிரி நான் அங்கு செல்லும்போது, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல நாங்கள் ஊர் சுற்ற ஆரம்பிப்போம்.  

அவனும் நிறைய புது புது தகவல்களை தெரிந்து வைத்திருப்பான். அந்தந்த  இடங்களுக்கு செல்லும்போது நான் அது பற்றி அவனிடம் கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள்வேன்.

 அதன் பின்னர் கூகுளில் பிரவுஸ் பண்ணி பல செய்திகளையும் நான் தெரிந்து கொள்வேன். அது மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நான் தெரிந்து கொண்ட செய்திகளை இரவு எந்நேரம் ஆனாலும் அவற்றை எழுதி பதிவு செய்து கொள்ளுவேன்.

பிரிடீஷ் அரசு ஆட்சியின்  கீழ் ருக்கும் 56 நாடுகள் மட்டும் காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர்களாக இருக்க முடியும். இந்தியாவிற்காக அதன் பின்னர் சட்டத்தை கொஞ்சம் மாற்றி அங்கத்தினராக  சேர்த்தார்கள். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு, இளைஞர்கள் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகியவற்றின் மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதுதான்  இந்த காமன்வெல்த்.  

 இப்போது யூகே என்றால் என்ன என்று பார்ப்போம்,  இங்கிலாந்து, வேல்ஸ், நார்த் அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நான்கு நாடுகளில் கூட்டுப் பெயர் தான் யுகே என்னும் யுனைடெட் கிங்டம்.

 யூகே வில் வசிப்பவர்களில் 46 % கிறித்துவர்கள், மதம் அல்லாதவர்கள் 37 %, முஸ்லீம்கள் 6 சதம், இந்துக்கள் 2 சதம் புத்த மததினற் 2 சதம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் யூ கே வில் கலவையாய் வசிக்கிறார்கள்.

2011 ம் ஆண்டு கணக்குப்படி யூகே வில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 51 ஆயிரத்து 862. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளில் வாழும் இந்தியர்களின் கணக்கு இது.

இது பயணக்கட்டுரை என்றாலும் யூகே என்றால் என்ன ? காமன்வெல்த் என்றால் என்ன ? இந்தியா எப்படி அத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்றேல்லாம்  நானும் தெரிந்துகொண்டு உங்களுக்கும் சொல்லியிருக்கிறேன், உங்கள் கருத்துக்களை வலைத்தளத்திலேயே பதிவிடுங்கள். நன்றி வணக்கம்.

 

 

 

 





 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...