Monday, September 4, 2023

HEADACHE TREE A PRIMIER HERB 327. கூழ் முன்னை முழுமையான மூலிகை மரம்

கூழ் முன்னை முழுமையான
மூலிகை மரம்


கூழ்முன்னை மரம் முக்கியமாக ஒரு மூலிகை மரம்
, இந்தியாவில் தமிழ்நாடு ஆந்திரா ஒரிசா ஆகிய மாநிலங்களிலும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், பரவி இருக்கும் மரம்.  சர்வதேச அளவில், ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா  போன்ற கண்டங்களைச் சேர்ந்த நாடுகளிலும் பரவி உள்ளதுஏறத்தாழ இரண்டு டஜன் நோய்களை கட்டுப்படுத்தும் மரம்.

01.தாவரவியல் பெயர்: பிரேம்னா கொரிம்போசா (PREMNA CORYMBOSA)

02.தாயகம்: இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா 

03. தாவரக் குடும்பம்:  லேமியேசி (LAMIACEAE)

04. பரவி இருக்கும் இடங்கள்; தமிழ்நாட்டில் கட கடலூர் காஞ்சிபுரம் ராமநாதபுரம் புதுக்கோட்டை திருவள்ளூர் திருச்சிராப்பள்ளி திருவண்ணாமலை வேலூர் மற்றும் விழுப்புரம்.

 05. இந்தியாவில் அசாம் மேகாலயா மற்றும் நேபாளம் 

06. சர்வதேச அளவில் ஆசியாவில் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

 07. 1000 அடிக்கு கீழ் உள்ள வறண்ட சரிவுகளில் மற்றும் சமவெளிகளில் உள்ள அழிவுற்ற காடுகள் மற்றும் முட்காடுகளில் இந்த மரங்கள் பரவி உள்ளன.

08. இதன் இலைகள் மற்றும் வேர்கள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ முறைகளில், பல்வேறு   நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

09. மொழிப் பெயர்கள்

தமிழ்: சீரிதலைநல்ல பின்னை, ஆரணி, பசுமுன்னை (SEERI THALAI, NALLA PINNAI, ARANI, PASUMUNNAI)

ஒரிசா:  அமுதா பேட் (AGUYA BAT)

 ஹிந்திஅகேதா, ஆரணி (AGETHA, )

 தெலுங்கு:  போமென்ட், கப்புநெல்லி (POMENT, GABBU NELLI) 

சமஸ்கிருதம்: அக்கினி பிஜாக்கா, ஆரணி (AGGINI BIJAKKA, ARANI)

09. பரவி இருக்கும் இடங்கள், தமிழ்நாட்டில் கடலூர் காஞ்சிபுரம் புதுக்கோட்டை இராமநாதபுரம் திருவள்ளூர் திருச்சிராப்பள்ளி திருவண்ணாமலை விழுப்புரம் வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள்.

10. ஆந்திர பிரதேசத்தில் கர்னூல், கடப்பா, சித்தூர் ஆகிய மாவட்டங்களிலும், ஒடிசா மாநிலத்தில்கேந்திரப்பாரா மாவட்டத்திலும் இந்த மரங்கள் பரவி உள்ளன. 

11. குறிப்பாக மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் அடிவாரங்களிலும் வறண்ட காடுகளிலும் இந்த மரங்களை பார்க்கலாம்.

12. பிரேம்நா குடிபோசா என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட இந்த மரத்தை தமிழில் கூவும் உன்னை என்று சொல்லுகிறார்கள் முக்கியமாக இதனை ஒரு மருத்துவ மரம் அல்லது மூலிகை மரம் என்று சொல்லலாம்.

13. பொது பெயர்கள்

மகாமிடி (MAHAMIDI)

எருமை முன்னை (ERUMAI MUNNAI)  

பசுமுன்னை (PASU MUNNAI)  

ஹெட் ஏக் ட்ரீ (HEAD ACHE TREE)  

அக்கினிபிஜாக்கா (AGNI BIJAKKA) 

14.இதன் வேர்களில் இருந்து எடுக்கும் கஷாயத்தை கொடுப்பதன் மூலம் முதியோரின் மூட்டு வலியை குணப்படுத்துகிறார்கள்.

15. உன்னை இலைகளின் குடிநீரை சாப்பாட்டுக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதற்கும் வாயு தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

16. கூழ்முன்னை பட்டைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தலாம், இந்த மரத்தின் இலைகள், பட்டைகள், மரக்கட்டைகள் மற்றும் மருந்து வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

17.ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோ மலேசிய பகுதிகள் முதல் பசுபிக் வரை, மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய இடங்களில் சர்வதேச அளவில் கூழ் முன்னை மரங்கள் பரவியுள்ளன.

18. கூல் முன்னை மரங்கள் பசுமை மாறா சிறு மரங்கள் 1.8 மீட்டர் உயரம் வரை வளரும் இலைகள் இரண்டு புள்ளி ஒன்பது முதல் 9.5 சென்டிமீட்டர் வரை நீளமாக அகலமாக இருக்கும்.

19. பூக்கள் இளம் பசுமை நிறமாக 1.5 முதல் 3.3 மில்லி மீட்டர் நீளமாக, பூங்கொத்துக்களாக இருக்கும்இவை  10 முதல் 20 சென்டிமீட்டர் குறுக்களவு உடையவைகளாக இருக்கும்.

20. கூழ்முன்னை மூலிகை மரத்தினை பயன்படுத்தி பாரம்பரிய மருத்துவ முறைகளில் என்னென்ன  நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று இந்த அட்டவணையைப் பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள்.

1. பொதுவான பலவீனம் (GENERAL DISABILITY)

2. தசை நரம்புகள் ரெண்டாங்கல் மூட்டுக்கள் குறுத்து எலும்புகள் தண்டுவடத்தின் டிஸ்க் போன்றவற்றை பாதிக்கும் நோய்கள்.(MUSKILO SKELETAL DISORDERS).

3.நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் (NEURALGIA)

4. முடக்கு வாதம் அல்லது சரவாங்கி (RHEUMATOID ARTHRITIS)

5. ரத்த சோகை (Anaemia)

6.  மூலம் ( piles)

7. வாய்வு ( Flatulant)

8 மலச்சிக்கல் ( Constipation)  

9. ஜலதோஷம் (Common cold) 

10 இருமல் (Cough) 

11.மூச்சுக்குழல் வீக்கம் (Bronchitis)

12 பசியின்மை ( loss of appetite) 

13 தொழுநோய் ( leprosy) 

14 மணல் வாரி அம்மை ( measles) 

15 சின்னம்மை ( smallpox) 

16 பெரியம்மை (Varioloid) 

17 வெடிப்புகள் (Eruptions) 

18 அக்கிசெஞ்சருமம் (Erisipheles) 

19 தொழு நோய் (Leprosy)

20 தோல் நோய்கள் ( skin diseases) 

21 நுரையீரல் ( lung diseases) 

22 கல்லீரல் கோளாறுகள் ( liver disorder)

23. சிறுநீரக நோய்கள் (Kidney disorder)

24. சக்கரை நோய் (Diabetes)

25. குன்மம் (Dyspepsia)

26. சிறுநீரக நோய்கள் (Urithral and kidney diseases)

கூழ்முன்னை மரங்கள் மூலமாக மருத்துவ பயன் நீங்கள் பெற்றிருந்தால் அது பற்றி உங்கள் கருத்தினை எனக்கு சொல்லுங்கள் நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...