Wednesday, September 20, 2023

GETTING HONEY OR MONEY BOTH ARE BRIBE - MULLA STORY 3. உப்பு வாங்கினாலும் டப்பு வாங்கினாலும் தப்புதான்

 

3. உப்பு வாங்கினாலும் டப்பு வாங்கினாலும் தப்புதான்  

முல்லா அவர்களின் கதைகளை படித்திருப்போம் ஆனால் அவர் யார் எப்படி இருப்பார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தார் இது பற்றி எல்லாம் நமக்கு பெரும்பாலும் தெரியாது ஆகையால் இந்த பதிவில் இந்த கதையை சொல்வதற்கு முன்னால் அவரைப் பற்றி சில செய்திகளை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

முல்லா என்றால் அறிஞர் என்று பொருள். இவர் இயற்பெயர்நஸ்ருதீன் ஹாட்ஜாஎன்பது. அடிப்படையில் இவர் ஒரு முஸ்லிம் 13 ஆம் நூற்றாண்டில் துருக்கியில் வாழ்ந்தவர்.

அவர் தனது வாழ்நாள் முழுக்க கதைகள் நாடகங்கள் என்று எழுதிக் கொண்டே இருந்தார். இவர் எழுதியவை அத்தனையும் அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை.

அவருடைய காலகட்டத்தில் இருந்த சமூகப் பிரச்சனைகளை வெளிச்சம் போட  தனது அறிவை பயன்படுத்தினார். நையாண்டித்தனமான எழுத்தும் கேலியும் கிண்டலும் ஆன பேச்சும் அதற்கு உறுதுணையாக இருந்தன.

முல்லாவின் கதைகள் அனைத்தும் அவருடைய புத்திசாலித்தனத்தை வெளிச்சம் போடும் கதைகளாக இருக்கும். அவர் தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான கதைகளை எழுதியுள்ளார்.

முல்லாவின் கதைகளும் முல்லாவும்  பல நாடுகளில் பிரபலம். அவை ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கிபெர்சியா அரேபியா மற்றும் ஆப்பிரிக்கா.

நஸ்ருதீன் ஹாட்ஜா  என்பதில் ஹாட்ஜா என்றால் ஆசிரியர்.

அவருடைய முக்கிய அடையாளம் முகத்தில் வெள்ளை நிற தாடி தலையில் பெரிய தலைப்பாகை குதிரையின் பின்புறம் திரும்பியபடி உட்கார்ந்து சவாரி செய்யும் தோற்றம்.

 இப்போது இன்றைய கதையை பார்க்கலாம். 

ஒரு முறை துருக்கி மன்னர் காட்டுக்கு வேட்டையாட போனார். அவரோடு அவருடைய பரிவாரமும் சென்றது. அவர்களோடு முல்லாவும் உடன் சென்றார். அவர்களுக்கு சமைத்துப்போட என்று  ஒரு சமையல்காரர்கள் குழுவும் சென்றது.

ராஜா எப்போது வேட்டையாட போனாலும் இந்த குழு அவருடன் போகும் இந்த முறை கூடுதலாக அவர்களோடு சென்றது முல்லா மட்டும் தான்.

காட்டுக்கு போனதும் ஒரு கூடாரம் அமைத்தார்கள். சமையல் வேலைகளை தொடங்கினார்கள். சமையல் காரர்கள் சமையலுக்காக கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தார்கள். அப்போது சமையலுக்கு தேவையான உப்பு  மட்டும் கொண்டு வரவில்லை என்று தெரிந்தது. 

அத்துவான காட்டுக்கு நடுவே இருந்ததால் என்ன செய்வது என்று புரியவில்லை. மீண்டும் அரண்மனைக்கு போனால் தான் உப்பு கொண்டு வர முடியும். அல்லது இந்த காட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று உப்பு வாங்க வேண்டும்.

தலைமை சமையல்காரர் தயங்கித் தயங்கி மன்னரிடம் போய் உண்மையை சொன்னார்.எஜமான் மன்னிக்கணும் உப்பு கொண்டு வர மறந்துட்டோம். உப்பு கொண்டு வர யாராவது ஒரு  வீரரை  நீங்கதான் அரண்மனைக்கு அனுப்ப உத்தரவு போடணும்”.

எதற்கு அரண்மனைக்கு ஆள்.. அனுப்பனும். பக்கத்து கிராமத்துக்கு ஒரு சிப்பாயை அனுப்புங்க.. ராஜாவுக்குன்னு சொல்லுங்க.. கிராமத்துக்காரங்க சும்மாவே குடுப்பாங்க… என்று சொன்னான் மன்னன்.

மன்னன் இப்படி சொன்னதும் அருகில் இருந்த முல்லா முன்னாள் வந்து பணிவாக “மன்னிக்கணும் அரசே என்றார். உடனே மன்னன் சொல்லுங்கள் என்றார்.

அரசே உப்பு வாங்க செல்லும் சிப்பாயிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புங்க.. பணம் கொடுத்து உப்பு வாங்கி வர சொல்லுங்க .. மன்னனுக்கு என்று மக்களிடம் போய் இலவசமாக உப்பு வாங்கி வர வேண்டாம் அது உங்கள் மரியாதையைக்  கெடுக்கும்..” என்று சொல்லிவிட்டு மீண்டும் பணிவு காட்டினார்  முல்லா. 

ராஜா சிரித்துக் கொண்டே என்ன சொல்கிறீர்கள் முல்லா..  என்னுடைய மக்கள் அவுங்க ராஜாவுக்காக உப்பை கூட இலவசமாக தர மாட்டாங்களா என்ன ?”  என்றார்.

அதற்கில்லை அரசே ..எந்த பொருளையும் யாரிடமிருந்தும் இலவசமாக வாங்கினால் அது வாங்குபவர்களுக்கு மரியாதை இல்லை… மன்னராக இருக்கும் நீங்கள் உப்பு மாதிரியான ஒரு மலிவான பொருளை மக்களிடமிருந்து வாங்கினால் அவர்கள் என்ன நினைப்பார்கள் ? யோசித்துப் பாருங்கள்.

சிறிது நேரம் யோசித்த அரசர் முல்லாவிடம் கேட்டார்நான் மன்னன் என்ற முறையில் எனது மக்களுக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்கிறேன்.. அப்படி இருக்கும்போது உப்பு போன்ற ஒரு மலிவான பொருளை மக்கள் எனக்கு அன்பளிப்பாக தருவதில் என்ன தவறு ? “

நீங்கள் ஒருவருக்கு எந்த உதவியும் செய்யாமல் அவரிடம் அன்பளிப்பு பெறுவதில் தவறு இல்லை ஆனால் மக்களுக்கு உதவியை செய்துவிட்டு பிரதி உபகாரமாக அவர்களிடம் அன்பளிப்பு பெற்றால் அதற்கு பெயர் அன்பளிப்பு அல்ல கையூட்டு என்று அர்த்தம் அரசே அதனை லஞ்சம் என்று கூட சொல்லுகிறார்கள். 

அப்படி என்றால் மக்களிடம் அன்பளிப்பாக நான் உப்பு வாங்குவதும் கையூட்டு என்று ஆகுமா ? லஞ்சம் என்று ஆகுமா ?”

அரசே நீங்கள் உப்பு வாங்கினாலும் சரி ப்பு வாங்கினாலும் சரி அது கையூட்டு தான் அது லஞ்சம் தான்

முல்லா அவர்களே உப்பு என்றால் புரிகிறது ட்ப்பு என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் என்ன ?”

அரசே ..உப்பாக வாங்குவது என்றால் பொருளாக வாங்குவது என்று அர்த்தம்டப்புஆக வாங்குவது என்றால் அது பணமாக வாங்குவது என்று அர்த்தம்.

அது சரி முல்லா அவர்களே  நான் ஒரு ராஜா.. நான் தான் இவர்களை ஆட்சி செய்கிறேன்.. நான்தான் இவர்களுக்கு  நலத்திட்டங்களை  செயல்படுத்துகிறேன்.. அப்படி இருக்கும்போது நான் இவர்களிடம் வாங்குவது உப்பாக இருந்தாலும் டப்பாக இருந்தாலும் அது தவறா  

அரசே தாங்கள் ராஜாவாக இருந்தாலும் மந்திரியாக இருந்தாலும் உப்பு வாங்கினாலும் டப்பு ஆக வாங்கினாலும் அது லஞ்சம் தான்....”

நீங்கள் சொல்வதை நான் புரிந்து கொண்டேன் உடனே அந்த வீரனை அழைத்து வாங்கி வரும் உப்புக்கு எவ்வளவு விலையோ அதுபோல ஐந்து மடங்கு பணம் கொடுத்து அனுப்புங்கள் அந்த பணத்தை கொடுத்து விட்டு கிராமத்தில் இருந்து உப்பு வாங்கி வரச் சொல்லுங்கள்என்றார் அந்த ராஜா.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...