Friday, September 8, 2023

GANDHI’S PUBLIC SPEAKING GOT FREEDOM - 03. சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியின் மேடைப்பேச்சு


வெற்றி என்பது மேடைப்பேச்சில் வல்லவர்கள். முதல் அமைச்சர் ஆகிறார்கள், பிரதமர் ஆகிறார்கள், ஜனாதிபதி ஆகிறார்கள்,   பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகிறார்கள். ஆனால் மோஹன்தாஸ்  கரம்சந்த் காந்தி தனது பேச்சுத் திறனால் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். அவர் எப்படி சிறந்த மேடைப்பேச்சாளராக ஆனார் ? தொடர்ந்து படியுங்கள் !   மேடைப்பேச்சாளராக விரும்பும் யாருக்கும் இது பயன் தரும் செய்திகளைத் தரும்.

1, மகாத்மா காந்தியடிகள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர். யாரிடமும் பேசுவதற்கு கூட யோசனை செய்வார். சரளமாக பேசுவதற்குக் கூட வராது. அந்த சமயம் அவர் லண்டனில் உள்ள சட்ட கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

வழக்கறிஞர் என்றாலே பேச வேண்டும். பேசினால் தான் வழக்கில் வெற்றி பெற முடியும். அதனால் பேசுவது என்பது வழக்கறிஞர் படிப்புக்கு மிகவும் தேவையான ஒன்று.

அதனால் காந்தியடிகள் நன்றாக பேசுவது எப்படி என்ற ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து, பேசுவது எப்படி என்று கற்றுக் கொண்டார். இதுதான் மேடைப்பேச்சுக்கு அவர் போட்ட பிள்ளையார் சுழி. 

2,காந்தியடிகள் மிகவும் எளிமையான மனிதர் அவருடைய குரல் மென்மையாக ஒலிக்கும். அவர் பேசுவது சாமானிய மனிதர்கள் பேசுவது போல இருக்கும். சாமானிய மக்களின் மொழியாக இருக்கும். அவர் பேச்சில் கர்வம் இருக்காது, அதிகாரம் இருக்காது ஆணவம் இருக்காது அகம்பாவம் இருக்காது.. 

3, காந்தியடிகள் பெரும் கூட்டங்களில் பேசும்போது மிகவும் எளிமையான வார்த்தைகளை பயன்படுத்துவார். சராசரி மக்களுக்கு புரியும் படியான வார்த்தைகளை பயன்படுத்துவார். மிக நீண்ட வாக்கியங்களை தொடமாட்டார். அலங்காரமான வார்த்தைகளை  தொட மாட்டார்.

அவர் சொல்லுகின்ற செய்திகளை எப்போதும் சுருக்கமாக சொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதனை சுற்றி வளைத்து பேச மாட்டார்.  வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்று பேசுவார்.

 4, தான் சொல்லும் செய்திகளுக்கு வலுவூட்டும் வகையில் சிறு சிறு கதைகளைச் சொல்லுவார் இடையிடையே தன்னுடைய அனுபவங்களையும் கதை போல சொல்லுவது அவருடைய வழக்கமாக இருந்தது.  

5, எளிமையான வார்த்தைகள். முக்கியச் செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்லுவது, . ஊடாக சிறுசிறு கதைகளைச் சொல்லுவது, . இடை இடையே தனது சொந்த அனுபவங்களை சொல்லுவது இதெல்லாம்தான் காந்தியடிகளின் பேச்சின் கவர்ச்சிகரமான அம்சங்களாக இருந்தன. 

6, காந்தியடிகள் ஒரு தலை சிறந்த பேச்சாளர். பல ஆயிரம் பேர்களைக் கொண்ட கூட்டத்தில் கூட பதட்டம் இல்லாமல் பேசுவார். அவருடைய பேச்சு அவர்களை வசீகரிக்கும்படியாக இருக்கும்..

அதற்கு முக்கியமான காரணம் மக்களுக்கு அவர் மீது இருந்த மதிப்பு. அவர் மீது இருந்த மரியாதை. அவர் மீது இருந்த அன்பு. இன்னொன்று அவர் உண்மயைத்தான் பேசுவார் என்ற நம்பிக்கை. இவை அனத்தும் சேர்ந்துதான் காந்தியடிகளை மிகச்சிறந்த பேச்சாளராக மாற்றியது. 

7,காந்திஜி இயல்பாக  மென்மையாக பேசக்கூடியவர். அவருக்கு கடுமையாக பேசத் தெரியாது. தனது கருத்துக்களை கூட அவர் மிகவும் அடக்கமாக வெளியிடுவார். 

அவருடைய பேச்சில் பணிவு இருக்கும் கனிவு இருக்கும் அதே சமயம் அதில் துணிவும் இருக்கும். ஆரம்ப காலங்களில் பேசும் அவருடைய பேச்சில் ஒரு நடுக்கம் இருக்கும், தயக்கம் இருக்கும்,  

தடுமாற்றம் இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது அடியோடு மாறிவிட்டது  சலசலத்து  ஓடும் ஓடை போல அவருடைய பேச்சு இயல்பாக மாறி இருந்தது.

அதனால்தான் அவருடைய பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை, மாற்றத்தை, மக்களிடையே கொண்டு வந்தது. வெள்ளைக்காரர்களை வெளியேற்றியது அந்த பேச்சு தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. 

8, உங்களுடைய மேடைப்பேச்சு அல்லது பொதுக் கூட்டங்களில் பேசுகின்ற பேச்சு வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையான இரண்டு கருத்துக்களை சொல்லுகிறார் காந்தியடிகள்.

ஒன்று நீங்கள் சொல்லுகின்ற செய்தி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இரண்டாவது அந்த செய்தியில் உங்களுக்கு பரிபூரணமான அல்லது முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். சொல்லித்தந்த புத்தியும் கட்டிக்கொடுத்த சோறும் கடைசிவரை வராது என்பார்கள். 

9, காந்தி அவர்களை ஒரு ஆராய்ச்சியாளர் அல்லது ஒரு பரிசோதனையாளர் என்று சொல்லலாம். அவர் தொடாத துறை எதுவும் இல்லை. நிறைய படிப்பார், நிறைய எழுதுவார், நிறைய பேசுவார். 

மக்களுக்கு சொல்வதற்கு என்று நிறைய செய்திகள் அவரிடம் இருந்து. அவர் தலைசிறந்த பேச்சாளராக விளங்கியதற்கு முக்கிய காரணங்களில்  இதுவும் ஒன்று. 

அவர் எந்தெந்த துறைகளில் பேசியிருக்கிறார், எழுதி இருக்கிறார், என்று பாருங்கள். ஆன்மீகம், மதம், சுய தேவை பூர்த்தி, உடல் ஆரோக்கியம், சுத்தம் சுகாதாரம், கல்வி, உடை, உணவு, மருந்து, குழந்தை வளர்ப்பு, பெண் சுதந்திரம் இப்படி நிறைய சொல்லலாம்.. 

ஒரு ஆசிரியர் சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டும் என்றால் அவர் சிறந்த மாணவராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அவர் கற்றுக் கொண்டே இருந்தால்தான் தொடர்ந்து  அவர் ஆசிரியராக இருக்க முடியும். து மேடைப் பேச்சாளர்களுக்கும் பொருந்தும்.

10, இந்தியாவின் சுதந்திரத்தை பெற்று தந்தவர் மகாத்மா காந்தி அவர்கள் என்று இந்த உலகம் முழுவதும் தெரியும். அதனால் தான் அவரை தேச பிதா என்று நாம் அழைக்கிறோம்.

காந்தியடிகள் தனது பேச்சின் மூலமாக மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். வெள்ளைக்காரர்களுக்கு எதிராக போராடினார். சுதந்திரம் பெற்றார். என்றெல்லாம் நமக்கு தெரியும் இவை அனைத்திற்கும் அவர் பயன்படுத்திய ஒரேகருவி அவருடைய மேடைப்பேச்சு.

அவருடைய மேடைப்பேச்சில் இடம்பெற்ற முக்கியமான உள்ளடக்கங்கள் ஒன்று அஹிம்சை (NON VIOLENCE), உண்மை (HONESTY), மன்னிக்கும் குணம் (FORGIVENESS).

பேச்சு என்பது, சுருக்கமாக இருக்க வேண்டும், புரியும்படி இருக்க வேண்டும், எளிமையாக இருக்க வேண்டும், அதில் உண்மை இருக்கவேண்டும், நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

பொருத்தமான கதைகளை சொல்லுதல், சொந்த அனுபவங்களை விவரித்தல், எடுத்துக்காட்டுகளை சொல்லுதல் பயன்தரும் செய்திகளைச் சொல்லுதல் இவை எல்லாம்தான்  காந்தியடிகளின் மேடைப்பேச்சின் இலக்கணமாகக் கொண்டிருந்தார்.

இதைப் படிக்கும் நீங்கள் ஒரு மாணவ மாணவியாக இருக்கலாம், இளைஞராக இருக்கலாம், நடுத்தர வயதுடையவராக இருக்கலாம், முதியவராக இருக்கலாம், நீங்கள் யாராக இருந்தாலும், இதுமாதிரி கட்டுரைகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இந்த கட்டுரைகள் நிச்சயம் உங்கள் எதிர் காலத்தை கட்டமைக்க கண்டிப்பாய் உதவியா இருக்கும். தொடர்ந்து படியுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...