Saturday, September 9, 2023

G 20 SUMMIT IN INDIA - இந்தியாவில் ஜி 20 உச்சி மாநாடு

 

இந்தியா வளர்கிறது – சி ஜின் பிங்க்

ஜி 20 கூட்டமைப்பின்  2023 ஆம் ஆண்டின் உச்சி மாநாடு  டெல்லியில் தொடங்கியது. இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறு கிறது. இந்த ச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கியது. ஜி 20 என்றால் என்ன ? அதில் யார் யார் உறுப்பினர்கள் ? அதன் தலைவர் யார் ? ஜி 20 க்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்று பார்க்கலாம் ?

2, இதுவரை 20 உறுப்பினர்கள் கொண்ட இந்த கூட்டமைப்பில் 21 வது உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் தற்போது இணைந்துள்ளது. 

 இந்த கூட்டமைப்பில் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. 

3. இன்று இந்தியாவில் புதுடில்லியில் தொடங்கும்  இந்த உச்சி மாநாட்டில் உலகில் உள்ள உறுப்பினர் நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகள் என 30 நாடுகளின் அதிபர்கள் மற்றும் தலைவ்ர்கள் கலந்து கொள்கிறார்கள்.

4.அமெரிக்க அதிபர் ஜோபைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், தென்கொரிய அதிபர் யூன் சுக்யோல், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தென் ஆப்பிரிக்க அதிபர் சீரிஸ் ராமபோசா, துருக்கிய அதிபர் தயீப் எர்டோகன், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டொ  பெர்னாண்டஸ், நைஜீரியா அதிபர் போலா  டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்..

4. இந்தியாவில் புதுடில்லியில் நடக்கும் இந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் இருவர், அவர்கள் சீனாவின் அதிபர் சி ஜிங் பின் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோர்

5. இந்த ஜி 20 கூட்டமைப்பு 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் 1997 - 98 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக, எதிர்காலத்தில் இதனை சரிவர எதிர்கொள்ளும் நோக்கத்தில் இந்த ஜி 20 கூட்டமைப்பை உருவாக்கினார்கள். 

6. இந்த ஜி 20 உச்சிமாநாட்டில்  கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் விருந்தினர்கள் தங்குவதற்காக புதுடெல்லியில் நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களில் 3500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஐடிசி  மவுரியா ஷெராட்டன்னிலும், ஐக்கிய நாடுகளின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜப்பானிய நாட்டினரும், கன்னாட் பிளேசில் உள்ள ஷாங்கிரி லா ஹோட்டலிலும், கனடாவின் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடியாவ் மற்றும் ஜப்பானிய நாட்டு குழுவும் லலித் ஓட்டலிலும் தங்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

8. இதனால் டெல்லி மாநகரம் முழுவதும் வரலாறு காணாத அளவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதற்கு சமமாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிக அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.

9. இந்த ஜி 20 கூட்டமைப்பில் 19 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவை, 1.அர்ஜென்டினா 2.ஆஸ்திரேலியா 3.பிரேசில் 4.கனடா 5. சைனா      6. பிரான்ஸ் 7. ஜெர்மனி 8. இந்தியா 9. இந்தோனேசியா 10. இத்தாலி 11. ஜப்பான் 12. ரிபப்ளிக் ஆப் கொரியா 13. மெக்ஸிகோ 14. ரஷ்யா 15. சவுதி அரேபியா 16. சவுத் ஆப்பிரிக்கா 17.துருக்கி 18. யுனைடெட் கிங்டம் மற்றும் 19. யுனைடெட் ஸ்டேட்ஸ்.   ஐரோப்பிய ஒன்றியம் 20 வது உறுப்பினர்.

12.உறுப்பினர் நாடுகள் தவிர ஒன்பது  நாடுகளை  விருந்தினர் நாடுகளாக  அழைக்கப்பட்டுள்ளன. அவை 1.பங்களாதேஷ் 2. எகிப்து 3. மொரிசியஸ் 4. நெதர்லாந்து 5. நைஜீரியா 6. ஓமன் 7. சிங்கப்பூர் 8. ஸ்பெயின் மற்றும் 9.யுனைடெட் அராப்  எமிரேட்ஸ்.

இந்தியா வளர்ந்துள்ளது - சீனா சொல்கிறது

13. ஜி 20 உச்சிமா நாடு பற்றி வெளியிட்டிருக்கும் செய்தியில் “இந்தியா வளர்ந்திருக்கிறது வளர்கிறது இதை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது சீனா.

 14.வேறு யாரும் இல்லை சீன அதிபர்  ஜி ஜின்பிங் அவர்களின் கருத்து என்பது தான் உண்மை. 

15. இந்த கருத்தினை வெளியிடுமாறு தனது சகாக்களிடம் தெரிவிக்கும் தருணத்தில் அவருடைய மனக் கண்களில் சந்திராயன் மூன்று மற்றும் ஆதித்யா எல் ஒன்றின்  பிம்பங்கள் தோன்றியிருக்கும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.

16.“இந்தியா தனது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளை வழிமுறைகளை மற்ற உறுப்பினர் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள  வேண்டும். குறிப்பாக தனது வேகமான வளர்ச்சி அனுபவங்களை ஜி 20  நாடுகளுக்கு சொல்ல வேண்டும்.” 

17. “அதுமட்டுமல்ல இந்தியா தனது அனுபவங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும், திறந்த மனதுடன் சொல்ல  கொள்ள வேண்டும்.  ஒளிவு மறைவின்றி சொல்ல வேண்டும். 

18. “பிற நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு எப்படிப்பட்ட வசதி வாய்ப்புகளை இந்தியா ஏற்பாடு செய்து தரும் என்பதை சொல்ல வேண்டும்.” 

19. “இவைதான் இதில் முக்கியமான அம்சங்கள்.  இந்தியாவின் பெயர் மாற்றம்  என்பதற்கும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இவை எல்லாம் சி ஜின் பிங்’கின் கருத்துக்கள்.”

20. ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா பின்னர் புதிய செய்தியாக போகிறது என்பதை அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன.

ஆப்ரிக்க யூனியன் புதிய உறுப்பினர்

21. இன்று பிரதமர் மோடி ஆப்பிரிக்க யூனியனை ஜி 20 நாடுகளில் கூட்டமைப்பில் ஒரு நிரந்தர உறுப்பினராக அறிவித்தார். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை ஒரு உறுப்பினராக அறிவித்ததை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 22. இதன் மூலம் 55 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 கூட்டமைப்பில் இணைந்துள்ளது. பொருளாதார ரீதியாக அரசியல் ரீதியாக மற்றும் பாதுகாப்பு ரீதியாக ஆப்பிரிக்க நாடுகளை இந்த செயல் புது உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்லுகிறார்கள். 

23. இதன் காரணமாக ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவை வெகுவாக பாராட்டத் தொடங்கியுள்ளன. இதனை மிகப்பெரிய சாதனைக்குரிய அரசியல் நடவடிக்கையாகப் பார்க்கிறார்கள்.

24. இப்போது வரை ஜீ 20 கூட்டமைப்பில் தென் ஆப்பிரிக்கா மட்டுமே அங்கத்தினராக இருந்து வந்தது. தற்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தில் உள்ள 55 நாடுகளும் ஜி 20 கூட்டமைப்பில் அங்கத்தினர்களாக ஆகி உள்ளன.

25. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கத்தினராக சேர தொடர்ந்து முயற்சி செய்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கோரிக்கை இந்தியாவினால், இந்திய  பிரதமர் நரேந்திர மோடியினால் நிறைவேறி உள்ளது.

26, காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, இடம் பெயர்வு ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக ஆப்பிரிக்க நாடுகள் இந்த கூட்டமைப்பில் முக்கிய கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27, ஆப்பிரிக்காவுடன் வர்த்தக தொடர்பும், அந்த  நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாகவும் சீனா உள்ளது.

28. ரஷ்யா ஆப்பிரிக்க நாடுகளின்  முன்னணி ஆயுத ஒப்பந்த நாடாக உள்ளது.  

29. வளைகுடா நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் முதலீட்டாளர்களாக இருக்கின்றன. துருக்கியின் மிகப் பெரிய ராணுவ தளம் மற்றும் தூதரகம் சோமாலியாவில் செயல்பட்டு வருகிறது. இவ்வகையில் ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே ஜி 20  நாடுகளுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

30. இந்தியாவில் நடைபெறும் இந்த ஜி 20 கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாட்டின் கருத்தினைவசு தைவ குடும்பகம்என்று சமஸ்கிருதத்தில் சொல்லுகிறார்கள்  இதனை ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்று சொல்லுகிறார்கள் நாம் இதனை தமிழில்யாதும் ஊரே யாவரும் கேளீர்”  என்று சொல்லலாம்.

கூட்டமைப்பின் தலைவர் மோடி

ஜி 20 கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உச்சி மாநாட்டில் வருகை தந்திருக்கும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தலைவர்களை மற்றும் அவர்களோடு வருகை தந்தவர்களை வரவேற்று பேசினார். அவர் தனது வரவேற்புரையில் பேசியவையாவது.

1. “ஆப்பிரிக்கன் யூனியனை சேர்ந்த நாடுகளை ஜி 20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்ந்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

2. “உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது.  சப்கா சாத், சப்கா  விகாஸ்சப்கா விஷ்வாஸ், சப்கா  பிரயாஸ் (யாதும் ஊரே யாவரும் கேளிர்) அதற்கு இதுதான் மந்திரம்

3. “நமது எதிர்கால சந்ததிக்கு தேவைப்படுகின்ற உணவு, எரிபொருள், சுகாதாரம், சக்தி, நீர், பாதுகாப்பு, ஆகியவற்றிற்கு உத்திரவாதம் அளிப்பதுடன்  தீவிரவாதத்திலிருந்தும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நமது கடமை .

4. அண்மையில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ நாட்டிற்கு தனது ஆழ்ந்த வருத்தங்களை உச்சி மாநாட்டின் சார்பில் தெரிவித்துக்கொள்ளுகிறேன். பூகம்பத்தின் ஊடாக சிக்கிக் கொண்டு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய  பிரார்த்திக்கிறேன். 

2023 ன், இந்தியாவின் சாதனைகளில் சந்திராயன் 3, ஆதித்யா எல்.1 என்ற இரண்டோடு மூன்றாவதாக ஜி 20 சேரும் என நம்பலாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...